12

12

ரஷ்யாவை கட்டுப்படுத்த உக்ரைனுக்கும் – சீனாவை கட்டுப்படுத்த தாய்வானுக்கும் அமெரிக்க ஆயுத உதவி !

சீனாவுக்கு ஆசிய நாடுகள் தரும் ஆதரவை அபகரிக்க அமொிக்கா முயற்சிப்பதாக சீனாவின் பாதுகாப்பு மந்திரி வெய் ஃபெங்க் குற்றம் சாட்டி உள்ளாா்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

பன்முகத்தன்மை என்ற போா்வையில் அமெரிக்கா தனது நாட்டின் நலன்களை பிற நாடுகளின் மீது திணிக்கிறது. எந்த நாடும் தன் விருப்பத்தை மற்ற நாடுகள் மீது திணிக்கக்கூடாது, பிற நாடுகளை கொடுமைப்படுத்த கூடாது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிா்ப்பதற்காக, இந்தோ-பசிபிக் என்ற பெயரில் ஒரு சிறிய அமைப்பை அமெரிக்கா உருவாக்கும் முயற்சி, ஆசிய நாடுகள் சீனாவுக்கு தரும் ஆதரவை பறிக்கும் முயற்சியே ஆகும்.

இது மற்றவர்களைக் கட்டுப்படுத்தவும் மோதலையும் உருவாக்குவதற்கான ஒரு உத்தியாகும். சீனா தனது ராணுவத்தை விரைவாக நவீனப்படுத்தி வருகிறது. சமீபத்தில் சீனா, சாலமன் தீவுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. இது பசிபிக் கடற்பகுதியில் சீன கடற்படை தளம் உருவாகலாம் என்ற அச்சத்தை அமெரிக்கா உருவாக்கி, தென் சீனக் கடல் பகுதிகளில் போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா நிறுத்துகிறது. இது எங்கள் பிராந்திய விவகாரங்களில் தலையிடுவதாகும். பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகளுடன் சீனாவிற்கு கடல்சாா்ந்த பிரச்சினை உள்ளது. இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்கள் கடல் சாா்ந்த பிரச்சினைகளை தாங்களாகவே தீா்த்து கொள்ள வேண்டும். தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே சீனாவை எதிர்க்கும் போர்வையில் தைவானுக்கு ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இவ்வாறு சீனா பாதுகாப்பு மந்திரி கூறினார்.

இதே நேரம் ரஷ்யாவை கட்டுப்படுத்தவே உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவதாகவும் போர் முடிவடையாது நீண்டு கொண்டு செல்வதற்கு அமெரிக்காவும் அதனுடைய நேட்டோ நாடுகளுமே காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குற்றஞ்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பாக்குநீரிணையை தாண்டியும் மோடியின் ஆட்சி – கோட்டாபாயவை கட்டுப்படுத்தும் மோடி !

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் சர்ச்சைக்குரிய விடயம் கோப் குழு (COPE) விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

COPE என்றழைக்கப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் இலங்கை மின்சார சபை நேற்று ஆஜராகிய போது இந்த விடயம் வௌிக்கொணரப்பட்டது.

மின்னுற்பத்தி செயற்றிட்டத்திற்காக இந்தியாவின் அதானி நிறுவனத்தை தெரிவு செய்த விதம் குறித்து , இலங்கை மின்சார சபையிடம் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி ஜனாதிபதி தன்னை அழைத்து இந்த செயற்றிட்டத்தை அதானி நிறுவனத்திடம் வழங்குமாறு தெரிவித்ததாக COPE குழுவில் ஆஜராகிய இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C. பெர்டினான்டோ குறிப்பிட்டுள்ளார்.

பாரத பிரதமர் மோடி இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அழுத்தம் விடுத்ததாகவும் அவர் விசாரணையின் போது கூறியுள்ளார்.

இதே நேரம் நேற்றைய தினமே  காற்றாலை திட்டம் தொடர்பான மின்சார சபை தலைவரின் கூற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிராகரித்துள்ளார்.

மன்னார் காற்றாலை மின்சாரத் திட்டம் தொடர்பான COPE குழுவின் விசாரணையில் மின்சார சபையின் தலைவர் வெளியிட்ட கருத்தை மறுப்பதாகவும் எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கோ நிறுவனத்திற்கோ அதனை வழங்குவதற்கான அங்கீகாரத்தை அளிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ட்விட்டர் பதிவில் கூறியிருந்தார்.

இது பெரிய விடயமாகி பேசுபொருளாக ஆரம்பித்ததது. பல ஊடகங்களும் மின்சார சபை தலைவரின் கருத்தை மையச்செய்தியாக வெளியிட ஆரம்பித்தன். இது தொடர்பில் ராகுல் காந்தி தெரிவித்த போது ,

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் குளறுபடிகள் தற்போது பாக்கு நீரிணையையும் கடந்து இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளதாக குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் , கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்து தொடர்பில் மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோப் குழுவிற்கு நான் அளித்த விளக்கத்தில் அழுத்தம் மற்றும் உணர்ச்சிபூர்வமானதன் காரணமாக இந்தியப் பிரதமர் என்ற வார்த்தையை உச்சரிக்க நேர்ந்ததாகவும், எனவே அந்த கருத்தை வாபஸ் பெறுவதாகவும் அவர் கோப் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கெசினோ ராஜா எமக்கு வேண்டாம் – தம்மிக பெரெராவின் வீட்டின் முன்பும் போராட்டம் !

தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு முன்பாக ஒரு குழுவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தம்மிக்க பெரேராவினால் செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் வரியை செலுத்துமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ராஜினாமா செய்ததையடுத்து, தேசியப் பட்டியல் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையிலேயே தம்மிகபெரேராவுக்கு எதிராக போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன. “தம்மிக்க பெரேராவின்” வீட்டுக்கு முன்னால் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
“கெசினோ ராஜா எமக்கு வேண்டாம்
“தம்மிக்க வரி ஏய்ப்பு செய்தவர்,
“தம்மிக்க எமக்கு வேண்டாம்”,
கோட்டா பெயில் போன்ற பதாதைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயிரிடப்படாத காணிகளை அரசு கையகப்படுத்தும் – அமைச்சர் மஹிந்த அமரவீர

நாடளாவிய ரீதியில் பயிரிடப்படாமல் விடப்பட்டுள்ள அனைத்து வயல் காணிகளையும் உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கு 05 வருட காலத்திற்கு கையகப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழில் வாள்களுடன் முகமூடிக்கொள்ளை கும்பல் !

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் வாள்களுடன் வீடொன்றினுள் நுழைந்த முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது.
கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான 2 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வீட்டில் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்ற நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை முகங்களை மறைத்தவாறு,வாளுகளுடன் வீட்டை உடைத்து உள்நுழைந்த கொள்ளை கும்பல், வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது.
அத்தோடு ஏனையவர்களை வாள் முனையில் அச்சுறுத்தி அவர்கள் அணிந்திருந்த 10 பவுண் நகைகளையும் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய பெண் மீது துஷ்பிரயோகம் – 28 வயது நபர் கைது !

களுத்துறை வஸ்கடுவ பிரதேசத்தில் ரஷ்ய பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

36 வயதான ரஷ்ய பெண்ணின் முறைப்பாட்டையடுத்து களுத்துறை வடக்கு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் மஹா வஸ்கடுவ கடற்கரையில் உடற் பயிற்சிக்காக சென்று கொண்டிருந்த போதே சந்தேக நபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுக்கள் விநியோகம் -தினசரி குவியும் இளைஞர்கள் !

கடந்த 10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாளொன்றுக்கு 3,000இற்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் கடந்த 10 நாட்களில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுக்களின் சராசரி எண்ணிக்கை 10,000 எனவும் குடிவரவு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர், ஊடகப்பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்தார்.

களவாடப்படும் தமிழர் நிலங்கள் – வாய் பேச்சோடு நிற்கும் தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள் !

இலங்கையில் பௌத்த – சிங்கள பேரினவாதம் ஏதொவொரு வகையில் தன்னுடைய ஆதிக்க கரங்களை சிறுபான்மை மக்கள் மீது அழுத்திபிடித்து்ககொண்டு தான்  இருக்கிறது என்பதை குருந்தூர் மலை மீது அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரை அமைப்பு நடவடிக்கைகள் மிகத்தெளிவாக படம்பிடித்துக்காட்டியுள்ளன.

May be an image of 3 people and outdoors

இங்கு இரண்டு விதமான விடயங்கள் அலசப்பட வேண்டியவை.

01. குருந்தூர்மலை, திருகோணமலை, நெடுங்கேணி வெடுக்குநாரி மலை என பல இடங்களில் உள்ள தமிழர் வழிபாட்டு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த நிலையில் இதற்கு எதிராக செயற்பட வேண்டியவர்கள் மிகுந்த அமைதியுடன் இருப்பதை தான் இங்கு நாம் கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது.

தேர்தல் காலங்களில் மட்டும் மழைக்காலத்து ஈசல்கள் போல போலித்தேசியம் பேசிவிட்டு காணாமலேயே போய்விடுகிறார்கள் இந்த தமிழ்தேசியம் பேசும் அரசியல்வாதிகள். ஜனாதிபதிக்கு அறிவுரை கூறுமளவுக்கு – எதிர்க்ட்சிகளை இணைத்து பிரேரணை கொண்டுவரும் அளவுக்கு தெளிவாக சட்டங்கள் தெரிந்த பல சட்டத்தரணிகள் வட-கிழக்கு தமிழ்தேசிய கட்சிகளில் அங்கத்தவர்களாயுள்ளனர். இருந்தும் என்ன பயன்..? தமிழர் நிலங்களில் தொடரும் இந்த நில அபகரிப்பு பிரச்சினைகளுக்கு எதிராக ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மேற்கொள்ள முயற்சிக்கவும் இல்லை. பிரச்சினை பூதாகரமாக உள்ள போது மட்டும் மக்களோடு மக்களாக வந்து கொடி பிடித்து விட்டு சென்று விடுவதாக தான் பாராளுமன்ற அரசியல்வாதிகளின் நிலையும் காணப்படுகின்றது.

இதற்காக தான் இவர்களை நாம் பாராளுமன்றம் அனுப்பினோமா என மக்களும் கேள்வி கேட்பதில்லை. அவர்களும் மக்களுக்காக – தமக்கு வாக்களித்த மக்களின் உரிமைக்காய் எந்த கஷ்டமும் பட்டதாக தெரியவில்லை. பட்டதும் இல்லை.

இந்த அரசியல்வாதிகள் பிரச்சினைகளை வளர்க்கவே விரும்புகின்றனர் .தமிழர் பகுதிகளில் இன முரண்பாடு தொடர்பான பிரச்சினைகள் எரிந்து கொண்டிருப்பதை இந்த தமிழ்தேசிய தலைவர்கள் விரும்புகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. அப்போது தானே இதை வைத்து – இந்த நிலத்தை மீட்டுத்தருவதாக கூறி ஓட்டு சேர்க்க முடியும்.

கிட்டத்தட்ட இந்தியாவின் அயோத்தியில் உள்ள மசூதியையும் – ராமர் கோயிலையும் வைத்து நூற்றாண்டை தொடரும் மதப்பிரச்சினையை எவ்வாறு அரசியல்வாதிகள் தூண்டி குளிர்காய்கிறார்களோ அதே போலத்தான் நம்மவர்களும் செய்கிறார்களோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. இந்த மனநிலையில் தான் தமிழ்தலைவர்கள் உள்ளார்கள் என்றால் உண்மையிலேயே இவர்கள் தூக்கி வீசப்பட வேண்டும். வீசப்பட வேண்டியவர்கள்.

02.இன்று விகாரை அமைப்பு நடவடிக்கைகள் முனைப்பாக நடைபெற்றுவரும் குருந்தூர் மலை பகுதியானது தொல்லியல் பகுதியாக அறிவிக்கப்ப்படிருந்தததுடன் அங்கு எந்த புனரமைப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியாது என நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பிருந்த நிலையில் சத்தமேயில்லாமல் அரச ஆதரவுடனும் – இராணுவ பாதுகாப்புடனும் விகாரை அமைப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்படியானால் நாட்டில் ஒவ்வொரு மக்களுக்கு ஒவ்வொரு சட்டம். பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம்..? சிறுபான்மை மக்களுக்கு ஒரு சட்டம்..?

இன்று அப்பகுதி இளைஞர்களும் பல பகுதிகளிலிரு்து சென்ற இளைஞர்களும் – மக்களும் கூடியதால் தற்காலிகமாகவிகாரை அமைப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்காலிகம் தான் இது. விகாரை இன்னும் வளரும் என்பதில் துளியும் ஐயமில்லை.

அண்மையில் செய்தி ஒன்றைக்காண கிடைத்ததது. ‘ பதுளை வெல்லவாய கிராம பகுதி ஒன்றில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாதமையால் தாய் ஒருவர் விஷம் கொண்ட விதைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.” என்றதாக அந்த செய்தி நீண்டு கொண்டு சென்றது.

 

அது சரி இதற்கும் விகாரை அமைப்புக்கும் என்ன சம்பந்தம்..?

இந்த பொருளாதார நெருக்கடி – உணவுப்பற்றாக்குறை – எரிபொருள் நெருக்கடி என பல பிரச்சினைகள் உள்ள இந்த நாட்டில் இன ஒற்றுமையுடன் நாட்டின் இனங்களை இணைத்துக்கொண்டு பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர வேண்டிய இந்த காலத்தில் கூட நாட்டின் அரசியல் தலைவர்களும் – மதத்தலைவர்களும் புதிய ஒரு அரசியல் பிரச்சினையை இந்த விகாரையை வைத்து முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இப்படியாக இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை மேலும் முனைப்படைய செய்து கொண்டு தான் புலம்பெயர்ந்த தமிழர்களை அழைத்து பொருளாதாரத்தை மீட்க வழி தேடுகிறார்கள்.

இன மதப்பிரச்சினைகளை வைத்துக்ககொண்டுதான் நாட்டை முன்னேற்ற சிங்களவர்களுடன் தமிழர்களும் இணைய வேண்டும் என்கிறார்கள்.

இதே நிலை தொடருமாயின் இந்தியாவின் அயோத்தி எத்தனை உயிர்களை காவு வாங்கியதோ..? அதே போல இங்கேயும் மீண்டும் கலவரங்கள் வெடிக்க வாய்ப்புள்ளது.

சிங்களவர்களுக்கும் – தமிழர்களுக்கும் ஏன் பிரச்சினை.? என்ன பிரச்சினை..? என்ற கோணத்தில் அணுகி இன ஒற்றுமையை ஏற்படுத்தும் வரை – இன ஒ்றறுமையை ஏற்படுத்த முன்வரும் வரை இந்த நாட்டுக்கு அந்த கௌதமபுத்தரால் கூட விடிவு கொடுக்க முடியாது என்பதே நிதர்சனம்.