04

04

லண்டனின் கென்ட் மாகாணத்தில் வெடிப்பு சம்பவம் – ஏழுபேர் படுகாயம் !

லண்டனின் கென்ட் மாகாணத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஏழுபேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லண்டனில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இருவர் படுகாயம் - ஐபிசி தமிழ்

இவர்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் லண்டனில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றைய ஐவரும் வில்லியம் ஹார்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த வீட்டில் இருந்த பலர் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு எவரும் செல்ல வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் வரலாற்றுச்சாதனை !

2020ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அவரது இசட் புள்ளி 2.9422 ஆகும். அவர் தேசிய நிலையிலும் யாழ்ப்பாணம் மாவட்ட நிலையிலும் முதலிடம் பெற்று வரலாற்றுப் பதிவு செய்துள்ளார்.

2020ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டன. அதனடிப்படையில் ஒரு லட்சத்து 94 ஆயித்து 297 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

அதன்படி, புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 78 ஆயி்த்து 337 மாணவர்களும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 960 மாணவர்களும் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

“தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக எந்த வகையிலேனும் எங்களுடைய போராட்டங்கள் தொடரும்.” – மாவை சேனாதிராஜா

“தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக எந்த வகையிலேனும் எங்களுடைய போராட்டங்கள் தொடரும்.” என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனால் இன்றைய தினம் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரைப் பெற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளளோம்.

கொரோனா அச்சுறுத்தலால் மக்களை ஒன்று திரட்டி போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்ற போதிலும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக எந்த வகையிலேனும் எங்களுடைய போராட்டங்கள் தொடரும்.

தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழ் இனத்தின் பெரும்பான்மைத்துவத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவோம்.”  எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

“நான் புலியென்றால் நீ நாய், நாய்தான் இடையில் புகுந்து குரைக்கும் வாயை மூடிக்கொண்டு இருடா பைத்தியக்காரா.” – பேச விடாது தடுத்த பாராளுமன்ற உறுப்பினரை நோக்கி இரா.சாணக்கியன் !

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இரா. சாணக்கியன்   பேசும் போது   புலி என்று கூறியவருக்கு “நான் புலியென்றால் நீ நாய், நாய்தான் இடையில் புகுந்து குரைக்கும் வாயை மூடிக்கொண்டு இருடா பைத்தியக்காரா.” என பதில் வழங்கி தன்னுடைய பாராளுமன்ற உரையை ஆற்றியுள்ளார் இரா. சாணக்கியன்.
 Covid 19 இன் மூன்றாவது அலையினை எமது நாடு எதிர்நோக்கியுள்ளது. 700 பேர் மட்டில் இறந்துள்ளார்கள். இதற்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை விசாரிப்பதற்கென இதற்குரிய ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும். எம் நாட்டு மக்கள் இறப்பதற்கு யார் காரணம் என்பதனை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும்.
2020ஆம் ஆண்டு அவசரமாக தேர்தல் நடத்தியமையினாலேயே Covid 19 முதலாவது அலையை எதிர்கொண்டோம். Covid 19 முதலாவது அலை ஏற்படுவதற்கான முழுக் காரணம் இந்த அரசாங்கமே. Covid 19 முதலாவது அலையிலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.
மார்ச் மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை இடம்பெற்ற Covid 19 முதலாவது அலையில் 20 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியது இந்த அரசாங்கம். Covid 19 மூன்றாவது அலை Fort City அலை. பாராளுமன்றம் இங்கு கூடியிருப்பது நாளைய தினம் Fort City இனது இரண்டாவது வாசிப்பினை எடுக்க வேண்டும் எனும் காரணத்திற்காகவே ஆகும். பல்வேறுபட்ட கருத்திட்ட செயற்றிட்டங்களை மேற்கொள்வது என்று கூறி கிராமிய மக்களை ஏமாற்றாமல் நாட்டிற்குத் தேவையானதை செயற்படுத்துங்கள்.
 கிழக்கு மாகணத்தில் மாகண சபைத் தேர்தல் நடைபெறுமா? நடை பெறாதா? என்ற நிலை காணப்பகின்றது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசாங்கத்துடன் இணைந்து 20 வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள், அரசாங்கத்தின் கைக்கூலிகள் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு முதலமைச்சரை கொண்டுவர வேண்டும் என்ற திட்டத்தினை ஆரம்பித்துள்ளார்கள்.
கிழக்கு மாகாணத்தில் 2008 – 2012 வரை ஒரு தமிழ் முதலமைச்சர், 2013 – 2017 வரை முஸ்லீம் முதலமைச்சர் அடுத்த தேர்தலில் ஒரு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த முதலமைச்சரைக் கொண்டு வர வேண்டுமென்ற எண்ணம் கொண்டுள்ளார்கள். 25 மாவட்டங்களில் 25 RDHS மாத்திரமே உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 26 வது RDHS ஒன்று உள்ளது. கல்முனைப் பிரதேசத்திற்கென ஒரு RDHS, அம்பாறை மாவட்டத்திற்கென ஒரு RDHS காணப்படுகின்றது. கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஒன்று உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்துடன் நிலத்தொடர்பு இல்லாத கல்வி வலயம் ஒன்று உள்ளது. இன்று கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் என்ற ஒன்றை உப பிரதேச செயலகமாக தரம் குறைத்துள்ளனர். இதற்கு கல்முனையை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் இதற்கு பின்னணியாக இருப்பார் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. இந்தச் செயலானது தமிழ் – முஸ்லீம் மக்களுக்கிடையில் இருக்கும் உறவினை சீர்குலைப்பதற்காகவே நடைபெறுகின்றது.
 இலங்கையில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பல பிரச்சினைகள் எழுகின்றன. ஒரு கட்சியின் தலைவர் ரிசாட் பதியுதீன் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்கள், அசாத் சாலி அவர்களைக் கைது செய்து வைத்துள்ளார்கள், புர்கா அணிவதைத் தடை செய்துள்ளார்கள், மதரசாக்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளார்கள். இதில் எதற்காவது முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்தார்களா? ஆனால் தமிழ் – முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக செயற்படுகின்றார்கள்.
இங்கு அவர்கள் அரசியல் ஆதாயத்தையும் தங்கள் இருப்பையும் தக்கவைத்துக்கொள்ள முனைகின்றார்கள். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரச தமிழ் அரசியல் வாதிகளும் மக்களுக்கு எதிரான செயல்களை மேற்கொள்கின்றார்கள். இராஜங்க அமைச்சர் வியாளேந்திரன் அவர்கள் கூறினார் கல்முனை பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவில்லை என்றால் கிழக்கு மாகண நிர்வாகத்தை முடக்குவேன் என்று. ஆனால் இன்று அதைப் பற்றி எவ்வித பேச்சுக்களும் இல்லை.
பிள்ளையான் அவர்கள் பாராளுமன்ற பங்குபற்றல் மற்றும் செயல்பாடுகளின் தர வரிசையில் 223 வது இடத்தில் காணப்படுகின்றார். ஆனால் சம்மந்தன் ஐயா 88 வயதிலும் 216 வது இடத்தில் உள்ளார். மட்டக்களப்பு மக்கள் மட்டக்களப்பினை மீட்பேன் என்று பிள்ளையான் கூறிய பொய்யினை நம்பி அவருக்கு வாக்களித்துள்ளார்கள். இவரால் இன்று வரை கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்குரிய நடவடிக்கை எதனையும் செய்யவில்லை. கருணா அம்மான் என்பவர் வந்தார் மக்களின் வாக்குகளைப் பிரித்தெடுத்து விட்டு தற்போது அவரையும் காணவில்லை. தமிழ் – முஸ்லீம் மக்களுக்கிடையிலான ஒற்றுமையினை பலப்படுத்த வேண்டும். கிழக்கு மாகாணத்தில் சிங்கள பேரினவாத ஆதிக்கம் அதிகரித்துகொண்டு வருகின்றது. விகாரை மற்றும் பெளத்த மையம் என்பவற்றினை கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மயிலத்தமடுவில் 10,000 ஏக்கர் காணியும் மற்றைய இடங்களில் 5000 ஏக்கர் பறிபோயுள்ளது . இதைப்பற்றி கதைக்க முடியாத கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இன்று தமிழ் – முஸ்லீம் மக்களுக்கிடையிலான ஒற்றுமையினை சீர்குலைக்கப் போகின்றார்கள் அதற்கான திட்டம் தீட்டுகின்றார்கள்.” எனவும் கூறியுள்ளார்.

கொரோனா தீவிர பரவலால் வீரர்கள் பலர் பாதிப்பு – ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கால வரையறையின்றி காலவரையின்றி ஒத்திவைப்பு !

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத இருந்தது.

இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், ஐதராபாத் அணி விர்த்திமான் சஹா, டெல்லி அணியின் அமித் மிஷ்ராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

14 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் - போட்டி அட்டவணை வெளியீடு | Kuruvi

சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் ஒரு உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதையடுத்து நடப்பு ஐ.பி.எல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

மே 30ந்தேதி வரை போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

“சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என்ற பெயர் எடுத்தவன் நான்.” – எம்.ஏ.சுமந்திரன்

“சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என்ற பெயர் எடுத்தவன் நான். ஆகவே அரசியலில் பொய் சொல்ல வேண்டிய எந்தத் தேவையும் எனக்கு கிடையாது. ”  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என்ற பெயர் எடுத்தவன் நான். ஆகவே அரசியலில் பொய் சொல்ல வேண்டிய எந்தத் தேவையும் எனக்கு கிடையாது. குறிப்பாக எதிரணியினர் இவ்வாறு கூறி திரிகின்றார்கள். ஜெனிவா தொடர்பாக பல இடங்களில் பல விளக்கங்களை கொடுத்திருக்கின்றேன்.

அதில் கேட்கப்பட்ட கேள்வி அனைத்திற்கும் பதில் கூறியுள்ளேன். ஆகவே எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை கூட நான் சொன்னது கிடையாது. மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவது என்பதால் பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது. ஏனென்றால் சந்திரனை கொண்டு வருவோம், சூரியனை கொண்டு வருவோம் என மக்களுக்கு அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் நான் அவ்வாறு இல்லை. இப்படி தான் என தெளிவு படுத்துகின்றேன். இவ்விடயம் தான் அவர்களுக்கு கசக்கின்றது என குறிப்பிட்டார்.

மேற்கு வங்கத்தில் தனிப்பெரும்பான்மையுடன் நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி !

மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவியது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 213 தொகுதிகளை கைப்பற்றியது.

இதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் அமையும் ஆட்சியில் தொடர்ந்து 3வது முறையாக மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். எனினும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜியை விட ஆயிரத்து 956 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

மம்தா பானர்ஜி: வயது, வாழ்க்கை வரலாறு, கல்வி, குடும்பம், சாதி, சொத்து  மதிப்பு - Oneindia Tamil

கடந்த 2016-ஆம் ஆண்டு 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக, தற்போது 77 தொகுதிகளை கைப்பற்றி எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை. தேர்தல் வெற்றி குறித்து பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்கம் இந்தியாவை காப்பாற்றி விட்டதாக கூறினார். இதனிடையே, மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், மேற்கு வங்க மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதி அளித்துள்ளார்.

இதற்கிடையே மேற்கு வங்க முதலமைச்சராக மூன்றாவது முறையாக நாளை மம்தா பானர்ஜி பதவியேற்கிறார்.

27 வருட மண வாழ்க்‍கையை முறித்துக்‍கொள்வதாக பில்கேட்சும் அவரது மனைவி மெலிண்டா கேட்சும் அறிவிப்பு !

27 வருட மண வாழ்க்‍கையை முறித்துக்‍கொள்வதாக மைக்‍ரோ சாஃப்ட் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான பில்கேட்சும் அவரது மனைவி மெலிண்டா கேட்சும் அறிவித்துள்ளனர். ஆயினும் Bill and Melinda Gates அறக்‍கட்டளைக்‍காக இருவரும் ஒன்றாகத் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

உலகளவில் மென்பொருள் தயாரிப்பில் முன்னிலை வகிக்‍கும் மைக்‍ரோ சாஃப்ட் நிறுவனத்தை உருவாக்‍கியவர்களில் ஒருவரான பில்கேட்ஸ், 27 ஆண்டுகளுக்‍கு முன்பு மெலிண்டாவை தனது வாழ்க்‍கை துணையாக ஏற்றுக்‍ கொண்டார். இவர்களுக்‍கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், 27 வருட மண வாழ்க்‍கையை முறித்துக்‍ கொள்வதாக அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கூட்டாக அவர்கள் விடுத்துள்ள அறிக்‍கையில், நீண்ட சிந்தனைக்‍குப் பிறகு இந்த முடிவுக்‍கு வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இனிமேலும் ஒன்றாக சேர்ந்திருக்‍க முடியாது என நம்புவதால், இவ்வாறு முடிவு செய்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆயினும், Bill and Melinda Gates அறக்‍கட்டளைக்‍காக தொடர்ந்து ஒன்றாக செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

24 கொரோனா நோயாளிகள் ஓக்‍ஸிஜன் கிடைக்‍காததால் பரிதாபமாக உயிரிழப்பு – கர்நாடகாவில் சோகம் !

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 23 கொரோனா நோயாளிகள் உட்பட 24 பேர்,ஓக்‍ஸிஜன் கிடைக்‍காததால், பரிதாபமாக உயிரிழந்தனர். ஆக்‍ஸிஜன் பற்றாக்‍குறை மரணங்கள் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து நிகழ்வது, மக்‍களிடையே அச்சத்தையும் பீதியையும் அதிகரித்துள்ளது.

டெல்லி மருத்துவமனைகளுக்‍குத் தேவையான மருத்துவ ஆக்‍ஸிஜன் கிடைக்‍காததால், கங்காராம் மருத்துவமனை, Jaipur Golden மருத்துவமனை, Batra மருத்துவமனை ஆகிய 3 மருத்துவமனைகளில் 57 கொரோனா நோயாளிகள் கடந்த சில தினங்களில் உயிரிழந்தனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கொரோனா நோயாளிகள் 23 பேர் உட்பட, 24 பேர், சிகிச்சைக்‍குத் தேவையான ஆக்‍ஸிஜன் கிடைக்‍காததால் இன்று உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்‍களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினரும், உறவினரும் கதறி அழுதபடி மருத்துவமனை வளாகத்தில் கூடியுள்ளனர். அரசு மருத்துவமனையின் அவல நிலையைக்‍ கண்டித்து, பொதுமக்‍களும் உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மைசூரிலிருந்து வரவேண்டிய ஆக்‍ஸிஜன் சிலிண்டர்கள் உரிய நேரத்தில் கிடைக்‍காததால், ஆக்‍ஸிஜன் பற்றாக்‍குறை ஏற்பட்டு, 24 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்‍கின்றன.

“இலங்கையின் ஏனைய சமுதாயத்தவர்களுக்கு வழிகாட்டியாக முன்மாதிரியான சமுதாயமாக இஸ்லாமியர்கள் இருக்க வேண்டும்.” – ஏ.எல்.எம் .அதாஉல்லா

“இலங்கையின் ஏனைய சமுதாயத்தவர்களுக்கு வழிகாட்டியாக முன்மாதிரியான சமுதாயமாக இஸ்லாமியர்கள் இருக்க வேண்டும்.” என தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் .அதாஉல்லா தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸ் பாலமுனை அமைப்பாளர் கே.எல் . உபைதுள்ளா தலைமையில் நேற்று முன்தினம் பாலமுனை ஹிறா நகர் கிராமத்திலுள்ள பரிமேட்டு சோலையில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழு முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார் .

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

நமது அரசியல் பயணம் என்பது மிக புனிதமானதாக இருக்க வேண்டும் . நமது மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவது தொடர்பான இலக்கை நோக்கி நாங்கள் செல்ல வேண்டும் . நாடு நிம்மதியாக இருக்கின்ற போதுதான் நாட்டில் வாழுகின்ற மக்கள் நிம்மதியாக இருக்க முடியும் .

நாட்டையும், நாட்டில் வாழும் சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் வேறாக தள்ளிவைத்து விட்டு முஸ்லிம் சமூகம் மாத்திரம் வாழ வேண்டும் என்று நினைப்பதென்பதும் இவ்வாறே ஏனையவர்கள் நினைப்பதும் இயற்கைக்கு முறணானது .  இறைவன் உதவியால் யாருக்கும் எதற்கும் அச்சமடைய வேண்டிய அவசியம் எமக்கு இல்லை . யாருக்கும் தலைகுனிய வேண்டிய அவசியம் இல்லை . யாருக்கும் நாம் பதில் கூறவேண்டிய அவசியமும் இல்லை. நாடு நிம்மதியாக இருக்கின்ற போதுதான் நாட்டில் வாழுகின்ற மக்கள் நிம்மதியாக இருக்க முடியும்.

நமது சமூதாயம் தொடர்பாக நாடு தொடர்பாக எம்மைப் பொறுத்தவரையில் நமது சமுதாயம் என்று மாத்திரம் பேசுவதை பிழையாக பார்க்கிறேன் . சமுதாயம் சமுதாயம் என்று சொல்கின்ற எல்லாமே இறைவனால் படைக்கப்பட்ட மனித குலம்தான் . ஏனைய சமுதாயத்தவர்களுக்கு வழிகாட்டியாக முன்மாதிரியான சமுதாயமாக இஸ்லாமியர்கள் இருக்க வேண்டும் . வாழ்ந்து காட்டவேண்டும் . அது அரசியலாக இருந்தாலும் சரி, சமுதாயமாக இருந்தாலும் சரி இன்று தேசிய காங்கிரஸ் அதனை செய்து வருகின்றது .

அதனால் தான் அச்சமில்லாமல் இருக்கின்றோம் . இன்று முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் கேள்விக்குட்படுத்தப்படுவதும் சிறைக்குச் செல்வதும் விசாரணை என்பதும் என்கின்ற சூழ்நிலையிலே தேசிய காங்கிரஸ் கவனமாக இருக்கின்றது .

ஒன்றை மாத்திரம் அவர்களுக்கு சொல்ல இருக்கின்றோம் . நீங்கள் தனிப்பட்ட முறையில் பிழைகள் செய்திருந்தால் அதனை தனிப்பட்ட முறையில் எதிர் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்கொள்ள முடியாமைக்காக மக்களை சூடாக்குவதிலிருந்து தவிர்க்க வேண்டும் . சுயநல அரசியலிலிருந்து விடுபட வேண்டும் . ஆண்டாண்டு காலம் எமது மக்கள் அரசியலுக்காக ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் . எத்தனையோ தேர்தல்களில் எமது மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றார் .