18

18

ஐரோப்பாவில் தொடர்ந்து பரவும் காட்டுத்தீ – மோசமடையும் மக்களின் நிலை !

பிரான்சின் தென்மேற்கு பகுதியில் காட்டுத்தீயால் அச்சுறுத்தலுக்கு உள்ளான 16,000க்கும் மேற்பட்ட மக்களை பிரான்ஸ் வெளியேற்றியுள்ளது.

பிரபலமான சுற்றுலாப் பகுதியான பிரான்ஸின் ஜிரோண்டேவில் உள்ள அதிகாரிகள், முகாம்களில் இருந்து காவலர்களை வெளியேற்றியுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் முன்னதாகவே வெளியேறினர். தற்போது, டெஸ்டெ-டி-புச் மற்றும் லாண்டிராஸ் பகுதிகளில் தீ பரவியுள்ளது.

தெற்கு ஸ்பெயினில், 3,200க்கும் மேற்பட்ட மக்கள் மிஜாஸ் மலைகளில் தீயில் இருந்து வெளியேறினர். இருப்பினும் பின்னர் சிலர் திரும்பி வர முடிந்தது.

போர்த்துகலில் தீ தற்போதைக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் போர்த்துகல் மற்றும் ஸ்பெயினில் வெப்பம் காரணமாக 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஸ்பெயினில் உள்ள மிஜாஸ் தீ, பிரபலமான சுற்றுலாப் பகுதியான மலாகாவிலிருந்து வெகு தொலைவில் இல்லை. ஸ்பெயினின் பிற இடங்களில், காஸ்டிலா ஒய் லியோன், கலீசியா மற்றும் எக்ஸ்ட்ரீமதுரா மாகாணங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது.

ஸ்பெயின், குரோஷியா மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளிலும் தீ பரவியதால், இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.

இனப்படுகொலையாளி கோட்டபாயவை சர்வதேச நீதிமன்றத்திடம் கையளியுங்கள் – சிங்கப்பூரிலும் மக்கள் போராட்டம் !

சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழனப்படுகொலையாளியுமான கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிராக மலேசியத் தமிழர்கள் அணிதிரண்டு குரல் எழுப்பியுள்ளனர்.
தலைநகர் கோலாலபம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முன் பினாங்கு மாநில் துணை முதல்வரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுப் பிரதிநிதியுமாகிய பேரா.இராமசாமி தலைமையில் அணிதிரண்ட தமிழர்கள், இனப்படுகொலையாளியினை சிங்கப்பூர் வெளியேற்றி சர்வதேச நீதிமன்றிடம் கையளிக்க வேண்டும் என்ற முழக்கத்தினை எழுப்பினர்.
மலேசியத் தமிழர் அரசியல் பிரதிநிதிகளான சதீஸ் முனியாண்டி, டேவிட் மர்செல் உட்பட பல தமிழர் அமைப்பினர் இதில் பங்கெடுத்திருந்தனர்.
சிங்கப்பூர் தூதரைச் சந்தித்து கோரிக்கை மனுவினை கையளித்து, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்டு சர்வதேச நீதிமன்றிடம் இனப்படுகொலையாளியான கோட்டாபயவை கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையிகை முன்வைத்தனர்.
சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.
போர் குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்காவின் அரசியல், இராணுவ தலைவர்களுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையார் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அவசரகால நிலை பிரகடனத்தை உடனடியாக நீக்க வேண்டும் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை பிரகடனத்தை உடனடியாக நீக்க வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்து வெளியிடும் உரிமை, பேச்சுச் சுதந்திரம், சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கான உரிமை உள்ளிட்ட வௌிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பதில் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளது.
இவை மக்களின் இறைமை எனவும் அதனை அரசாங்கமோ, முகவர்களோ மீறுவதற்கு இடமளிக்க வேண்டாமெனவும் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

150 வருடங்கள் அடிமைப்படுத்திவிட்டு இன்று ஆபத்தில் உள்ள இலங்கைக்கு பிரித்தானியா உதவாமல் உள்ளது – இராஜதந்திரி பீட்டர் ஹீப் விசனம்!

இலங்கைக்கு சர்வதேசசமூகம் உதவி வழங்கும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் தலைமை தாங்கவேண்டும் என பிரிட்டனின் ஓய்வுபெற்ற இராஜதந்திரி பீட்டர் ஹீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Thinakkural.lk

கார்டியனில் வெளியிட்டுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை நெருக்கடிக்கான பிரிட்டிஸ் அரசாங்கத்தில் பதில் நடவடிக்கை வெட்கக்கேடானது. மக்கள் பட்டினியால் அவதியுறுகின்றனர். மருந்துகள் இன்மையால் உயிரிழக்கின்றனர்.

போதியளவு பெற்றோல் இல்லாததால் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். மின்சார தட்டுப்பாடு காணப்படுகின்றது.

அவர்கள் எவ்வாறு இந்த நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதற்கு அப்பால் ( ராஜபக்சாக்களின் மோசமான ஆட்சி,30 வருட கிளர்ச்சியால் நாடு சிதைவடைந்ததன் பாரம்பரியம்) நெருக்கடி நிலையில் உள்ள இன்னொரு பொதுநலவாய நாட்டிற்கு உதவும் விடயத்திற்கு பிரிட்டன் தலைமை வகிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். (நாங்கள் அவர்களின் விருப்பமின்றி அவர்களை 150 வருடங்களிற்கு மேல் ஆட்சி செய்தோம் என்பதை கருத்தில்கொள்ளவில்லை, அதற்காக நாங்கள் ஏதாவது கைமாறு செய்யவேண்டும்)

நாங்கள் மிக வேகமாக சர்வதேச நிவாரணமுயற்சியொன்றிற்கு தலைமை தாங்கவேண்டும், பொதுநலவாயத்தின் ஊடாக அதனை செய்யலாம், என அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாகோகம போராட்டக்காரர்களால் புதிய அரசியல் கட்சி உருவாக்கம் !

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் “மக்கள் போராட்ட பிரஜைகள்” என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்களை அவர்கள் இன்று(18) தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் கையளித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன.

எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுத்தாலும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் வளர்ச்சிக்காகவும் அனைத்தையும் செய்வோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்கள் போராட்ட பிரஜைகள் கட்சியின் செயலாளராக சானக பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

போராட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய சில குழுவினர் முயற்சிப்பதாகவும், மக்களின் அபிலாஷைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பதாகவும் சானக பண்டார தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு முடிவையும் ஒற்றுமையாக எடுத்து அறிவிக்க முடியாத தமிழ்தேசியம் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் !

இலங்கையின்  புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வேட்பாளர்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எந்தவொரு விதத்திலும் ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொள்ளாததன் காரணமாக நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பில் தாம் கலந்துகொள்ளப் போவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை மக்களால் எதிர்பார்க்கப்படும் மாற்றத்தை குறித்த ஜனாதிபதி தெரிவுக்கான வேட்பாளர்களால் பூர்த்திசெய்யமுடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

….

அமையும் இடைக்கால அரசாங்கத்தில் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்து தமிழ்தேசிய கட்சிகள் அனைத்தும் இணைந்து பொதுவான – தமிழர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என பல அரசியல் விமர்சகர்களும் வலியுறுத்தி வந்தனர். அல்லது யாரையும் ஆதரிப்பது இல்லையென்றாலும் தமிழ்தேசிய கட்சிகள் இணைந்து ஒரு முடிவை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்தேசிய கட்சிகள் ஒரு போதும் இணையவே மாட்டோம் என்பதையும் – தமிழ்தேசியம் பேசும் இந்த அரசியல்வாதிகளிடம் இம்மியளவும் ஒற்றுமை இல்லை என்பதையும் கஜேந்திரர்களின் இந்த அறிவிப்பு மேலும் எடுத்துக்கூறியுள்ளது. யாழ்.மாநகர மேயராகவுள்ள வ.மணிவண்ணன் விடயத்திலும் கஜேந்திரர்கள் இதே போக்கையே கடைப்பிடித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்தேசியம் பேசும் சொற்பமான நாடாளுமன்ற அங்கத்தவர்களே நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்தும் நிலையில் இவர்களிடையே கூட ஒற்றுமை இல்லை. இவர்கள் தான் தனிநாடு வேண்டும் என கொடி பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த போலிதமிழ்தேசியவாதம் பேசும் அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும் போது தென்னிலங்கை தலைவர்கள் எவ்வளவோ மேல்.

இலங்கை வருகிறார் கோட்டாபாய – வெளியாகியுள்ள அறிவிப்பு !

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நாடு திரும்ப தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் நாட்களில் சவுதி அரேபியா செல்லவுள்ளார்.

இம்மாத இறுதி வரை அங்கு தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ , அதன் பின்னர் நாட்டுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இருப்பினும் மகனின் பாதுகாப்பிற்காக. அமெரிக்கா செல்லும் திட்டத்தையும் கைவிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி அடுத்த மாதம் நாடு திரும்பவுள்ளதாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் தெரிவித்தார்.

பிறந்த தாய்நாட்டிற்கு தனது சிறந்த பங்களிப்பை தொடர்ந்து வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் கூறியிருந்தார்.

ஜனாதிபதி தேர்தல் – அதியுச்சமாக பலப்படுத்தப்பட்டது பாராளுமன்ற பாதுகாப்பு !

பாராளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து நுழைவாயில்களும் வீதித் தடைகள் போட்டு மூடப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு தாக்கல் நாளை நடைபெறவுள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மறுதினம் (20) பாராளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பாக

ரணிலுக்கு வாக்களித்து விட்டு ஊருக்கு வராதீர்கள் – காலியில் போராட்டம் !

காலி மாவட்டம் பத்தேகம பகுதியில், இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நாளை மறுநாள் (20ஆம் திகதி) நடைப்பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டாம், மக்கள் அபிப்பிராயத்தை புறந்தள்ளி ரணிலுக்கு வாக்களித்துவிட்டு ஊருக்கு வர வேண்டாம் என காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படங்களை காட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

கோட்டா கோ கம போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டில் இருந்து 45 மில்லியன் ரூபா நிதி – விசாரணை ஆரம்பம்!

காலி முகத்திடல் போராட்டத் தளமான கோட்டா கோ ஹோமின் மூன்று முன்னணி செயற்பாட்டாளர்கள் வெளிநாடுகளில் இருந்து மூன்று உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு பெருமளவிலான நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் அறிக்கைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. எனினும் குற்றப்புலனாய்வுத்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ரட்டா, திலான் சேனாநாயக்க மற்றும் அவிஷ்க விராஜ் கோனார என அழைக்கப்படும் இரத்திது சேனாரத்ன ஆகிய மூன்று செயற்பாட்டாளர்கள் கடந்த வாரம் இலங்கை வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையில் மூன்று புதிய கணக்குகளை ஆரம்பித்துள்ளதாகவும் இந்த மூன்று கணக்குகளுக்கும் வெளிநாடுகளில் இருந்து 45 மில்லியன் ரூபா வைப்புச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பண வைப்புச் செய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு வங்கிக்கு வந்ததாகக் கூறப்படும் குறித்த மூவரும் முழுத் தொகையையும் திரும்பப் பெற்றதாகவும் பணத்தைப் பெற்றதற்கான காரணத்தை விசாரித்த வங்கி அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.