08

08

பொலிஸ் ஊரடங்கு என்ற விடயம் சட்டத்தில் எங்குமேயில்லை – எம்.ஏ. சுமந்திரன்

பொலிஸ் ஊரடங்கு” என சட்டத்திலே எதுவும் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இது நாளை நடைபெற இருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக செய்யப்பட்டுள்ள சட்ட விரோத அறிவிப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளுக்கே பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

இலவசமாக படிக்க மட்டுமே இலங்கை தேவை – குறுகிய கால இடைவெளியில் 1500 வைத்தியர்கள் இலங்கையை விட்டு வெளியேற்றம் !

2022 ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து சுமார் 1500 மருத்துவர்கள் வெளியேறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

 

இந்த புள்ளிவிபரங்கள் மிகச்சரியானவை என்றும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற முற்படும் போது பெறப்படும் இலங்கை மருத்துவ கவுன்சிலின் (SLMC) “சான்றிதலுக்கான ” விண்ணப்பங்களில் இருந்து இந்த புள்ளிவிபரங்கள் பெறப்பட்டன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எம்.பி.யின் கூற்றுப்படி,

புள்ளிவிவரங்கள் பின்வருமாறு:

ஜன: 138
பிப்: 172
மார்ச்: 198
ஏப்: 214
மே: 315
ஜூன்: 449

தெரிவித்துள்ளார்.

………..

 

இங்கு தனித்து வைத்தியர்களுக்கு மட்டுமல்ல. முழு நாட்டுக்கும் பொருளாதார நெருக்கடி தான். எல்லோருமே நாட்டை விட்டு தப்பித்து ஓட முடிவெடுத்தால் நாட்டை முன்னோக்கி நகர்த்துவது எப்படி ..?

இவர்கள் இலவசமாக இலங்கையின் பல்கலைக்கழகங்களில் கற்று  மருத்துவர்கள் ஆனவர்கள் தான். படிக்கும் காலத்தில் ஏதேனும் தடை ஏற்பட்டிருந்தால் நாட்டை விட்டு போயிருப்பார்களா..? என்ற கேள்வியும் கேட்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

இலங்கையின் சாதாரண மக்களை விட இந்த வைத்தியர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுக்கொண்டே உள்ளன. எரிபொருள் வரிசைகளில் கூட சாதாரண மக்கள் பல நாட்கள் காத்திருக்க இவர்களுக்கு இலகுவாக பெட்ரோல் கிடைக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நெருக்கடியான நேரத்தில் இதனை விட வேறு என்னதான் செய்ய முடியும்..?

 

உண்மையிலேயே ஏனையவர்களை விட இலங்கையில் இலவசக் கல்வி மூலமாக கல்வி கற்று வைத்தியரான இவர்கள் இன்னும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியவர்கள். வைத்தியர்கள் மட்டுமல்ல. உயர்கல்வி கற்று வெளிநாடுகளுக்கு தப்பியோட நினைக்கும் ஒவ்வொரு கல்விமான்களுமே சுயநலவாதிகள் தான். சந்தர்ப்பவாதிகள் தான்.

 

அண்மையில் யாழ். பல்கலைக்கழககத்தில் மருத்துவ துறையில் கற்கும் இறுதிவருட மாணவன் ஒருவரை யாழ்ப்பாண வைத்தியசாலையின் முன்புள்ள உணவகம் ஒன்றில் சந்தித்த போது நடைமுறை பிரச்சினைகள் பற்றி பேசிக்கொண்டு இருந்த போது ” இது என் நாடு. வாழ்வோ சாவோ இங்கேயே வாழ்ந்து விடுவது என்பதே தீர்வு.” என கூறினார் அந்த மாணவர்.

இப்படியான மனிதர்கள் இருப்பதாலேயே இன்னமும் நமது நாட்டின் இலவச சேவைகளின் தரம் குறையாது உள்ளது.

போராட்டத்துக்கு நாடே தயாராக உள்ள நிலையில் – 12 திகதி முதல் நாடு வழமைக்கு திரும்பும் என்கிறார் ஜனாதிபதி கோட்டாபய !

நாளையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் – ஆளுந்தரப்புக்கும் எதிரான மிகப்பெரிய போராட்டம் ஒன்று நாளையதினம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் பல நிறுவனங்களும் மூடப்பட்டு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில் “வெற்றிகரமான தீர்வுகள் கிடைத்துள்ள இவ்வேளையில் எதிர்க்கட்சிகளின் அரசியல் குழுக்கள் மக்களை தவறாக வழிநடத்துவது மிகவும் வருந்தத்தக்கது” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எரிபொருள், எரிவாயு மற்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் ஜூலை 12 முதல் தொடர்ச்சியாக கிடைக்கப்பெறவுள்ளதாக என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதன்படி, நீண்டகால மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முயற்சியின் பின்னர் நாடு தற்போது அதற்கான பலன்களை பெற்று வருவதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல்வேறு அரச தலைவர்கள் ஊடாக தொலைபேசி மூலமாகவும் சில நாடுகளின் தூதுவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய மருந்துகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் 44 ஆயிரம் மெட்ரிக் தொன் உரம் நாளைய தினம் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்..

நாட்டில் பல்வேறு விவசாய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு உணவுப் பற்றாக்குறையொன்று ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிகரமான தீர்வுகள் கிடைத்துள்ள இவ்வேளையில் எதிர்க்கட்சிகளின் அரசியல் குழுக்கள் மக்களை தவறாக வழிநடத்துவது மிகவும் வருந்தத்தக்கது என ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக நாடு மீண்டும் பின்னோக்கி செல்லும் என ஜனாதிபதி கருத்தாகும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக கோரிய நாளைய போராட்டத்துக்கு ரணில் ஆதரவு !

நாளைய தினம் நடத்தப்படவுள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாளை கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அமைதிப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும் வன்முறைச் சம்பவங்களைத் தவிர்ப்பதையும் உறுதிசெய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
போராட்டங்களின் போது பொலிஸ் மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஜக்கிய தேசிய கட்சி குறித்த அறிக்கையில் கூறியுள்ளது.

பிரச்சார மேடையில் துப்பாக்கிசூடு – ஜப்பானின் முன்னாள் பிரதமர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10-ந்திகதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (வயது 67) தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு | Shinzo Abe

 

நேற்று இரவு நாரா நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் மயங்கி விழுந்த அவரை, பாதுகாவலர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றனர். உடனடியாக ஹெலிகாப்டரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மூச்சுவிடவில்லை, இதயம் செயல்படவில்லை. எனவே, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

 

ஜப்பானில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஷின்சோ அபே. 2020 ஆம் ஆண்டில் உடல்நல பிரச்சனை காரணமாக பதவி விலகினார். அதுவரை பதவியில் இருந்தார். துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் அவனிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

9 குழந்தைகளுக்கு தந்தையான எலான் மஸ்க் – சனத்தொகை அதிகரிப்புக்கு என்னால் முடிந்த பணியை செய்கிறேன் என பதில் !

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார்.

அவருடைய முதல் மனைவியான கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன், எலாஸ் மஸ்க்கின் மூலம் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார். பின்னர் கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ், அவர் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார். இந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு கடந்த நவம்பர் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த இரட்டையர்களையும் சேர்த்து எலான் மஸ்க்கிற்கு மொத்தம் தற்போது 9 குழந்தைகள் உள்ளன.

இது குறித்து பலர் அவரிடம் சமூகவலைத்தளங்கள் வாயிலாக பல கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக எலான் மஸ்க் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “குறைந்த மக்கள்தொகை நெருக்கடிக்கு உதவ என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைவது நாகரிகம் இதுவரை எதிர்கொள்ளாத மிகப்பெரிய ஆபத்து” என தெரிவித்து உள்ளார். ஏற்கனவே இவர் சீனாவின் மக்கள்தொகை வீழ்ச்சி குறித்து எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எலான் மஸ்க் விமானப்பயணத்தின் போது விமானப்பணிப்பெண் ஒருவரை பாலியல்அத்துமீறலுக்கு  உட்படுத்துவது போல செயற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு நஷ்ட ஈடும் அண்மையில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க இந்தியாவில் வீதிக்கண்காட்சி நடத்த திட்டமிடும் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் !

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை கட்டி எழுப்பவும், வெளிநாட்டு அந்நிய செலாவணிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கிலும், இந்தியாவிலுள்ள முக்கிய ஐந்து நகரங்களில் வீதி கண்காட்சிகளை இலங்கை நடத்த உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அழகிய கடற்கரைகள், குன்றுகள், அழகான கடலோர நகரங்களுக்கு பெயர் பெற்ற இலங்கை கடந்த ஏழு தசாப்தங்களிலும் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது எனவும், பொருளாதார சிக்கல்கள், கொவிட்-19 தொற்று நோய் என்பன காரணமாக சுற்றுலாத்துறை மிகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

22 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய தேவையான வெளிநாட்டு கையிருப்பு இல்லாமல் மருந்து உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு நாடு பெரும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

இருப்பினும் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு 61 ஆயிரத்து 951 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் எனவும், மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவேற்பதில் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது எனவும் அவர் கூறினார்.

இந்த நெருக்கடியில் இருந்து வெளிவர வேண்டுமானால் இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலமாக வருமானம் அதிகரிக்க வேண்டும் எனவும் அது மிகவும் இன்றியமையாத ஒரு வருமானமாக காணப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா உட்பட சில நாடுகள் இலங்கைக்கு அத்தியாவசியப் பயணங்களை மட்டுமே மேற்கொள்ளுமாறு குடிமக்களைக் கேட்டுக்கொண்ட போதிலும், கடந்த ஆண்டு 2 இலட்சத்துக்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே வந்திருந்ததாகவும் இந்த ஆண்டில் ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடு தனது கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஆகஸ்ட் மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) சமர்ப்பிக்க உள்ளதாகவும், இது பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் திட்டத்தில் ஒரு முக்கியமான படியாக காணப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

போரிஸ்ஜோன்சன் பதவியை ராஸினாமா செய்தமை தொடர்பில் பைடன் வெளியிட்ட அறிவிப்பு !

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவரது அமைச்சரவையில் இருந்து வெளியேறினர். இதனால் பெரும்பான்மை ஆதரவை இழந்ததால் போரிஸ் ஜான்சன், பதவியை ராஜினாமா செய்தார்.

கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்வரை போரிஸ் ஜான்சன் பிரதமராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரித்தானியா அரசுடன் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பை வழங்க ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா அறிவித்துள்ளது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஜோ பைடன், பிரிட்டனும், அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகள் என்றார். எங்களுக்கு இடையிலான சிறப்பான உறவு வலுவாக நீடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மக்களுக்கான ஆதரவு, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அமெரிக்காவும் பிரிட்டனும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.

எரிபொருள்நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட வன்முறை – ஒருவர் பலி !

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி – மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (07) இரவு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற இந்த மோதலில் ஹபராதுவ – ஸ்வாலுவல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். காயமடைந்த ஏனையவர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

நேற்றிரவு எரிபொருளுக்காக நின்ற வரிசையில் நபர் ஒருவர் தனது நண்பரின் கடைக்கு முன்னால் உள்ள இடத்தில் தனது வாகனத்தை நுழைக்க முற்பட்ட போது, ​​வரிசையில் பின்னால் இருந்த சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போது அவருடன் தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் அவ்வழியாக வந்த சிலர் தாக்கத் தொடங்கினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் வரிசையில் நின்ற மூவரும் தாக்க வந்த குழுவில் ஒருவரும் படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தின் போதே பலத்த காயங்களுக்கு உள்ளன நபர் உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

“சர்வதேச நாணயநிதியத்தை நம்பாதீர்கள். இலங்கை ஏனைய ஆசிய நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி.”- என்கிறார் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் !

கடந்த 1997ஆம் ஆண்டு ஆசியாவில்  ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட தலைவர்களில் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் அந்த நெருக்கடியை எதிர்கொண்டு மிகச்சிறப்பான வகையில் நாட்டை மீட்டு எடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று மலேசியா அடைந்திருக்கும் அபிவிருத்தியின் பின்னணியில் இவருடைய பங்களிப்பு அளப்பரியது.

மகாதீர் மொஹம்மத் தம்மைத்தாமே, தனிமைப்படுத்திக் கொண்டார் - Jaffna Muslim

1997 ஆம் ஆண்டளவில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட பல நாடுகளும் சரிவதேசநாணயநிதியத்தின் உதவியையும், உலக வங்கியின் உதவிகளையும் எதிர்பார்த்த போது தைரியமாக அவற்றை புறக்கணித்து மலேசியாவுக்கு என தனியான பொருளாதார கொள்கைகளை உருவாக்கினார் மகாதீர் மொஹம்மத்.

இந்த நிலையில், இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மற்ற ஆசிய நாடுகளுக்கான எச்சரிக்கை மணி என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

ஆசிய நாடுகள் பொறுப்பான நிதிக்கொள்கைகளைக் கையாள வேண்டும். அவ்வாறு செயல்படவில்லை எனில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிடியில் சிக்க நேரிடும்.

25 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டன. அப்போது மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு திடீரெனச் சரிந்தது. நாடு பொருளாதார ரீதியில் ஆட்டம் கண்ட நிலையில், சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார் மகாதீர். அவை பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் எழுப்பின.

எனினும் நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளும் எடுத்த முடிவுகளும் நல்ல பலன்களை அளித்தது.

What's happening in Sri Lanka and how did the economic crisis start?

அந்நியச் செலாவணி அறவே இல்லாத நிலையில், தவிப்புக்கு ஆளாகி உள்ள இலங்கை, தனது வெளிநாட்டு கடன்களுக்கான தவணையைச் செலுத்த முடியாமல் உள்ளது. இதையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் கடனை எதிர்பார்த்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில், அந்த நிதியத்தின் பிடியில் சிக்கிவிட வேண்டாம்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியை அணுகும்போது அவை இரண்டும் ஒரு நாடு வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துகிறதா என்பதை மட்டுமே கவனம் செலுத்தும். மற்றபடி, உங்கள் நாட்டுக்கு அரசியல், பொருளாதார ரீதியாக என்ன நேர்ந்தாலும் அவை கண்டுகொள்ளாது.

நாட்டை வழிநடத்தும் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். மேலும், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளையும் தாங்களே வகுக்க நினைப்பார்கள். அப்படியெனில், நாம் அவர்களிடம் சரணடைய வேண்டும் என்று அர்த்தம்.

சர்வதேச நாணய நிதியம் மியான்மருக்கு 350 மில்லியன் டொலர் பணத்தை அனுப்பியதாக தகவல் | Virakesari.lk

கடன் கொடுத்தவர்களுக்கு திருப்பிச் செலுத்தும் அளவுக்கு போதுமான நிதி இருப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் இலங்கைக்குள்ள பெரிய பிரச்சினை. மிக மோசமான முதலீட்டுக் கொள்கையும், மோசமான நாணய, நிதி மேலாண்மையும்தான் இதற்குக் காரணம். இலங்கை சென்ற பாதையில் நாமும் செல்வதற்கான வாய்ப்புள்ளது என்று அனைவரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். இது அனைவருக்குமான பாடம்.

ஆசியாவில் பொருளாதார சிறந்த நிலையில் உள்ளதாக கருதப்படும் சீனாவிடம் நிதி நெருக்கடிகளைத் தடுக்க போதுமான ஆதாரங்கள் உள்ளது. ஆசிய வட்டாரத்தில் உள்ள வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும். மூலதனக் கட்டுப்பாடுகளை விதிக்க தயாராக இருக்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது மிக வலுவாக உள்ளது. இதே வேளையில், ஆசிய நாடுகளின் நாணய மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. இதன் எதிரொலியாக, பணவீக்கம் அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க டாலரில் செலுத்தப்பட வேண்டிய கடன் சுமையும் உயர்ந்துள்ளது.

ஒரு நாட்டின் நாணய மதிப்பானது, ஐந்து விழுக்காடு அளவுக்கு அதிகரிக்கவோ, குறையவோ செய்தால் பிரச்னை இல்லை என்று குறிப்பிட்டுள்ள மகாதீர், ஐம்பது விழுக்காடு அளவுக்கு மதிப்பு குறையும்போது, மக்கள் ஏழைகளாகிவிடுவர். இதுபோன்ற நிலை ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.