2022

2022

“இந்தியாவிற்கு துரோகமிழைத்துவிட்டது இலங்கை.”- ராமதாஸ் குற்றச்சாட்டு !

சீனாவின் உளவு கப்பலான, ‘யுவான் வாங் 5’ இலங்கைக்கு வர அனுமதி அளித்து இந்தியாவிற்கு துரோகம் செய்துள்ளது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார் .

சீனாவின் உளவு கப்பலான, ‘யுவான் வாங் 5’ இலங்கைக்கு வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அக்கப்பல் வரும் 16 ஆம் திகதி அம்பாந்தோட்டை  துறைமுகத்தை அடைய இருக்கிறது.

இலங்கை துறைமுகத்தில் இக்கப்பல் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும் எனவும் இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் இந்த செயல் சீன பாசத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. மேலும் இத்து  இந்தியாவுக்கு செய்த நம்பிக்கை துரோகம் என அவர் கூறியுள்ளார் .

இதேவேளை இலங்கை வரும் சீனக்கப்பல் தொடர்பில் குறிப்பிட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர , “கப்பல் விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் எவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்தாலும் அவர்களுக்காக வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் அழுத்தங்களுக்காக எமது கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது – சரத் வீரசேகர

“மதஸ்தலங்களுக்கு சென்று வழிபடவேனும் அனுமதி தாருங்கள்.”- தாய்லாந்து அரசிடம் கோட்டாபாய கோரிக்கை !

மக்களின் எதிர்ப்பால் மாலைதீவுக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்று தஞ்சம் புகுந்தார். தற்போது தாய்லாந்து சென்று தங்கியுள்ள அவருக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தாய்லாந்து அரசாங்கத்திடம் அங்குள்ள உள்ள மதஸ்தலங்களுக்கு சென்று வழிபட கோட்டாபய ராஜபக்ச அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள அவர், அந்த ஹோட்டலை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என தாய்லாந்து அரசின் அறிவித்தலின் அடிப்படையில் பொலிசார் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர் தாய்லாந்தில் சுமார் 3 மாதங்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கிருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும், நாட்டுக்கு பிரச்சினையான நடத்தைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“தாய் நாட்டுக்கு வாருங்கள்.”- கோட்டாபாயவுக்கு மகிந்த ராஜபக்ச அழைப்பு !

விரைவில் தாய் நாட்டுக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜூலை 9ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற்கும் மேலாக வெளிநாட்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தஞ்சமடைந்துள்ளார்.

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்ததை அடுத்து தாய்லாந்து சென்ற முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு சென்றுள்ளார்.

இருப்பினும் தாய்நாட்டுக்கு வருமாறு அவரது சகோதரர் விடுத்த கோரிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதிக்கு இலங்கையில் வாழ்வதற்கு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று மகாநாயக்க தேரரைப் பார்க்கச் சென்ற போது, ​​கொட்டப்பிட்டிய ராகுல தேரர், முன்னாள் ஜனாதிபதி குறித்து ரணில் விக்ரமசிங்கவிடம் வினவியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வந்து சுதந்திரமாக இருப்பதை சாத்தியமாக்குங்கள் என அவர் கோரிக்கை விடுத்த போதும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதுவும் கூறவில்லை.

செஞ்­சோலை படுகொலைகள் – 16ஆண்டு நினைவு இன்று !

2006 ஆம் ஆண்டு முல்­லைத்­தீவு செஞ்­சோலை சிறு­வர் இல்­லத்­தின் மீதான விமானப்படை தாக்குதல் இடம்பெற்று இன்றோடு 16ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

செஞ்சோலை படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவு இன்று! – Athavan News

இந்நிலையில்  படுகொலை செய்யப்பட்ட 61 மாண­வி­க­ளின் நினைவு தினம் இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான தூபியில் இடம்பெற்றது.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவுப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி தூவி அகவணக்கமும் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அமெரிக்காவின் அழுத்தங்களுக்காக எமது கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது – சரத் வீரசேகர

இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

சீன கண்காணிப்பு கப்பல் உளவு பார்ப்பதற்காக ஹாம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவை உளவு பார்ப்பதற்கு சீனாவின் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வழங்கிய நிலையில் அதனை தற்போதைய அமைச்சர் அலி சப்ரி ரத்து செய்வது இலங்கையின் வெளிவிவகார கொள்கையினை மலினப்படுத்தும் என குறிப்பிட்டார்.

கப்பல் விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் எவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்தாலும் அவர்களுக்காக வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிகரான தலைவர் உலகில் இல்லை – வஜிர அபேவர்தன புகழ்ச்சி !

2020ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் விஞ்ஞாபனத்தை மக்கள் குப்பைத் தொட்டியில் வீசாமல் இருந்திருந்தால் நாடு இவ்வாறு குப்பைத் தொட்டியில் வீழ்ந்திருக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கிராமம் கிராமமாக விநியோகிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் விஞ்ஞாபனத்தை மீண்டும் வாசிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்த வஜிர அபிவர்தன ,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிகரான தலைவர் உலகில் இல்லை. ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கினால் நிச்சயமாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடயங்களை ஒவ்வொன்றாக சரி செய்து வருவதாகவும் அதனால் ஜனாதிபதி மீதுள்ள நம்பிக்கை ஒவ்வொரு நொடியும் அதிகரித்து வருகின்றது. இன்று ரணில் விக்கிரமசிங்க ஒரு தேசிய பொக்கிஷமாக மாறியுள்ளதாகவும், ஆசியாவில் இலங்கையை உயர்ந்த இடத்திற்கு உயர்த்த தேசிய பொக்கிஷம் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி தோல்வி ?

நாடாளுமன்றத்தில் உள்ள பல கட்சிகள், கட்சிகளாக அரசாங்கத்துடன் இணைய விரும்பாத நிலையில் சர்வ கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக சர்வ கட்சி அரசாங்கத்துக்குப் பதிலாக சர்வ கட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இருந்தபோதிலும் அரசாங்கத்துடன் கட்சிகளிலிருந்து தனித்தனியாக அரசுடன் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.

அமைச்சர்கள் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளதாகவும் தெரியவருகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கு பணம் அனுப்பும் தொழிலாளர்களின் விகிதம் 50% ஆக குறைவு !

2022 ஜனவரி முதல் ஜூலை வரையிலான கால பகுதியை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இலங்கைக்கு ஒட்டுமொத்த தொழிலாளர்களின் பணம் அனுப்பும் விகிதமானது 50% குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை தொழிலாளர்களின் ஒட்டுமொத்தப் பணம் 3,777.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததுடன், இவ்வாண்டு 1,889.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இதேவேளை மத்திய வங்கியின் கூற்றுப்படி, ஜூலை 2022 இல் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் 297.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், ஜூன் 2022 இல் 274 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், மே மாதத்தில் 304 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்தது.

மாநகர சபையின் அனுமதியின்றி வீட்டு மதிலை கட்டிக்கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் !

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டு மதில் அனுமதியின்றி கட்டப்படுவதால், கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த யாழ்.மாநகரசபை தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் குறுக்கு வீதியில், புதிதாக வீடொன்றை நிர்மணித்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அந்த வீட்டுக்கான மதில் கட்டுவதற்கான அனுமதியை யாழ் மாநகர சபையில் பெறவில்லையென என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் யாழ் மாநகரசபை அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை நடந்த போது, ‘உங்கள் கட்சியின் தலைவர் என்பதால் அவர் அனுமதியின்றி மதில் கட்டுவதை அனுமதித்துள்ளீர்களா?’ என கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந்த், முதல்வர் வி.மணிவண்ணனை பார்த்து கேள்வியெழுப்பினார்.

அனுமதியற்ற கட்டுமானங்களை அனுமதிக்க முடியாது. அதனால் அந்த கட்டுமான பணிகளை உடனடியாக இடைநிறுத்துவதுடன், முறைப்படியான அனுமதி பெற்று கட்டுமானத்தை தொடரும்படி அறிவியுங்கள் என உத்தியோகத்தர்களிற்கு முதல்வர் உத்தரவிட்டார்.

பட்டினி அபாயம் நிறைந்த ஆபிரிக்கா நோக்கி பயணமானது உக்ரைனின் தானியக்கப்பல் !

பட்டினி அபாயம் அதிகம் நிறைந்த ஆபிரிக்கப் பிராந்தியத்துக்கு உக்ரைன் தானியங்களை எடுத்துச் செல்வதற்காக, அந்த நாட்டை நோக்கி முதல் சரக்குக் கப்பல் புறப்பட்டுள்ளது.

உக்ரைன் போரால் ஆபிரிக்கப் பிராந்தியத்தில் கோடிக்கணக்கானவர்கள் பட்டினியால் அவதியுறும் அபாயம் இருப்பதாக அஞ்சப்பட்ட நிலையில், ரஷ்யா – உக்ரைன் தானிய ஒப்பந்தத்தின் கீழ் ஆபிரிக்கப் பிராந்தியத்தைச் சேர்ந்த எத்தியோப்பாவுக்கு உக்ரைனிலிருந்து கோதுமை எடுத்துச் செல்வதற்காக சரக்குக் கப்பல் ஒன்று முதல்முறையாக அந்த நாட்டை நோக்கி நேற்று (வெள்ளிக்கிழமை) புறப்பட்டது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் பசிப் பிணியைப் போக்குவதற்காக ஐ.நா.வின் உலக உணவு திட்டத்தின் கீழ் அந்தக் கப்பல் உக்ரைனை நோக்கி புறப்பட்டதாக ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மிஷெல் தெரிவித்தார்.

உக்ரைன் போரால் உலகில் 4.7 கோடி பேர் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரித்தது. அதையடுத்து, உக்ரைனிலிருந்து தானியக் கப்பல்களை கருங்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வழிவகை செய்யும் கண்ணாடி ஒப்பந்தம், ரஷ்யா, உக்ரைன் இடையே ஐ.நா. மற்றும் துருக்கி முன்னிலையில் கடந்த மாதம் கையொப்பமானமை குறிப்பிடத்தக்கது.