28
28
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதை கண்டறிய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதியை வீட்டுக்குப் போகச் சொல்கிறார்களே, அப்போது பிரதமரும் வீட்டுக்குப் போக வேண்டுமா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய அவர்,
“இது இன்று வந்தவை அல்ல, ஜே.ஆரை கொன்று விடுவோம் என்று பலகையை அடித்தார்கள். இதற்கு குழப்பமடையாமல் அவர்கள் ஏன் அப்படி கூறுகிறார்கள் என்பது தொடர்பில் கண்டறிய வேண்டுவதோடு, தலை வலி இருப்பவருக்கு உடம்பு வலிக்கு மருந்து கொடுத்து சரிவராது” எனவும் குறிப்பிட்டார்.
மேலும் பிரச்சினைகளை மூடி மறைப்பதில் எவ்வித பயனும் இல்லை என்பதோடு நோய்க்கு தேவையான சிகிச்சையை அளிப்பதை விடுத்து வேறு நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் பயனில்லை என்றும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் கராச்சி பல்கலைகழகத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது ஒரு பெண் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஷாரி பலுச் என்ர அந்தப் பெண் படித்து பட்டம் வாங்கியவர் எனவும் தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி பல்கலைகழகத்தில் ஏப்ரல் 26 ஆம் திகதி, சீன மொழியை பயிற்றுவிக்கும் கட்டிடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 4 பேர் பலியாகினர். பலியானவர்களில் மூன்று பேர் சீனாவை சேர்ந்தவர்கள்.
இந்தச் சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்தத் தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. அத்துடன் இத்தாக்குதலை அவ்வமைப்பைச் சேர்ந்த ஷாரி பலுச் என்ற பெண் நடத்தியதாகவும்,அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
30 வயதான ஷாரி பலுச் இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தில் இணைந்திருக்கிறார். விலங்கியலில் பட்டம் பெற்றுள்ள ஷாரி பலுச், எம்ஃபில் படித்திருக்கிறார். இவருடைய கணவர் பல் மருத்துவராவர். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தில் இணைந்த ஷாரி தன்னை தற்கொலைப் படை பிரிவில் இணைத்துக் கொண்டிருக்கிறார்.
ஷாரியின் கணவர் பஷிர் பலுச் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவானது பலரையும் அதிர்ச்சடைய செய்துள்ளது. குறித்த ட்விட்டர் பக்கத்தில், “ஷாரி என் உயிரே.. உனது தன்னலமற்ற செயல் என் வாயடைத்துவிட்டது. நான் பெருமை கொள்கின்றேன். குழந்தைகள் தாயை நினைத்து மிகவும் பெருமை கொண்டு வளர்வார்கள். நீ எங்கள் வாழ்வின் முக்கிய அங்கமாக இருப்பாய்” என்று பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தான் தனியே பிரிக்கப்பட வேண்டும் என்று பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் அவ்வப்போது குண்டுவெடிப்பு , தற்கொலைப் படை தாக்குதலை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீதும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையால் , அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குருநகர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் தமிழகம் , தனுஷ்கோடியை அண்மித்த தொண்டி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த இருவரும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக தமிழகத்திற்கு தஞ்சம் கோரி வந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது , குறித்த இருவருக்கும் எதிராக இலங்கை நீதிமன்றில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் இருவரையும் அகதிகளாக ஏற்காமல் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தயாரித்துள்ளதுடன், அது நாடாளுமன்றம் கூடியதும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்தப் பிரேரணைக்கு ஐக்கியத் தேசியக் கட்சி ஏற்கனவே தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும் தற்போது ஏனைய எதிர்க்கட்சிகளிடமும் கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பிரேரனையில் 113 கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டால், ஜனாதிபதியை நீக்குவதற்கான சட்டபூர்வமான தன்மை இருக்காது என்றபோதிலும் இது ஜனாதிபதியின் மீதான நம்பிக்கையை நாடாளுமன்றம் இழந்துவிட்டது என்பதை தெளிவாகக் காட்டும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஜே.வி.பியும் ஜனாதிபதிக்கு எதிரான இந்த பிரேரணையில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் எந்த ஒரு இலாகாவையும் ஏற்க மாட்டோம் என்று பகிரங்கமாக முதலில் கூறியவர்களில் விமல் வீரவன்சவும் ஒருவர் என்பதால், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட 11 உறுப்பினர்கள் குறித்த பிரேரணையில் கையெழுத்திட அணுகப்படுவார்கள் என்று மூத்த வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இத்தகைய நன்கொடைகள் மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த அன்னியச் செலாவணி பெறுபேறுகளைப் பேணுவதற்கும் அவற்றை வெளிப்படைத் தன்மையில் பயன்படுத்துவதற்கும் மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றையும் மத்திய வங்கியின் ஆளுநர் நியமித்துள்ளார்.
நன்கொடைகள் பற்றிய தகவல்களை fdacc@cbsl.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமோ அல்லது 076 83 15 782 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமோ பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கல்முனை பிரதேசத்தில் மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் போதைப்பொருள் விற்பனையை முற்றாக இல்லாதொழிக்கும் வகையில் விசேட ரோந்து நடவடிக்கைகளில் சாய்ந்தமருது , கல்முனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கேரள கஞ்சா , ஹெரோயின் மற்றும் மாவா போதைப்பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதனை தொடர்ந்தே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிராமங்களிலுள்ள பொது அமைப்புக்கள் , சிவில் அமைப்புக்கள் , மத ஸ்தாபனங்கள், போன்றவற்றினூடாக பொதுமக்கள் மத்தியிலும் போதைப் பொருள் சம்பந்தமான விழிப்பூட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொலிஸார் கடந்த மாதம் தொடக்கம் போதைப் பொருள் பாவனையை கல்முனை பிரதேசத்திலிருந்து முற்றாக ஒழிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸார் சிவில் உடையிலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அத்துடன் பாடசாலைகளுக்கு அருகிலுள்ள கடைகள் மற்றும் நடமாடும் உணவு விற்பனை வியாபாரிகளும் பொலிஸாரினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளார்.
மேலும், பொது நம்பிக்கைக்கு தகுதியானதாக இருக்க அரசியல் ரீதியாக டுவிட்டர் நடுநிலையாக இருக்க வேண்டும். நடுநிலையாக இருந்தால் தீவிர வலது சாரியோ, தீவிர இடதுசாரியோ கோபம்தான் அடைவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.