“நிதியமைச்சர் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்த வரவு செலவுத் திட்டமாகும். மக்களுக்காகவே அரசுடன் நிற்கிறோம். அதற்காக பதவிகளில் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது.” என எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய வண.ஆனந்த தேரர்,
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்ப டுவதற்கு முன்னரே சகல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருட்களைப் பெற மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய ஆட்சியின் கீழ் நாடு மீண்டும் சிறிமாவோ காலத்தின் வரிசை யுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்னரே அரசாங்கத்தின் மீது மக்கள் சலிப்படைந்து விட்டனர். இப்படியே போனால் அரசாங்கம் கிராமத்திற்கு வந்து செல்ல மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.