15

15

ரஷ்யாவின் படையெடுப்பால் 50லட்சம் உக்ரேனியர்கள் அகதிகளாகியுள்ளனர் – ஐ.நா தகவல் !

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 50 நாளுக்கு மேலாகிறது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ரஷியாவுடனான போரினால் உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 50 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து வெளியேறுவோர் போலந்து, ஹங்கேரி, சுலோவேகியா, ருமேனியா மற்றும்  மால்டோவா ஆகிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக போலந்து நாட்டில் அகதிகளாக சென்றுள்ளனர்.

தொடரும் பெற்றோல் நெருக்கடி – பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினை முற்றுகையிட்ட பொதுமக்கள் !

மட்டக்களப்பு பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபன கிளையினை இன்று பொதுமக்கள் முற்றுகையிட முயற்சித்தவேளையில், அதனை பொலிஸார் தடுத்த நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு மக்களும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருட்கள் வழங்கப்படாது என்று வெளியான அநாமதேய தகவல்களையடுத்து பெருமளவானோர் இன்று மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினை முற்றுகையிட முற்பட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் நிலைமையினை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துடன் அங்கிருந்தவர்களை கலைந்துசெல்லுமாறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.

கோட்டாபாயராஜபக்ஷவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைதான பொலிஸ் அதிகாரி – நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு !

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் நேற்று கலந்துகொண்டமை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

கொழும்பு நீதிவான்  நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) பொலிஸாரினால் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நீதிவானின் உத்தரவின் பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்திற்கும் எதிரான குறித்த போராட்டத்தில் சீருடையுடன் கலந்துகொண்டு மக்களுக்கு ஆதரவாக குறித்த  அதிகாரி குரல் கொடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அதன்பின்னர் அவர் பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டதுடன், ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்பட்டதையடுத்து, கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிற்சாலையில் இருந்து தந்தை மற்றும் 9 வயது மகனின் சடலம் மீட்பு !

தொழிற்சாலை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 37 வயதுடைய தந்தை மற்றும் 9 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இன்று (15) காலை குறித்த நபர் தனது மகனுடன் தொழிற்சாலையின் பாதுகாப்பை பார்வையிட வந்திருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவரும் காலை 10.30 மணியளவில் தொழிற்சாலைக்குள் நுழைந்துள்ளதுடன் பிற்பகல் 2.00 மணி ஆகியும் வெளியே வராத காரணத்தால் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே சென்று அவதானித்த போது தண்ணீர் தொட்டியில் இருந்து குறித்த இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ரப்பர் தொழிற்சாலையின் நிர்வாக தர அதிகாரி என்பதுடன், தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பாதுகாப்பு குறித்து விசாரிக்க அங்கு வந்திருந்ததாக தெரியவந்துள்ளது.

தொழிற்சாலைக்கு தண்ணீர் சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட தொட்டியில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

உயிரிழந்தவர்கள் காலி அக்மீமன பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.