22

22

கோட்டாபாயராஜபக்ஷ ஒரு பிடி மண்ணை திருடியதை நீங்கள்  உறுதிப்படுத்தினாலும் நான் பதவி விலகுவேன் – மகிந்தானந்த அளுத்கமஹே சபதம் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொள்ளையடித்தார் என்பதை உறுதிப்படுத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி விடுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்ட கோப்புகள் மூடப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

சிறப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்தி, தினமும் வழக்கு விசாரணைகளை நடத்தி ராஜபக்சவினரை சிறையில் அடைக்க கடந்த அரசாங்கம் முயற்சித்தது.எனினும் அவர்களால் கடந்த 5 ஆண்டுகளாக ஒரு திருடனை கூட பிடிக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச கொள்ளையிட்ட ஒரு பிடி மண், கடுகளவு எதனையும் கண்டுபிடிக்க முடிந்திருந்தால், அவர் தற்போது மாளிகைக்கு பதிலாக சிறையில் இருந்திருப்பார்.

கோட்டாபய ராஜபக்சவை சிறையில் அடைப்பதற்காக சிறப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்தி, தினமும் வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டன. மிக் விமானம் உட்பட அனைத்தையும் தேடினர். தேடப்பட்ட அனைத்துக்கும் எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

எனினும் ஐந்து ஆண்டுகளாக கோட்டாபய ராஜபக்ச கொள்ளையடித்தார் என்பதை கண்டுபிடிக்க முடியாது போனது எனவும் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

21ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனை சபாநாயகரிடம் கையளிப்பு !

நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் உத்தேச 21ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய சுயாதீன நாடாளுமன்ற குழுவினரே இந்த 21 ஆவது திருத்தத்திற்கான யோசனையை கையளித்துள்ளனர்.

மேலும் உச்சம் தொடும் குவைத்தினாரின் பெறுமதி !

மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 339.99 ஆக பதிவாகி உள்ளது.

மேலும், குவைத் தினாரின் பெறுமதி 1,096.62 ரூபாவாக பதிவாகி உள்ளது.

தொடரும் பொருளாதார நெருக்கடி – இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் செல்லும் இலங்கை தமிழர்கள் !

இலங்கையிலிருந்து 2 படகுகளில் கைக்குழந்தையுடன் மூன்று குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் கடலோர காவல் குழுமம், கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் வாழ்வதற்கு வழியின்றி வேலைவாய்ப்பை இழந்துள்னர். ஒருவேளை உணவிற்கே திண்டாடும் நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையில் இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதியிலிருந்து இலங்கையிலிருந்து பலர் அகதிகளாக தமிழகத்திற்கு ஈழத்தமிழர்கள் இடம்பெயர ஆரம்பித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த 11 குடும்பத்தை சேர்ந்த 42 பேர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 2 படகில் கைக்குழந்தையுடன் வந்த மூன்று குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் ஆபத்தான முறையில் கடல் கடந்து தனுஷ்கோடி பகுதியில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

இதையடுத்து கடலோர காவல் குழும போலீசார் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அவர்களை விசாரணைக்காக மண்டபம் கடலோர காவல் குழுமம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.

“பொலிஸாரின் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மக்களைக் கலைப்பதற்காகவே, மக்களைக் கொல்வதற்காக அல்ல.” – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

றம்புக்கணை சம்பவத்தில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் முழுமையாக ஆராயப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தைப் பார்க்கும்போது, ​​சாதாரண மனிதர்கள் துப்பாக்கி ஏந்தியிருப்பதைக் காணவில்லை. ஒன்றிரண்டு பேர் கற்களையும் தடிகளையும் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்படியானால், பொலிஸார் அதை அடக்குவதற்கு அதே வகையான சமமான பலத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும்.

பெரும் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்படலாம். கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மக்களைக் கலைப்பதற்காகவே, மக்களைக் கொல்வதற்காக அல்ல.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்தவும் அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை !

பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புதிய அரசாங்கத்தில் மட்டுப்படுத்தப்பட்ட சிறிய  அமைச்சரவையொன்றே அமைக்கப்பட வேண்டும் எனவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.