16

16

கற்கோவளத்தில் இராணுவ முகாமிற்கென தனியார் காணியை சுவீகரிக்கும் முயற்சி – மக்கள் எதிர்ப்பால் தோல்வி !

யாழ்.வடமராட்சி- கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணியை சுவீகரிப்பதற்கான நடவடிக்கையொன்று இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இருப்பினும் எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்து நில அளவை மேற்கொள்ளும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது.

யாழ்.வடமராட்சி, பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென நான்கு ஏக்கர் தனியார் காணியை சுவீகரிப்பதற்க்கான நடவடிக்கை இன்றைய தினம் காலை 9:30 மணிக்கு இடம்பெறவிருந்தது.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர செல்வராசா கஜேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

குறித்த காணியை நில அளவை செய்ய வந்த நில அளவையாளர்கள் மற்றும் அதிகாரிகளை நில அளவை மேற்கொள்ள விடாது வீதிக்கு குறுக்கே தடுத்து நிறுத்தியதுடன் குறித்த காணிகளை இராணுவத்திற்க்கு வழங்க விடமாட்டோம் என தெரிவித்து கோஷங்களையும் எழுப்பினர்.

இப்போராட்டம் சுமார் ஒருமணி நேரம் நீடித்த நிலையில் குறித்த காணியை இராணுவத்திற்க்கு வழங்க மாட்டோம் என பொது மக்கள் சார்பில் யாராவது தெரிவித்தால் தாம் திரும்பி செல்வதாக நில அளவை திணைக்கள அதிகாரி தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் அதிகாரிகளிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டதை அடுத்து, நில அளவை திணைக்கள அதிகாரிகள் திரும்பி சென்ற நிலையில் குறித்த போராட்டம் கைவிடப்பட்டது.

இதேவேளை போராட்ட இடத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் ஆயதங்களுடனும் சிவில் உடையுடனும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“ஆப்கானிஸ்தானில் அடிமைத்தனத்தின் சங்கிலி உடைக்கப்பட்டுள்ளது.” – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். நேற்று தலைநகரம் காபூலை  கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிபர் அஷ்ரப் கனி மாளிகையில் இல்லை. அவர் தஜிகிஸ்தான் நாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் முழு கட்டுப்பாடும் தலிபான்கள் கையில் வந்ததையடுத்து, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர். தலிபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ? என்ற பீதியில் ஏராளமான மக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது பற்றி கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அடிமைச் சங்கிலிகள் உடைக்கப்படுகின்றன, என்றார்.
ஆங்கில வழிக்கல்வி மற்றும் அதைத் தொடர்ந்து கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொள்வதைப் பற்றி பேசிய இம்ரான் கான்,
“நீங்கள் மற்ற கலாச்சாரத்தை எடுத்துக்கொண்டு உளவியல் ரீதியாக அடிபணிந்தீர்கள். அவ்வாறு நடக்கும் போது, உண்மையான அடிமைத்தனத்தை விட மோசமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கலாச்சார அடிமைத்தனத்தின் சங்கிலிகளை தூக்கி எறிவது கடினம். ஆப்கானிஸ்தானில் இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். அவர்கள் அடிமைத்தனத்தின் சங்கிலியை உடைத்துள்ளனர்” என்றார்.

தலிபான்களிடம் இருந்து உயிரை காப்பாற்ற ஆகாயவிமானத்தில் தொங்கிக்கொண்டு சென்ற மூவர் பலி !

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். நேற்று தலைநகரம் காபூலை  கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நாட்டின் முழு கட்டுப்பாடும் தலிபான்கள் கையில் வந்ததையடுத்து, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர். தலிபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ? என்ற பீதியில் ஏராளமான ஆப்கான் மக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் காபூல் விமான நிலையத்தை தலிபான் அமைப்பு மூடியுள்ளதுடன் விமான சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்... விமானத்தில் தொங்கிக்கொண்டு சென்ற 3  பேர் கீழே விழுந்து பலி || 3 Fall Off Plane, Some Huddled On Aircraft Wing  In Kabul
இந்நிலையில் அங்கிருந்து குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்படுகின்றன. அந்த விமானங்களில் ஏறி எப்படியாவது தப்பி செல்ல வேண்டும் என பலர் முண்டியடிக்கின்றனர். இதற்காக உயிரைப் பயணம் வைக்கின்றனர். காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்றை சுற்றி பலர் ஓடி வருவதும், அதன் மீது ஏறுவதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதேபோல் அமெரிக்க விமானப்படை விமானத்தில் ஏற இடம் கிடைக்காததால் சிலர் தொங்கிக்கொண்டு பயணம் செய்துள்ளனர். இவ்வாறு பயணித்தவர்களில் 3 பேர் விமானத்தில் கீழே விழுந்து உயிரிழந்தனர். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
https://youtu.be/ss3HhiynoqI

“நான் பாக்கியம் செய்தவன்.” – புதிய சுகாதார அமைச்சர் பெருமிதம் !

இலங்கையின் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு பாக்கியம் செய்துள்ளதாக புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சராக இன்று (திங்கட்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பதவி மாற்றம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தொற்றுநோயைக் கையாள்வதில் சிறப்பாகச் செயற்பட்டமைக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் கொரோனா சவாலை தோற்கடிக்க அனைத்து குடிமக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

இலங்கையில் நள்ளிரவில் ஏன் ஊரடங்கு..? – இராஜாங்க அமைச்சரின் பதில் !

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதுடன் மரணங்களும் அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்று ஒரு அறிவிப்பினை அரசு வெளியிட்டிருந்தது. அதாவது இரவு 10 மணி தொடங்கி அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு அமுலாவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலர் கேலியும் – கிண்டலும் செய்திருந்தனர்.

 

இந்நிலையில் ,இன்று (16) முதல் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்பில் ஊடக நிகல்வு ஒன்றில் பேசிய இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் “ இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதன் காரணத்தினாலேயே குறித்த காலப்பகுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்

“புலிகளுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாம் நாட்டின் விடுதலைக்காகவே போராடினோம்.” – தலிபான்கள் தெரிவிப்பு !

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறி வருவதையொட்டி தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி காபூல் நகரை தங்கள் வசமாக்கிய தலிபான்கள் நாட்டின் அதிகாரத்தையும் கைப்பற்றினர். தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்தமை தொடர்பாகவும் தலிபான்களை தோற்கடிக்க வேண்டியது தொடர்பாகவும் சர்வதேசத்தில் இருந்து பல எதிர்ப்புக்கள் தலிபான்களுக்கு ஏற்பட ஆரம்பிததுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் அரசுக்கு எதிராக செயற்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் – தலிபான்களுக்கும் இடையே தொடர்பு இருப்தாக பலகாலம் குறிப்பிடப்பட்டு நிலையில் , தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தாங்கள் ஒரு சுதந்திரமான விடுதலைப் படையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது கடந்த 20 ஆண்டுகளாக தமது நாட்டின் ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காக வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் பாமியன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான புத்தர் சிலை, தலிபான்களால் மார்ச் 2001ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது. பழங்கால மணற்கல் சிற்பங்களை அழித்ததை கண்டித்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

இந்த நிலையில், தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது பௌத்த தளங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற அச்சம் தற்போது உள்ளதாக குறித்த ஆங்கில ஊடகம் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறிருப்பினும் தலிபான் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்கள் ஆபத்தில் இருக்காது என்று ஷாஹீன் வலியுறுத்தினார் என  அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களை பயங்கரவாதிகளாக இலங்கை கருதக்கூடாது என அவர் கூறியதாகவும் தங்கள் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய இலங்கையின் முன்னோர்களைப் போல தாங்கள் ஆப்கானிஸ்தானின் சுதந்திரப் போராளிகள் என அவர் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவையில் திடீர் மாற்றங்கள் – கல்வியமைச்சராக பொறுப்பேற்கவுள்ள தினேஸ் குணவர்தன !

அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

புதிய அமைச்சர்களின் விபரங்கள்

  1. கெஹெலிய ரம்புக்வெல்ல- சுகாதார அமைச்சர்
  2. டலஸ் அழகப்பெரும- ஊடகத்துறை அமைச்சர்
  3. ஜீ.எல்.பீரிஸ்- வெளிவிவகார அமைச்சர்
  4. தினேஸ் குணவர்தன- கல்வி அமைச்சர்
  5. பவித்ரா வன்னியாராச்சி- போக்குவரத்து அமைச்சர்
  6. காமினி லொக்குகே- மின்சக்தி அமைச்சர்
  1. நாமல் ராஜபக்ஷ- இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு மேலதிகமாக அபிவிருத்தி கண்காணிப்பு என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

“ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கம் அமையும்.” – வல்லரசுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரத்தானியா !

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய நிலையில், அந்நாட்டில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். இதனால் பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதற்கிடையே, அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்ததுடன் காபுலை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Afghan President leaves Kabul, may transfer power to Ali Ahmad Jalali -  World News
மேலும் துணை அதிபர் அம்ருல்லா சலேவும் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இடைக்கால அதிபராக அலி அகமது ஜலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய அரசாங்கம் அமையும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர்,
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்த்ததாகவும், அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொண்டதன் மூலம் நிலவரம் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய அரசாங்கம் அமையும் அல்லது அதிகாரப் பகிர்வு ஏற்படும் என்று தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதத்தின் புகலிடமாக அமைந்துவிடாமல் இருப்பதை வல்லரசு நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹெய்டி நிலநடுக்கம் – உயிரிழப்பு 1300 ஆக அதிகரிப்பு !

ஹெய்டி நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. மேலும் இது போர்ட் ஆஃப் பிரின்சில் இருந்து 118 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் என்ணிக்கை தற்போது வரை 1297 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பல உயரமான கட்டடங்கள் இடிந்து தரை மட்டமானது. அதன் இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலநடுக்கத்தால் கட்டிய இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.