“காயங்களை எவ்வாறு ஆற்றலாம். ஒருவருக்கு ஒருவர் முன்னோக்கி நகர்வதற்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்தே நாங்கள் பார்க்கவேண்டியுள்ளது..” என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பேட்டியொன்றில் “மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை அமர்விற்காக அரசாங்கம் எவ்வாறு தயாராகின்றது? அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துளார். மேலும் இது தொடர்பில் பேசிய அவர்,
பதில்- பயங்கரவாத மோதலின் இறுதியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் -முக்கியமான விவகாரங்களிற்கு நாங்கள் தீர்வு கண்டுள்ளோம். காயங்களை எவ்வாறு ஆற்றலாம். ஒருவருக்கு ஒருவர் முன்னோக்கி நகர்வதற்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்தே நாங்கள் பார்க்கவேண்டியுள்ளது.
உள்நாட்டு பொறிமுறை காணப்படுகின்றது அது செயற்படுகின்றது என்பதே எங்கள் நிலைப்பாடு. சர்வதேச தரப்புதலையிடுவதற்கு பதில் காயங்களை ஆற்றுவதற்கு நாங்கள் இவற்றை பயன்படுத்தவேண்டும்.
சர்வதேச தரப்பு தலையிட்டால் அது உண்மையான நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். காயங்களை ஆற்றுவதற்கு பதில் நிலைமையை மேலும் மோசமானதாக்கும்.
ஆகவே நாங்கள் அதிகளவு முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் மேலும் முன்னேறுவோம் என்பதை எங்களின் நிலைப்பாடு.
நாங்கள் உண்மையை தெரிவிப்போம் – வடக்குகிழக்கில் பிரச்சினைகள் உள்ளன அவற்றிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். காணாமல்போனோர் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகம் போன்றவை வலுப்படுத்தப்பட்டுள்ளன. பேண்தகு இலக்குகள் சாத்தியமாகியுள்ளன. ஆகவே உலகிற்கு நாங்கள் இவற்றை காண்பித்து இந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன என்பதை அங்கீகரிக்கவேண்டும் என கோரவுள்ளோம்.
நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொண்டுவருகின்றோம்- நல்லாட்சி அரசாங்கத்தினால் அதனை செய்ய முடியவில்லை.” என அவர் பதிலளித்துள்ளார்.