அறிவிக்கப்பட்டது ரணில் தலைமையிலான இடைக்கால அரசின் புதிய அமைச்சரவை – அதே கிண்ணத்தில் அதே வைன் – பெரிதாக மாற்றம் இல்லை !
- By
- July 22, 2022
- In உள்நாட்டுச் செய்திகள், செய்திகள்
புதிய அமைச்சர்கள் சிலர் பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இவர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இதற்கமைய,
1.தினேஸ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
2. டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சு
3. சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்
4. பந்துல குணவர்தன – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகம்
5. கெஹேலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம், நீர் வழங்கல்
6. மஹிந்த அமரவீர – விவசாய, வனஜீவ மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு
7. விஜயதாச ராஜபக்ஷ- நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு
8. ஹரின் பெர்ணான்டோ – சுற்றுலா மற்றும் காணி
9. ரமேஸ் பத்திரன – பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கைத்தொழில்
10. பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி
11. அலி சப்ரி – வெளிநாட்டு அலுவல்கள்
12. விதுர விக்ரமநாயக்க – புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரம்
13. காஞ்சன விஜேசேகர – மின்சக்தி மற்றும் எரிசக்தி
14. நசீர் அஹமட் – சுற்றுச்சூழல்
15.ரொஷான் ரணசிங்க – விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்பாசனம்
16. மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
17. டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
18. நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ – வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு.
…….
இவற்றுள் குறிப்பிடத்தக்களவான அமைச்சுக்களும் – அமைச்சர்களும் இறுதியான அமைச்சரவையிலும் அங்கத்தவர்களாக இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த கால அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றிருந்த பல அமைச்சர்களின் வினைத்திறனற்ற நகர்வுகளாலேயே கடந்த காலங்களில் இலங்கை மிகப்பெரிய நெருக்கடியினுள் சிக்கி வங்குரோத்து நிலைக்குள் தள்ளப்பட்டது. இந்த நிலையிலேயே மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் செய்து கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது இந்த நெருக்கடி நிலையை இல்லாது செய்யவே.
எனினும் மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ அரசில் அமைச்சு பதவியை ஏற்றோருக்கும் – ரணில் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியோருக்கும் மட்டுமே அமைச்சு பதவிகளை வழங்கியுள்ளார் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
இதன் மூலம் இலங்கையில் இனிமேலும் பெரிதாக எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க தேவையில்லை என்பதை மறைமுகமாக இந்த அமைச்சு பதவிகள் தெரிவிக்கின்றன.