18

18

அன்னை பூபதியின் நினைவு தினத்தை அவரது சமாதிக்குச் சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது – பொலிஸார் எச்சரிக்கை !

“அன்னை பூபதியின் நினைவு தினத்தை அவரது சமாதிக்குச் சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள்.” என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில்,

“நாவலடியில் உள்ள நினைவிடத்தில் எங்களது அன்னையின் நினைவு தினத்தினை நாங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அனுஷ்டித்து வருகின்றோம்.

இந்நிலையில், அன்னையின் நினைவிடத்துக்குச் சென்று அனுஷ்டித்தால் கைதுசெய்யப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நாங்கள் எங்களது தாயின் இறப்பினை அவரைப் புதைத்துள்ள இடத்தில் அனுஸ்டிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவது கவலைக்குரியதாகும். இது அரசியல் சார்ந்த செயற்பாடு அல்ல. அன்னை பூபதி எனது தாயார் என்பதுடன் அவரது இறப்பினை நாங்கள் நினைவுகூருகின்றோம். அதில் எவ்வித பயங்கரவாத செயற்பாடும் இல்லை.

எனது தாயார் அன்னையர் முன்னணி என்ற அமைப்பின் ஊடாக இந்திய இராணுவத்திற்கு எதிராகவே போராடி உயிர் துறந்தார். அவர் ஆயுதம் ஏந்தி எந்தப் போராட்டத்தினையும் நடத்தவில்லை. இந்த நாட்டிலிருந்து இந்தியப் படையினரை வெளியேற்றவே போராட்டினார். அவ்வாறானவரை யாரும் பயங்கரவாதியாக சித்திரிக்க வேண்டாம்.

நாங்கள் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து எமது தாயாரை நினைவுகூரவில்லை. நாங்களும் எங்களது குடும்பமுமே அவரை நினைவுகூருகின்றோம். உலகம் எங்கும் இன்று அன்னைக்கு நினைவு தினம் நடத்தப்பட்டுவரும் நிலையில் அவரது சமாதியில் எங்களுக்கு நினைவு தினம் நடத்தமுடியாமல் இருப்பது வேதனையளிக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு மியன்மார் இராணுவம் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை !

மியன்மாரில்  இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் திகதியில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அந்நாட்டு இராணுவம் கவிழ்த்து வைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. முந்தைய ஆட்சியாளர்கள் அனைவரையும் சிறை வைத்துள்ள இராணுவம் நாட்டில் ஓராண்டுக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது.

மியான்மரில் 23 ஆயிரம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை - ராணுவம்  நடவடிக்கை || Tamil News Myanmar junta pardons and releases more than 23,000  prisoners

இதற்கிடையில் இராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இராணுவம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இரும்புக்கரம் கொண்டு இந்த போராட்டங்களை ஒடுக்கி வருகிறது. ஆனாலும் இராணுவத்தின் இந்த அடக்குமுறைக்கு மத்தியிலும் மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில் மியன்மாரின் திங்கியன் புத்தாண்டையொட்டி 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு இராணுவம் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளது.

இதுகுறித்து இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

,“இராணுவ தலைவர் ஆங் ஹேலிங் 173 வெளிநாட்டவர்கள் உள்பட 23 ஆயிரத்து 47 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளதாகவும், மேலும் பலருக்கு தண்டனை காலத்தை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் விடுதலை செய்யப்பட்டுள்ள 23 ஆயிரம் கைதிகளில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் கைது செய்யப்பட்ட ஜனநாயக ஆர்வலர்களும் அடங்குவார்களா என்கிற தகவல் வெளியாகவில்லை.‌

மியன்மாரை பொறுத்தவரையில் மிக முக்கியமான பொது விடுமுறைகளின்போது கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம். ஆனால் அங்கு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு பிறகு 2-வது முறையாக மிகப்பெரிய எண்ணிக்கையில் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் திகதி ஒற்றுமை தினத்தின்போது சுமார் 23 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தயவு செய்து பதவியை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – மேர்வின் சில்வா

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய முயற்சித்த போது அவரை பாதுகாத்த விஜயதாஸ ராஜபக்ஸவுக்கே கொலை ஜனாதிபதி அச்சுறுத்தல் விடுவது  பொறுத்தமற்றது. இவ்வாறான பொறுத்தமற்ற நடத்தைகளை ஜனாதிபதி மாற்றிக்கொள்ள வேண்டும்.” என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

1994 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் சட்ட ஆலோசகராக ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ச செயற்பட்டார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க வேட்புமனுத் தாக்கல் செய்யாமலிருந்தபோது இவரே போராடி வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது , நல்லாட்சி அரசில் நீதி அமைச்சராகச் செயற்பட்டு அதனை விஜயதாஸ ராஜபக்சவே தடுத்தார். ‘இது சட்டத்துக்கு முரணான செயலாகும். நான் நீதி அமைச்சராக இருக்கும் வரை இதற்கு இடமளிக்கமாட்டேன்’ என்று விஜயதாஸ பகிரங்கமாகக் கூறினார்.

சிறைவாசத்திலிருந்து பாதுகாத்த நபருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அச்சுறுத்தல் விடுப்பது பொறுத்தமற்றது. ஜனாதிபதியொருவர் பேசக் கூடிய முறைமையிலிருந்து விலகி தரமற்ற வகையில் விஜயதாஸவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

செய்யும் தொழில் பற்றி அறியாவிட்டால் மறைந்த ராஜபக்சக்களின் கௌரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்தாமல் தயவு செய்து பதவியை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம்  வலியுறுத்துகின்றேன். ஜனாதிபதி என்ற பதவியின் கௌரத்தைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இராணுவத்திலும் நீங்கள் உயர் பதவி வகிக்கவில்லை. கேர்ணலாக மாத்திரமே செயற்பட்டீர்கள். ஒழுக்க விழுமியங்கள், முக்கியத்துவம், பொறுப்பு, அச்சமற்ற நிலை இன்றும் இராணுவத்துக்கு உள்ளது. ஜனாதிபதி பதவியும் தற்காலிகமானது என்பதை மறந்து விட வேண்டாம். மனிதாபிமானமே நிரந்தரமானது. எனவே, தயவு செய்து இவ்வாறான நடத்தைகளை மாற்றிக் கொள்ளுங்கள்.

ஒரு ஹிட்லரைப் போன்று செயற்படுங்கள் என்று கூறுகின்றனர். ஆனால், ஹிட்லருக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஹிட்லரைப் பற்றி வரலாற்றில் கூட எழுத முடியாது. ஹிட்லருக்கு என்ன ஆயிற்று என்பதை அவரும் அறியவில்லை, அவரைச் சார்ந்தோரும் அறியவில்லை. எனவே, ஒரு மனிதனாகச் செயற்படுங்கள்” – என்றார்.