14

14

கொரோனா நிவாரண நிதிக்காக காத்திருந்து கிடைக்காததால் ஏமாற்றமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் !

வறுமையையும் கஸ்டங்களையும் சந்தித்துள்ளமையினால் மக்களின் முகபாவத்தினை வைத்தே அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை என்னால் அறிந்துகொள்ள முடியுமென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா- மணிபுரத்தில் இடம்பெற்ற சந்தை கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் கு.திலீபன் மேலும் கூறியுள்ளதாவது,

Image result for கு.திலீபன்

“மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து செல்கின்றபோதிலும் பல இடர்பாடுகளை சந்தித்த வண்ணமே உள்ளது.

இதற்கு காரணம், இந்த அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தினைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரந்தரமாக அந்த ஆசனத்தில் இருந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவதூறுகளை சிலர் பரப்பி வருகின்றனர். ஆனால் இத்தகைய அவதூறுகளினால் அரசாங்கத்திற்கு எந்ததொரு பாதிப்பும் ஏற்படாது.

இதேவேளை வறுமையையும் கஸ்டங்களையும் சந்தித்தே நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்.

கொரோனா தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் நிவாரணம் வழங்கியிருந்தார்கள். அப்போது எனது குடும்பத்தின் பதிவு வவுனியா பிரமனாளங்குளத்தில் இருந்தது.

அந்த கிராமத்தில் பாதிரியார் ஒருவர் நிவாரண பொதி வழங்குகின்றார் என தகவல் கிடைத்து நானும் எனது மனைவியும் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றோம்.

அந்த பொதிகளை பார்த்தபோது பெரிய பொதியாக இருந்தது. அதனால் நானும் மனைவியும் சென்ற மோட்டார் சைக்கிளில் இந்த பொதியை கொண்டு செல்ல முடியாது இருக்கும் என எண்ணிக்கொண்டே நிவாரணம் கிடைக்கும் என அருகில் சென்ற எமக்கு அது கிடைக்கவில்லை.

பிரமனாளங்குளத்தில் பதிவு இருந்தாலும் வவுனியா நகரில் இருக்கின்றமையால் பொதியை தரமுடியாது என கிராம சேவகர் தெரிவித்துவிட்டார். எனினும் நான் முரண்படவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம். வறுமையையும் கஸ்டங்களையும் சந்தித்தே நான் இந்த நிலைக்கு வந்திருந்தேன்.

ஆகவே மக்களின் முகபாவத்தினை வைத்தே மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நான் அறிந்துகொள்வேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் வாள்வெட்டு – ஒருவர் பலி. மூவர் தீவிர சிகிச்சை பிரிவில்  !

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே பரஸ்பர மோதலில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் இன்று(14.02.2021) காலை 11.30 மணியளவில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி காவற்துறை பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் கிராமத்தினைச் சேர்ந்த இரண்டு தரப்புக்கு இடையிலான முறுகல் நிலை வாள்வெட்டில் முடிந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், மேலும் மூவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கிளிநொச்சி காவல் நிலையத்தில் சரணடைந்ததுடன் மேலும் சிலரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி காவற்துறையினர் முன்னெடுத்த வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தின் தீவுகளில் மேற்கொள்ளப்படவிருந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் – சீனாவிடமிருந்து இந்தியாவுக்கு கை மாறியது !

சீனாவின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் மேற்கொள்ளப்படவிருந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் தற்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மின்சக்தி அமைச்சருடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான முழு செலவான 12 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக அவர் அறிவித்திருக்கிறார்.

அந்த வகையில் மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்தியாவின் நன்கொடையுடன் யாழ்ப்பாணத்தில் இந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டத்தை மேற்கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பில்  ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும,

யாழ்ப்பாண மக்களுக்கு போதுமான வகையில் குறைவின்றி மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும் என்பதே மின்சக்தி அமைச்சர் என்ற வகையில் எனது முழுமையான நோக்கமாக இருக்கின்றது.

அந்த வகையிலேயே ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இந்த யாழ்ப்பாணத்தின் அனலைதீவு நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலமான மின்சக்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காரணம் தற்போது இந்த தீவுகளுக்கு டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் செலவு கூடியதாகும். அதனால்தான் இந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். எனினும் இந்தியா இது தொடர்பில் அக்கறை செலுத்தி இருக்கின்றது.

என்னை அண்மையில் சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த திட்டத்தை முன்னெடுக்க முழுமையான நிதி செலவான 12 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக உறுதி அளித்தார்.

இந்த பிராந்தியம் குறித்து அக்கறை செலுத்துகின்ற ஒரு மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. அதுமட்டுமன்றி இந்தியாவானது இலங்கையின் மூத்த அண்ணனாகும்.

எனவே இந்தியா கூறுகின்ற இந்த யோசனையை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். இந்தியாவின் இந்த ஆலோசனையை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் – முடக்கப்படுமா இலங்கை ? – நாளை முடிவு !

கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பிரித்தானியாவில் பரவும் வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்மை முழுமையாக முடக்குவதா என நாளை ஆராயப்படவுள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசினை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை நிலையம் நாளை இது குறித்து ஆராயவுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாடாளாவியரீதியிலான முடக்கம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ்பேச்சாளர் அஜித்ரோகண நாளை இது குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயியல் பிரிவு நிலைமயை அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச 15 மணிநேரம் சேவையாற்றுகின்றார் நான் கூட அவ்வளவு நேரம் பணிபுரிந்ததில்லை” – சகோதரருக்கு பிரதமர் பாராட்டு !

“ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச 15 மணிநேரம் சேவையாற்றுகின்றார் நான் கூட அவ்வளவு நேரம் பணிபுரிந்ததில்லை” என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ரூபாய் 14 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடிகளை கொண்ட பேருவளை பிரதேச சபையின் பல்நோக்கு கட்டிடத்தொகுதியை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாவது,

நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்று ஓராண்டு என்ற குறுகிய காலமேயாகிறது. அந்த காலப்பகுதியிலும் நான்கு மாதங்கள் போன்ற காலமே அரசாங்கத்தை செயற்படுத்த முடிந்தது. ஏனைய காலப்பகுதி குறித்து புதிதாக எதுவும் கூறவேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன்.

விசேடமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 15 மணிநேரம் சேவையாற்றும் தலைவராவார். உண்மையை கூற வேண்டுமாயின் நான் வேலை செய்வதில்லை. எனினும், அவர் இந்த அனைத்து நிறுவனங்கள் தொடர்பில், உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பில் ஒரு புரிதலுடனேயே தனது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறார். அதனால் நாம் அதன்மூலம் நன்மையடைய வேண்டும்.

அரசாங்கமொன்றை அமைத்து அந்த அரசாங்கத்தின் ஊடாக அனுகூலங்களை பெறுவது பொதுமக்களின் பொறுப்பாகும் என நான் கருதுகிறேன். அவ்வாறு இன்றி அமைச்சர்களை நியமித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமித்து, சபையொன்றை கட்டியெழுப்பி, உறுப்பினர்களை நியமித்துவிட்டோம் இனி வேலை நடக்கும் என நாம் ஒதுங்கிவிட்டால் அதனால் பாதிப்பே எஞ்சும்.

அதனால் தாம் நியமிக்கும் உறுப்பினர், தலைவரை, தமது அரசியல் தலைவராக நியமித்துக் கொண்டதன் பின்னர் அவர்களை கொண்டு வேலைத்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வது உங்களது கடமையாகும். அதனை செய்யும் உரிமை உங்களுக்குள்ளது. அந்த உரிமையை நீங்கள் பயன்படுத்திக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

தமது பிரதேசம் அபிவிருத்தியடைந்தால் தான் சுற்றியுள்ள ஏனைய பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியும். அதனால் இவ்விடத்திற்கு வருகைதந்து இந்நடவடிக்கையியல் தொடர்புபட முடிந்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.” எனவும் மகிந்த ராஜபக்ச அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

“கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க உத்தேசம்” – வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க உத்தேசித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவுடனான உறவு ஒரு திட்டத்துடன் மாத்திரம் முடிந்து போகாது. இரு நாடுகளுக்கிடையேயான உறவு ஒரு சிறந்த நட்புறவு. இந்த நட்புறவின் மூலம் இந்த சிக்கல்களை தீர்த்து, இலங்கை இந்தியாவிற்கிடையிலான உறவை முன்நோக்கி கொண்டு செல்ல எம்மால் முடியும். இந்தியாவுடனான பாரிய திட்டங்கள், முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் தொடரும்.

மேலும், ஆரம்பம் முதல் அரசாங்கத்துக்கு கிழக்கு முனையம் தொர்பாக பாரிய அர்ப்பணிப்பு காணப்பட்டது. இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை நடாத்திய பேச்சு வார்த்தைகளின் தோல்வி இந்த பிரச்சினையில் பாரிய செல்வாக்கு செலுத்தியுள்ளது.

அதே போன்று, கொழும்பு துறைமுகத்தின் மிகப் பெரிய துறைமுகமாக மேற்கு முனையம். நான் குறிப்பிட்ட மற்றுமொரு காரணம், இந்தியாவிலிருந்து கிடைக்கும் கொள்கலன்களாலேயே குறித்த முனையம் செயற்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களை உறுதி செய்வதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது” – இந்திய பிரதமர் நரேந்திர மோடி

“இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களை உறுதி செய்வதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது” என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மோடி மேலும் உரையாற்றுகையில்,

தமிழர்கள் உரிமை தொடர்பில் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம். அவர்கள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவத்துடன் வாழ்வதை உறுதி செய்வது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

இலங்கையின் தமிழ் சகோதரர்கள், சகோதரிகளின் நலன்கள் அபிலாசைகளை இந்திய அரசாங்கம் என்றும் கருத்தில் எடுத்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஒரேயொரு இந்திய பிரதமர் என்ற பெருமை எனக்குள்ளது. இலங்கையில் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் நாங்கள் இலங்கை தமிழர்களின் நலன்களை உறுதி செய்துவருகின்றோம்.

கடந்த காலங்களை விட எங்கள் அரசாங்கம் அதிகவளங்களை வழங்கியுள்ளது. இலங்கையின் வடகிழக்கில் இடம்பெயர்ந்தவர்களிற்கு 50,000 வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளோம்.

இலங்கையின் மலையகத்தில் 40,000 வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளோம். இலங்கைத் தமிழர்களின் சம உரிமை மற்றும் மரியாதையோடு வாழ்வதை இந்திய அரசு தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறதென தெரிவித்துள்ளார்.