2022

2022

போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம், மானிப்பாய் அந்தோனியார் தேவாலயத்தின் அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 20) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது சமூகத்தினர் மத்தியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில் அதிகரிக்கும் ஐஸ்போதைப்பொருள் பாவனை – தினசரி 400 கைதுகள்!

ஐஸ் போதைக்கு அடிமையான சுமார் 400 பேர் தினமும் விளக்கமறியலில் வைக்கப்படுவதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை தற்போது 26,000ஐ தாண்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பினரின் நெகிழ்வுப்போக்கு மகிழ்ச்சி அளிக்கிறது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நெகிழ்வாக இருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று (19) வவுனியாவில் இடம்பெற்ற, ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படும், வடமாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலக திறப்பு விழாவில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி, பிரதமராக இருந்த போது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக செயற்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு நீங்கள் பிரதமராக இருந்தபோது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்காக செயற்பட்டீர்கள். எனினும் அப்போது இடம்பெற்ற ஒரு சில குறைபாடுகள் காரணமாக எங்களால் அதனைப் பெற முடியவில்லை.

இன்று நீங்கள் ஜனாதிபதியாகி விட்டீர்கள். எனவே, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

உங்களது வேலைத்திட்டங்களுக்கு எமது ஆதரவை வழங்கும். அதேநேரம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்” எனக் கூறியிருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “ஏதோவொரு காரணத்தால் வடக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இப்போது, போனது போகட்டும்.

நாம் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.

நாம் இவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் நாட்டின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக்கூடியதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

 

“நாட்டை பிளவுபடுத்தாமல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்க திட்டமிடுகிறேன்.” வவுனியாவில் ஜனாதிபதி ரணில் !

வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும் 75 ஆவது சுதந்திர தின விழாவின் போதாவது இந்நாட்டின் அனைத்து மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழக்கூடியதாக இருக்க வேண்டுமென தான் பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படும், வடமாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலகத்தை நேற்று (19) வவுனியாவில் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நீண்ட காலமாக வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்கள் பல்வேறு காரணங்களால் சிரமப்படுவதாகவும், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க தாம் துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது:

இந்த அலுவலகத்தில் இருந்தபடி வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட முடியும். யாழ்பாணத்திற்கு மட்டுமே அனைத்தும் வழங்கப்படுவதாக அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். தற்போது வவுனியாவிலும் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்.

அமைச்சுக்களிலுள்ள அதிகாரிகளும் இந்த அலுவலகத்திற்கு நேரில் வந்து வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு முற்படுவார்கள் என நான் நம்புகின்றேன். அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும் வடக்கு மக்களுக்குள்ள பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வுகளை வழங்க வேண்டும். அதேபோன்றே, இலங்கை சமூகத்தில் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. மலையக மக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்ற சமூக கருத்து நிலவுகிறது.

எனவே இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க இதுவே சிறந்த சந்தர்ப்பம். இந்தப் பிரச்சினைகள் முறையாகத் தீர்க்கப்பட வேண்டும். இது தொடர்பில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடவும் நாட்டைப் பிளவுபடுத்தாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கவும் நான் எதிர்பார்க்கின்றேன்.

முதலில் மக்களின் சந்தேகங்கள் களையப்பட வேண்டும். நாம் அனைவரும் இணைந்து செயற்படும்போது அந்த சந்தேகம் நீங்கிவிடும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கிடைக்கும். 83 இல் இருந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். அதுபோன்றே 2009 இல் இருந்தும் வெகுதூரம் வந்துவிட்டோம். எனக்கு தேசிய கீதத்தின் ஒரு வரி நினைவுக்கு வந்தது. அது, “ஒரு தாயின் பிள்ளைகளாக வாழ்வது” என்பதாகும். 75வது சுதந்திரதின விழாவின் போதாவது ஒரு தாயின் பிள்ளைகளாக வாழக்கூடியதாக இருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.

இங்கு உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 2015ஆம் ஆண்டு வடக்கு மக்களுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். எனினும் ஏதோவொரு காரணத்தால் வடக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இப்போது, போனது போகட்டும். நாம் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த வகையில் நெகிழ்வாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எவ்வாறாயினும் நாம் இவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் நாட்டின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக்கூடியதாக இருக்கும்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு குறித்து மிகவும் மகிழ்ச்சி. வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் இவ்வாறானதொரு அலுவலகத்தை ஸ்தாபித்தமைக்காக ஜனாதிபதிக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் நாம் நம்புகின்றோம்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

ஜனாதிபதி, பிரதமராக இருந்த போது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக செயற்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு நீங்கள் பிரதமராக இருந்தபோது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்காக செயற்பட்டீர்கள். எனினும் அப்போது இடம்பெற்ற ஒரு சில குறைபாடுகள் காரணமாக எங்களால் அதனைப் பெற முடியவில்லை. இன்று நீங்கள் ஜனாதிபதியாகிவிட்டீர்கள். எனவே, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. உங்களது வேலைத்திட்டங்களுக்கு எமது ஆதரவை வழங்கும் அதேநேரம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.” என தெரிவித்தார்.

FIFA 2020 – இன்று ஆரம்பமாகிறது உலகின் இரண்டாவது பெரிய விளையாட்டுத் திருவிழா – முழுமையான விபரங்கள்!

உலகின் 2-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும். இந்நிலையில், 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 18-ம் திகதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது.

மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. இந்த 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

 

A பிரிவு – கட்டார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து

B பிரிவு – இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

 

C பிரிவு – அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

D பிரிவு – பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா

 

E பிரிவு – ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான்

F பிரிவு – பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

G பிரிவு – பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

H பிரிவு – போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். டிசம்பர் 2-ம் திகதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றான நொக் அவுட்டுக்கு தகுதி பெறும். டிசம்பர் 3 முதல் 6-ம் திகதி வரை 2-வது சுற்று நடைபெறும். இதில் 16 நாடுகள் விளையாடும். அதில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்குள் நுழையும். டிசம்பர் 9 மற்றும் 10-ம் திககளில் கால் இறுதியும், 13 மற்றும் 14-ம் திகதிகளில் அரை இறுதி ஆட்டங்களும் நடைபெறும். இறுதிப் போட்டி டிசம்பர் 18-ம் திகதி நடக்கிறது. உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா-தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். இதனால் யார் உலக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க நாளில் ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. ஏ பிரிவில் உள்ள கட்டார்-ஈக்வடோர் அணிகள் மோதுகின்றன.

இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

முன்னதாக இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட தொடக்க விழா தோகாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அலகோர் அல்பயத் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

நான்கு முறை சாம்பியனான இத்தாலி இந்த முறை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மீது நாமும் அணுஆயுத தாக்குதல் நடத்துவோம் – வடகொரிய அதிபர் எச்சரிக்கை!

அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் எச்சரித்துள்ளார்.

அணு ஆயுதங்களை அணு ஆயுதங்களோடு சந்திப்போம் என்றும் தாக்குதல்களை எதிர்கொள்வோம் என்றும் அமெரிக்காவுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக தலைநகர் பியான்யாங்கில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை அவர் நேரில் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வேகமாக பரவும் தொழுநோய் – நோயாளர்களின் 15 % மாணவர்கள்!

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்துள்ளது என்று தேசிய தொழுநோய் பிரசாரம் கூறுகிறது.

இந்த வருடம் பதிவாகியுள்ள தொழுநோயாளிகளில் 15% பாடசாலை மாணவர்கள் என அதன் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் இந்நாட்டில் இருந்து 450 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மேல் மாகாணத்திலும் இந்நோய் பரவும் அபாயம் அதிகம் எனவும் அவர் கூறினார்.

நாட்டுக்கு இரவுப் பொருளாதாரம் தேவை – அமைச்சர் டயானா கமகே

இந்த நாட்டுக்கு பொழுதுபோக்கு தேவை என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு இரவுப் பொருளாதாரம் தேவை எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் இந்த நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் நாடு அபிவிருத்தி அடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஓமானில் சிக்குண்டுள்ள இலங்கைபெண்கள்  தூதரக அதிகாரிகளால் துஸ்பிரயோகம் – ஆங்கில ஊடகம் பரபரப்பு செய்தி !

ஓமானில் சிக்குண்டுள்ள இலங்கைபெண்கள்  தூதரக அதிகாரிகளால் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றனர் என பாதிக்கப்பட்ட பெண்களின் தகவல்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தினால் நிர்வகிக்கப்படும் பாதுகாப்பான இல்லமொன்றில் உளஉடல் பாதிப்புகளை எதிர்கொண்ட 90பெண்கள் தங்கியுள்ளனர்.

ஆனால் இந்த தங்குமிடம்  ஒரு பெண்ணிற்கான அடிப்படை வசதிகளை கொண்டிருக்கவில்லை.

இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள பெண்களில் சிலர் ஏலத்தில் விற்கப்பட்டவர்கள் அவர்கள் எதிர்கொண்ட மோசமானஅனுபவம் காரணமாக அவர்கள்  அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் துயரமளிக்கும் விதத்தில் அலுவலகத்தினால் நிர்வகிக்கப்படும் தங்குமிடத்திலும் அவர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான் ஓமானிற்கு வந்து மூன்று வருடங்களாகின்றன நான் கடந்த மாதம் இங்கு வந்தேன் ஆனால் அவர்கள் நான் வெளியே செல்ல அனுமதிக்கின்றார்கள் இல்லை அதிகாரியிடம் எனது கடவுச்சீட்டும் டிக்கெட்டும் உள்ளது அவர் அவற்றை கிழித்துவிடப்போவதாக மிரட்டுகின்றார்இ அவர் என்னை  தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கின்றார் நான் இங்கு யாரையும் காதலிக்க வரவில்லை நான் ஒரு மாதகாலமாக முடங்கியநிலையில் இருக்கின்றேன் அதிகாரி எனது ஆவணங்களை பரிசலீப்பதற்கு மறுக்கின்றார். நான் அவரது விருப்பத்திற்கு உட்படாததால் என்னை இங்கு பலவந்தமாக வைத்துள்ளனர் என பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அதிகாரியே தூதரகத்தின் நடவடிக்கைகளை தீர்மானிக்கின்றார் இங்குள்ள பெண்கள் எவரும் இலங்கை தூதுவர் பார்க்கவில்லை என மற்றுமொரு பெண் தெரிவித்துள்ளார்.

அதிகாரியொருவர் இருக்கின்றார் அவர் 1.5 மில்லியனிற்கு யுவதிகளை விற்பனை செய்கின்றார் அவர் பெண்களை பாலியல் நடவடிக்கைகளிற்காக கடத்துவதில் ஈடுபட்டுள்ளார்இ இங்குள்ள அனைத்து பெண்களிற்கும் சமைத்து சாப்பிடுவதற்கு 10 கிலோ உணவையே அவர்கள் வழங்குகின்றனர்இபெண்கள் பட்டினியால் அழும் தருணங்களும் உண்டு என ஓமானில் சிக்குண்டுள்ள பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு கழிவறைகள் உள்ளன ஒவ்வொன்றையும் 40 பெண்கள் பயன்படுத்துகின்றனர் உரிய கதவுகள் இல்லை குறிப்பிட்ட நபர் பெண்களை பாலியல் நடவடிக்கைகளிற்காக விற்கின்றார் பல பெண்கள் பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர் அவர்களின் தகவலைகளை நான் ஊடகங்களிற்கு தெரிவிக்க முடியாது எனவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

ஏனையபெண்களும் பாதிக்கப்படுவதற்கு முதலில் அவர்களை மீட்கவேண்டும்.அங்கு தொடர்பாடல் வசதிகள் எதுவுமில்லை பல பெண்கள் பல மாதங்களாக தங்கள் குடும்பத்தினரை தொடர்புகொள்ளவில்லைஇஇங்குள்ளவர்கள் தங்கள் பெண்பிள்ளைகள் இறந்துவிட்டார்கள் என கருதுகின்றனர் ஆனால் அவர்கள் பாலியல் நடவடிக்கைகளிற்காக விற்கப்பட்டுள்ளனர் முகவர் நிலையங்களின் பிரதிநிதிகள் இதன் மூலம் கிடைக்கின்ற பணத்தை தங்கள் மத்தியில் பங்குபோட்டுக்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் கொடி, சின்னம் மற்றும் அடையாளங்களை பயன்படுத்தினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் – முல்லைத்தீவு பொலிஸார் எச்சரிக்கை !

தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தாமல் யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள் என முல்லைத்தீவு பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட தலைவி ஈஸ்வரி மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு காவல்நிலையத்தில் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டு மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகமானி அறிவித்தலில் பிரகாரம் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளின் கொடி, சின்னம் மற்றும் அடையாளங்களை பயன்படுத்தக்கூடாது.

அவ்வாறு செயற்பட்டால் தாம் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் ஆனால் யுத்தத்தில் உயிரிழந்த பொது மக்களிற்கு அஞ்சலி செலுத்த தடையில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.