12

12

“பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.” – அருட்தந்தை மா.சக்திவேல்

“பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.” என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

பயங்கரவாத திருத்த சட்டத்தை தொடர்ந்து அரசியல் கைதிகள் விடுதலையாவார்கள் எனும் எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கோ அதனால் மீறப்படும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் எந்த ஆட்சியாளர்களும் ஆயத்தமில்லை என்பதையே பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தமென முன் வைக்கப்பட்டுள்ள முன் மொழிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தமிழ் மக்களின் அரசியல் ரீதியான பிரச்சனையை சிங்கள பௌத்த தேசியவாத அரசியல் தலைவர்கள் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு தவறியது மட்டுமல்ல அரசியல் போராட்ட எழுச்சியை அடக்குவதற்கு பயங்கரவாத சட்டம் உருவாக்கப்பட்டதோடு, அச்சட்டம் நான்கு தசாப்தங்கள் கடந்தும் இன்றும் பாதுகாக்கப் படுகின்றது.

ஆயுதம் மௌனிக்கப்பட்டு ஒரு தசாப்தம் கடந்த போதும் அரசியல் தீர்வு 13+ என்பதை நீக்கி தமிழர்களுக்கு அரசியல் பிரச்சினை இல்லை என்பதே இன்றைய ஆட்சியாளர்களின் நிலைப்பாடு. இதற்கு மத்தியிலேயே பயங்கரவாத தடை சட்டம் திருத்தமென போலி முன் பொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டம் பிரிவினைவாதத்திற்கு எதிரானது என சிங்கள மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு அடித்தட்டு பௌத்த சிங்கள மக்கள் பேரினவாத போதையூட்டி வளர்க்கப்பட்டனர்.

இச்சட்டத்தை பாவித்து 1983ம் ஆண்டு காலப்பகுதியில் சிங்களத் தலைவர்களும் சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளார். மேலும் 1988 /89 ஆம் காலப்பகுதியில் தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது அவர்களும் சிறைகளில் அடைக்கப்பட்டனர். காணாமலாக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இச்சட்டத்தின் மனிதாபிமானமற்ற மனித உரிமைகள் மீறும் சரத்துக்கள் உள்ளடங்கி இருக்கின்றன என்பதை அறிந்தும் சட்டத்தை இல்லாமல் செய்வதற்கு மக்களை திரட்டி அரசுக்கு அழுத்தம் கொடுக்கவோ அல்லது வேறு வகையில் எதிர்ப்பு காட்டவோ மக்கள் விடுதலை முன்னணியினர் முன்வரவில்லை.

காரணம் சிங்கள பௌத்த மக்கள் மத்தியிலுமிருந்தும் இராணுவத்தரப்பிடமிருந்தும் தமது கட்சியினருக்கு எதிர்ப்பு கிளம்பி விடும் எனும் குறுகிய அரசியல் நோக்கமும் தமிழர்களின் தனி நாட்டு அரசியலை முற்று முழுதாக அழிக்கவேண்டும் எனும் உள் நோக்கமுமாகும்.

இக்கொடிய சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்களும் குரல் கொடுக்காது இருந்தனர் என்றே கூறலாம். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராகவும் அதே சட்டம் பாய்ந்து தற்போது 300க்கும் அதிகமானோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் பலர் விசாரணை என தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போதும் இச்சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு சிலர் குரல் கொடுத்தாலும் பெரும் பான்மையானோர் அமைதி காக்கின்றனர். காரணம் தங்களையும் பயங்கரவாதிகளாக்கி விடுவர் எனும் பயமாகும்.

தற்போது இச்சட்டம் இருந்தாலே தமிழ் ,முஸ்லிம் அரசியல் எழுச்சியை, பிரிவினைவாதத்தை, பயங்கரவாதத்தை, அரச எதிர்ப்பு நடவடிக்கை களை அடக்க முடியும் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டம் திருத்த முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆதலால் மனித உரிமை மீறும் அடிப்படைத் தன்மைகள் திருத்தம் செய்யப்படவில்லை. இத்திருத்தத்தை ஏற்றுக் கொள்வோரும் உண்டு.

இச்சட்டத்தை பாதுகாப்பாகக் கொண்டே ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதோடு இன அழிப்பினை பல்வேறு வகைகளில் தொடர்கின்றனர். சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இக்கொடிய சட்டம் நீக்கப்பட வேண்டும் எனக் கூறினாலும் உள்நாட்டு மனித உரிமை ஆணைக்குழு இச்சட்டம் அகற்றப் படுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. இவர்களும் ஆட்சியாளர்களின் கருவியாக செயல்படுவதே இதற்கான காரணமாகும்.

இந்நிலையில் வடக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக மக்களின் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது வெறுமனே கட்சியை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டமாக மட்டும் அமைந்து விடக்கூடாது. அடுத்த தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கான மறைமுக உள்நோக்கம் கொண்டதாகவும் அமைந்துவிடக்கூடாது.

தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு எதிராக பாவிக்கப்படும் பயங்கரவாத சட்டம் இனிவரும் காலங்களில் முதலாளித்துவத்திற்கு எதிராக, இயற்கை வள கொள்ளையர்களுக்கு எதிராக, வெளியக சக்திகளுக்கு எதிராக செயற்படுவோர்க்கு எதிராக பாவிக்கப்பட்ட உள்ளது என்பதே உண்மை. இது இருப்பதையே பல சக்திகள் விரும்புகின்றன. அதற்காகவே சட்டத்திருத்தம் என போலியான முன்மொழிவு நாடகமாடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான மக்கள் சக்தியை வடகிழக்கிலும், வட கிழக்கிற்கு வெளியிலும் கட்டியெழுப்புவதற்கான தேவை எழுந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் குறுகிய கட்சி அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் மக்கள் வாழ்வை காக்க மக்கள் சக்தியை கட்டியெழுப்பி அதன் மூலம் பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிக்க செயற்படவேண்டும். அதற்கான முனைப்பு காட்ட வேண்டும் இதுவே காலத்தின் தேவையாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் எடுபடாமல் போன ரெய்னா , ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட பிரபல வீரர்கள் – விபரம் இதோ !

ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர உணவகத்தில் இன்று தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் அதிரடி வீரரான சுரேஷ் ரெய்னா ஏலம் போகவில்லை.

ஐபிஎல் போட்டியில் சிறந்த வீரராக வலம் வந்த ரெய்னா விலை போகாதது சென்னை அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏலத்தில் எடுபடாத ஏனைய வீரர்களின் விபரம் ,

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் டேவிட் மில்லர், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் ஸ்டீவ் ஸ்மித், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஷகிப் அல் ஹசன், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் மொஹமட் நபி, அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் மத்தியு வேட், இந்தியக் கிரிக்கெட் அணியின் விருத்திமான் சஹா, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சேம் பிளிங்ஸ் ஆகியோரும் ஏலத்தில் எடுபவில்லை.

“போராட்டத்தை கைவிடவில்லை என்றால் கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.” – ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கை !

கனடாவில் லொரி ஓட்டுனர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிடவில்லை என்றால் உரிமம் பறிக்கப்படுவதுடன் கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பரவல் தீவிரம் அதிகரித்துள்ளதை அடுத்து அண்டை நாடான கனடாவில் அதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான லொரிகளை இயக்கும் ஓட்டுனர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்றும் தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா எல்லையில் லொரிகளை நிறுத்தியும் முக்கிய பாலங்களில் போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தியும் டிரக் ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2 வாரங்களை கடந்து தொடரும் போராட்டத்தில் கனடாவில் வர்த்தகம் பெரிதளவில் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கனடா பிரதமர், ஓட்டுநர் உரிமம் பறித்து குற்ற நடவடிக்கை ஆகியவற்றை தவிர்க்க டிரக் ஓட்டுனர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது,

‘கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டம் நடத்துவோர் சட்டங்களை மீறுகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு அரசினைத் தள்ள வேண்டாம். அரசின் கடும் நடவடிக்கைகள் உங்கள் வேலையை வாழ்க்கை சூழலை, சர்வதேச பயண அனுமதியை பாதிக்கும் என எச்சரிக்கிறேன். கொரோனா கட்டுப்பாடு குறித்த உங்கள் அதிருப்தியை நாங்கள் அறிந்துள்ளோம். ஆனால் போராட்டத்தால் மக்கள் பாதிக்கக் கூடாது. போராட்டம் உடனடியாக கைவிடப்பட வேண்டும்,’ என்றார்.

பாகிஸ்தானில் தங்கம் வென்ற தமிழ் யுவதியை கௌரவித்த ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ !

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் இந்திராதேவி என்ற யுவதி கடந்த மாதம் 18 ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஸ்ரீலங்கா – பாகிஸ்தான் சவேட் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம் இல்லாமல் நாட்டிற்கும் பெருமை சேர்த்திருந்தார்.

தந்தையை இழந்த நிலையில் சாதித்த குறித்த யுவதியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி கௌரவித்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் (11) குறித்த யுவதியை ஜனாதிபதி கௌரவித்தோடு அவருக்கு நினைவு பரிசினையும் வழங்கி கௌரவித்துள்ளனர்.

வவுனியா பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து யுவதி ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவால் கௌரவிக்கப்பட்டுள்ளதோடு நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அண்மையில்  இந்துகாதேவியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேரில் சந்தித்து தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“பல்கலைகழகங்கள் விவசாயதுறை தொடர்பான பட்டப்படிப்பை கொடுக்க முன்வர வேண்டும்.” – வவுனியாவில் கோட்டாபாய !

“30 வருட யுத்த நிலையை முடிவுக்கு கொண்டு வந்து எமது இளைய சமுதாயத்தை அபிவிருத்தி பாதையில் அழைத்து செல்ல உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.” என ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு அதனை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது ஒரு விசேஷமான நாள். சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்துக்கு அமைய இந்த பல்கலை கழகம் ஆரம்பிக்கப்பட்டு இந்த பிரதேசத்தினை கல்வி, பொருளாதார ரீதியில் உயர்வடைய இந்த பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்படுகிறது.  எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போல நாட்டில் புதிய பல்கலைகழகம் உருவாக்கப்பட்டு இந்த பிரதேச மாணவர்களிடம் கையளிக்கபடுவதில் பெருமையடைகிறேன்.

இந்த பல்கலைகழகம் ஊடாக இளமாணி பட்டங்களை மட்டுமல்ல, மேலதிக பட்டங்களையும், வேலை வாய்ப்புகளையும், வெளிநாட்டு வாய்ப்புகளையும் உருவாக்கி எமது இளைய சமுதாயத்துக்கு பெற்று கொடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்து செல்ல தயாராக வேண்டும். இந்த பல்கலை கழகம் ஊடாக தொழில் நுட்ப சவால்களை முறியடித்து நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். எதிர் வரும் காலங்களில் எமது நாட்டில் தொழில் வாய்ப்புகளை உருவாக்க கூடிய கல்வி முறைகளை நாம் உருவாக்க அயராது உழைக்க வேண்டும்.

எமது நாடு விவசாய நாடு என்பதால் எதிர்காலத்தில் விவசாய துறையில் பாடத்திட்டங்களை உருவாக்கி அவற்றில் பட்டங்களை பெற்று கொடுத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புக்களை பெற்று கொடுக்க பல்கலைகழகங்கள் முன்வர வேண்டும். எதிர் காலத்தில் மிக அதிகளவான மாணவர்களை பல்கலைகழகங்களுக்கு உள்ளீர்க்க எதிர்பார்த்து இருக்கிறோம். அதிகளவான மாணவர்கள் உயர்தரத்திலே சித்தியடைந்தாலும், அனைவரையும் பல்கலைகழகங்களுக்கு உள்ளீர்க்க முடியவில்லை எதிர்காலத்தில் இந் நிலைமை மாற்றியமைக்கப்படும்.

பல்கலைகழகங்களில் பட்ட படிப்பு கற்கை நெறிகளுக்கு மேலதிகமாக டிப்ளோமா, சான்றிதழ் கற்கை நெறிகள் புதிது புதிதாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் 30 வருட யுத்த நிலையை முடிவுக்கு கொண்டு வந்து எமது இளைய சமுதாயத்தை அபிவிருத்தி பாதையில் அழைத்து செல்ல உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன் என்றார்.

“சிறைக்கைதிகள் தொடர்பில் ஐக்கியநாடுகள் சபை செல்வாக்கு செலுத்த முடியாது.” – நாமல்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையோ அல்லது சர்வதேச சக்திகளோ சிறைக்கைதிகள் தொடர்பில் செல்வாக்கு செலுத்துவதற்கு அரசாங்கம் அனுமதிக்காது என  நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டால் அதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு பிரச்சினைகள் எழாது என குறிப்பிட்டுள்ள அவர், சிறைக்கைதிகளை புனர்வாழ்விற்கு உட்படுத்துவேன் என ஜனாதிபதி தனது கொள்கை உரையில் தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் இடநெருக்கடியை குறைக்க தீர்மானித்துள்ளோம். நீதிமன்ற விசாரணைகள் இன்றி நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்யப்போகின்றோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். கைதிகளை தனித்தனியாக அவதானித்து ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார் என நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முடிவிற்கு கொண்டுவந்தமைக்காக பல நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடியில் ஏப்ரல் குண்டுத் தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹாசிமின் படங்களை வைத்திருந்தவருக்கு நேர்ந்த கதி !

மட்டக்களப்பு ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில் அக்குறணையில் இருந்து காத்தான்குடி நோக்கி பிரயாணித்த வாகனம் ஒன்றை இன்று சனிக்கிழமை (12) இராணுவத்தினர் சோதனையிட்டபோது ஒருவர் சஹ்ரான் ஹாசிமின் படங்களை வைத்திருந்தமை தெரியவந்ததையடுத்து வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த 9 பேரையும் இராணுவத்தினர் தடுத்துவைத்து விசாரணை செய்த பின்னர் விடுதலை செய்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவின்கீழ் உள்ள ரிதிதென்னைச் சந்தியில் பொலிசார் வீதிச் சோதனைச் சாவடி அமைத்து இதில் இராணுவத்தினரும் பொலிசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அக்குறணையில் இருந்து வேன் ஒன்றில் 9 பேர் காத்தான்குடி நோக்கி  இன்று காலை 11 மணியளவில் பிரயாணித்தபோது குறித்த வீதிச்சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இராணுவத்தினர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனரா..? என அதற்கான அட்டையைக் கேட்டு சோதனையிட்டனர்.

இதன் போது அதில் பிரயாணித்த முகமட் பாரூக் முகமட் ஆசாத் என்பவர் தனது கைத் தொலைபேசியில் தடுப்பூசி ஏற்றியதற்கான அட்டையின் படத்தைக் காட்ட முற்பட்டார். இதன்போது கைத் தொலைபேசியில் சஹ்ரான் ஹாசிமின் படங்கள் காணப்படுவதைக் கண்டுள்ள இராணுவத்தினர் அவருடன் பிரயாணித்த 9 பேரையும் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்களை விசாரணையின் பின்னர் விடுதலை செய்தனர்.

போன வருடம் waterboy என கிண்டல் செய்யப்பட்ட ஹசரங்க இந்த வருடம் 28 கோடிக்கு ஏலம் – ஐ.பி.எல் ஏல விபரம் இதோ !

இந்திய பிரிமியர் லீக் மாபெரும் ஏலத்தில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க பாரிய தொகைக்கு ஏலம் போயுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளுக்கு ஒப்பந்தம் செய்த வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மாந்த சமீர
அதன்படி, 1,075 இலட்சத்திற்கு (இந்திய ரூபாய்) அவர் ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ரூபாவில் இது 2,877 இலட்சம் ஆகும்.

பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி இவ்வாறு வனிந்து ஹசரங்கவை ஏலத்தில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் ஏலம் தற்போது பெங்களூரில் இடம்பெற்று வருகிறது.
ஐ.பி.எல் ஏலத்தின் ஏனைய வீரர்கள் விபரம் !

  • இந்தியக் கிரிக்கெட் அணியின் ஷிகர் தவானை பஞ்சாப் கிங்ஸ் அணி இந்திய மதிப்பில் 8.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • இந்தியக் கிரிக்கெட் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பெட் கம்மின்சை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்திய மதிப்பில் 7.25 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது.
  • தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் கார்கிஸோ ரபாடாவை பஞ்சாப் கிங்ஸ் அணி இந்திய மதிப்பில் 9.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் ட்ரண்ட் போல்டை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி இந்திய மதிப்பில் 8 கோடி கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • இந்தியக் கிரிக்கெட் அணியின் ஸ்ரேயஸ் ஐயரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்திய மதிப்பில் 12.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • இந்தியக் கிரிக்கெட் அணியின் மொஹமட் ஷமியை குஜராத் டைடன்ஸ் அணி இந்திய மதிப்பில் 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் டு பிளெஸிசை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் குயிண்டன் டி கொக்கை லக்னஷ் சுப்பர்ஜியண்ட்ஸ் அணி இந்திய மதிப்பில் 6.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் டேவிட் வோர்னரை டெல்லி கெப்பிடல்ஸ் அணி இந்திய மதிப்பில் 6 கோடி கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • இந்தியக் கிரிக்கெட் அணியின் மணிஷ் பான்டேவை லக்னஷ் சுப்பர்ஜியண்ட்ஸ் அணி இந்திய மதிப்பில் 4.6 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷிம்ரோன் ஹெட்மியரை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி இந்திய மதிப்பில் 8.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • இந்தியக் கிரிக்கெட் அணியின் ரொபின் உத்தப்பாவை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது
  • இங்கிலாந்து அணியின்  ஜேஸன் ரோய்யை குஜராத் டைடன்ஸ் அணி இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • இந்தியக் கிரிக்கெட் அணியின் தேவ்தத் படிக்கல்லை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி இந்திய மதிப்பில் 7.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • மேற்கிந்திய தீவுகள் அணியின் டுவைன் பிராவோவை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது.
  • இந்தியக் கிரிக்கெட் அணியின் நிதிஷ் ரணாவை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது.
  • மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜேஸன் ஹோல்டரை லக்னஷ் சுப்பர்ஜியண்ட்ஸ் அணி இந்திய மதிப்பில் 8.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • இந்தியக் கிரிக்கெட் அணியின் ஹர்சல் பட்டேலை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்திய மதிப்பில் 10.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • இந்தியக் கிரிக்கெட் அணியின் தீபக் ஹூதாவை லக்னஷ் சுப்பர்ஜியண்ட்ஸ் அணி இந்திய மதிப்பில் 5.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • இலங்கை கிரிக்கெட் அணியின் வனிந்து ஹசரங்கவை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  இந்திய மதிப்பில் 10.75 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது.
  • இந்தியக் கிரிக்கெட் அணியின் வொஷிங்டன் சுந்தரை சன்ரைசஸ் ஹைதரபாத் அணி இந்திய மதிப்பில் 8.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • இந்தியக் கிரிக்கெட் அணியின் குர்ணல் பாண்ட்யாவை லக்னஷ் சுப்பர்ஜியண்ட்ஸ் அணி இந்திய மதிப்பில் 8.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் மிட்செல் மார்சை டெல்லி கெப்பிடல்ஸ் அணி இந்திய மதிப்பில் 6.5 கோடி கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • இந்தியக் கிரிக்கெட் அணியின் அம்பத்தி ராயுடுவை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இந்திய மதிப்பில் 6.75 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது.
  • இந்தியக் கிரிக்கெட் அணியின் இசான் கிசானை மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய மதிப்பில் 15.25 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது.
  • இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜோனி பேயர்ஸ்டொவ்வை பஞ்சாப் கிங்ஸ் அணி இந்திய மதிப்பில் 6.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  •  இந்தியக் கிரிக்கெட் அணியின் தினேஷ் கார்த்திக்கை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்திய மதிப்பில் 5.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
  • மேற்கிந்திய தீவுகள் அணியின் நிக்கலோஸ் பூரானைசன்ரைசஸ் ஹைதரபாத் அணி இந்திய மதிப்பில் 10.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.