02

02

வீட்டில் நிகழும் வன்முறைகள்: லண்டன் தமிழ் சிறுமியின் உருக்கமான வேண்டுகோள்!

ஒவ்வொரு குழந்தையும் தனது வீட்டில் சுதந்திரமாகவும் எவ்வித பயமின்றியும் வாழ்வதற்கு உரித்துடையது. அதனை உறுதிப்படுத்துவது பெற்றோர் பாதுகாவலரது கடமை. ஆனால் வீட்டு வன்முறைகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு அவர்களுடைய எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கக் கூடியது. அனைத்து விதமான வீட்டு குடும்ப வன்முறைகளுக்கு எதிராகவும் இப்பதிவு. ஆங்கிலத்தில் அச்சிறுமி எழுதிய பதிவு கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை நான் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளேன்.

தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற லண்டன் புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலையில் கல்விகற்கும் 13 வயதுச் சிறுமி, மாணவி தன் மனச்சுமையை இங்கு இறக்கி வைக்கின்றாள். தற்போது அரச சமூக ஆதரவுக் குழுவின் பராமரிப்பில் இருக்கும் இச்சிறுமி வேறுயாருமல்ல, இவளுடைய தந்தையும் தாயும் நாங்கள் செல்லும் கடைத் தெருவுக்கும் கோயிலுக்கும் அரசியல் கூட்டங்களுக்கும் வருபவர்கள்தான். அவள் தனது பாடசாலையில் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்:

சிலவேளை நீங்கள் இந்த வலிகளுக்கூடாகப் பயணித்திருக்க மாட்டீர்கள் ஆனால் வேறுயாராவது பயணித்து இருக்கலாம். எங்களில் பலர் அதிஸ்ட்டசாலிகள் ஏனென்றால் எங்களுக்கு தவறிழைக்கப்படும் போது அல்லது அதற்கு மாறாக நடந்தால், போவதற்கு நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் தினமும் எங்களை கடந்துசெல்பவர்களுடைய நிலை. அவர்களுக்கு யாராவது இருப்பார்களா? அவர்கள் இந்த வலியை தனிமையிலேயே தாங்க வேண்டுமா? அதற்காகவே இன்று நான் வீட்டில் நடைபெறுகின்ற வன்முறை, துன்புறுத்தல்; பற்றி கதைக்கின்றேன்.

முதலில் வீட்டில் வன்முறை, துன்புறுத்தல் என்பது உறவுகளில் ஏற்படும் நேரடியான உடல் ரீதியான அல்லது உணர்வு ரீதியான வன்முறை. பெண்கள் இந்த இழிவான, குரூரமான, பயப்படத்தக்க நடத்தைகளுக்கு உட்படுவதையும், அவை கூடிக்கொண்டு செல்வதையும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 2019 மார்ச் வரையான ஓராண்டு காலப்பகுதியில் 16 முதல் 74 வயதுக்கு இடைப்பட்ட 1.6 மில்லியன் பெண்கள் வீட்டில் துன்புறுத்தல்களுக்கு முகம்கொடுத்து இருப்பதாக வுமின்ஸ் எய்ட் – Women’s Aid அமைப்பு தெரிவிக்கின்றது. ஆனால் இந்தப் புள்ளிவிபரம் சரியானது தான் என்று நாங்கள் எப்படி உறுதிப்படுத்த முடியும். எல்லாப் பெண்களும் துணிந்தவர்கள், உண்மையை வெளிப்படுத்தி இருப்பார்கள் என்றில்லை. இன்னும் பலர் தாங்கள் துன்புறுத்தப்படுகின்றோம் என்பதையே உணராதவர்களாக உள்ளனர்.

ஆகவே வீட்டில் துன்புறுத்தல்கள் நடைபெறுகின்றது என்பதை அறிவதற்கு என்ன வழி? வீட்டில் துன்புறுத்தல்கள் நிகழ்கின்றது என்பதற்கு அறிகுறிகள்: ஏமாற்றிவிட்டாய் என்ற குற்றச்சாட்டுக்கள், உடலியல் ரீதியாக துன்புறுத்துவது – அடிப்பது, பணத்தை கட்டுப்படுத்துவது, மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்துவது – போன் கதைக்க வேண்டாம், சமூகவலைத்தளங்களை பயன்படுத்த வேண்டாம் என்று கட்டுப்படுத்துவது. என்னுடைய தாயாரும் இந்தத் துன்புறுத்தல்களை அனுபவித்தார். நான் இவை எல்லாவற்றையும் கண்டிருக்கிறேன். எனது தாயார் செலவுக்கு பணம் கேட்டால் எனது தந்தையார் கோபப்பட்டு சத்தம்போடுவார்.

ஆனால் நான் ஏன் பெண்களை மட்டும் பாதிக்கப்பட்டவர்களாக கருத்தில் எடுக்கின்றேன். ஏன் எல்லோரும் பெண்கள் விடயத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்? ஏனெனில் பலர் பெண்களுக்கு மட்டும் தான் நிகழ்வதாக நினைக்கின்றனர். இது ஆண்களையும் பாதிக்கின்றது. மான்கைன்ட் – Mankind என்ற அமைப்பின் தகவலின்படி வீட்டில் நடைபெறும் துன்புறுத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 26 வீதமான முறைப்பாடுகள் ஆண்கள் மீதான துன்புறுத்தல்கள் எனப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது நிச்சயமாக பெண்கள் மீதான வன்முறைகளோடு ஒப்பிடுகையில் பெரிதல்ல. ஆனால் இது ஆண்கள் தைரியமானவர்கள், பலமானவர்கள் என்ற விம்பத்தை தகர்த்துவிடுகின்றது. ஆகவே பெண்கள் மட்டும் தான் இந்த துன்பியல் அனுபவத்தை கொண்டிருக்கிறார்கள் என்று இருந்துவிட முடியாது. நாங்கள் இரு பாலார் மத்தியிலும் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்கள், அதன் தூண்டுதலில் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை அறியாமலேயே இருக்கின்றனர்.

இத்துடன், 2020 இல் இங்கிலாந்து – வேல்ஸில் வெளியிடப்பட்ட குற்றிவியல் கணக்கெடுப்பில் 7.3 வீதமான (1.6 மில்லியன்) பெண்களும் அதன் 50 வீதமான அதாவது 3.6 வீதமான ஆண்களும் வீட்டில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் இருந்த எண்ணிகையிலேயே காணப்படுகின்றது. ஏன் இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் அதேயளவில் இருக்கின்றது? நாங்கள் முதலில் வீட்டில் நடைபெறும் வன்முறைகளை கண்டறிய வேண்டும். பிறகு அதனை நிறுத்துவதற்கான அழைப்பை விடவேண்டும். துரதிஸ்ட்டவசமாக இது இலகுவான காரியமல்ல. தொலைபேசியை எடுத்து உதவியை நாடுவது கடினமானது ஏனென்றால் துன்புறுத்தல் மீண்டும் நிகழ்ந்துவிடும் என்ற பயம்…

இறுதியாக, இந்நிலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சமூகவலைத்தளங்கள் உதவுகின்றன. இது இல்லாவிட்டால் இன்னும் பலர் இத்துன்புறுத்தல்களைச் மற்றையவர்களுக்குச் செய்வதற்கு ஊக்கப்படுத்தப்படுவார்கள். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் அதிகரிக்கும். ஆகையால் உங்கள் நண்பருக்கு உதவியை நாடும்படி மட்டும் சொல்ல வேண்டாம். ஏனெனில் நாங்களும் சில விடயங்களைச் செய்ய வேண்டும். நாங்கள் சிறிது நேரத்தை ஒதுக்கி வீட்டில் நடைபெறும் வன்முறைகள் பற்றி தேட வேண்டும். அறிய வேண்டும். மற்றவர்களை பாரத்துக்கொண்டிராமல் குரலற்ற அவர்களுக்கு எமது குரலைக் கொடுக்க வேண்டும். வீட்டு வன்முறையை நிறுத்துவதற்கு அழைப்புவிடுங்கள்.

நன்றி.
._._._._._.

You might not have gone through this but someone else may have. Many of us are lucky to have friends to go to when something is wrong and vice versa. But what about those we walk past daily. Do they have anyone? Are they dealing with pain all alone? And that’s why today I will be talking about domestic violence and abuse.

To start with domestic abuse is the act of violence that is physical or emotional in a relationship. Women go through this disgusting, cruel, fierce behaviour and it is quite tragic to see the statistics that are starting to rise. Women’s aid tells us that by the end of March 2019 in that year, 1.6 million women aged 16-74 years experienced domestic abuse. Not only that but how can we even be sure this is accurate. Not all women are brave, honest, and open about these situations. Also, some people don’t even know if they are experiencing this.

So what are some ways to recognise domestic abuse? Signs of domestic abuse include accusations of cheating, hurting you physically, controlling your money or even isolating you from others. In fact, my mum experienced this. I witnessed it all. My dad would shout at her and got angry when she asked him for some money.

But why am I just considering women to be the only victims. Why is everyone only raising the attention for women? Although people assume it is just women it also affects men. Statistics from Mankind have given us the information that of the domestic crimes reported, 26% were committed against men. It isn’t a large number of course compared to the rest being women but this defeats the image of men being tough and strong. We cannot just rely on women experiencing this and so we should be raising awareness for both genders. Furthermore, people could be under the influence of drugs or alcohol and they may not be aware of their actions.

In addition, in a recent crime survey for England and Wales(in 2020), 7.3% of women which is the same as last year(1.6 million) and 3.6% of men which is approximately half, experienced domestic abuse. Why are these numbers staying the same? We need to spot it first. Then make a call to stop it. Unfortunately it isn’t that easy. Picking up the phone and reaching out for help can be so difficult because there is some fear… that the abuse will start again.

Finally, social media has helped us become aware of this situation. Without it, many people may be encouraged to do this to others and our victims would just increase. So don’t just tell a friend to call for help. Because WE need to do something. We ALL should commit some time into research and give a voice for those who don’t have one instead of waiting for someone else to. Make a call to make it stop.

Thank you.

10 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளை வலுகட்டாயமாக போரில் ஈடுபடுத்தியுள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் – ஏமன் குற்றச்சாட்டு !

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Houthi Battlefronts Turn 'Black Holes' for Child Soldiers | Asharq AL-awsat

இந்நிலையில் “ ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் போரில் குழந்தைகளை பயன்படுத்துவதாக ஏமன் நாட்டின் தகவல் துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஏமன் தகவல்துறை அமைச்சர் அல் இர்யானி கூறும்போது,

“ஈரானின் லட்சியங்களுக்கு சேவை செய்வதற்காக தங்கள் போர்களுக்கு குழந்தைகளின் கல்வி, விளையாட்டு மற்றும் அவர்களின் உரிமைகளை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பலி கொடுக்கின்றனர். போர்களில் குழந்தைகளை பயன்படுத்துகின்றனர்” என்றார்.

ஏமனில் போர் தொடங்கியது முதல் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வலுகட்டாயமாக போரில் ஈடுபடுத்தி இருப்பதாக மனித உரிமை அமைப்புகளும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“மியன்மாரில் இரண்டு வருடங்களுக்குள் தேர்தல் நடாத்தப்படும்.” – இராணுவம் உறுதி !

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் திகதி இராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டு காவலில் வைத்துள்ளது. தேர்தல் முறைகேடு காரணமாக ஆட்சியை கவிழ்த்ததாக இராணுவம் கூறுகிறது.

இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் கிளர்ச்சிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை இராணுவம் கொடூரமாக அடக்கிவருகிறது. இதில், 900க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியில் போராட்டம்  நீடிக்கிறது.

“இரு ஒருபுறமிருக்க கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. பொருளாதாரம் 18 சதவீதம் வரை சரியும் என உலக வங்கி கணித்துள்ளது.
இந்நிலையில், ராணுவ ஆட்சியின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படுவதாகவும், ஆகஸ்ட் 2023க்குள் தேர்தல்கள் நடத்தப்பட்டு அவசர நிலை நீக்கப்படும் எனவும் இராணுவ தலைவர் உறுதி அளித்துள்ளார்.

“சிறுவர்களை வேலைக்கமர்த்தினால் கடும்தண்டனை.” – அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம் !

வீட்டு வேலைகளில் குறைந்த வயதுடைய சிறுவர்களை ஈடுபடுத்தியிருக்கும் வீட்டு உரிமையாளர்கள், அவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வகையில் இவர்களை மீள அனுப்பாதவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“எதிர்காலத்தில் சகல கிராம அதிகாரிகள் பிரிவுகள் தோரும் ஒரு சமூக பொலிஸ் அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். அவர்கள் சிறுவர் பாதுகாப்பு பொலிஸ் பிரிவுடன் இணைந்து இதுதொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

தற்போது மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ளதால் வீட்டு உரிமையாளர்கள் தமது குறைந்த வயது சேவகா்களை திருப்பி அனுப்புவதில் சிரமம் இருக்காது” என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறுமி இஷாலினியின் மரணம் கற்றுத்தந்த பாடம் – மலையக சிறுவர்களை பாதுகாக்க சிறுவர் பாதுகாப்புகுழு ஸ்தாபிப்பு !

அண்மையில் உயிரிழந்த சிறுமி இஷாலினியின் மரணம் மலையகம் மட்டும் அன்றி நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந் நிலையில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே அவர்களின் தலைமையில் இன்று (02.08.2021)  நுவரெலியா, கண்டி, மாத்தளை மாவட்டங்கள் உள்ளடங்களாக மத்திய மாகாணத்தில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் அவர்களின் அபிவிருத்தி தொடர்பான குழு மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து திணைக்களங்களின் பிரதானிகளுடனும் , காவல் துறை, இராணுவம் மற்றும் சர்வதேச ஸ்தாபனங்கள் உள்ளடங்களாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி கருத்து தெரிவிக்கையில் ,

அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக மத்திய மாகாணம் முழுவதும் சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்தல் மட்டுமல்லாது , அவர்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் இக் குழு ஆளுநரினால் ஸ்தாபிக்க பட்டுள்ளது. மேலும் இக் கூட்டத்தில் உரையாற்றிய பாரத், எமது அமைச்சின் ஊடக பிரஜாஷக்தி செயல் திட்டத்தின் சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு ஸ்தாபிக்க பட்டுள்ளது இதன் மூலம் நாம் ஆலோசனைகள் வழங்குவது மாத்திரம் அன்றி தரவுகள் திரட்டும் வேலைத்திட்டத்திலும் உள்ளோம் இதற்க்காக நாம் அவசர தொலைபேசி இலக்கங்களை 0512222422 மற்றும் 0715550666 அறிமுகப்படுத்தி உள்ளோம்.

மேலும் பாடசாலைகளை விட்டு இடை விலகும் மாணவர்களை, ஆண்டுக்கு மலையகத்தில் ஏறத்தாழ 900 மாணவர்கள், இனம் கண்டு மீண்டும் கல்வியினை தொடர வைத்தல் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் ஊடாக இலவசமாக தொழில்முறை கல்வி, இனைய வழி கல்வி போன்ற கல்வி முறை மாத்திரம் அன்றி சுயதொழில் ஊக்குவித்தல் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவித்தல் போன்ற செயல் முறைகளை நாம் வழங்கி வருகிறோம். மேலும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படும் பணியாளர்கள் தொடர்பாக விசேட சட்ட மூலத்தையும் நாம் உருவாக்க பரித்துரைத்துள்ளோம் உதாரணமாக ILO C 189 போன்ற சட்டமூலத்தின் மூலம் சட்டங்களை விரிவாக்கல் போன்ற செயன்முறைகளை நாம் முன்னெடுக்க உள்ளோம் என தெரிவித்தார். மேலும் இவ்வாறு குழு ஒன்றை ஸ்தாபித்தமைக்காக ஆளுநர் அவ்ரகளுக்கு நன்றிகளை தெரிவித்தார்

இக்கூட்டத்தில் மாவட்ட அதிபர்கள், திணைக்கள பிரதானிகள் கல்வி அமைச்சின் செயலாளர், சிறுவரை பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர்கள் பொலிஸ் உயர் அதிகாரிகள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மனித உரிமை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

தீவிரமடையும் ஆசிரியர் போராட்டம் – பாடசாலைகளை விரைந்து திறக்க கல்வி அமைச்சு முடிவு !

இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் அடிப்படையில் அவர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக அரசாங்கம் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்ற நிலையில் ஆசிரியர்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டிருக்கிறது.  நேற்றையதினம் சுமார் 2000க்கும் அதிகமானோர் இணைந்து நுவரெலியாவில் மாபெரு் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர்.

மேலும் அரசாங்க ஊழியர்களை கடமைக்கு திரும்புமாறு அரசாங்கம் பணித்துள்ள நிலையில் ஆசிரியர் சங்கம் இதற்கு மேலும் தன்னுடைய எதிர்ப்பை காட்டியுள்ளது். முக்கியமாக கல்வி அமைச்சிடம் இருந்து தெளிவான அறிவித்தல்கள் வரும் வரை பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் , “முடிந்தளவு விரைவாக பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போதைய சூழ்நிலையில் வசதியற்ற குடும்பங்களில் உள்ள மாணவர்கள் கல்வி வாய்ப்புகளை இழந்துள்ளதாக கூறினார்.

நாட்டின் தொலைதூர பகுதிகளில், குறிப்பாக இணைய அணுகல் இல்லாத பகுதிகளில் வாழும் மாணவர்களுக்கு இது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறினார்.

தற்போது மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அவர்கள் தயாராக இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சூழ்நிலையில், சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, விரைவில் பாடசாலைகளைத் திறப்பதே முதன்மை குறிக்கோள் என்றும் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறினார்.

இன்று முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழக்கம் போல் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனவே இந்த சூழலில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பாடசாலைகளுக்குச் சென்று திறப்பதற்குத் தேவையான முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

ரிஷாத் பதியுதீன் பயன்படுத்திய வீட்டை பயன்படுத்த மறுத்த அமைச்சர் பந்துல குணவர்தன !

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை தற்போதைய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பொதுநிர்வாக அமைச்சிடம் கையளித்துள்ளார்.

குறித்த வீட்டில் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளதன் காரணமாக அந்த வீட்டை தன்னால் பயன்படுத்த முடியாது என வர்த்தகதுறை அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

மேலும் கடந்த அமைச்சு காலத்தில் குறித்த வீட்டை புனரமைக்க சுமார் 21 மில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிஷாட்பதீயுதீன்  வீட்டில் பணியாற்றிய 11 பெண்களில் மூவர் மரணம் !

முன்னாள் அமைச்சர் ரிஷாட்பதீயுதீன்  வீட்டில் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் பணியாற்றிய 11 பெண்களில் மூவர் மரணமடைந்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ரிஷாட்டின்  வீட்டில் பணியாற்றிவந்த நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுமியான ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஹிஷாலினிக்கு முன்பாக 2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் டயகமை பகுதியைச் சேர்ந்த 11 பெண்கள் ரிஷாட்டின்  வீட்டுக்குப் பணிப்பெண்களாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் ஹிஷாலினி. மற்றுமொருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். மற்றுமொரு பெண் ரிஷாட் வீட்டிலிருந்து வெளியேறிய பின் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களைத் தவிர மீதமுள்ள 8 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. நேற்று இருவரிடம் இறுதி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது” – என்றார்.

வனிந்து ஹசரங்கவின் பக்கம் திரும்பியுள்ள ஐ.பி.எல். உரிமையாளர்களின் கவனம் !

வனிந்து ஹசரங்க 2021 ஐ.பி.எல். தொடரின் இரண்டாம் பாதியில் மாற்று வீரராக இணைத்துக் கொள்ளப்பட பல அணியின் உரிமையாளர்களிடமிருந்து அழைப்பினை பெறுவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

டி-20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக, மன உறுதி மற்றும் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் உயிரியல் குமிழி காரணமாக செப்டம்பர் 19 முதல் தொடங்கும் 2021 ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து பல சர்வதேச வீரர்கள் வெளியேற வாய்ப்புள்ளது.

இந் நிலையில் ஐ.பி.எல். உரிமையாளர்கள் இந்தியாவிற்கு எதிரான அற்புதமான ஆட்டங்களுக்குப் பிறகு வனிந்து ஹசரங்காவை மாற்று வீரராகக் அணியில் இணைத்துக் கொள்ள கவனம் செலுத்தியுள்ளதாகவும் சேவாக் மேலும் கூறினார்.

குறிப்பாக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஏற்கனவே பி.சி.சி.ஐ. அணுகி அடம் ஜாம்பாவுக்கு பதிலாக வனிந்து ஹசரங்கவை அணையில் இணைத்துக் கொள்ள கோரியிருந்தது.

ஐ.பி.எல். தொடரின் முதல் பாதியில் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனும் ரோயல் செலஞ்சர்ஸ் அணியிலிருந்து வெளியேறியிருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ஐ.பி.எல். ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் ஹசரங்கவுக்கு அதிகளவில் உள்ளதாகவும் சேவாக் சுட்டிக்காட்டியுள்ளார்.