06

06

“ஆண் துணை வேண்டுமானால் அதற்கு திருமண பேப்பர்களில் கையெழுத்துப் போட வேண்டிய அவசியமில்லை.” – பிரிட்டன் பத்திரிகையில் ஆணாதிக்கத்துக்கு எதிராக சாட்டை சுத்திய மலாலா !

எதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தானின் இளம் மங்கை மலாலா யூசுப்ஜாய் கேள்வி எழுப்பியுள்ளமை பாகிஸ்தான் அடிப்படைவாத மதவாதிகள் இடையே கடும் எதிர்ப்பை எழுப்பியுள்ளது.

பிரிட்டனின் பிரபல சஞ்சிகையின் அட்டைப் படத்தில் இடம்பிடித்தார் மலாலா யூசுப்  | Virakesari.lk

அண்மையில் பிரிட்டன் பத்திரிகையான வோக் அட்டையில் மலாலா இடம் பெற்றார். அந்தப் படம் வைரலாகப் பரவியது. அந்த இதழுக்கு அளித்த பேட்டியில் இதுவரை பேசாத தமது தனிப்பட்ட வாழ்க்கையின் பல கேள்விகளுக்கு மலாலா பதிலளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் , “பிரித்தானியாவில் தன்னுடைய சுவாரஸ்யமான பொழுதுகள் பற்றி விவரித்துள்ளார்.

மேலும் முஸ்லீம் பெண்கள், குறிப்பாக பாகிஸ்தானிய பெண்கள் கலாச்சாரம் என்ற போர்வையில் முக்கியமாக ஆடைக்கலாச்சாரம் என்று ஆணாதிக்கவாதிகள்ளால் நசுக்கப்படுகின்றார்கள். அவர்கள் குரலற்றவர்களாக உள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதில் திருமணம் குறித்து அவர் கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கையில் ஆண் துணை வேண்டுமானால் அதற்கு திருமண பேப்பர்களில் கையெழுத்துப் போட வேண்டிய அவசியமில்லை என்று மலாலா கூறியுள்ளார்.

மலாலாவின் கருத்து பொறுப்பற்றது என்று பாகிஸ்தானில் கண்டனம் வலுத்துள்ளது.

ந்நிலையில் மலாலாவினுடைய புகைபடம் புகழ் வாய்ந்த பத்திரிக்கையினுடைய அட்டைப் படத்தில் இடம் பெற்றது. இதனை தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்து கொண்ட அவர் பெண்களுக்காக ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார்.

அதாவது ஒரு பெண்மணி தெளிவான சிந்தனையுடன் தன்னுடைய இலக்கை நோக்கி பயணம் செய்யும் போது அவளுடைய மனவலிமை எவ்வாறு இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன் என்றார். மேலும் தன்னுடைய புகைப்படம் வந்த அட்டைப்படத்தை பார்க்கின்ற ஒவ்வொரு பெண்மணிக்குள்ளும் இந்த உலகத்தையே தங்களால் மாற்ற முடியும் என்கின்ற நம்பிக்கை உருவாகும் என்று நம்புகிறேன் என அவருடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“அரசுக்கு விரைவில் பாடம் புகட்டுவேன்.” – ரணில் விக்கிரமசிங்க

அரசுக்கு எதிராக அனைவரையும் அணிதிரளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. அண்மையில் இதுதொடர்பில் சஜித் பிரேமதாஸ பகிரங்க அழைப்பு ஒன்றை விடுத்திருந்தார்.

இந்நிலையில் “நாட்டு மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்புடன் தான்தோன்றித்தனமாகச் செயற்படும் அரசுக்கு விரைவில் பாடம் புகட்ட நான் தயாராகவுள்ளேன்.” என  முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டு மக்கள் இன்று கொரோனாவின் மூன்றாவது அலைக்குள் சிக்கித் தவிக்க அரசே முழுக்காரணம்.

கொரோனாவின் மூன்றாவது அலை உருவெடுத்தபோது‘போர்ட் சிட்டி’ ஆணைக்குழு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக நாட்டை ஒரு மாதத்துக்கு மேல் முடக்காமல் அரசு இருந்தது. இதனால் நாடெங்கும் கொரோனா பரவியது. தற்போது வீட்டுக்குள்ளும் கொரோனா சென்றுள்ளது. அதனால் வீடுகளுக்குள்ளேயே மரணங்கள் அதிகரிக்கின்றன.

ஆரம்பத்தில் விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கு இந்த அரசு செவிசாய்க்கவில்லை. இதன்காரணமாக நாடு இன்று பேராபத்தைச் சந்தித்துள்ளது. நாட்டு மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்புடன் தான்தோன்றித்தனமாகச் செயற்படும் அரசுக்கு விரைவில் பாடம் புகட்ட நான் தயாராகவுள்ளேன்.

அரசுக்கு எதிரான அனைத்துத் தரப்பினரையும் ஓரணியில் திரளுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன் – என்றார்.