08

08

மக்களுக்கு விஷம் கொடுக்கும் தலைவராக மாறியுள்ள ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ !

“ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ  மக்களுக்கு விஷம் கொடுக்கும் தலைவராக மாறிவிட்டார்”.ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

கொழும்பு – எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளது. அதன்படி இல்லத்தரசிகள் ஒரு பெரிய பொறுப்பைக் கொண்டுள்ளனர். அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது பயம் மற்றும் துஷ்பிரயோகத்தின் ஆண்டு.

இரண்டு நாட்களுக்கு முன்பு விஷ தேங்காய் எண்ணெய் நாடு முழுவதும் பரவியது என்று கூறப்பட்டது. பின்னர் கொல்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பற்றியது அவதானங்கள் இன்றி அரசாங்கம் செயற்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் திருமதி சித்திகா சேனாரத்ன, பிற புற்றுநோய்கள் உள்ளன என்றும், அந்த உணவுகளை அத்தகைய எண்னெய்களை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன என்றும் கூறினார். தனக்குத் தெரிந்த நிறுவனங்களை விசாரிக்கவும், சார்பாக நிறுவனங்களுக்கு பெயரிடவும் நிறைய விடயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நாட்டு மக்களுக்கு சில உண்மைகளை வெளிப்படுத்துபவர்களை இந்த அரசாங்கம் எப்போதும் தண்டிக்கிறது. இது தொடர்பில் சித்திகாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை, அவர் நாட்டுக்கு ஒரு செய்தியை அளித்து அதை மக்களுக்கு தெரியப்படுத்த விரும்பினார்.

நாடாளுமன்றத்தில் உள்ள அமைச்சர்கள் சுப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து உணவு வாங்கலாம். கீரி சம்பாவை மக்கள் சாப்பிட மாட்டார்கள் என்று நேற்று ஒரு அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறினார். நாட்டு மக்கள் என்ன சாப்பிடுவார்கள் என்பதை அமைச்சர்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளனர்.

அன்றைய தினங்களில் யுத்தத்தினால் மக்கள் கொல்லப்பட்டனர், அண்மையில் நடந்த ஈஸ்டர் தாக்குதலில் சுமார் 300 கத்தோலிக்கர்கள் கொல்லப்பட்டனர். இந்த அரசாங்கம் அப்போது செய்ததைப் போலவே மக்களை குண்டு வீசிப்பதற்கு பதிலாக விஷ உணவை உட்கொண்டு படுகொலை செய்து வருகிறது.

புற்றுநோய் மருத்துவமனைக்குச் சென்று சிறு வயதிலிருந்தே தான் ஒரு புற்று நோய் நோயாளியா என்று பரிசோதனை செய்து பார்க்குமாறு அமைச்சர்கள் கூறுகின்றார்கள்.

அந் நோய் ஏற்பட்ட அந்த குழந்தைகள் அனுபவிக்கும் வலி, அந்த மருந்துகளிலிருந்து வரும் வலி, அவர்களின் வாழ்நாள் முழுவதும் சூனியம் ஆகிவிடும். இதையெல்லாம் பொய் சொல்லாமல் அத்தகைய நோயாளிகள் உள்ள இடத்திற்கு சென்று பார்க்கச் சொல்கிறேன்.

நோய்வாய்ப்பட வேண்டாம் என்ற நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பால் பக்கெட் நன்றாக இல்லை என்று சொல்ல முதுகெலும்பு இருந்தது. ஆனால் இன்றைய ஜனாதிபதி ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கு விஷம் கொடுக்கும் தலைவராக மாறிவிட்டார்.

இந்த ஜனாதிபதி காலத்தில் மேலும் அதிக விஷம் கொடுக்கும் நாடுகளின் பட்டியலில் எங்கள் நாடு முதலிடத்தில் உள்ளது. ஆட்சிக்கு கொண்டு வந்த துறவிகளே இன்று வெளியே வந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டு தான் உள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசின்  சகல கொள்கைகளுக்கு எதிராகவும் குற்றம் சுமத்துகின்றனர்.” – அமைச்சர் தினேஷ் குணவர்தன

“எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசின்  சகல கொள்கைகளுக்கு எதிராகவும் குற்றம் சுமத்துகின்றனர்.” என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று , வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் ஜெனீவா விவகாரம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜயசிறி வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கேள்வி எழுப்பினார்.

“ஜெனிவா நெருக்கடியை கையாள்வதில் எமது அரசாங்கம் பலவீனமடைந்திருக்க முடியும், நீங்கள் அதைத்தான் கூறப்போகின்றீர்கள், ஆனால் உங்களின் அரசாங்கமும், அரச அதிகாரிகளும் பலவீனப்பட்டுள்ள காரணத்தினால் தான் இம்முறை ஜெனிவாவில் 46/1 பிரேரணையில் தோல்வியை கண்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன,

ஜெனீவா விடயங்களை கையாள்வதில் எமது நட்பு நாடுகள் மற்றும் எம்முடன் நெருக்கமாக செயற்படும் நாடுகளிடம் எமது தரப்பு காரணிகளை முன்வைத்தோம்.

அதேபோல் ஜெனீவா நெருக்கடிகளை எமது அரசாங்கம் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவல்ல. எவ்வாறு இருப்பினும் எமது தூதுக்குழு, தூதரகம் இந்த விடயத்தில் செய்ய வேண்டிய உயரிய சேவையினை செய்துள்ளது.

கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சுடன் இணைந்தும், தனித்தும் எமது தூதரகம் கடமையாற்றி நாட்டிற்காக செயற்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சகல கொள்கைக்கு எதிராகவும் குற்றம் சுமத்துகின்றனர். இப்போது வெளிநாட்டு தூதுவர்களை நியமிப்பது குறித்த நடவடிக்கைகளிலும் குற்றம் சுமத்துகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

காதல் விவகாரத்துக்காக யாழில் இருந்து வவுனியா வந்து வீடு புகுந்து தாக்குதல் – இருவர் கைது! 

வவுனியாவின் மூன்று முறிப்புப் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய குழுவில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றிருந்த குறித்த குழு கடந்த திங்களன்று இவ்வாறு வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்டது.

காதல் விவகாரம் காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த வீட்டிலிருந்த பொருட்கள் சேதமாக்கப்பட்டது.

இதனிடையே, தாக்குதல் நடத்திய குழு பயணித்த வாகன இலக்கம் பொலிஸாருக்கு உடனயடியாகத் தெரியப்படுத்தப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் ஊடாகவும் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

எனினும், இதுகுறித்து கடந்த இரண்டு நாட்களில் பொலிஸாரினால் எவ்வித கைது நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் மீண்டும் பொலிஸாரிடம் இதுகுறித்து வலியுறுத்தினார்.

இந்நிலையில், விசேட பொலிஸ் குழு யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டு இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக திலீபன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வவுனியா – திருநாவற்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் பொலிஸாரினால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடற்றொழிலாளர்களுக்கு தொழிற்றுறைப் பயிற்சிகளை வழங்குவதற்கும் பிரான்ஸ் ஆர்வம் !

இலங்கையின் கடற்றொழிலாளர்களுக்கு தொழிற்றுறைப் பயிற்சிகளை வழங்குவதற்கும் பிரான்ஸ் ஆர்வம் கொண்டுள்ளதாக அந்நாட்டு தூதுவர் எரிக் லெவரூட் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவரூட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (08.04.2021) கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

கடற்றொழில், நீர்வேளாண்மை ஆகிய துறைகளில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி தொடர்பாக இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் தூதுவர், தென்பகுதியிலுள்ள காலி, பேருவளை, குடாவெல்ல மற்றும் குரானவெல்ல ஆகிய நான்கு மீன்பிடித் துறைமுகங்களை அபிவருத்திசெய்ய பிரான்ஸ் அரசாங்கம் ஆர்வமாகவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், அபிவிருத்தி தொடர்பான ஆராய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதற்கான பணிகள் ஆரம்மாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனைவிட, இலங்கையில் கண்ணாடி நாரிழையில் அமைக்கப்பட்ட படகுகள் சுற்றாடல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த தகுந்த கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்றும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கையின் கடற்றொழிலாளர்களுக்கு தொழிற்றுறைப் பயிற்சிகளை வழங்குவதற்கும் பிரான்ஸ் ஆர்வம் கொண்டுள்ளதாக எரிக் லெவரூட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கடற்றொழில் துறையில் வளமான எதிர்காலம் உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த துறையை அபிவிருத்தி செய்வதன் ஊடாக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என்று கூறினார்.

மேலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில் துறையில் அபிவிருத்திக்கு பிரான்ஸ் உதவ வேண்டுமென அவர் இதன்போது பிரான் தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“மாகாண சபைத் தேர்தலுக்கு நான் எதிரானவன்.” – அமைச்சர் சரத் வீரசேகர

“மாகாண சபைத் தேர்தலுக்கு நான் எதிரானவன். ஆனாலும் அரசாங்கமே குறித்த தேர்தலினை நடத்தினால் அதனை தடுக்க முடியாது.” பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத்  தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது,

“ மாகாண சபைத் தேர்தலுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடாகும்.

ஒரு நாட்டில் ஒரு சட்டமொன்று இருந்தால் அது ஒன்பது மாகாணங்களுக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும். மாறாக ஒன்பது மாகாணங்களுக்கு ஒன்பது சட்டங்கள் இருக்க முடியாது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.

இருப்பினும் தனிப்பட்ட கருத்தைப் பொருட்படுத்தாமல், நாம் கூட்டாகவே முடிவுகளை எடுக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“யாழ். மாநகர காவல் படையின் சீருடை வடிவத்தில் எந்தவொரு உள்ளநோக்கமும் பிரதிபலிப்பும் இல்லை.” – வி.மணிவண்ணன்

“யாழ். மாநகர காவல் படையின் சீருடை வடிவத்தில் எந்தவொரு உள்ளநோக்கமும் பிரதிபலிப்பும் இல்லை.” என மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையால் மாநகரத்தை தூய்மைப்படுத்தல் மற்றும் ஒழுங்குமுறைச் செயற்பாட்டுக்காக மாநகர காவல் படை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள சீருடை, விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பிரிவின் சீருடை வடிவம் என சில இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டது.

இந்நிலையில் இன்று (08.04.2021) ஏற்பாடு  செய்திருந்த வி.மணிவண்ணன் ஊடக சந்திப்பின் போதே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

மாநகர காவல்படையின் சீருடையில்  எந்தவொரு முன்னிலைப்படுத்தலோ அல்லது உள்நோக்கமோ கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புதிய காவல் படையானது, ஏற்கனவே மாநகர சபையில் பணிபரியும் ஐந்து ஊழியர்களைப் பயன்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவர்கள் வடக்கில் உள்ள ஒரேயொரு மாநகரத்தைச் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பதற்காக, குப்பைகளைக் கண்டபடி போடுபவர்கள் மற்றும் நகரை அசுத்தமாக்கும் பிற செயற்பாடுகளைச் செய்பவர்களைக் கண்டறிந்து அந்தச் செயற்பாடுகளைத் தடுப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்தச் செயற்பாடு கொழும்பு மாநகர சபையின் செயற்பாட்டைப் பின்பற்றியே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பரப்பப்பட்டுவரும் செய்திகளுக்கு மாநகரசபை பொறுப்பேற்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக பொலிஸார் தம்மிடம் விளக்கம் கோரியதாகக் குறிப்பிட்டுள்ள மாநகர முதல்வர் மணிவண்ணன், மேற்படி விடயங்களைச் சுட்டிக்காட்டியதாகவும், விளக்கமளிப்பதற்காக அவர்களுக்கு வடிவமைக்கப்பட்ட சீருடையை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்து கடமையில் ஈடுபட்ட யாழ் மாநகர காவல் படை – பொலிஸ் விசாரணை ஆரம்பம் !

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர ஆணையாளரிடம் 3 மணிநேரத்துக்கு மேலாக வாக்குமூலம் பெறப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், காவல் படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடைமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் மீண்டும் விடுதலைப்புலிகளின் காவல்துறை; அசத்திய மணி! – ATHIRVU.COM

அத்துடன் தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்தமை தொடர்பில் கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க அழைக்குமாறு பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.

இதனால் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்துள்ளார்.

விசாரணைகள் தொடர்பில் பொலிஸாரின் தகவலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ். மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும், வெற்றிலை துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று மாலை ஊடகங்கள் ஊடாக அறிவித்திருந்தார்.

இந்த நடைமுறையை கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக மாநகரகாவல் படை உருவாக்கம் !

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநகரப் பாதுகாப்புப் படை இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள நிலையில், நேற்று (07.04.2021) பரீட்சார்த்தப் பணியை குறித்த காவல்படை முன்னெடுத்துள்ளது.

இதன்படி, நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்டுள்ள நிலையில், விபத்துக்களைத் தவிர்க்கும் முகமான முன்னாயத்த நடவடிக்கைகளை இந்த மாநகர காவல் படை கண்காணித்தது.

யாழ். மாநகரில் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கும் கழிவகற்றல் பொறிமுறையைக் கண்காணிப்பதற்கும் மற்றும் மாநகரின் ஒழுங்குமுறை உள்ளிட்டவற்றைக் கண்காணிப்பதற்கும் என குறித்த மாநகர காவல் படை உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதிய காவல் படையில் பணிபுரியும் ஒருவர் தெரிவிக்கையில், “யாழ். மாநகர சபையின் காவல் படையின் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் வீதியில் இந்தப் பணியை ஆரம்பித்தோம். வாகனம் ஒன்றிலிருந்து கழிவு எண்ணெய் வீதியில் ஊற்றப்பட்டிருந்த நிலையில் பெண்ணொருவர் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பகுதியில் விபத்துக்கள் ஏற்படாவண்ணம் நாம் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். எமது பணி சிறப்பாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“உண்மையான முஸ்லிம்கள் சஹ்ரான் போன்றோரது செயற்பாடுகளை அங்கீகரிக்க மாட்டார்கள்.” – ரிசாட் பதியுதீன்

“உண்மையான முஸ்லிம்கள் சஹ்ரான் போன்றோரது செயற்பாடுகளை அங்கீகரிக்க மாட்டார்கள்.” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(07.04.2021)  உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

இலங்கையில் கடந்த 10 வருடங்களாகவே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்தக் காலப்பகுதியில் அளுத்கம், திகண, கொழும்பு கிராண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தற்போது சஹ்ரானின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் உண்மையான முஸ்லிம்கள் சஹ்ரான் போன்றோரது செயற்பாடுகளை அங்கீகரிக்க மாட்டார்கள்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அதேபோன்று அந்த விடயத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அப்பாவிகளை விடுதலை செய்யவேண்டும்.

இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்களை அடக்க நினைக்காதீர்கள். நாட்டின் மீது பாசத்துடன் நடந்து கொள்ளுங்கள். இதை மீறிச் செயற்பட்டால் உங்களுக்குத் தான் வீழ்ச்சி ஏற்படும். அது அழிவிற்கே வழிவகுக்கும் என அரசை கேட்டுக்கொண்டார்  ரிசாட் பதியுதீன்.

“மற்றவர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்பதை உயர்வான விடயமாக நபிகள் நாயகம் தெரிவித்திருக்கிறார்கள்.” – நாடாளுமன்றில் நீதியமைச்சர் !

“மற்றவர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்பதை உயர்வான விடயமாக நபிகள் நாயகம் தெரிவித்திருக்கிறார்கள்.” நீதிஅமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நீதிஅமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,

இந்ததாக்குதலை தடுக்கக் கூடியதாக இருந்தாலும் பொறுப்பானவர்கள் தவறிவிட்டதாக அறிக்கைசுட்டிக்காட்டுகிறது. இரத்த தாகம் கொண்டகுழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முழு முஸ்லிம் சமூகமும் கண்டித்துள்ளது.

1,100 வருடங்களான ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக வாழும் மக்களை அடிப்படைவாதத்தின் பால் தள்ளுவதாக அமையக் கூடாது. பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக பிரிவினையை வளர்ப்பதாக இந்த அறிக்கை இருக்கக்கூடாது.

சுயலாப அரசியலுக்காக இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி இனங்களுக்கிடையில் நல்லிணகத்தை குழப்பும் வகையில் இந்த அறிக்கையை பயன்படுத்தக்கூடாது. இலங்கையில் வாழும் மொத்த முஸ்லிம்களும் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக எந்த சாட்சியும் கிடையாதென அறிக்கை தெரிவிக்கிறது.

அவ்வாறு அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சமூகவலைத் தளங்களின் வாயிலாக பரப்பப்படுகிறது. சாய்ந்தமருதில் இயங்கிய பயங்கரவாதத்துடன் தொடர்புள்ள வீடு அப்பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்தே பிடிபட்டதையும் அறிக்கை குறிப்பிடுகிறது.

உங்களுக்கு உங்கள் மார்க்கம், எமக்கு எமது மார்க்கம் என்றே குர்ஆன் குறிப்பிடுகிறது. கொடை வழங்குதல்,தொழுதல் என்பவற்றைவிட மற்றவர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்பதை உயர்வான விடயமாக நபிகள் நாயகம் தெரிவித்திருக்கிறார்கள்.

குரோதத்தினால் மேலும் குரோதம் வளரும் என்று புத்தபிரான் போதித்திருக்கிறார். பிரிவு,சந்தேகம், குரோதம், வெறுப்பு என்பவற்றை ஒதுக்கி ஒவ்வொருவர்களுக்குமிடையில் நல்லுறவை வளர்க்கவும், ஒற்றுமையை பேணவும் பொறுப்புடன் செயற்படவேண்டும்.

பொதுவான முஸ்லிம்கள் அடிப்படைவாதத்தை ஆதரிக்கவில்லை.ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக வாழவே அவர்கள் விரும்புகின்றனர். இனவாதம்,அடிப்படைவாதம் என்பவற்றை பரப்பி மக்களை தூரமாக்காது மக்கள் மத்தியில் நல்லுறவை வளர்க்க அனைவரும் முன்வரவேண்டும். சந்தேகத்தை ஒதுக்கி கௌரவமான சமூகமாக வாழ்வதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது” எனவும் நீதிஅமைச்சர் குறிப்பிட்டார்.