இலங்கையில் விலையுயர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. அரசாங்கம் மக்களுடைய நிலையை சிந்திப்பதாக தெரியவில்லை. அண்மையில் ஊடக சந்திப்பு ஒன்றில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் அத்தவருட வரவு செலவுத்திட்ம் பறறி வினவப்பட்ட போது “வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக, பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பதிலாக, பொதுமக்களிடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். இது போலவே நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச “நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்கு தான் உண்ண வேண்டும் என தெரிவி்திருந்தார்.
இவ்வாறான கருத்துக்கள் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அரசு அடித்தட்டு மக்களை பற்றி யோசிக்காது செயற்படுவது போலவே தோன்றுகிறது.
சரியான முறையில் தேங்காயை பயன்படுத்தினால் குடும்பமொன்றுக்கு நாளொன்றுக்கு அரைபாதி தேங்காய் மட்டுமே போதுமானது என தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாட்டின் உள்நாட்டு தேங்காய் நுகர்வில் 30% வீதம் வீணடிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் வருடாந்தம் விளையும் தேங்காய் அறுவடையில் 70 வீதம் உள்நாட்டு பாவனைக்காகவே பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
கையால் பிழிந்தால் 20-30% தேங்காய்ப்பால் கிடைத்தாலும், 50% தேங்காய்ப்பால் கிறைண்டரில் அரைத்தால் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.