08

08

நீங்கள் ஒரு இருட்டடிப்புக்கு சென்றால்…, – மின்சாரசபையை எச்சரிக்கும் ரணில் !

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாமென தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவ்வாறு செய்தால் இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள இந்தியா உதவுமென உறுதியளிக்க முடியாது என எச்சரித்தார்.

இலங்கைக்கு எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு செய்வதற்கு இந்தியா மட்டுமே உதவுவதாகவும் இவற்றை இலங்கைக்கு கொள்வனவு செய்வதற்கு வேறு எந்த நாடும் உதவவில்லை எனவும் பிரதமர் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“எரிபொருள் மற்றும் நிலக்கரி வாங்குவதற்கு எந்த நாடும் எங்களுக்கு உதவவில்லை. உணவு, மருந்து, உரம் வாங்க உதவுவார்கள். எரிபொருள் மற்றும் நிலக்கரி வாங்குவதற்கு இந்தியா மட்டுமே எங்களுக்கு உதவுகிறது. தற்போது இந்திய கடன் வரம்பு மீறப்பட்டுள்ளது.

விரைவில் இந்த வசதியை நீட்டிக்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களுக்கு எரிபொருள் மற்றும் மின்சாரம் தேவை. நான் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் ஒரு இருட்டடிப்புக்கு சென்றால், உதவிக்காக இந்தியாவுக்குச் செல்லும்படி என்னைக் கேட்க வேண்டாம்.

அவர்கள் தெருக்களில் இறங்கி போராடலாம். ஆனால், மின்வெட்டுக்கு செல்ல வேண்டாம். முன்மொழியப்பட்ட சட்டமூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் கோரப்படாத முன்மொழிவுகளை அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை வழங்குவதற்காக இந்த சட்டமூலத்தை நாங்கள் நிறைவேற்றவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

விறகு அடுப்பை பயன்படுத்துவதால் பெண்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும் – சரத் வீரசேகர

நவீன மற்றும் சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள ஆண்களின் ஆயுட்காலத்தைவிட விறகு பயன்படுத்தும் இந்நாட்டு பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நவீன சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் செல்வந்த நாடுகளில், தனிமனித ஆயுட்காலம் சராசரியாக 80 மற்றும் 85 ஆண்டுகள் ஆகும். எரிவாயு கொள்வனவு செய்ய சிரமப்படும், விறகுகளை பயன்படுத்தும் இலங்கை பெண்களின் ஆயுட்காலம் சராசரியாக 80.1 ஆண்டுகளாகும்.
இதனூடாக விறகுகளை பயன்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்காகவே தவிர சீரழிவுக்காக அல்லவென இதனூடாக புலப்படுகிறது என்றார்.

இலங்கையின் கடன் சுமை – கரம் கொடுக்க தயார் என்கிறது சீனா !

இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து உதவுவதில் சீனா தீவிரமான பங்கை வகிக்க தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்தார்.

வழக்கமான செய்தியாளர் கூட்டத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீட்டு பங்காளிகளின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் அதன் உள்நாட்டு சந்தையின் நிலையான செயற்பாட்டை உறுதிப்படுத்தவும் இலங்கைக்கு சீனா அழைப்பு விடுக்கிறது என அவர் கூறினார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமீபத்தில் ஒரு நேர்காணலில், ‘தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை நோக்கி சீனா தனது மூலோபாய கவனத்தை மாற்றுவதாகத் தெரிகிறது. நிதி சிக்கலில் உள்ள தெற்காசிய நாடுகள் பெய்ஜிங்கில் இருந்து அதே கவனத்தைப் பெறவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் கருத்துக்களுக்குப் பதிலளித்த ஜாவோ, ஒரு நல்ல அண்டை நாடு என்ற வகையில், சீனா இலங்கை மக்களுக்கு 500 மில்லியன் யுவான் (சுமார் 74.9 மில்லியன் டாலர்) மனிதாபிமான உதவி உட்பட பல நிவாரணங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

தெற்காசிய நாடுகளுடனும் நல்ல அண்டை நாடுகளுடனும் நல்லுறவை வளர்ப்பதற்கு சீனா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சியின் நேர்மறையான போக்கைப் பேணவும் மக்களுக்கு அதிக நன்மைகளை கொண்டு வரவும் சீனா தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய உத்தரவு !

கடந்த மே 9ஆம் திகதி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்தவர்களின் கருத்துக்களை செவிமடுக்காது நாடாளுமன்றத்தில் தொலைபேசி பார்க்கும் உறுப்பினர்கள்!

நாடாளுமன்றத்தில் தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சபை உறுப்பினர்கள் தொலைபேசிகளை பயன்படுத்துவதால் மற்றவர் பேசுவது கேட்பது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

“பனம்பழத்திலிருந்து சவர்க்காரம் – மாட்டுச்சாணத்திலிருந்து எரிவாயு” – வடக்கில் மீளும் தற்சார்பு !

“பனம்பழத்திலிருந்து சவர்க்காரம் – மாட்டுச்சாணத்திலிருந்து எரிவாயு” – வடக்கில் மீளும் தற்சார்பு.

அண்மையில், சவர்க்காரத்தின் விலையை 100%இற்கும் மேல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதால், இலங்கையில் சவர்க்காரத்தின் விலை உச்சம் தொட்டுள்ளது.

சவர்க்காரம் மாத்திரமல்லாது நாட்டில் அனைத்துப் பொருட்களதும் விலைவாசிகள் பல மடங்கில் எகிறிச் செல்கிறது.

சமூக வலைத்தளங்களில் இவரது முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

https://m.facebook.com/story.php?story_fbid=8184048254942480&id=100000121595176

இதே நேரம் அனைவரும் ஹாஸ் எரிவாயு சிலிண்டர்களை பெறுவதற்காக வரிசையில் முட்டிமோதிக்கொண்டு உள்ள நிலையில் வவுனியாவில் வசிக்கும் அரியரட்ணம் முரளிதரன் எனும் பாடசாலை அதிபர் ஒருவர் உணவுக்கழிவுகள் மற்றும் மாட்டுச்சாணம் என்பவற்றை கொண்டு சமைப்பதற்கு தேவையான உயிரியல் வாயுவை தயாரித்து தனது முகநூலில் ஒரு காணொளியை பதிவிட்டிருந்தார்.

உண்மையிலேயே இன்றைய நிலையில் இது மிக அவசியமானதாகவும் நம் அனைவருக்கும் முன்மாதிரியானதும் கூட . எல்லாவற்றுக்கும் வெளிநாடுகளிடமும் – இறக்குமதியாளர்களிடமும் கையேந்தி நிற்காது நமக்கான தை நாமே உருவாக்கும் தற்சார்புக்கு திரும்புவதே இன்றைய பிரச்சினைகளுக்கும் – வரிசைக்கலாச்சாரத்துக்கும் – பொருளாதார நெருக்கடிக்குமான தீர்வாகும்.