25

25

மகளின் முக ஜாடை தன்னை போல இல்லை – மகளை கொலை செய்த தந்தை !

தமிழ்நாடு, மதுரையில் 8 வயது சிறுமியை கொலை செய்து துணியில் சுற்றி வாளிக்குள் அடைத்து, சடலத்தை வீட்டு பரணில் வைத்து விட்டு தலைமறைவான தந்தையை பொலிசார் தேடி வருகின்றனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் டெயிலர் காளிமுத்து. இவரது மனைவி பிரியதர்ஷினி இவர்களுக்கு எட்டு வயதில் தன்ஷிகா என்ற மகள் இருந்தாள்.

பிரியதர்ஷினி பாத்திரக்கடை ஒன்றில் வேலைப்பார்த்து வந்த நிலையில் கடந்த 13 ஆம் திகதி காளிமுத்து தனது மகள் தன்ஷிகாவுடன் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்றார். பிரியதர்ஷினி வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்த பின்னரும் கணவரும் மகளும் வீட்டிற்கு திரும்பவில்லை. கணவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தனது கணவரையும் , மகளையும் காணவில்லை என்று பிரியதர்ஷினி ஜெய்ஹிந்த் புரம் பொலிஸில் புகார் அளித்தார். பொலிஸார் அந்த புகாரை விசாரிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் பிரியதர்ஷினியின் வீட்டில் இருந்து துர் நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்ததால் அவர் பொலிஸாரின் உதவியுடன் வீட்டில் பரண் மீது இருந்த வாளியை கீழே இறக்கி பார்த்தார்

அதில் துணியில் சுற்றப்பட்ட நிலையில் சிறுமி தன்ஷிகா அழுகிய நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பொலிஸார் பிரியதர்ஷினியிடம் விசாரித்த போது கணவர் காளிமுத்துவின் சந்தேகக் கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது.

தினமும் கடையில் இருந்து வந்ததும் பிரியதர்ஷினியின் செல்போனை வாங்கிப்பார்க்கும் காளி முத்து, இன்னைக்கு யார் ? யாரிடம் ? பேசினாய் என்று கேட்டு அடித்து துன்புறுத்துவதை வாடிக்கையாக்கி இருந்துள்ளார். தனது மகளுக்கு 8 வயதாகும் நிலையில், மகள் பிறந்ததில் இருந்தே அவளது பிறப்பில் சந்தேகம் கொண்டு தகராறு செய்து வந்த காளிமுத்து, மகளின் முக ஜாடை தன்னை போல இல்லை என்று கூறி துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் தான் மகளை உறவினர் வீட்டுக்கு அழைத்துச்செல்வதாக கூறி ஏமாற்றிவிட்டு வீட்டில் வைத்தே மகளை கொலை செய்த காளி முத்து, சடலத்தை துணியில் சுற்றி வாளியில் அடைத்து பரண் மீது மறைத்து வைத்துவிட்டு தலைமறைவாகி இருப்பது பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவான காளிமுத்துவை பிடிக்க தனிப்படை அமைத்து பொலிசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் சில தினங்களாக லேசாக துர் நாற்றம் வீசிய போது ஏதோ எலி செத்துக்கிடக்கும் என்று நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்ததாக தெரிவித்த பிரியதர்ஷினியிடமும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹிஜாப் அணிய மறுத்த ஊடகவியலாளர் – நேர்காணலை இரத்து செய்ய ஈரான் அதிபர் !

22 வயதான மஹ்சா அமினியின் மரணத்திற்குப் பிறகு ஈரானில் ஏறக்குறைய ஒரு வார போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களில் சுமார் 50க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ள நிலையில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் இன்னும் தீவிரமடைய ஆரம்பித்துள்ளன.

இந்தநிலயில் ஹிஜாப் அணிய ஊடகவியலாளர் ஒருவர் மறுத்ததால் தொலைக்காட்சி நேர்காணலை இரத்து ஈரான் அதிபர் ரத்து செய்தமை சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

மூத்த பத்திரிகையாளர் கிறிஸ்டியன் அமன்பூர் வியாழனன்று ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் நேர்காணல் ரத்து செய்யப்பட்டது என்று அவர் கூறினார், அவர் தலையில் முக்காடு அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

செய்தி தொகுப்பாளர் ஹிஜாப் அணிய மறுத்ததால் ஈரான் அதிபர் செய்த செயல்! -  தமிழ்முரசம் செய்திச் சேவை

அமெரிக்க பொது ஒளிபரப்பு நிறுவனமான பிபிஎஸ்ஸில் நிகழ்ச்சியை நடத்தும் சிஎன்என் இன் தலைமை சர்வதேச தொகுப்பாளரான அமன்பூர், ஐ.நா பொதுச் சபையின் ஓரத்தில் புதன்கிழமை நேர்காணலுக்குத் தயாராக இருப்பதாக ஒரு உதவியாளர் தனது தலைமுடியை மறைக்க வலியுறுத்தினார்.

“நான் பணிவுடன் மறுத்துவிட்டேன். நாங்கள் நியூயார்க்கில் இருக்கிறோம், அங்கு தலையில் முக்காடு தொடர்பான சட்டமோ பாரம்பரியமோ இல்லை” என்று ஈரானிய தந்தைக்கு பிரிட்டனில் பிறந்த அமன்பூர் ட்விட்டரில் எழுதினார்.

“ஈரானுக்கு வெளியே நான் அவர்களை நேர்காணல் செய்தபோது முந்தைய எந்த ஈரானிய ஜனாதிபதியும் இது தேவையில்லை என்பதை நான் சுட்டிக்காட்டினேன்,” என்று அவர் கூறினார்.

“இந்த முன்னோடியில்லாத மற்றும் எதிர்பாராத நிபந்தனைக்கு என்னால் உடன்பட முடியாது என்று நான் சொன்னேன்.”

ரைசி இருந்த ஒரு வெற்று நாற்காலியின் முன் அமர்ந்திருக்கும் — முக்காடு இல்லாமல் — அவள் ஒரு படத்தைப் பதிவிட்டாள்.

கடும்போக்கு மதகுருவான ரைசியின் உதவியாளர், “ஈரானில் உள்ள சூழ்நிலையின்” காரணத்தால் தான் முக்காடு அணிவதை வலியுறுத்துவதாக அமன்பூரிடம் கூறினார்.

22 வயதான மஹ்சா அமினியின் மரணத்திலிருந்து ஈரானில் கிட்டத்தட்ட ஒரு வாரப் போராட்டங்கள் நடந்தன, அவர் பெண்கள் எப்படி உடை அணிவார்கள் என்பதில் மதகுருக்களின் விதிகளை அமல்படுத்தும் அறநெறிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் இறந்தார்.

எதிர்ப்புக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் குறைந்தது 31 ஈரானிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், இதில் பெண்கள் தலையில் முக்காடுகளை எரிப்பதைக் காண முடிந்தது என்று ஒரு அரசு சாரா குழு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 46 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு !

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 46 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் நோயாளர்கள் பலர் தமக்கான மருந்துகளை வெளியிடங்களில் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் சுமார் ஒன்றரை லட்சம் மக்களுக்கும் அதே போல முல்லைதீவு மாவட்டத்தின் ஒரு பகுதி மக்களுக்குமான சிகிச்சை வழங்கும் ஒரு பிரதான வைத்தியசாலையாகக் காணப்படும் மாவட்ட பொது வைத்தியசாலையில் பல்வேறு மருந்துகளுக்குமான தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, சிறுவர்களுக்கான பாணி மருந்துகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான குறிப்பிட்ட சில மருந்துகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.

இதன் காரணமாக சிகிச்சைக்குச் செல்லும் நோயாளர்கள் சிலருக்கு வைத்தியசாலையில் இல்லாத மருந்துகளை வெளியிடத்தில் பெற்றுக் கொள்ளுமாறு சிட்டைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக மாதாந்த கிளினிக் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான மருந்துகள் இல்லாத நிலையிலும் அவற்றை வெளியிடங்களில் பெற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கான சிட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக சுமார் 100 கிலோ மீற்றருக்கு அப்பால் தூரத்திலிருந்து சென்று சிகிச்சை பெற்று வரும் இவ் வைத்தியசாலையில் மேற்படி மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதனால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற மருந்து தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் கொடையாளர்களின் உதவியுடன் சில மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வெளிநாட்டு வேலைகளில் ஈடுபடும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் !

வெளிநாட்டு வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

18 தொடக்கம் 59 வயதுக்குட்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ‘மனுசம்’ எனும் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

மனுசவி ஓய்வூதியத் திட்டத்தில் பிரவேசிப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபடுவது கட்டாயம் என்றும் அமைச்சர் கூறினார்.

யாழ்.கோப்பாயில் ஹெரோயினைப் பெறுவதற்காக சிறுமி செய்த செயல் !

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உயிர்கொல்லிப் போதைப் பொருளான ஹெரோய்னுக்கு அடிமையான 17 வயதுச் சிறுமியொருவர் மறுவாழ்வு நிலையத்துக்கு நேற்று அனுப்பப்பட்டார்.

அவர் 8 மாதங்கள் கர்ப்பமாகவுள்ளார் என்றும் மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் ஹெரோயினைப் பெறுவதற்காக பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டதாலேயே கர்ப்பம் தரித்தார் என்று மறுவாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிக்கின்றார்

சிறுமியின் தாயார் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அந்தச் சிறுமி அடையாளம் காணப்பட்டு, மறு வாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

யாழ். நகர் பகுதியில் மது மற்றும் போதைப்பொருளுடன் நான்கு பாடசாலை மாணவர்கள் கைது !

யாழ். நகர் பகுதியில் மது மற்றும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை  நான்கு மாணவர்களை கடுமையாக எச்சரித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஒப்படைத்துள்ளார்.

பிறவுண் வீதியில் உள்ள ஆலயத்திற்கு அருகில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , புலனாய்வு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தனர்.

அங்கு இருந்த நான்கு மாணவர்களில் ஒரு மாணவன் “மாவா” போதைப்பாக்குடனும் ஏனைய மூன்று மாணவர்கள் மதுபானத்துடனும் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களையும் , யாழ்ப்பாண மூத்த பொலிஸ் அத்தியட்சகர் முன் முற்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்த வேளை ,  யாழில் உள்ள பிரபல பாடசாலையில் க.பொ. த உயர்தரத்தில் கற்கும் மாணவர்கள் தனியார் கல்வி நிலையத்திற்கு மேலதிக வகுப்புக்காக வந்து , நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது மது அருந்தியதாக தெரிவித்துள்ளனர்.

அதனை அடுத்து மாணவர்களை கடுமையாக எச்சரித்த மூத்த பொலிஸ் அத்தியட்சகர், மாணவர்களின் பெற்றோரை அழைத்து , மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தாது விடுவிப்பதாகவும் , பிள்ளைகளை கண்காணித்து அவர்களை ஒழுக்கமான பிள்ளைகளாக வளருங்கள் என எச்சரித்து மாணவர்களை அனுப்பி வைத்துள்ளார்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க கொழும்பு பகுதிகளில் சூரிய சக்தி படகுச்சேவை !

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்குடன் பயணிகள் படகு சேவை நேற்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சூரிய சக்தி படகு சேவை!

பத்தரமுல்லை – ஹீனெடிகும்புர முதல் வெள்ளவத்தை வரை சூரிய சக்தியில் இயக்கப்படுவது இங்கு சிறப்பு அம்சம்மாகும்.

மேலும் சூரிய சக்தி மூலம் செயல்படுவதால் எரிபொருள் செலவு ஏற்படாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாளாந்தம் அலுவலக நேரங்களில் இந்த படகு சேவை இயங்கும் என்பதுடன் படகொன்றில் எட்டு பேர் வரை பயணிக்க முடியும்.

அத்துடன் நாட்டின் உள்ளக கால்வாய்கள் ஊடாக மேலும் பல்வேறு படகு சேவைகளை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடதக்கது

குழந்தைகளுக்கான போசாக்கு உணவை வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம் !

கிளிநொச்சி புண்ணை நீராவி பகுதியில் தமது குழந்தைகளுக்கான போசாக்கு உணவை வழங்குமாறு கோரி பெற்றோர்கள் (25) இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் புன்னை நீராவி பகுதியில் இயங்கி வரும் திருச்சபை ஒன்றின் ஊடாக குறித்த பிரதேசத்தில் உள்ள 334 சிறுவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கப்பட்டு வருவதுடன் மாலை நேர கற்றல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் குறித்த திருச்சபையில் இடம் பெற்ற நிர்வாக சிக்கல்காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மாலை நேர கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதுடன் சிறுவர்களுக்கான போசாக்கு உணவு வழங்குகின்ற செயற்பாடும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துமாறு கோரி கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த திருச்சபை ஊடாக 334 சிறுவர்கள் மாலை நேர கல்வி செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதுடன் இதில் 81 சிறுவர்கள் போசாக்கு குறைவானவர்களாக   இருப்பதாகவும் அவர்களுக்கான குறித்த போசாக்கு வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாகவும் தற்போது அவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சோசலிச இளைஞர் அமைப்பு போராட்டத்தில் 83 பேர் கைது – உடனடி அறிக்கையை கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு !

சோசலிச இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தின் போது 83 பேர் கைது செய்யப்பட்டமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடி அறிக்கையொன்றை கோரியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை நாளை(26) காலை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையை பரிசோதிப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் நேற்றிரவு(24) வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பில் இடம்பெற்று வருகின்றன.

அரசியலே தெரியாத ஒரு குழந்தை கோட்டாபாய – தனசிறி அமரதுங்க

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியலில் குழந்தை என தெஹிவளை கல்கிஸை முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் தோல்விக்கு அரசியல் எதுவும் தெரியாத குழந்தைகளைக் கொண்டு வருவதே முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு தொடர்பில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திறமையான இராணுவ அதிகாரியாக இருந்தாலும் அவருக்கு அரசியல் தெரியாது என மேலும் தெரிவித்தார்.