15

15

உடலில் பச்சை குத்திaதாக கூறி மாணவர்களை துன்புறுத்தியதாக ஆசிரியர்கள் மீது முறைப்பாடு – வலிகாமத்தில் சம்பவம் !

வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11ல் கல்வி பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் சிலரால் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் தரம் 11இல் பயிலும் மாணவன் ஒருவன் உடலில் பச்சை குத்தியுள்ளதாக ஆசிரியர்கள் சிலரால் அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் தரம் 11இல் பயிலும் 70 ஆண் மாணவர்களை பாடசாலை வளாகத்திலுள்ள மறைவான இடம் ஒன்றுக்கு  அழைத்த ஆசிரியர்கள்,  வலுக்கட்டாயமாக  ஆடைகளை களையுமாறு அவர்களை அறிவுறுத்தியுள்ளனர்.
ஆசிரியர்களின் அறிவுறுத்தலை மீற முடியாமல் தாம் சித்திரவதைக்கு உள்ளாகியதாக மாணவர்கள் தமது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

தாம் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்து மாணவர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் முறைப்பாடு கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை கிடைத்தது. சம்பவம் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சிடம் விளக்கமளிக்குமாறு எழுத்துமூலம் கோரப்பட்டுள்ளது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் தெரிவித்தார்.

“காணாமல்போனோர் அலுவலகத்தை நடத்தி  தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அரச நிதி ஒதுக்குவதை அரசால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” – சரத் வீரசேகர

“காணாமல்போனோர் அலுவலகத்தை நடத்தி  தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அரச நிதி ஒதுக்குவதை அரசால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இராணுவத்தைக் கொன்ற, தேசிய பாதுகாப்பைப் பலவீனப்படுத்திய நபர்களுக்கு நட்டஈடு கொடுக்க நாம் அனுமதிக்க முடியாது. பயங்கரவாதிக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுத்து தேசத்தைக் காப்பாற்றியவர்களைத் தண்டிக்கக் கூறுவதில் என்ன நீதி உள்ளது என நாம் கேள்வி கேட்கின்றோம்.

எமக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாம் பொறுப்புக்கூறலில் இருந்து விடுபட்டுள்ளதாகக்  குறிப்பிட்டு தொடர்ச்சியாக எமக்குப் பாடம் கற்பிக்கவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முயற்சித்து வருகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்ட போதும், பொதுமக்களைப் பணயம் வைத்துப் போர் நடத்தப்பட்ட போதும் மனித உரிமைகள் குறித்து பேசாதவர்கள் இன்று இராணுவம் மீதான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

அதேபோல் எமது தேசிய விசாரணை பொறிமுறைகளுக்கு சர்வதேசம் இடமளிக்கவில்லை. உள்ளக அறிக்கைகளை நாம் முன்வைத்தால் அது பக்கச்சார்பானது என நிராகரிக்கின்றனர். அப்படியென்றால் எவ்வாறு நாம் முகங்கொடுப்பது?

இந்தநிலையில், இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பிரிட்டன் தலைமையில் ஐந்து நாடுகள் கொண்டுவரும் பிரேரணையை நிராகரித்து, இலங்கை  புதிய பிரேரணை ஒன்றை முன்வைக்கும் வாய்ப்புகளே அதிகமாக உள்ளன” என்றார்.

“இலங்கையில் இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளே தவிர பொதுமக்கள் அல்லர்” – அமைச்சர் சரத்வீரசேகர

“இலங்கையில் இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளே தவிர பொதுமக்கள் அல்லர் ” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரானது மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் கண்காணிக்கப்படாது, மாறாக மனிதாபிமான சட்டத்தின் கீழேயே கண்காணிக்கப்பட வேண்டும்.

இந்தச் சட்டத்துக்கு அமைய விடுதலைப்புலிகளுக்கு உதவிய அனைவரும்‘விடுதலைப்புலிகள்’ என்றே கருதப்படுவார்கள். இலங்கையில் இடம்பெற்றது உள்நாட்டு ஆயுதப்போராட்டம். விடுதலைப்புலிகளுக்கென இராணுவக்  கட்டமைப்பொன்று இருந்ததுடன் கடற்படை, விமானப்படைகள் என்பனவும் இருந்தன.

அத்தோடு தமக்கான தேசமொன்று அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. தொடர்ச்சியாக போராடக்கூடிய தன்மையும் அவர்களிடம் காணப்பட்டது.
மேலும் இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் சண்டையாக இல்லாது, ஒரு நாட்டுடன் நடத்தும் போராட்டத்துக்கு ஒப்பானது இந்த ஆயுதப் போராட்டம்.

இந்தப் போராட்டம் தொடர்பில் மனிதாபிமான சட்டமே நடைமுறைப்படுத்தப்படவேண்டுமே தவிர மனித உரிமை மீறல் சட்டமல்ல. அதனடிப்படையில் மனிதாபிமான சட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு உதவிய அனைவருமே விடுதலைப்புலிகளே. அதன்படி இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளே தவிர பொதுமக்கள் அல்லர்.

இதேவேளை, இந்தச் சட்டத்தை முதலில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தெரிந்துகொள்ள வேண்டும்- என்றார்.