15

15

பேரம்பேசுவதற்கு மீண்டும் ஓர் சந்தர்ப்பம் – பயன்படுத்திக்கொள்வார்களா தமிழ் தேசியம் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபாய ராஜபக்ச தன்னுடைய ஜனாதிபதி பதவியை விட்டு விலகுவதாக உத்தியோகபூர்வமாக இன்று காலை உத்தியோகபூர்வமாக செய்தி வெளியான நிலையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதாக எண்ணி இன்று கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் பாற்சோறு செய்தும் பட்டாசு வெடித்தும்  தங்களுடைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்தப் போராட்டம் உண்மையிலேயே புரட்சி என கூற கூடிய அளவிற்கு இருந்ததா..?  என கேட்டால் இல்லை என்றே கூற வேண்டும். போராட்டக்காரர்கள் பெரிதாக எந்த ஒரு அரசியல் விடயங்களும் – புதிய இலங்கைக்கான தெளிவான திட்டங்களும் முன்வைக்கப்பட்டதாக தெரியவில்லை. மாறாக ராஜபக்சக்கள் மீதான வெறுப்பு மட்டுமே மேலோங்கி இருந்தது.

இது மட்டும் இல்லாது போராட்டக்காரர்கள் தங்களுடைய போராட்டத்துக்கான கொள்கைகளையும் கோஷங்களையும் முறையாக வெளிப்படுத்தவில்லை என்பதே கண்கூடு. குறிப்பாக ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்டமையாக இருக்கலாம் அல்லது அலரி மாளிகை மற்றும் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கான முயற்சியாக இருக்கலாம் அனைத்தும் இலங்கையில் ஜனநாயகம் என்ற விடயத்தை கேள்விக்கு உள்ளாக்கி கேலிக்கூத்தாக்கி உள்ளது என்பதே உண்மை. போராட்டம் இடம்பெற்றது ஏன்..? எதற்கு..? என்ற வினாக்களுக்கு இன்று வரை விடை தெரியவில்லை. ஜூலை 9  போராட்டத்தினுடைய முடிவில் போராட்டக்காரர்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கை மிக்க கனதியானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  மாறாக போராட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் சாதாரணமாக கடந்து விடக் கூடியவையாக காணப்பட்டன. உண்மையிலேயே இந்த போராட்டம் எரிபொருள் தட்டுப்பாடு, பெட்ரோல் தட்டுப்பாடு என ஆக சில விடயங்களோடு மட்டுமே முற்றுப் பெற்றுள்ளது என்பதே கவலையான உண்மை. போராட்டக்காரர்கள் ராஜபக்சக்களை எதிர்ப்பது போன்றதான ஒரு தோரணையில் மட்டுமே போராட்டத்தை நடத்தி முடித்துள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மாளிகை வசதிகளை அனுபவிக்கும் போராட்டக்காரர்கள் - பிபிசி  தமிழின் கள அனுபவம் - BBC News தமிழ்
இந்தப் போராட்டத்தின் அறிக்கைகளில் முன் வைக்கப்பட்டிருந்த கருத்துக்கள் கூட தனித்து மீண்டும் தனிப் பெரும்பான்மை என்ற கருத்தியலையே முன்னிறுத்துவதாகவே காணப்பட்டது. முக்கியமாக கோட்டாபய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்ட எந்த சந்தர்ப்பத்திலும் அவருடைய போர் குற்றங்கள் தொடர்பிலும் , காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கான தீர்வு தொடர்பிலோ பெரிதாக அலட்டிக்கொள்ளப்படவில்லை.  இது இன்னமும் இலங்கையில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு  ஏற்படவில்லை என்பதையே மறைமுகமாக சுட்டிக் காட்டுகின்றது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பகுதியினர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 30 வருட போர் வெற்றியை கொடுக்க மனதில்லாது சரத் பொன்சேகாவிற்கு அந்த 30 வருட போர் வெற்றியை சூட்டுவதற்கு முயற்சித்ததையும் காண முடிந்தது. இது தவிர போராட்டத்தில் ஈடுபட்ட  ஏனைய மத குருமார்களை காட்டிலும் பௌத்தசங்கத்துக்கும் – அதன் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதன் பின்னணியில் இன்னமும் சிங்கள-பௌத்த மனோநிலையில் இருந்து இந்த நாடோ – சிங்கள இளைஞர்களோ மீளவில்லை என்பதையே காண முடிகின்றது.
இவற்றுக்கு அப்பால் ,
ராஜபக்சக்களுக்கு எதிரான இந்த போராட்டத்தை தமிழர் தரப்பு முறையாக பயன்படுத்தியதா..? எனக் கேட்டால் முற்றிலும் இல்லை என்றே கூற வேண்டும். ஆக குறைந்தது தங்களுடைய அபிலாஷைகளையும் – தேவைகளையும் – தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீத்யையும் வெளிப்படுத்தக் கூடிய வகையில் சரி போராட்ட களத்தில் ஏதாவது கோஷங்கள் முன்வைக்கப்பட்டதா என்று கேட்டால் அதுவும் இல்லை. வடகிழக்கு தமிழர்கள் தங்களுடைய தேவைகளையும் – தங்களுடைய அபிலாசைகளையும் – தங்களுடைய பிரச்சனைகளையும் தென்னிலங்கைக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பை இன்று தவற விட்டுவிட்டார்கள் என்பதை உண்மை.
இந்தப் போராட்டத்துக்காக பெருமளவு கலந்து கொண்ட இளைஞர்களில் அதிகம் பேர் சிங்கள இளைஞர்களாகவே காணப்பட்டனர். தமிழ் இளைஞர்கள் கலந்து கொண்டிருந்த போதும் சொற்பமானவர்களாகவே கலந்து கொண்டனர்.            வட- கிழக்கில் இருந்து கலந்து கொண்டிருந்த தமிழ் இளைஞர்களை காட்டிலும் தென் இலங்கையிலும் – மத்திய இலங்கை பிராந்தியங்களிலும் பிறந்து வளர்ந்த – வேலைக்காக குடியேறியுள்ள  தமிழ் இளைஞர்களே இந்த போராட்டங்களில் கலந்து கொண்டு இருந்தனர். இதனாலையோ என்னமோ ராஜபக்சக்களிடமும் – தென்னிலங்கை சமூகத்திடமும்  கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகள் – தெரிவிக்கப்பட வேண்டிய விடயங்களும்  கேட்கப்படாமலும் – தெரிவிக்கப்படாமலுமே  விடப்பட்டு விட்டன.
இது போக ராஜபக்சகளுக்கு எதிராக தென்னிலங்கை முழுமையிலும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்க அதனை ஏதோ விளையாட்டுப் போட்டி பார்ப்பது போல தமிழர் தரப்பு யார் வெற்றி பெறுவார்கள்..? என்பது போலவும் ஏதோ நடத்தி முடிக்கட்டும் நாம் வெறும் பார்வையாளர்களே என்ற கோணத்தில் கையாண்டு இருந்தது. மேலும் Karma is boomerang என்ற மனோ நிலையில் நின்று கொண்டு ராஜபக்சக்களை கர்மா தண்டிக்கிறது என பேசிக்கொண்டு இருந்தனர். மேலும் தென்னிலங்கை முழுமையுமே போராட்டத்தால் எரிந்து கொண்டிருக்க வட-கிழக்கு திருவிழா கொண்டாட்டங்களாலும் – பெட்ரோலுக்கான காத்திருப்புகளாலும்  நிறைந்து வழிந்தது.
மேலும் தமிழ் அரசியல்வாதிகள் சரி இந்த போராட்டங்களை  ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் –  காலதிகாலமாக பேசி வரும் தமிழர் பிரச்சனைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு களமாக பயன்படுத்தினரா..?  என கேட்டால் அதுவும் இல்லை. ஜூலை 9 ராஜபக்ச அரசுக்கு எதிராக நடந்து முடிந்திருந்த  இறுதிப் போராட்டத்தினை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் தமிழ் தலைமைகள் சார்பில் சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கு பற்றி இருந்தனர். தமிழர் தரப்பினுடைய பிரச்சனைகள் தொர்பில் பலமாக  அவர்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள் என எதிர்பார்த்து இருந்த போதும் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி அவர்கள் எதையுமே அங்கு கதைத்து இருக்கவில்லை. குறிப்பாக இன்னமும் அமுலில் இருக்கக்கூடிய பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டியதன் தேவை குறித்தோ, காணாமல் ஆக்கப்பட்டு ஒருபிரச்சினைக்காக ஆயிரம் நாட்களை தாண்டியும் போராடும் தமிழ் மக்களினுடைய பிரச்சனைகள் குறித்தோ , வடகிழக்கு சுவிகரிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொடர்பிலும் எந்த ஒரு விடயங்களையும் அவர்கள் பேசி இருக்க வில்லை. மாறாக ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு நாள் ஜனாதிபதி பதவியை ஏற்கும் வாய்ப்பையோ –  அதிகாரத்தையோ  கூட வழங்காதீர்கள் என மிக வினயமாக  அவர்கள் வேண்டி இருந்தனர். (இதே ரணில் விக்கிரமசிங்க வெற்றிக்காக ஓட்டு போடுங்கள் என வட-கிழக்கின் தெருக்களில் இறங்கி கூவி கூவி திரிந்ததும் இதே கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தான் என்பதையும் நினைவு படுத்திக் கொள்வோம்.) ஏனைய தமிழ்  அரசியல் தலைவர்களின் அடையாளமே இந்த போராட்ட காலங்களில் இல்லாது போய்விட்டது.
முழுமையாக தமிழ் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் –  தமிழ் மக்களும் – தமிழ் இளைஞர்களும்
இந்தப் போராட்டத்தில் இருந்து முழுமையாக  விலகியே இருந்தனர்.
பயன்படுத்த வேண்டிய – பயன்படுத்தி இருக்க வேண்டிய மிகப்பெரிய ஒரு வாய்ப்பு இன்று தமிழ் சமூகம் தவற விட்டுவிட்டது என்பதை உண்மை. ஆக குறைந்தது இந்த ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டத்தினை பயன்படுத்தி தென்னிலங்கை சமூகத்தின் கவனத்தை  தமிழர் பக்கம் திருப்புவதற்கு இம்மியளவு முயற்சி கூட மேற்கொள்ளப்படவில்லை என்பது உண்மை. இன்னும் இந்த சர்வதேசம் தமிழர்கள் விடயத்தில் தீர்வை தரும் என அதே பழைய பொய்களை தான் இந்த அரசியல்வாதிகள் தமிழ்ர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள். தமிழர்களும் அதனைத் தான் உண்மை என்றும் – சரியானது என்றும் நம்பிக் கொண்டு அதே போலி தமிழ் தேசியத்தில் திளைத்திருக்கப் போகிறார்கள் என்பதை கடந்த மூன்று மாதங்களில் இருந்த தமிழர்களின் நிலைப்பாடு தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறது.
சரி நடந்து முடிந்த விடயங்களை கைவிடுவோம். இன்னும் மீதமாக ஒரு வாய்ப்பு எஞ்சியுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ் தலைமைகளை நம்பி தமிழ் மக்கள் வழங்கிய அந்த ஓட்டுக்களையும் பயன்படுத்தக்கூடிய இறுதி சந்தர்ப்பம் ஒன்று எஞ்சியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொள்ளவுள்ள  சவால்கள்? – Maatram
இந்தப் போராட்டம் இலங்கையில் புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய வேண்டியதற்கான புதிய ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அடிப்படையில் புதிய ஜனாதிபதி தெரிவு ஜூலை 20ஆம் தேதி பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில்  பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் நீ நான் என்ன முண்டியடித்துக் கொண்டு தங்களை ஜனாதிபதி வேட்பாளர்களாக பிரகடனப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இந்த தேர்தலில் வாக்களிக்கப் போகிறவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான். தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கும் வட-கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 13 பேர் உள்ளனர். இவர்கள் தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகளாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய முக்கியமான ஒரு தருணம் ஏற்பட்டுள்ளது.  நீ நான் என்ன போட்டி போட ஆரம்பித்துள்ள தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தங்களுடைய சரியான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய அதே நேரம் இந்த பந்தயத்தில் வெற்றிபெறக்கூடிய  வேட்பாளர் ஒருவரை தமிழ் தலைமைகள் தேடி கண்டுபிடிக்க வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் மிக நீண்ட காலமாக இருந்து வரக்கூடிய பல பிரச்சனைகளும் வட- கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால்  கோரிக்கையாக முன் வைக்கப்படுதல் வேண்டும்.   குறிப்பாக தமிழர் பகுதிகளில் இன்னமும் எரிந்து கொண்டிருக்கக்கூடிய பிரச்சனைகளான ; வட-கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொடர்பான விடயங்களும், போர் முடிந்த பின்னும் இராணுவம் கைப்பற்றி வைத்திருக்கும் தமிழர்களின் நிலங்கள் தொடர்பிலும், ஆயிரக்கணக்கான நாட்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு வேண்டி போராடிக் கொண்டிருக்கும் உறவுகளுக்கான தீர்வுகள் தொடர்பிலும் , பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான தேவை தொடர்பிலும் , இயங்காது இருக்கக்கூடிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் தொடர்பிலும் அழுத்த திருத்தமாக குறித்த கோரிக்கைகள் ஊடாக வலியுறுத்தப்படுதல் வேண்டும்.
இந்த கோரிக்கைகளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்த வகையில்  ஒரு வேட்பாளரை தெரிவு செய்து குறித்த கோரிக்கைகள் தொடர்பில் வலியுறுத்தி தங்களுடைய ஆதரவை குறித்த வேட்பாளருக்கு  வழங்க  முன்வர வேண்டும்.
தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடல் - GTN
பரபரப்பான அரசியல் நிலவரம் ஒன்று இலங்கையில் தோன்றியுள்ள நிலையில் , இன்னமும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்ததாகவோ  அல்லது இது தொடர்பான ஒரு கூட்டத்தை நடத்தி ஒரு பொதுவான முடிவுக்கு வந்ததாகவும் எந்த ஒரு அசைவுகளையும் காண கிடைக்கவில்லை.
பொறுத்திருந்து பார்ப்போம் கடந்த காலங்களைப் போலவே பேரம் பேச வேண்டிய இன்னும் ஒரு அற்புதமான தருணத்தை இந்த ஒற்றுமை இல்லாத தமிழ் தேசிய தலைவர்கள் தவறவிடப்போகிறார்களா..? அல்லது பயன்படுத்தப்போகிறார்களா..? என்று..!

“தமிழ் அரசியல் தலைமைகள் தமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டிய தருணம்.”- எம்.கே.சிவாஜிலிங்கம்

இணைந்த வடக்கு கிழக்கிலே இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தற்போது அமையவுள்ள சர்வகட்சி அரசாங்கத்திடம் தமிழ் அரசியல் தலைமைகள் முன்வைக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

‘சர்வகட்சி அமையவுள்ள நிலையில், ஈழத்தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ் அரசியல் தலைமைகள் வலியுறுத்த வேண்டுமென புலம்பெயர் தமிழ் மக்கள், தாயக மக்கள் வலியுறுத்த வேண்டும்.

2012ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ரோம் ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட வேண்டும், பயங்கரவாத தடைசட்டம் நீக்கப்பட வேண்டும், இணைந்த வடக்கு கிழக்கிலே இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்த மூன்று கோரிக்கைகளையும் இடைக்கால அரசாங்கத்திடம் சமர்பித்து உடனடியாக தீர்வு காண வேண்டுமென தமிழ் அரசியல் தலைமைகள் வலியுறுத்த வேண்டும்.

இல்லையெனில் மிகப்பெரிய வரலாற்று தவறு அல்லது துரோகத்தை இழைக்கின்றோம்’ என கூறினார்.

ரணில் பதவி விலகும் வரை உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம் !

ரணில் விக்ரமசிங்க பதவி விலகும் வரை போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்படும் என மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

” கோட்டாபய ராஜபக்ச, தனது பாதுகாப்புக்காக ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார். இன்று கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் ரணில் பதில் ஜனாதிபதியாக பதவிக்கு வந்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மக்களின் ஆணையை பெற்று இந்த பதவிக்கு வரவில்லை. அவர் பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கே மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், தற்காலிகமாக கூட ரணில் அதிபர் பதவியில் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் விலகிய பின்னர் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமளிப்போம்.

ரணில் விக்ரமசிங்கவை விரட்டும் வரை நாங்கள் காலிமுகத்திடலில் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம்”, எனக் குறிப்பிட்டார்.

இதே நேரம், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக அவரை பதவி விலக கோரி இன்று அலரிமாளிகைக்கு முன்னால் ” நோ டீல் கமயில்” இளைஞர்கள் சிலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

20ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வமான ஜனாதிபதி – வெளியான அறிவிப்பு !

அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 04வது சரத்துக்கு அமைய, பாராளுமன்றம் நாளை (16ம் திகதி) சனிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்குக் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார்.

1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 04வது சரத்துக்கு அமைய ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். இதற்கமைய குறித்த சட்டத்தின் 05வது சரத்துக்கு அமைய ஜனாதிபதியின் பதவியில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம் குறித்து செயலாளர் நாயகம் நாளை (16ம் திகதி) பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார். அதேநேரம், கட்சித் தலைவர்களால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தின் ஊடாகத் தெரிவுசெய்வது இடம்பெறும் என இன்று முற்பகல் 10.00 மணிக்கு நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும், அதன் பின்னர் 20ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுவார் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் சட்ட விதிகளுக்கு அமைவாக எந்தவொரு தடையுமின்றி இந்த நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக சபாநாயகர் இங்கு தெரிவித்துள்ளார்.

“உணவு, எரிபொருள், எரிவாயு, மின்சாரம் இவற்றை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள்.” – ஜனாதிபதி ரணிலின் முதல் அறிவிப்பு !

“உணவு, எரிபொருள், எரிவாயு, மின்சாரம் வழங்குவது கடினம். எனவே, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.“ என பதில் ஜனாதிபதி  பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதியாக  பொறுப்பேற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட அறிவிப்பிலேயே ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டுக்கு தேசியக்கொடி மட்டும் போதும் ஜனாதிபதி கொடியையும் இரத்து செய்கிறேன். நாட்டையும் மக்களையும் மனதில் கொண்டே இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். முதலில் நாட்டை மீட்போம். அதன் பிறகு அரசியல் செய்வோம்.

நான் எப்போதும் ஜனநாயக ரீதியில் செயற்படுகிறேன். அரசியலமைப்பின்படி செயல்படும் நான் அதற்கு புறம்பாக ஒருபோதும் செயல்படமாட்டேன்.  நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தால் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். போராடும் உரிமை உள்ளது ஆனால் வன்முறையை அனுமதிக்க முடியாது.

போராட்டக்காரர்களுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. போராட்டக்காரர்கள் சட்டத்தின் பிரகாரம் செயற்படுபவர்கள். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான பின்னணியை இந்த சில நாட்களில் செய்து தரப்படும்.

ஆகவே அடுத்த வாரம் தெரிவாகும் புதிய ஜனாதிபதிக்கு  ’19’ ஐ விரைவில் முன்வைக்க கூடியதாக இருக்கும்.” என அவர் தெரிவித்தார்.

 

கோட்டாபாயவின் பெறுமதியை இந்த நாட்டினர் விரைவில் உணர்வார்கள் !

எதிர்காலத்தில் உங்களது மதிப்பையும் பெறுமதியையும் இந்த சமூகம் அறிந்து கொள்ளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியொருவர் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே, பதவியை இராஜினாமா செய்தது இதுவே முதன்முறை எனவும், அதற்கு நீண்டகால பொருளாதார நெருக்கடி, கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்கே காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பாதுகாப்பு செயலாளராக பாரிய சேவையாற்றிய ஜனாதிபதியின் இன்றைய இந்த தீர்மானமானது அவர் நாட்டின் மீது கொண்டுள்ள அன்பையும் நாட்டுப் பற்றையும் வெளிக்காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் உங்களது மதிப்பையும் பெறுமதியையும் இந்த சமூகம் அறியும் என்பதில் எவ்விதமான சந்தேககமும் இல்லையெனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக பொறுப்புற்றார் ரணில் . – போராட்டக்காரர்கள் திடீர் அமைதிக்கான காரணம் என்ன..?

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் , பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்த கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் இன்னும் முனைப்படைந்திருந்த நிலையில் பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. போராட்டக்காரர்கள் அதிரடியாக ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு மிகுந்த வன்முறைப்போக்குடன் கோட்டாபாயவை பதவியிறக்கினர்.

தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கவை பதவியியிலிருந்து அகற்றும் வரை போராட்டம் தொடரும் எனப்பட்டது. ஆனால் கோட்டாபாய பதவி விலகியதாக நேற்று அறிவித்ததுடன் போராட்டக்காரர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதுடன் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை என்பவற்றை இராணுவத்திடம் கையளித்திருந்தனர். இந்தநிலையில் சில கேள்விகள் குட்டகப்பட வேண்டியவை.

போராட்டக்காரரகளின் நோக்கம் என்ன என்பது இப்போது வரை புலப்படவே இல்லை. பொருளாதார காரணங்கள் தான் நோக்கம் எனின் கோட்டாபாயவை விரட்டி விட்டால் பொருளாதாரம் மீண்டு விடுமா..?

ரணில் தானே ராஜபக்ஷ அரசை பாதுகாக்க பிரதமராக பதவியேற்றார். அவருக்கு எதிராகவும் போராடப்போவதாக அறிவித்த போராட்டக்காரர்கள் இப்போது அமைதி காப்பது ஏன்..?

பொறுத்திருந்து பார்ப்போம். போராட்டக்காரர்கள் என்ன செய்ய போகிறார்கள்..? போராட்டத்தை முன்னெடுத்த இடதுசாரிய அமைப்புக்களின் மௌனத்தின் பின்னணியில் இருப்து என்ன..? நடப்பவை என்ன..?

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொலை செய்ய சஜித் பிரேமதாச முயற்சி – ரங்கே பண்டார பகீர் !

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்டதன் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செயற்பட்டுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், ரணில் விக்ரமசிங்கவை கொலை செய்வதுதான் அவர்களின் திட்டம். ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற கடந்த 9 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  வைத்தியசாலையில் இருந்தாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு எரியூட்டும் நடவடிக்கையை அவர் செயற்படுத்தி இருக்கிறார்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை சேதப்படுத்த இவர்கள் செல்லவில்லை. மாறாக ரணில் விக்ரமசிங்கவை கொலை செய்வதே அவர்களின் திட்டமாகும். என்றாலும் அந்த நேரத்தில் ரணில் விக்ரமசிங்கவும் அவரது பாரியாரும் வீட்டில் இருக்கவில்லை. அதனால் அவர்கள் வீட்டை எரியூட்டி சென்றுள்ளனர்.

அத்துடன் சஜித் பிரேமதாசவின் கோரிக்கைக்கு அமைய செயற்பட்ட இவர்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில் இருந்த தேஸ்டன் கல்லூரிக்கு அருகில் இருந்தே அனைத்து நடவடிக்கைகளையும் செயற்படுத்தி இருப்பது, காணொளிபதிவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

ரணில் விக்கிரமசிங்க வீட்டில் எரியூட்டப்பட்டதாக கூறப்பட்ட எரியாத புத்தங்கள் – ரணில் வீடு எரிக்கப்பட்டது அரசியல் நாடகமா..?

ரணில் விக்கிரமசிங்க வீட்டில் எரியூட்டப்பட்டதாக கூறப்பட்ட எரியாத புத்தங்கள் – ரணில் வீடு எரிக்கப்பட்டது அரசியல் நாடகமா..?