27

27

போதைப்பொருள் கடத்த முயன்ற தமிழருக்கு மரணதண்டனை – சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு !

43 கிராம் (1.5 அவுன்ஸ்) ஹெரோயின் போதைப்பொருள் கடத்த முயன்ற நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற இளைஞனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரணதண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது.

கடத்தல்காரருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை அவரது சகோதரி ஷர்மிளா தர்மலிங்கம் பத்திரிகையாளர்யிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாகேந்திரன் தர்மலிங்கம் ஹெராயின் போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கொண்டு வர முயன்றதற்காக ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மரண தண்டனை விதிக்கப்பட் நிலையில் சிறையில் இருந்துவந்தார்.

நீண்டகாலமாகவே அவரது வழக்கு மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்துவந்தது. ஏனெனில் அவர் ஒரு மருத்துவ நிபுணரால் IQ 69 என்று கூறப்படுகின்ற அறிவுசார் இயலாமை உடைய ஒருவர் என்று சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அவர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தாமதிக்கப்பட்டு வந்தது.

ஆனால் நாகேந்திரன் தர்மலிங்கம் தனது செயல்களின் தன்மையை தெளிவாக புரிந்து கொண்டே அந்தக் குற்றத்தைப் புரிந்தார் என்று என்று அரசாங்கம் கூறிவந்தது.

இந்த நிலையில், அவரது தாயாரின் கடைசி மேல்முறையீட்டை செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2009 ஆம் ஆண்டில்இ நாகேந்திரன் தனது இடது தொடையில் 43 கிராம் (1.5 அவுன்ஸ்) ஹெராயினைக் கட்டிக் கொண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கடக்கும்போது பிடிபட்டார்.

சிங்கப்பூர் சட்டத்தின் கீழ், 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கொண்டு பிடிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

விசாரணையின் போது, 34 வயதான அவர் முதலில் போதைப்பொருளை எடுத்துச் செல்ல வற்புறுத்தப்பட்டதாகக் கூறினார், ஆனால் பின்னர் தனக்கு பணம் தேவைப்பட்டதால் குற்றத்தைச் செய்ததாகக் கூறினார்.

விசாரனைகளின் பின்பு அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டில், அவர் அறிவுசார் இயலாமையால் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று மேல்முறையீடு செய்தார்.

இறுதியில், அவர் அறிவுசார் ஊனமுற்றவர் அல்ல என்று நீதிமன்றம் கண்டறிந்தது.

கடந்த ஆண்டு ஜனாதிபதியின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது.

கேள்விக்குரிய குற்ற நடத்தையுடன் தொடர்புடைய அபாயங்கள் மற்றும் எதிர்விளைவு நன்மைகளை எடைபோட்டு, இது ஒரு கிரிமினல் மனதின் செயல் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் கண்டறிந்தது என்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் முன்னைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இலங்கையில் இன ஐக்கியம் ஏற்பட்டிருந்தால் முள்ளிவாய்க்கால் தின பேராட்டத்துக்கு வாருங்கள் – சிங்கள மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அடைக்கலநாதன் !

நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாக இருக்குமேயானால் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள முஸ்லீம் மக்களும் கலந்துகொள்ளவேண்டுமென வன்னி நாடாளுமன்ற  உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

 

இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல் நிலைமைக்கு காரணமான ஆட்சியாளர்களை வீட்டுக்கு செல் என காலிமுகத்திடல் தொடக்கம் நாடு பூராகவும் போராட்டம் இடம்பெறுகின்றது.

இந்த போராட்டங்கள் ஜனநாயகரீதியான போராட்டம் என்பதால் எவரையும் கைது செய்யவில்லை. அந்த வகையில் நாமும் இதனை வரவைற்பதோடு போராட்டத்திற்கான ஆதரவை தெரிவிக்கின்றோம்.

அத்துடன் ஜனநாயக ரீதியான இப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு யுத்தகாலத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதனை சகோதர சிங்கள மக்களும் தெரிவித்து வருகின்றனர். இது இந்த நாட்டில் ஏற்பட்ட பாரிய மாற்றமாகும்.

யாழ். பண்டத்தரிப்பு பிரதேச மருத்துவமனை வைத்தியரின் பொறுப்பற்ற செயல் – ஒருவர் பலி !

தெரு நாய் கடிக்குள்ளாகிய குடும்பத்தலைவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

அவருக்கு விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி வழங்காது ஏற்பு ஊசி மட்டும் பண்டத்தரிப்பு பிரதேச மருத்துவமனையில் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டத்தரிப்பைச் சேர்ந்த சபாரத்தினம் கனகலிங்கம் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பெப்ரவரி 16ஆம் திகதி குடும்பத்தலைவருக்கு தெரு நாய் கடித்துள்ளது. அவர் மறுநாள் காலை பண்டத்தரிப்பு பிரதேச மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் சென்றுள்ளார். அவருக்கு மருத்துவரின் ஆலோசனையில் ஏற்பு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் நேற்று திடீர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில மணிநேரங்களில் உயிரிழந்துள்ளார்.

மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மகிந்தவை பதவி விலகுமாறு கூறிய ஜனாதிபதி கோட்டாபய ?

தன்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கூறவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் அவ்வாறு கூறவும் மாட்டார் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2024 வரை தொடரவுள்ள பாரிய உணவு பற்றாக்குறை – உலக வங்கி எச்சரிக்கை !

ரஷ்யா-உக்ரைன் போரினால் உருவான உலகளாவிய உணவு மற்றும் பொருட்களின் பற்றாக்குறை 2024 வரை நீடிக்கும் என்று உலக வங்கி கூறுகிறது.

1970ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகமே மிகப்பெரிய பொருள் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்கிறார்கள்.

கடுமையான உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் ஆகியவை உலகின் பல பகுதிகளில் பணவீக்கத்தை உயர்த்தியுள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

ரஷ்யா உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு மற்றும் உர ஏற்றுமதியாளராகவும், மசகு எண்ணெய் ஏற்றுமதியில் இரண்டாவது பெரிய நாடாகவும் உள்ளது.

பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைனில் ரஷ்யா இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததிலிருந்து பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செயன்முறை சீர்குலைந்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ ச்சீக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை !

மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிசீக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மியான்மர் முன்னாள் தலைவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மியான்மரின் இராணுவத்தினர் கடந்த வருடம் பிப்ரவரி 2021 இல் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவ ஆட்சியை கொண்டு வந்தனர்.

அப்போதிருந்து, ஆங் சான் சூகிசீக்கு எதிராக பல வழக்குகள் நடத்தப்பட்டு வந்தன. 76 வயதான சூகி தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துங்கள் – வெளியாகியுள்ள அறிவிப்பு !

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அனைத்து நிர்மாணப் பணிகளையும் இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உற்பத்திகள் விற்பனை செய்யப்படாத நிலை ஏற்படும் போது, ​​இறக்குமதியாளர்கள் விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“என்னை ராஜபக்ஷக்களுடன் இணைந்து பணியாற்ற கூறியதே ரவூப் ஹக்கீம் தான்.” – இரட்டை வேடம் போடும் ரவூப் ஹக்கீம் !

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுடன் கார்னிவல் அலுவலகத்தில் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தியபின்னர் 20 க்கு ஆதரவாக வாக்களிக்குமாறு எமக்கு கூறிய ரவூப் ஹக்கீம், இப்போது என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்துள்ளார்.

 

பொதுஜன பெரமுன அரசில் சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்  ஹாபிஸ் நஸீரை, கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார். இதனையடுத்தே, ஹக்கீமின் இரட்டை வேடம் என்ற தலைப்பில் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அவசரக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எந்த விசாரணையுமின்றி என்னை உடனடியாக கட்சியை விட்டு நீக்கியதாக கூறப்படும் எந்தத் தகவலும் இதுவரை எனக்கு வரவில்லை, அவ்வாறு கிடைத்தால் அதற்குத் தகுந்த பதிலளிப்பேன் என்றும் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது கடிதத்தில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்று இரண்டு மாதங்களுக்கு பின், 2020 ஒக்டோபர் மாதமளவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனுவினூடாக தற்போதைய பாராளுமன்றத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் நான். தற்போது அதிகாரத்தில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்து நான்,செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் தீர்மானமே காரணமாகும்.

அவ்வாறிருக்கையில், முறையான விசாரணைகள் எதுவுமின்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து என்னை திடீரென நீக்கிவிட்டதாகக் கூறி அவர் எவ்வாறு இந்த நாட்டைத் தவறாக வழிநடத்த முடியும்?

தற்போது, நமது அயல் நாடொன்றில் இலங்கையின் தூதுவராக இருக்கும் அவரது நண்பருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியினதோ அனுமதி இன்றி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியுடன் உறுதியான புரிந்துணர்வுக்கும் ரவூப் ஹக்கீம் வந்ததை அவரால் மறுக்க முடியுமா?

அதனை தொடர்ந்து, 2020 ஒக்டோபர் 18 ஆம் திகதி ரவூப் ஹக்கீமின் கார்னிவல் (Carnival) அலுவலகத்தில் ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷவுடன் ஒரு மணி நேரத்துக்கு மேல் சந்திப்பு நடத்தியதை அவர் மறுக்க முடியுமா? இச்சந்திப்பில் ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில், நான் உட்பட எம்.சி.பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், தெளபீக் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் எங்கள் அனைவரையும் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறும் எங்களை வேண்டிக் கொண்டதால், நான் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விரும்பினாலும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் மற்றும் அவரது கண்டி மாவட்ட தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு என்பவற்றின் காரணமாக அவரால் அவ்வாறு செய்ய முடியாமல் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவை, அத்தேர்தலில் அமோக வெற்றியுடன் பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருப்பதாலும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எனது வாக்காளர்களின் நலன் கருதியும், அதிகாரத்திலுள்ள அரசாங்கத்துடன் இணைந்து வாக்காளர்களுக்கு அத்தியாவசியமான தேவைகளை பெற்றுக்கொடுக்க நான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது அவசியமானதாலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை உடன்படுகிறேன்.

அதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட எமது அரசியல் கட்சியின் தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க, அவரை நம்பி 20ஆவது திருத்தத்துக்கு வாக்களித்தேன். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தத்தின் காரணமாக ரவூப் ஹக்கீம் வாக்களித்தமைக்காக எனது விளக்கத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் ரவூப் ஹக்கீம்தான், நான் பொது ஜன பெரமுனவுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று அவர் கட்டாயாப்படுத்தியதற்கேற்ப நான் செயற்பட்டதை ரவூப் ஹக்கீம் நன்றாக அறிந்திருந்ததால், இவ்விடயம் தொடர்பாக ரவூப் ஹக்கீம் என்மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 03, அன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக, என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக இப்போது திடீரென்று ரவூப் ஹக்கீம் கூறுகிறார், இந் நீக்கமும் கூட ஜனாதிபதி என்னை நாட்டின் அவசர தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அவருக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டதன் பின்னரே இந் நீக்கம் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் அங்கம் வகிக்குமாறு ஜனாதிபதி அழைத்ததன் பின்னரே, தேசிய நலன் கருதி அதனை நான் ஏற்றுக்கொண்டேன்.

முதல் முறையாக பறவை காய்ச்சல் மனிதருக்கும் பரவுகிறது – சீனாவில் இருந்து புதிய காய்ச்சல் !

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் முதல் முறையாக பறவை காய்ச்சல் மனிதருக்கு பரவி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பறவை காய்ச்சலின் ‘எச்3 என்8’ திரிபு முதல் மனித நோய்த்தொற்றை பதிவு செய்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார  ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காய்ச்சல் உள்ளிட்ட பல அறிகுறிகள் காணப்பட்ட 4 வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் காகங்கள் மூலம் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

சிறுவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை.

இது தொடர்பாக சுகாதார ஆணையம் கூறும்போது, ‘எச்3 என்8’ வைரஸ் மாறுபாடு பறவைகள், குதிரைகள், நாய்கள் ஆகியவற்றில் கண்டறியப்பட்டது.  ஆனால் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக எதுவும் பதிவாகவில்லை. ஆரம்ப ஆய்வுகளின்படி இந்த மாறுபாடு இன்னும் மனிதர்களை திரும்ப பாதிக்கும் திறனை கொண்டிருக்கவில்லை. பெரிய அளவிலான தொற்று நோய்க்கான ஆபத்து குறைவாக உள்ளது-. எச்3 என்8 பறவை காய்ச்சல் வைரஸ் மக்களிடையே பரவுதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

‘நான் கருத்து சுதந்திரம் என்று சொன்னவுடன் அனைவரும் அச்சம் கொண்டுள்ளனர்.’ – எலான் மஸ்க்

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரின் கருத்து சுதந்திரம் குறித்து உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாக கேள்வி எழுப்பி வந்தார். பின் டுவிட்டரை வாங்குவதற்கு எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்க முன் வந்தார்.
டுவிட்டர் நிறுவனமும்  4,400 கோடி அமெரிக்க nlhலருக்கு எலான் மஸ்கிடம் விற்பனை செய்ய  சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டுவிட்டரில் கருத்து சுதந்திரம் குறித்து எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
நான் கருத்து சுதந்திரம் என்று சொன்னவுடன் அனைவரும் அச்சம் கொண்டுள்ளனர்.  கருத்து சுதந்திரம் என நான் குறிப்பிடுவது அந்நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட சுதந்திரத்தை தான். ஒரு நாட்டின் சட்டத்திற்கு புறம்பான கருத்துக்களை பரப்புவதற்கு என்றும் நான் எதிரானவன்.
ஒரு நாட்டின் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது அந்நாட்டு மக்களின் விருப்பதிற்கு எதிராக செயல்படுவது ஆகும். இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.