10

10

இலங்கையை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் – ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையின் அபிவிருத்திகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

அமைதியான, ஜனநாயக மற்றும் ஒழுங்கான மாற்றத்திற்கு ஒத்துழைக்கவும் கவனம் செலுத்தவும் அனைத்து தரப்பினருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகாண வழிவகை செய்து இயல்பு நிலைக்குத் திரும்புவது அனைத்துக் கட்சித் தலைவர்களின் பொறுப்பாகும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையின் சனத்தொகைக்கான தனது ஆதரவை மேலும் அதிகரிப்பதற்கான தெரிவுகளை மதிப்பீடு செய்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்வதற்கு இந்த மூன்று கேள்விகள் போதும் – பராக் ஒபாமா அ்ட்வைஸ் !

திருமணம் ஆவதற்கு முன்பு கணவனும் மனைவியும் இந்த மூன்று கேள்விகள் முக்கியம் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபமா தெரிவித்துள்ளார். இரு மணங்கள் சேரும் திருமணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தங்களை போன்று மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்வதற்கு இந்த மூன்று கேள்விகளை தனக்குள் கேட்டுக் கொள்வது முக்கியம் என முன்னாள் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அந்த மூன்று கேள்விகள் உங்களுக்காக

உங்கள் துணை எதில் ஆர்வமிக்கவர்?

நீங்கள் உங்கள் வாழ்வின் பெரும் பகுதியினை எல்லாரை விடவும் உங்கள் துணையுடன் செலவிடுவீர்கள். ஆகவே அவர் ஆர்வமிக்கவராக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார் ஒபாமா.

அப்போதுதான் உங்கள் துணை என்ன நினைக்கின்றார்? என்ன செய்யப்போகின்றார் ?என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள் இல்லையென்றால் மொத்த வாழ்க்கையுமே கடினமாகிவிடும் எனக் கூறியுள்ளார்.

 உங்க துணை நகைச்சுவை உணர்வு  உள்ளவரா?

உங்களும் வரும் துணை தங்களது செயல்கள் மூலமாக நகைச்சுவை திறன் இருந்தால் அவர் உங்களின் வாழ்வின் ஒரு புதியலாக இருப்பார்.

ஏனென்றால் வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது சில தருணங்களில் சலிப்பு வரும் அப்போது உங்கள் பாட்னரிடம் இருக்கு நகைச்சுவை குணம்தான் உங்கள் வாழ்க்கையினை அழகாக்கும் உங்களின் திருமண வாழ்க்கியினை சிறப்பாக்கும் என ஒபாமா கூறுகின்றார்.

உங்க துணைவர் சிறந்த பெற்றோராக இருப்பாரா?

இந்த கேள்வி மிக முக்கியம் எனக் கூறும் ஒபாமா இந்த கேள்விதான் உங்கள் துணையை திருமணம் செய்யலாமா வேண்டாமா என முடிவு செய்ய உதவும் என்கிறார்.

உங்கள் வாழ்வின் பொக்கிஷமாக உள்ள குழந்தைகளுக்கு அன்பான, அக்கறையான, நல்ல பண்புகளை விதைக்கக்கூடியவராக இருப்பது முக்கியமானதும் அவசியமானதும் கூட என ஒபாமா கூறியுள்ளார்.

உங்கள் வாழ்க்கையின் துணையை தேர்ந்தெடுக்கும் முன்பு இந்த மூன்று கேள்விகளுக்கான விடையினை தெரிந்து கொண்ட பின்பு திருமணத்தை முடிவு செய்யலாம் எனக் கூறியுள்ளார்.

அமைதியை விரும்புவதாக கூறும் அமெரிக்கா உக்ரைனுக்கு 400 மில்லியன் டொலர் மதிப்பில் இராணுவ உதவி !

உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 150-வது நாளை நெருங்கியுள்ளது. போரில் உக்ரைனின் பல நகரங்கள் ரஷியாவிடம் வீழ்ந்தபோதும், உக்ரைன் இராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது.

இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா ராணுவம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு 400 மில்லியன் டொலர் மதிப்பில் இராணுவ உதவிகளை வழங்குவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதிநவீன ஏவுகணை அமைப்புகள், பீரங்கி குண்டுகள், இராணுவ கவச வாகனங்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட திறன்மிக்க ஆயுதங்கள் இத்தொகுப்பில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

இது ஒருபக்கமிருக்க புடின் தலைமையிலான ரஷ்யா அரசாங்கம் “அமெரிக்காவும் – மேற்குலக நாடுகளும் தொடர்ந்தும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கிக்கொண்டிருப்பதனாலேயே போர் இன்னம் பூதாகரமாகிக்கொண்டிருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த போரினுள் தன்னுடைய ஆதிக்கத்தை திணிப்பதற்காக அமெரிக்கா முயல்வதை தொடர்ந்தும் காண முடிகின்றது. உலக அமைதியே தன்னுடைய குறிக்கோள் என அண்மையில் ஜோ பைடன் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து உளமானதாக இருந்திருந்தால் – இருந்திருக்கும் பட்சத்தில் இரண்டு தரப்பபையும் சேர்த்து அமெரிக்கா அமைதிப்பேச்சுக்கு முயன்றிருக்கும். ஆனால் அது நடக்கவுமில்லை – அதற்கான வாய்ப்பும் இல்லை. அமைதியை விரும்புவதாக கூறும் அமெரிக்கா தான் ஆயுதங்களை வாரி வாரி கொட்டிக்கொண்டிருக்கிறது.

இந்த வல்லரசுகளின் பிடிக்குள் சிக்கிக்கொண்ட உக்ரைனியர்கள் தான் பரிதாபமானவர்கள் .

மீண்டும் பணியில் ஜனாதிபதி கோட்டாபய – விடுத்துள்ள முக்கியமான உத்தரவு !

 

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் என்பன போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில்,
எரிவாயு கப்பல் இன்று பிற்பகல் நாட்டிற்கு வந்ததையடுத்து, எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையிலிருந்து மீட்கப்பட்ட பெருமளவு பணம் – போராட்டக்காரர்கள் செய்த செயல் – காணொளி இணைப்பு !

கொழும்பு – கோட்டையில் உள்ள அரச தலைவர் மாளிகையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தியதாக நம்பப்படும் அறையொன்றிலிருந்து ஒரு கோடியே 78 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவுக்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இருந்து சிலர் பெரும் தொகையை மீட்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்தவர்களால் இந்தப் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பணத்தைக் கண்டுபிடித்த மக்களும் இணைந்து கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் அதனை கையளித்துள்ளனர்.

இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு நாளை அறிவிக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

தாய் மீது ஆணையாக 6 மாதங்களுக்குள் நாட்டை மீட்பேன் என்ற தம்மிகபெரேராவும் இராஜினாமா – தொடரும் இராஜினாமாக்கள் !

பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் பதவி விலக தயார் என அறிவித்துள்ள நிலையில் சில முக்கிய அமைச்சர்களும் தமது இராஜினாமாவை அறிவித்துள்ளனர்.

அதன்படி தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் வழங்கிய உரத்தை இன்று (10) பெற்றுக்கொண்டதன் பின்னர், இராஜினாமா செய்வேன் என மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

இதேநேரம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பதவியில் இருந்து தான் விலகுவதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகுவதாக அறிவித்த பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு வழி வகுக்கும் நோக்கில் தமது பதவிகளில் இருந்து விலகியதாக கூட்டறிக்கையொன்றை ஒன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொண்டு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் தீவிரமாக பங்களித்ததாகவும் அத்தகைய முடிவை எட்டும்போது தங்களது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதே நேரம் , முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா சற்றுமுன்னர் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தம்மிக்க பெரேரா ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவிப் பிரமாணம்  செய்து பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் ஜூன் 24 ஆம் திகதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

மேலும் தம்மிக பெரேரா பதவிப்பிரமாணம் ஏற்றதை அடுத்து தாய்மீது ஆணையாக ஆறுமாதங்களுக்குள் நாட்டை மீட்டெடுப்பேன் எனவும் மீட்டெடுக்க முடியாவிட்டால் பதவி விலகுவேன்  எனவும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் இல்லம் தீ வைக்கப்பட்ட சம்பவம் – விசாரணை சி.ஐ.டி.யிடம் !

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை .யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமைதியான போராட்டத்திற்கு மத்தியில் நேற்று இரவு ஒரு சிலரினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லம் தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகா விட்டால்..? – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகாவிட்டால், அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தம் மற்றும் முழு கடையடைப்பில் ஈடுபடப் போவதாக இன்று (10) தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் அறிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்க காரியாலயத்தில் இன்று (10) நடைபெற்ற தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நேற்று பிற்பகல் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் தீர்மானங்களுக்கு மதிப்பளித்து, எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதியினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போராட்டத்தின் எதிரொலி – கட்சியிலிருந்து விலகிய பந்துல குணவர்தன !

அமைச்சர் பந்துல குணவர்தன தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் புதிய அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக உள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்புரிமையிலிருந்தும் அவர் விலகவுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுயேட்சை உறுப்பினராக தான் அரசியலில் தொடரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் – விசேட அதிரடிப்படையின் மூன்று முக்கிய அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி !

பிரதமரின் வீட்டின் அருகில் ஊடகவியலாளர்கள் நால்வர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் மீதே பாதுகாப்புத் தரப்பினர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவ இடத்தில் ஏனைய ஊடகவியலாளர்களும் இருந்த போதும் மேற்படி ஊடகவியலாளர்களைத் தேடிவந்து தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது.  இதில் காயமடைந்த ஊடகவியலாளர்கள் நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு அருகே இடம்பெற்ற சம்பவத்தை செய்தியாக்கும் பணியில் ஈடுபட்ட  ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புபட்டார்கள் என தெரிவித்து விசேட அதிரடிப்படையின் மூன்று முக்கிய அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டனர்.

காவல்துறை விசேட அதிரடிப்படையின் அதிகாரி ரொமேஷ் லியனகே உள்ளிட்ட ஏனைய மூன்று அதிகாரிகளுமே இவ்வாறு உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை மா அதிபர் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக நேற்று (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களில் 103 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் பலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருநது சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும், மேலும் 55 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் 11 ஊடகவியலாளர்களும் 05 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.