04

04

டெல்டாவை விட அதிக வீரியம் கொண்ட ஒமிக்ரோன் – ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் !

கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றி பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதன் பாதிப்பு குறைய தொடங்கிய போது கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது.

இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டது. இதில் டெல்டா வகை உருமாறிய கொரோனா மற்றவைகளை விட அதிக வீரியம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது. டெல்டா வகை வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் முன்பு உருமாறிய வைரஸ்களை விட மிகவும் வீரியத்துடன் இருப்பது தெரிய வந்தது.

ஒமிக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்த வைரஸ் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்படுமா? என்பதில் கேள்விக்குறி நிலவி வருகிறது.

ஒமிக்ரான் வைரஸ் சில நோய் எதிர்ப்பு சக்திகளை தகர்க்க கூடியது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அந்த வைரசை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் டெல்டா வைரசை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஒமிக்ரான் வைரஸ் ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

தென்ஆப்பிரிக்க நாட்டின் சுகாதாரத்துறை ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக சேகரித்த தரவுகள் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளது. தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகளின் ஆரம்ப கட்ட ஆய்வில் டெல்டா அல்லது பீட்டா வைரசுகளுடன் ஒப்பிடும் போது ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் நோய் தொற்று ஏற்படுத்தும் வாய்ப்பு 3 மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 27-ந்திகதியில் இருந்து 35 ஆயிரத்து 670 பேர் மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 90 நாட்கள் இடைவெளியில் அவர்கள் மீண்டும் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா விஞ்ஞானி ஜூலியட் புல்லியம் கூறும்போது, “தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை ஒமிக்ரான் எந்த அளவுக்கு தவிர்க்கிறது என்பதை இன்னும் மதிப்பிட முடியவில்லை” என்றார்.

மற்றொரு விஞ்ஞானியான அன்னேவான் கோட் பெர்க் கூறும்போது, “நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். தடுப்பூசிகள் இன்னும் கடுமையான நோய்களில் இருந்து பாதுகாக்கும் என்று நம்புகிறோம். தடுப்பூசிகள் எப்போதுமே தீவிர நோய், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கு எதிராக தீவிரமாகவே போராடுகிறது” என்றார்.

இங்கையின் முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் !

இந்நாட்டில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்ட ஓமிக்ரோன் கொவிட் தொற்றாளர் 25 வயதுடைய யுவதி ஒருவர் என தெரியவந்துள்ளது.

நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 24 ஆம் திகதி நைஜீரியாவில் இருந்து இலங்கை வந்து மாரவில பிரதேசத்தில் வசித்து வரும் இலங்கையை சேர்ந்த யுவதி ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“நைஜீரியாவில் இருந்து வந்த 25 வயதுடைய பெண் ஒருவரே தொற்றுக்குள்ளாகியுள்ளார். தொற்றாளர் தற்போது அவரின் வசிப்பிட பிரதேசத்தில் உள்ளார். குறித்த யுவதி தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பின்னர் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்றிருந்தார். குறித்த காலப்பகுதியில் அவர் தனியான அறையொன்றில் வைக்கப்பட்டுள்ளார். அவ்விடத்தில் இருந்து வைரஸ் வேறு நபர்களுக்கு பரவ வாய்ப்பில்லை என கூற முடியாது ஆனால் வாய்ப்புகள் மிக குறைவு. எவ்வாறாயினும், குறித்த பெண்ணின் பயண விபரங்கள் மற்றும் அவரிடம் பழகியவர்கள் தொடர்பில் எமக்கு தெரியாது. அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு வௌிநாட்டில் இருந்து வந்த நபர்கள் இந்த வைரஸை கொண்டு வர வாய்ப்புள்ளது. அவ்வாறான நபர்களையும் மிக விரைவில் கண்டுபிடிக்ககூடியதாக இருக்கும் என நம்புகிறோம்”.

பாகிஸ்தானில் இலங்கை பிரஜை அடித்து உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் – சோகமான நாள் என்கிறார் பாக்.பிரதமர் !

இலங்கை பிரஜையொருவரை பாக்கிஸ்தானின் சியால்கோட்டில் பெருமளவு மக்கள் அடித்துக்கொலை செய்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் இம்ரான்கான் குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்

சியால்கோட்டில் தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் இலங்கையை சேர்ந்த மேலாளர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் காரணமாக இன்றைய நாள் பாக்கிஸ்தானிற்கு அவமானகரமான நாளாக மாறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நான் விசாரணைகளை மேற்பார்வை செய்துவருகின்றேன் கைதுகள் இடம்பெறுகின்றன காரணமானவர்கள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் இது குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவரை அடித்துக்கொலை செய்து வீடியோவாக பதிவேற்றிய சோகம் !

பாகிஸ்தான் – சியால்கோட் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர், இனந்தெரியாத குழுவொன்றின் தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இலங்கையரை அடித்துக் கொலை செய்த கும்பல் அவரது உடலை தீயிட்டுக் கொளுத்துவதையும் அதனை வீடியோவில் பதிவு செய்து கொள்வதையும் காண்பிக்கும் வீடியோக்களும் படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

சியால்கோட்டில் உள்ள வசிராபாத் சாலையில், இன்று (வெள்ளிக்கிழமை) தனியார் தொழிற்சாலை ஊழியர்கள், தொழிற்சாலை ஒன்றின் ஏற்றுமதி மேலாளரை தாக்கி, அவரது உடலை எரித்து கொன்றதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அப்பகுதிக்கு பலத்த பொலீஸ் குழு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையிலேயே, சம்பவம் குறித்து தெரிவித்துள்ள சியால்கோட் மாவட்ட பொலிஸ் அதிகாரி உமர் சயீத் மாலிக், உயிரிழந்த நபர் இலங்கையர் என தெரிவித்துள்ளார்.