04

Monday, June 21, 2021

04

“யாழ்.பல்கலைகழகம் வேண்டாம் என்றவர்கள் இன்று அதனை சுயலாப அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர்.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“யாழ் பல்ககைக்கழக வளாகம் உருவான போது, வளாகம் வேண்டாம் என எதிர்த்த அரசியல் வாதிகள், இப்போது அந்த பல்கலைக்கழகத்தை தமது சுயலாப போலி எதிர்ப்பு அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Gallery

கற்கோவளம் கடற்றொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக கடந்த அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட பாலம், சரியான முறையில் அமைக்கப்படாமையினால் ஒரு வருடத்திற்குள் இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் பிரதேச கடற்றொழிலாளர்களின் கோரிக்கை்கு அமைய, குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டதை தொடர்ந்து மேற்கண்டவாறு ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அன்று யாழ் பல்ககைக்கழக வளாகம் உருவான போது, வளாகம் வேண்டாம் என எதிர்த்த அரசியல் வாதிகள், இப்போது அந்த பல்கலைக்கழகத்தை தமது சுயலாப போலி எதிர்ப்பு அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

அதுபோலவே, யாழ் நோக்கி புகையிரதம் வந்தால் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தடுப்போம் என சூளூரைத்தவர்கள் அதே புகையிரதத்தில் ஏறி பயணம் செய்வதற்கு முண்டியடிக்கின்றனர். தண்டவாளத்தில் தலை வைப்போம் என்றவர்கள், துண்டு போட்டு இடம் பிடிக்கின்றனர். இதுவே போலித் தமிழ் தேசியம்.

இதுதான் எங்களுக்கும் அடுத்தவர்களுக்கும் இடையிலான அரசியல் வேறுபாடு. குறித்த வேறுபாட்டினை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்களாயின், பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என்பதுடன், இவ்வாறான வேலைத்திட்டங்களையும் காத்திரமானதாக உருவாக்கி நீண்ட காலத்திற்கு பலன் அடைந்திருக்க முடியும்.

போலித் தமிழ் தேசியவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களும் போலியானவையாகவே இருக்கும் .இதுபோன்றே கூட்டமைப்பினரின் கம்புரளிய திட்டங்களும் மக்களுக்கு பயனற்று போயுள்ளமையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

“ஒரு வீரராக இருப்பது எனக்கு மகிழ்ச்சி. தலைவர் பதவி வேண்டாம்.” – ரஷித் கான்

ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். தனது  சுழற்பந்து வீச்சு மூலம் உலக முன்னணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வருகிறார். ஐ.பி.எல், பிக் பாஷ் உள்ளிட்ட ஏராளமான டி20 லீக்கில் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்கிறார்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டி டி20 அணியின் தலைவராக ஹஷ்மதுல்லா ஷாஹிதியை நிமியத்தது. துணைக் தவைராக ரஹ்மத் ஷாவை நியமித்தது. ரஷித்கானை புதிய துணைத்தலைவராக நியமித்துள்ளது. ஆனால் கேப்டனாக நியமிக்கவில்லை.
இந்த நிலையில் தலைவர் பதவியை விரும்பவில்லை என ரஷித் கான் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘நான் ஒரு வீரராக சிறந்தவன் என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். துணைக் கேப்டன் என்பது எனக்கு சிறந்தது. என்னுடைய ஆலோசனை தேவைப்படும்போது, தலைவருக்கு உதவியாக இருப்பேன். கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பது எனக்கு சிறந்தது.
ஒரு வீரராக அணிக்கு சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். தலைவராக மாறுபட்ட கோணத்தில் யோசிப்பதைவிட, என்னுடைய பணி அணிக்கு மிகவும் சிறந்தது, அணிக்கான எனது செயல்பாடு பாதிக்கப்படுமோ, என்று நான் பயப்படுகிறேன். இது முக்கியமானது. இதனால் ஒரு வீரராக இருப்பது எனக்கு மகிழ்ச்சி. கிரிக்கெட் போர்டு, தேர்வுக்கு எந்த முடிவை எடுத்தாலும், அதற்கு துணையாக நான் இருப்பேன்’’ என்றார்.

இஸ்ரேல் நாட்டில் தொடர்ச்சியான அரசியல் மாற்றங்கள் – ஆட்டம் காண்கிறது பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 வருடகால ஆட்சி !

இஸ்ரேல் நாட்டில் 12 ஆண்டு கால பெஞ்சமின் நேதன்யாகு ஆட்சி முடிவுக்கு வருகிறது. அங்கு எதிர்க்கட்சிகள் கூட்டணி அரசு அமைக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நப்தாலி பென்னட் பிரதமர் ஆகிறார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவிக்க ஆரம்பித்துள்ளன.

இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அரசு அமைக்கின்றன - நப்தாலி பென்னட்  பிரதமர் ஆகிறார் || Tamil News Naftali Bennett: Israel's far-right prime  ministerஇஸ்ரேல் நாட்டில் 2009-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி பெஞ்சமின் நேதன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு பல ஆண்டுகளாக  தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

கடைசியாக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிகுயிட் கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் அங்கு இழுபறி நிலைமை நீடித்தது.

இந்த நிலையில் அங்கு 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாய் கரம் கோர்த்து ஆட்சி அமைக்க நேற்று முன்தினம் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணியில் யேஷ் அதிட் (17இடங்கள்), காஹோல் லாவன்- புளூ அண்ட் ஒயிட் (8 இடங்கள்), இஸ்ரேல் பெய்டெய்னு (7 இடங்கள்), தொழிலாளர் கட்சி (7 இடங்கள்), யமினா கட்சி (7 இடங்கள்), நியூ ஹோப் (6 இடங்கள்), மெரேட்ஜ் (6 இடங்கள்), அரபு இஸ்லாமிக் ராம் (4 இடங்கள்) ஆகிய கட்சிகள் இடம் பெறுகின்றன. இந்த கட்சிகள் பெரும்பான்மையை விட கூடுதலாக ஒரு இடம் (மொத்தம் 62 இடங்கள்) பெற்று விட்டன. இதனால் அரசு அமைப்பதில் சிக்கல் எழாது.

இந்த கூட்டணியை யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெயிர் லாப்பிட் அறிவித்தார். சுழற்சி முறையில் பிரதமர் பதவி வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலில் யமினா கட்சியின் தலைவரான  நப்தாலி பென்னட் (வயது 49) பிரதமர் பதவி ஏற்பார். அவருக்கு பின்னர் யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெயிர் லாப்பிட் பிரதமர் பதவிக்கு வருவார்.

புதிய பிரதமர் பதவி ஏற்பதற்கு முன்னர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கும். பெரும்பான்மை பலம் இருப்பதால் வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு வெற்றி கிடைத்து விடும் என்று நம்பப்படுகிறது.

யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெயிர் லாப்பிட் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், “ எதிர்க்கட்சிகள் கூட்டாக அரசு அமைப்பது குறித்து ஜனாதிபதி ருவன் ரிவ்லினிடம் தெரிவிக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்ற சபாநாயகர் யாரிவ் ரெலவினிடமும் தெரிவிக்கப்பட்டு விட்டது. இஸ்ரேலின் அனைத்து குடிமக்கள் நலனுக்காகவும் எங்கள் அரசாங்கம் செயல்படும் என்று உறுதி அளிக்கிறேன். இந்த அரசு எதிரிகளை மதிக்கும். இஸ்ரேல் சமூகத்தின் அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைக்க முழு சக்தியையும் பயன்படுத்துவோம்” என கூறப்பட்டுள்ளது.

லாப்பிட்டுக்கு ஜனாதிபதி தி ருவன் ரிவ்லின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ புதிய அரசு அமைப்பதற்கான உங்கள் உடன்பாட்டுக்காக உங்களுக்கும், கட்சிகளின் தலைவர்களுக்கும் வாழ்த்துக்கள். புதிய அரசை அங்கீகரிப்பதற்கு விரைவில் நாடாளுமன்றம் கூடும் என்று எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.

அரபு இஸ்லாமிய ராம் கட்சித்தலைவர் மன்சூர் அப்பாஸ் நிருபர்களிடம் பேசுகையில், “இந்த முடிவு கடினமானதுதான். பல பிரச்சினைகள் இருந்தன. ஆனால் ஒப்பந்தங்களை எட்டுவது முக்கியம். அரபு சமூகத்தின் நலனுக்காக இந்த ஒப்பந்தத்தில் பல விஷயங்கள் உள்ளன” என குறிப்பிட்டார்.

இஸ்ரேலில்நப்தாலி பென்னட்தலைமையில் புதிய அரசு பதவி ஏற்பதால், 12 ஆண்டு கால பெஞ்சமின் நேட்டன் யாஹூ ஆட்சி முடிவுக்கு வருகிறது

தீப்பற்றிய கப்பல் எப்படி இலங்கை கடல் எல்லைக்குள் வந்தது ?- விசாரணை வேண்டும் என அடிப்படை உரிமைகள் மனு !

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த விதம் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே மற்றும் மீனவர்கள் சிலரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த மனுவில் எதிர்மனு தாரர்களாக, இலங்கை துறைமுக அதிகாரசபை, கடல்மாசு தடுப்பு அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் நாரா நிறுவனம், துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன உட்பட்ட சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அண்மையில் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த குறித்த கப்பல் தீப்பற்றியதால் பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ள அதேவேளை, நாட்டின் பொருளாதாரம் மற்றும் கடற்றொழில் துறைக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

கடற்கரைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆமை – காரணத்தை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு !

உனவட்டுன கடற்கரைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய ஆமையின் மரணத்திற்கான காரணம். தொடர்பில் ஆராயுமாறு காலி மேலதிக நீதவான் சஞ்சீவ பத்திரண உத்தரவிட்டுள்ளார்.

தீப்பற்றிய எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலிலிருந்து வெளியேறிய இரசாயன திரவியங்களின் காரணமாக இந்த ஆமை உயிரிழந்துள்ளதா என்ற சந்தேகம் நிலவியுள்ளதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, உயிரிழந்த ஆமையின் உடலை, அத்திட்டிய வனஜீவராசிகள் கால்நடை மருந்துவ அலுவலகத்திற்கு அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் 25 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்ளும் திட்டத்தில் இலங்கை!

25 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இலங்கையையும் தெரிவு செய்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள நாடுகளிடமிருந்து தடுப்பூசிகளுக்கான கோரிக்கைகளை அமெரிக்கா பெற்றுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து,  அமெரிக்கா தனது நன்கொடை தடுப்பூசி அளவுகளில் கால் பகுதியை நேரடியாக தேவைப்படும் நாடுகள், அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்காவிடம் உதவியைக் கோரிய ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளது.

அதற்கமைய இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலைதீவு, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், பப்புவா நியூ கினியா, தைவான் மற்றும் பசிபிக் தீவுகளுக்கு இவ்வாறு தடுப்பூசிகளை பகிர்ந்துகொள்ளவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

மில்லியன் கணக்கான அமெரிக்க தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்வது அமெரிக்க அரசாங்கத்தின் பெரும் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதேநேரம், தாங்கள் இந்த அளவுகளைப் பகிர்ந்துகொள்வது, உதவிகளைப் பெறவோ அல்லது சலுகைகளைப் பெறவோ அல்ல என்றும் உயிரைக் காப்பாற்றுவதற்கும் தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பதில் உலகை வழிநடத்துவதற்குமே என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

இலங்கை தனது அவசரத் தேவையைப் பூர்த்தி செய்ய அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் 6 இலட்சம் அளவு தடுப்பூசிகள் உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகளை அமெரிக்காவிடம் முறையாகக் கோரியிருந்தது.

இந்த நிலையிலேயே ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் நாட்டிற்கும் குறிப்பிட்ட தடுப்பூசிகள் மற்றும் தடுப்பூசிகளின் தொகைகள் தீர்மானிக்கப்பட்டு பகிரப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை மீள திறப்பதற்கு முன்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி !

நாடு முழுவதும் பாடசாலைகளை மீள திறப்பதற்கு முன்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க கல்வியமைச்சு எதிர்பார்ப்பதாகவும்,மேலும் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஏற்கனவே சுகாதார அதிகாரிகளுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு அங்கிகாரம் பெற்ற ஒரே தடுப்பூசி ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி மற்றும் தற்போது ​​இது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் உள்ளது.

இது ஜூலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், ஜேர்மனி, போலாந்து, லிதுவேனியா, இத்தாலி, எஸ்டோனியா மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகள் இந்த மாதத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்தியுள்ளன.

ஆசியா மற்றும் மத்திய கிழக்கில், இஸ்ரேல், டுபாய், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மற்றும் சிங்கப்பூர், ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் ஹொங்கொங் ஆகியவை ஏற்கனவே தொடங்கியுள்ளன.

வட அமெரிக்காவில், அமெரிக்காவும் கனடாவும் மே மாதத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கின.

இந்த நாடுகள் அனைத்தும் இந்த நோக்கத்திற்காக ஃபைசர்-பயோஎன்டெக்கின் கொவிட் -19 தடுப்பூசியைப் பயன்படுத்துகின்றன.

“தீ விபத்துக்கு உள்ளான எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்திலும் அரசு நிதி மோசடி.” – மனுஷ நாணயக்கார

கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் உரிமையாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெறவுள்ள இழப்பீட்டிலும் அரசாங்கம் மோசடியில் ஈடுபடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மனுஷ நாணயக்கார மேலும் கூறியுள்ளதாவது,

“ எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெறும் விடயத்தில் சில சந்தேகம் உள்ளது. அதாவது கடலில் இத்தகைய விபத்துக்கள் ஏற்படுகின்றபோது, அக்கடற்பரப்பிற்குச் சொந்தமான நாடு பெரியளவில் இழப்பீடுகளைப் பெற முடியும்.

அந்தவகையில் இந்த விபத்திற்கு இழப்பீடு பெறுவது தொடர்பாக சில கேள்விகளை எழுப்புகின்றனர்.  இதன் பின்னணியிலும் உடன்பாடுகள் இருப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் இலங்கை வரலாற்றில் இத்தகையதொரு அழிவு ஏற்பட்டதில்லை.  எனவே கப்பல் நிறுவனத்திடம் இருந்து இந்த அழிவுக்கான இழப்பீட்டை  பெற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் இதற்குத் துணைபுரிந்த அனைவரையும் சட்டத்துக்கு முன் கொண்டு வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“என் அண்ணனை பொலிஸார் அடித்துக் கொன்றதை நான் என் கண் முன்னே பார்த்தேன்.” – நீதி கிடைக்க உதவுங்கள் என தங்கை கண்ணீர் !

மட்டக்களப்பில் நேற்று முன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மரணமடைந்த 21 வயது மதிக்கத்தக்க சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் தங்கை தனது அண்ணனை பொலிஸார் அடித்துக் கொன்றதை நான் என் கண் முன்னே பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார் .

எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதுவரைக்கு நான் சும்மா விடமாட்டன் தூக்கி போட்டு குத்தினார்கள் சுவரில் சாற்றி அடித்தார்கள் சுவர் உடைந்து போய் இருக்கு’இவர்க்ளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது .

மருத்துவ உடல் கூற்று அறிக்கையில் எனக்கு சந்தேகம் உள்ளது எனவே அதற்கான சரியான நீதி கிடைக்க வேண்டும். கைவிலங்கிட்ட எனது அண்ணன் ஐஸ் போதைப்பொருட்களை எவ்வாறு விழுங்குவான் இவர்கள் அனைத்தையும் மூடி மறைக்க பார்க்கின்றனர் உண்மை ஜெயிக்க வேண்டும்என தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்ட இளைஞன் 4 ஜஸ் போதைப் பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.