July

July

பழங்குடி மக்களுக்கு தடுப்பூசி

இலங்கையின் பழங்குடியின மக்களுக்கான தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி முதலாவது தடுப்பூசியை ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோவே பெற்றுக்கொண்டார். கண்டியிலுள்ள வழிபாட்டுத் தலமொன்றில் வைத்து இவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கண்டியில் நடைபெறவுள்ள பெரகர நிகழ்வில் இவர்கள் கலந்துகொள்ளவுள்ளமையால் இவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Read More …

மருத்துவர்களின் ஓய்வு வயதெல்லை அதிகரிப்பு

அரச மருத்துவர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 63ஆக அதிகரித்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் குறித்த வயதெல்லை 61ஆக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்ட தினமான ஏப்ரல் 20, 2021 முதல் இவ்வறிப்பு ஓய்வூதிய பிரமாணத்தில் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச சேவைகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவர்களில் அனைத்துத் தரங்களில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்டாவை எதிர்க்கும் மொடர்னா தடுப்பூசி

இந்தியாவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட டெல்டா வகைக் கொரோனா திரிபுக்கு எதிராக அமெரிக்காவின் மொடர்னா கொரோனாத் தடுப்பூசி வினைத்திறனுடன் செயற்படுகிறது எனத் தெரிய வந்துள்ளது. புதிய ஆய்வுகள் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது என மொடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி டெல்டா திரிபுக்கு எதிராக காத்திரமான எதிர்ப்புடலை பிறப்பிப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறைசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட பீட்டா (Beta) திரிபுக்கு எதிராக மொடர்னா வினைத்திறன் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.