15

15

“இங்கிலாந்தில் இதுவரை 1.5 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது” – பிரதமர் ஜோன்சன் !

இங்கிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து வந்தது.  இதனால் அடுத்த கட்ட ஊரடங்குக்கு அந்நாடு சென்றுள்ளது.  இதனை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு டிசம்பர் 8ந் திகதி தடுப்பூசி போடும் பணிகள் நடந்தன.

இதன்படி, உலகிலேயே முதல் நபராக மார்கரெட் கீனன் (90), என்ற மூதாட்டிக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டது.  தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டன.

இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இதுவரை 1.5 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.  நாடு முழுவதற்கும் ஆன சாதனையிது.  விஞ்ஞானிகள், தொழிற்சாலை பணியாளர்கள், வினியோக பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் இந்த சாதனையை அடைய உதவிய அனைவருக்கும் எனது நன்றிகள் என தெரிவித்துள்ளார்

யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கு எதிராக மன்னார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் !

நீதிமன்ற கட்டளையை மீறி பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரையான பேரணியில் கலந்து கொண்ட யாழ்.மாநகரசபை உறுப்பினருக்கு எதிராக மன்னார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பேரணிக்கு தடைகோரி ஏ அறிக்கையூடாக மன்னார் பொலிஸ் நிலையத்தால் தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்று வழங்கிய தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து “பி” அறிக்கை ஊடாக பேரணியில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், வி.மணிவண்ணன் மட்டுமே பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு பதில் நீதிவான் முன்னிலையில் இன்று (15.02.2021) விசாரணைக்கு எடுக்கப்பட்டு தவணையிடப்பட்டது.

“ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் இம்முறை இலங்கைக்கு ஆதரவாக 47 இற்கும் அதிகமான நாடுகள் ஒன்றிணைந்து செயற்படவுள்ளன” – அமைச்சர் சரத் வீரசேகர

“ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் இம்முறை இலங்கைக்கு ஆதரவாக 47 இற்கும் அதிகமான நாடுகள் ஒன்றிணைந்து செயற்படவுள்ளன” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் நடைபெறவுள்ள ஐ.நா.கூட்டத்தொடர் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஒருமித்த நாட்டின் கொள்கையினை மாணவர்களுக்கு ஆரம்ப காலத்தில் இருந்து கற்றுக் கொடுக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை,சுயாதீனத்தன்மை ஆகியவை குறித்து இளம் தலைமுறையினர் அதிக அக்கறை கொள்ள வேண்டும். பாரிய போராட்டத்திற்கு மத்தியில் நாடு பாதுகாக்கப்பட்டுள்ளது.

தற்போதைய இளம் சந்ததியினர் நாடு குறித்து பற்று இல்லாமல் செயற்பட்டால் எதிர்காலத்தில் பிரிவினைவாதம் நாட்டை பிளவுபடுத்தும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் இம்முறை இலங்கைக்கு ஆதரவாக 47 இற்கும் அதிகமான நாடுகள் ஒன்றிணைந்து செயற்படவுள்ளன.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டை அரசியலமைப்பின் ஊடாக பிளவுபடுத்த பல நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதற்கு நாங்கள் இடமளிக்கவில்லை. ஒற்றையாட்சி நாட்டுக்குள் ஒரு சட்டம் மாத்திரமே செயற்படுத்தப்பட வேண்டும். அனைத்து இன மக்களும் பொது சட்டத்திற்கு அடிபணிய வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு நல்லாட்சி அரசாங்கம் இணையனுசரணை வழங்க இணக்கம் தெரிவித்தமை தேசத்துரோக செயற்பாடாக கருதப்படும்.

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் சார்பாக செயற்பட்டமையினால் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 30(1) பிரேரணையில் இருந்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக விலகியது. நாட்டுக்கு எதிரான பிரேரணைகளுடன் இணைந்திருக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது” என்றார்.

அமைச்சர் விமல் வீரவன்சவின் கொழும்பிலுள்ள இல்லம் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் !

அமைச்சர் விமல் வீரவன்சவின் கொழும்பிலுள்ள இல்லம் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்போவதாக நபரொருவர் தெரிவித்த அழைப்பை அடுத்து பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பு வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு கடந்த 12ஆம் திகதி மாலை 03 மணிக்கு இவ்வாறு அழைப்பு மேற்கொண்ட நபர் , வெள்ளவத்தை, ஜோசப் ஸ்டான்லி மாவத்தையிலுள்ள அமைச்சர் விமல் தங்கியிருக்கும் இல்லம் மீது தாக்குதல் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாக இது குறித்த விசாரணையை நடத்திய வெள்ளவத்தை பொலிஸார், சிம் அட்டை பதிவாகியுள்ளவரின் தகவலை பெற்றனர்.

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுதர்சன் என்பவரது பெயரில் இந்த சிம் அட்டை இருப்பது தெரியவந்த போதிலும் குறித்த நபருடன் பொலிஸார் நடத்திய விசாரணையில் ஜனவரி 13ஆம் திகதி தனது கையடக்கத் தொலைபேசி தொலைந்துவிட்டதாக பதிலளித்துள்ளார்.

இருந்த போதிலும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தி, தொலைபேசி தற்போது இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர்.

அந்த இடம், ஹட்டன் – கொட்டகலை, திம்புள்ளபத்த என்ற முகவரியை காட்டியுள்ளது. 119 அவசர இலக்கத்திற்கு வந்த எண்ணை மீள அழைத்தபோது தகாத முறையில் சந்தேக நபர் பேசியதாகவும் கூறப்படுகின்றது.

இதுசம்பந்தமான விசாரணைகள் துரிதமாக இடம்பெற்று வருவதோடு அமைச்சர் விமலுக்கு வெள்ளவத்தையில் மேற்படி முகவரியில் வீடொன்று இல்லை என்பதுவும் தெரியவந்துள்ளது

“தற்போதைய அரசு இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காகச் செயற்படுகின்றார்கள்” – சி.வி.விக்னேஸ்வரன்

“தற்போதைய அரசு இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காகச் செயற்படுகின்றார்கள்” எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீன நிறுவனம் ஒன்றுக்கு மின்சக்தி உற்பத்
திக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“அண்மையில் ஒரே நாளில் இரு வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே நாளில் அரசு இரண்டு வேறுபட்ட தீர்மானங்களை எடுத்துள்ளது. கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்க முடியாது என அறிவித்துள்ளது.

அதேபோல வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் நெடுந்தீவு, அனலைதீவு,
நயினாதீவு ஆகிய மூன்றையும் சீனக் கம்பனிக்கு மின்சக்தி தயாரிப்பதற்காக கொடுப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள். இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

முதலாவது இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தைக் கொடுக்காமை சம்பந்தமாக இந்தியா பார்த்துக்கொள்ளும். ஆனால் வடக்கு மாகாணத்திலுள்ள மூன்று தீவுகளைக் கொடுப்பது என்பது எமது வடமாகாண பாதுகாப்புக்கு மிகவும் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது
எனது கருத்து.

தற்போதைய அரசு இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காகச் செயற்படுகின்றார்கள். 13ஆவது திருத்தச் சட்டத்தின்படி எமது பகுதி காணிகளை ஜனாதிபதி வழங்குவதாக இருந்தால்கூட அது மாகாண சபையின் ஊடாக செய்யப்பட வேண்டும் என்று இருக்கின்றது.

எனினும் மாகாண சபையுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் அதற்குப் பதி
லாக ஆளுநரின் ஊடாக அதற்குரிய அனுமதியைப் பெற்றுச் செய்வது மிகவும் சட்டத்துக்கு முரணானது.

எமது தமிழ்ப் பிரதிநிதிகளும் இது தொடர்பில் தமது தீர்மானத்தைத் தெரிவிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. எதிர்காலத்தில் எமது சந்ததியினருக்கு இதனால் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நிலை காணப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து 49 கிலோ மீற்றர் தூரத்திலே உள்ள தீவுகளை இவ்வாறு வேறு
ஒரு நாட்டுக்குக் கொடுப்பது என்பது பாரதூரமான விடயமாகும். அதேபோல் இலங்கை அரசு இதனைத் தெரியாமல் செய்யவில்லை.தெரிந்துகொண்டுதான் செய்கின்றது.

அதாவது ஜெனிவாவில் இந்தியாவுடைய ஆதரவைத் தாங்கள் பெறுவதற்காக
இவற்றை நிறுத்துவதாக இருந்தால் நீங்கள் எங்களுக்கு ஜெனிவாவில் நன்மைகள்
பெற்றுத் தர வேண்டும் என்ற அடிப்படையிலும் இவற்றைச் செய்கின்றார்கள் என்பது எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

“விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை இலங்கை இராணுவம் அவர்கள் வெள்ளை கொடியை காண்பித்தவேளையிலும் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம்” – நவநீதம் பிள்ளை

“விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை இலங்கை இராணுவம் அவர்கள் வெள்ளை கொடியை காண்பித்தவேளையிலும் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம்” என முன்னாள் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி ஆறுமாதங்களும் பல முறை சர்வதேச தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன. நாங்கள் பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை இலங்கை இராணுவம் அவர்கள் வெள்ளை கொடியை காண்பித்தவேளையிலும் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம்.
தமிழ்பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்களின் வீடுகள் மருத்துவமனைகள் கோவில்கள் அடைக்கலம் கோரிய இடங்கள் அழிக்கப்பட்டதையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.
பயங்கரவாதிகள் என குற்றம்சாட்டப்படுபவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னரும் இந்த தாக்குதல் இடம்பெற்றது. காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலிற்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் உதவிக்கான இறுதிக்குரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்.

மனித உரிமை பேரவை உறுதியான விதத்தில் செயற்பட்டு இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்.  தமிழர்களிற்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல் குற்றவாளிகளை எந்த வித தயக்கமும் இன்றி பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் எனவும்  கோத்தாவின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் சட்டத்தின் ஆட்சி தோற்கடிக்கப்பட்ட மக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த சர்வதேச தராதரங்கள் ஆகியவற்றின் மீதான யுத்தமாக மாற அனுமதிக்க கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“மக்களை கூடுதலாக கொன்றது புலிகள்தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டதுடன் அவர்களையும் விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டார்” –

“மக்களை கூடுதலாக கொன்றது புலிகள்தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டதுடன் அவர்களையும் விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டார்” என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுவர்களாக ஆயுதம் ஏந்தியவர்களை எவ்வாறு விசாரிப்பது என அன்று இடம்பெற்ற மனித உரிமை அமர்வில் எடுக்கப்படும் தீர்மானம் தொடர்பில் நவநீதம்பிள்ளைக்கு நான் கடிதம் அனுப்பியிருந்தேன். 40 ஆயிரம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியிருந்தார்கள். பல்வேறு காரணங்கள் காணப்பட்டிருந்தது. ஆனால் அவர்களையும் விசாரி என்ற தீர்மானத்தை மீள் பரிசீலணை செய்ய வேண்டும் என அவரிடம் குறிப்பிட்டிருந்தேன்.

மக்களை கூடுதலாக கொன்றது புலிகள்தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். அது ஊடகங்களில் பிரதான தலைப்பு செய்தியாகவும் வந்திருந்தது. விசாரிப்பதென்றால் அவர்களையும் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் 2012ம் ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்படவிருந்த தீர்மானத்தில் 8வது சரத்தில் குறிப்பிடப்படவிருந்த மேற்குறித்த விடயம் தொடர்பில் மாற்றத்தினை ஏற்படுத்துமாறு நான் நவநீதம் பிள்ளையிடம் குறிப்பிட்டிருந்தேன் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை யுத்த களத்தில் இருந்த இராணுவத்தினருக்கு கட்டளை இட்டவர்களையே விசாரித்திருக்க வேண்டும். அவ்வாறெனில் கட்டளையிட்டவர் சரத் பொன்சேகா. மாறாக நடைபெற்ற தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஜெனிவாவிற்கு நாங்கள் போகாவிட்டால் துரோகிகளோ? என ஒரு கட்டத்தில் சுமந்திரனும் சிறிதரனும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். நட்பு நாடுகள் சொல்லிதான் ஜெனிவாவிற்கு போகவில்லை என இன்று கூறுகின்றனர். எமது நாட்டில் சுனாமி உள்ளிட்ட எவ்வாறான நிலை ஏற்பட்டாலும் உடனடியாக முன்வருவது இந்தியாதான். சுனாமி நேரத்தில் இந்தியாவிலும் இழப்புக்கள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக இந்தியாதான் வந்தது. இவ்வாறான நிலையில் இந்தியாவை ஒரு சொல் கேட்டிருந்தால் இந்தியா வந்திருக்கும். ஆனால் எம்மவர்கள் கேட்கவில்லை .

இப்போது இந்தியாவிற்கு எதிரான வேலைகள் இடம்பெறுகின்றது. 3 தீவுகளை அரசு ஒரு நாட்டுக்கு கொடுக்க போகின்றது. அவ்வாறு நட்பு நாட்டுக்கு கொடுக்கும்போது, அந்த மூன்று தீவுகளும் அவர்களின் எதிரி நாட்டையே பார்த்துக்கொண்டுள்ளது. அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் மக்களுக்கு தெரியும். அதேபோல் இலங்கை அரசுக்கு தெரிய வேண்டும். இந்தியாவிற்கு நிச்சயம் அது தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கச்சை தீவை இலங்கைக்கு கொடுத்தபோது இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதனையும் மீறியே கொடுக்கப்பட்டது. கச்சை தீவை எழுதி கொடுத்த நாடு இப்​போது கச்சை தீவை தா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் .?

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நட்பை வழங்குவதற்கான எதிரகாலத்தில் பிரச்சினைகள் ஏற்படும் என்று தெரிந்தும் கச்சை தீவை அவர் வழங்கியிருந்தார். அந்த மூன்று தீவுகளையும் வழங்குவதால் பாரிய பாதிப்பு காணப்படும் நிலையில் ஏன் இந்த அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது என்று தெரியவில்லை.

இந்த அரசாங்கத்தை கண்டிக்க எனக்கு என்ன தகுதி இருக்கின்றது? அந்த மூன்று தீவிலும் உள்ள மக்களிற்கான பாதுகாப்பு என்ன? ஓர் போர் மூண்டால் மூன்று தீவுகளும் பஸ்பமாகிவிடும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

“இலங்கையிலும் ஆட்சியமைக்க இந்தியாவின் பா.ஜ.க திட்டம்” – வெடித்தது புதிய சர்ச்சை !

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நேபாளத்திலும் இலங்கையிலும் பாரதிய ஜனதா அரசாங்கத்தினை அமைக்கும் திட்டமுள்ளது என திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ள கருத்தினால் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்திய உள்துறை அமைச்சர் இலங்கையிலும் நேபாளத்திலும் பா.ஜ.க அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டம் குறித்து தெரிவித்தார் என பிப்லாப் டெப் தெரிவித்ததாக ஈஸ்ட் மொஜொ தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை திரிபுராவிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சர் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற்ற பின்னர் பா.ஜ.கவிற்கு இலங்கையிலும் நேபாளத்திலும் அரசாங்கத்தை அமைக்கும் எண்ணமுள்ளது என குறிப்பிட்டார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய சந்திப்பின்போதுபா.ஜ.க பல மாநிலங்களில் ஆட்சியமைத்துள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டபோது இலங்கையும் நேபாளமும் மிச்சமிருக்கின்றன என அமித்சா தெரிவித்தார்.

நாங்கள் இலங்கையிலும் நேபாளத்திலும் நாங்கள் கட்சியை விஸ்தரிக்கவேண்டும் அங்கு ஆட்சியை அமைப்பதற்காக வெற்றிபெறவேண்டும் என தெரிவித்தார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

திரிபுரா முதலமைச்சர் தெரிவித்துள்ள இந்த கருத்து குறித்து மத்திய அரசாங்கம் விளக்கம் அளிக்கவேண்டும் என திரிபுராவின் எதிர்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. முதலமைச்சருக்கு ஜனநாயகம் மற்றும் அரசமைப்பு குறித்து எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ள எதிர்கட்சி அமித்சாவின் கருத்துக்கள் வெளிநாடு ஒன்றின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம் என குறிப்பிட்டுள்ளது.

 

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பல கட்டங்களில் கொவிட் தடுப்பூசி !

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பல கட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்த பல்கலைக்கழக மானிய ஆணையகம் நடடிவடிக்கை எடுத்துள்ளது.

அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, இந்த திட்டம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதேவேளை கண்டி, பெரதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் எட்டு மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பரீட்சைக்கு அமர திட்டமிடப்பட்ட சுமார் 300 மாணவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், அவர்களில் 8 பேர் கொவிட் 19 க்கு நேர்மறை சோதனை செய்ததாக பல்கலைக்கழக மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இந் நிலையில் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டு, கொரோனா தொற்று மாணவர்களுடன் தொடர்புடையே மேலும்  40 மாணவர்கள் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“இலங்கை இராணுவத்தினரைக் காட்டிக்கொடுப்பதற்கோ அவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கோ இடமளிக்கமாட்டேன்” – சரத்பொன்சேகா

“இலங்கை இராணுவத்தினரைக் காட்டிக்கொடுப்பதற்கோ அவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கோ இடமளிக்கமாட்டேன்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் தொடர்பில் பெலியத்த பகுதியில்  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தேசிய கொள்கைகளுக்கமைய எந்தவொரு அரசும் நாட்டின் இராணுவத்தினரைக் காட்டிக்கொடுப்பதில்லை.

குறிப்பாக வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் வாக்குகளை எதிர்பார்த்தே அவர்களுடைய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். அவற்றை வைத்துக்கொண்டு தெற்கில் இனவாதத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை”என்றார்.