19
19
சில மோசடி சிறை அதிகாரிகளால் தனக்கு எதிரான அவதூறான சதி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலை மேலாண்மை மற்றும் சிறை மறுவாழ்வுக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
ஊழல் சிறை அதிகாரிகளின் திருட்டுகள் மற்றும் மோசடிகளைப் பிடிப்பதன் மூலம் சட்டத்தை அமுல்படுத்த சிறைக்குள் இருந்து தனக்கு ஒரு தகவல் கிடைத்ததாகவும், ஊழல் தடுப்பு திட்டத்தின் காரணமாக அவற்றை செய்ய முடியாததால் பல சிறை அதிகாரிகள் தன் மீது கோபம் கொண்டுள்ளனர்.
வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றது உண்மைதான், ஆனால் அந்தச் சிறைச்சாலைகளில் குறிப்பிடும்படியான எந்த சம்பவமும் இடம்பெறவில்லை.
தான் அடிக்கடி சிறைச்சாலைகளுக்குச் செல்வதையும் செல்கள் மற்றும் சமையலறைகளை ஆய்வு செய்வதையும் வழக்கமாக வைத்திருப்பதாக அவர் கூறினார்.
அத்துடன் தான் ஒரு அழகு ராணியுடன் சிறைக்கு சென்றதாக பொய்யான வதந்திகளை பரப்பியதாகவும், அப்போதுதான் அத்தகைய பெண்ணைப் பற்றி தான் கேள்விப்பட்டதாகவும் ஆனால் அவரை தனிப்பட்ட முறையில் தனக்கு தெரியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்தமை வரவேற்கத்தக்க விடயமாகும்.” என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்லட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ள போது ,
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஆராய்ந்து பார்க்க ஆலோசனை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். இந்த வழக்குகளை விரைவாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்றும் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்தமை வரவேற்கத்தக்க விடயமாகும். இலங்கை ஜனாதிபதி பொது மக்களுக்கு உரித்தான அவகாசங்ளை விரிவாக்குவதற்கு பரந்தப்பட்ட கலந்துரையாடல்களை ஏற்படுத்தியமை தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியும் அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பொறுப்புடனும் ஒத்துழைப்புடனும் கடமையாற்றுவதையும் தான் வரவேற்பதாகவும், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேசிய விசாரணை குழுவொன்றை அமைத்துள்ளமைக்கும் அந்த அறிக்கையை தமக்கு சமர்ப்பித்தமைக்கும் வரவேற்பை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இழப்பீட்டை வழங்கும் தேசிய கொள்கையை நிறைவேற்றியுள்ளமை மற்றும் புனர்வாழ்வு செயற்பாடுகளை தொடர்ச்சியாக கொண்டுசெல்கின்றமையும் வரவேற்கத்தக்கதென்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷெல் பெச்லட் மேலும் தெரிவித்துள்ளார்.
“லொஹான்ரத்வத்தயின் செயற்பாடுகளுக்காக பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல்கைதிகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றேன் என நீதி அமைச்சர் அலி சப்ரி கவலை வெளியிட்டுள்ளார்.
அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற நிகழ்வு தொடர்பாக பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலு் தெரிவித்த அவர் ,
எனது அமைச்சின் கீழ் வருகின்ற இராஜாங்க அமைச்சர் ஒருவர் இவ்வாறு செயற்பட்டுள்ளமை என்னையும் அசௌகரியத்துக்கு உட்படுத்தியுள்ளது. குறித்த சம்பவங்களுக்காக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றேன்.
இவ்விரு சிறைச்சாலைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து ஜனாதிபதியை தொடர்புகொண்டு லொகான் ரத்வத்தவை சிறைச்சாலைகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சுப் பதவி விலக்குமாறு நாமே கோரினோம்.
இதற்கமையவே அமைச்சு பதவியில் இருந்து அவரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவும் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றிருக்ககூடாது எனவும் அவற்றை அனுமதிக்கவும் முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் -மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் நேற்று முன்தினம் (17) மாலை தூக்கிட்ட நிலையில் அவருடைய சடலம் அவரது வீட்டின் சாமி அறையில் மீட்கப்பட்டுள்ளது.
கள்ளியடியில் உள்ள கிராம அலுவலகர் ஒருவரின் அரிசி ஆலை ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான முரண்பாட்டின் காரணமாக குறித்த சிறுவன் தற்கொலை செய்துள்ளதாக தெரிய வருகிறது.
கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் நேற்றைய தினம் காலை கள்ளியடி பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி திரிக்க சென்ற நிலையில் அங்கு பணம் திருடப்பட்டதாக அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் சிறுவனின் நண்பரிடத்தில் கூறிய போது அவர் எடுத்திருந்தால் பணத்தை திரும்ப தருவதாக கூறியுள்ளனர்.
பின்னர் அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் மற்றும் மகனின் நண்பர்கள் சிலர் இணைந்து குறித்த சிறுவனின் வீட்டிற்கு சென்று சிறுவனை தாக்கியதாகவும் சிறுவனின் தாய் தாக்க முயன்றவர்களின் காலில் விழுந்து கதறியதாகவும் இருந்தாலும் சிறுவனை தொடர்ந்து தாக்கி விட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் வீட்டில் மகனை நித்திரையாக்கி விட்டு தாயார் குளித்து விட்டு வந்த நேரம் தாக்கியவர்கள் மறுபடியும் அவர்களது வீட்டில் இருந்து செல்வதை அவதானித்து தாயார் ஓடி வந்து பார்த்த போது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் தாயார் தெரிவிக்கின்றார்.
இது தற்கொலை அல்ல எனவும் மகன் தற்கொலை செய்யுமளவுக்கு விபரம் தெரியாதவர் எனவும் தாய் தெரிவிக்கின்றார்.
குறித்த சிறுவனின் மரணம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை இலுப்பை கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதால் கணவனை திருவலைக் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் துரைராசா செல்வராசா (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார். அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த அவர், ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் முடித்து பூம்புகாரில் வசித்து வருகிறார்.
மேசன் தொழிலில் ஈடுபடும் குடும்பத்தலைருக்கு மனைவியுடன் சில நாள்கள் நீடித்த குடும்ப முரண்பாடு முற்றிய நிலையில் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இன்று அதிகாலை யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்தனர். உடனடியாக குடும்பப் பெண் கைது செய்யப்பட்டார்.
திருவலைக் கட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்ட குடும்பத் தலைவரின் உடலில் 5 இற்கு மேற்பட்ட காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.