13

13

“மனநிலை பாதிக்கப்பட்டுள்ள விமல் வீரவங்ச முதலில் பாடசாலை செல்ல வேண்டும்.” – சிவஞானம் சிறிதரன்

“விமல் வீரவங்ச மனநிலை பாதிக்கப்பட்டவர். அவர் முதலில் பாடசாலை செல்ல வேண்டும்.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்கள் என்ன செய்தாலும் அதற்கு எதிரான கருத்துக்களையே பேச வேண்டும் என்று நினைக்கின்ற மனநிலை பாதிக்கப்பட்டவராகவே விமல் வீரவன்ச சிங்களதேசத்தில் பார்க்கப்படுகிறார். இவரை சிங்கள மக்கள் சிறந்த தலைவராக கணிக்கவில்லை. சிங்கள மக்கள் ஒரு நல்ல தலைவராக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவரிடம் இல்லை. இனவாதத்திற்கு எதிராக சிங்கள மக்கள் தற்பொழுது எழும்பி இருக்கிறார்கள்.

தியாகி திலீபன் அவர்கள் இந்த மண்ணிலே உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை மக்களுக்காக தியாகம் செய்தவர். இதே விமல் வீரவன்ச அவர்கள் இருந்த ஜே.வி.பி கட்சியும் போராடி இலங்கையிலே கிளர்ச்சி செய்து இலங்கையில் இருக்கும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக போராடி இறந்திருக்கிறார்கள். அவர்களை நினைவு கூறுவதற்கு இந்த நாட்டில் ஒரு நியாயம் இருக்கின்றது என்றால் இந்த மண்ணிலே தமது இழந்து போன இறைமையை மீட்பதற்காக போராடிய ஒரு இளைஞர் பரம்பரையின் நினைவு நாளை நினைவு கூற ஏன் எமக்கு தடை விதிக்கப்படுகிறது.

தியாகி திலீபன் அவர்களை நினைவு கூறுவதற்குரிய அனைத்து உரித்துக்களும் சர்வதேச விதிமுறைகளுக்கும் ஐநாவுடைய தீர்ப்பாயத்தினுடைய சட்ட விதிமுறைகளுக்குமையவும் தமிழர்களுக்கு உரித்து உண்டு. ஒரு தனியான மொழி பேசுகின்ற வரலாற்று அடையாளங்களை கொண்ட தன்னுடைய தேசத்திலே வாழ்கின்ற ஒரு இன குழுமம் தனக்காக இறந்து போனவர்களை நினைவு கொள்கின்ற தனக்காக வாழ்ந்தவர்களை நினைக்கின்ற அனைத்து உரிமைகளும் உலக பட்டையத்தின் அடிப்படையிலயே உண்டு.

விமல் வீரவன்ச முதலில் பாடசாலை செல்ல வேண்டும் பாடசாலை சென்றால் தான் இந்த அறிவுகள் தெரியும். விமல் வீரவன்ச போன்றவர்களுக்கு பாடசாலை அனுப்பி புனர்வாழ்வு பெற்று வந்தால்தான் உலகம் என்ன நாடு என்ன வரலாறு என்ன என்பது புரியும், விமல் வீரவன்ச போன்றவர்களின் கூச்சலுக்காக நாங்கள் பயப்பிடவேண்டியதில்லை.

எமது பணிகள் எந்தவொரு அச்சமும் இல்லாமல் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்திருந்தார்.

பாடசாலை செல்வதாகக் கூறி திருடிய பணத்துடன் மசாஜ் நிலையங்களுக்கு செல்லும் மாணவர்கள் !

கடந்த மூன்று மாதங்களில் மாணவர்கள் பாடசாலை நேரங்களில் மசாஜ் நிலையங்களின் சேவைகளை பெற்றுக்கொண்டு அங்கு சேவைகளை வழங்கச் செல்வது தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி வீடுகளில் உள்ள பணத்தைத் திருடி இவ்வாறான இடங்களுக்குச் செல்லும் சிறுவர்கள் பலர் அதற்கு அடிமையாகி வருவதாகவும் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அழைத்து வரும் தாய்மார்களும், தந்தைகளும் மசாஜ் நிலையங்களுக்குச் செல்லும் போக்கும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குடும்ப உறவுகளில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக மசாஜ் நிலையங்கள் நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இந்த வர்த்தகங்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

“இளைஞர்களின் சிந்தனைகளை திசைதிருப்பும் நோக்குடன் வடக்கில் போதைப்பொருள் விற்பனை.”- எம்.கே.சிவாஜிலிங்கம்

“போதை பொருள் பயன்பாட்டை தடுத்து நிறுத்த துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசாங்கமும்  நீதித்துறை கூடிய கவனம் எடுத்து இதை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை  துரிதபடுத்தவேண்டும்.” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்

வடக்கு அதிகரித்து வருகின்ற போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக கேட்டபோது அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

வடக்கில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.இது இளைஞர்களை இலக்கு வைத்து அவர்கள் எண்ணங்கள் சிந்தனைகளை திசைதிருப்புவதற்காக இந்த வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுகிறது. அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகளால் இவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது இதனை நாங்கள் உறுதியாகவே தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் காலத்திலேயே குறிப்பாக வன்னி கட்டுபாட்டில் இருந்த போது யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் புழக்கத்தில் இருந்துள்ளது. பாதை பூட்டப்பட்டிருந்த போது கப்பல் வழியாகவும்  கொண்டு வந்து புழக்கத்தில் விட்டிருந்தார்கள் . தற்போதைய சூழலில் கஞ்சா போதை பொருள் புழக்கத்தில் அதிகமாக இருந்தது. தற்போது  அதற்கு அதிகமாக ஹரோயின் அதிகமாக புழக்கத்துக்கு வரத்தொடங்கியுள்ளது.

இலங்கையின் பல பாகத்திலும் போதை பயன்பாடு உள்ள நிலையில் நிலையில் வடக்கில் அதிகமான விநியோகங்களும் அதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் இழவயதினரிடையே  அதிகரித்து செல்கின்றது.

இளைஞர் யுவதிகளை திசை திருப்புவதற்காகவே இந்த செயற்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு. எங்கள் செல்வங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இவர்களுக்கு என்று பொறுப்பை தட்டிக்கழிக்காது அனைவருமே ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும்.

அரசியல்வாதிகள், மதங்கள், பொது அமைப்புகள், கிராமிய  அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என அனைத்துதூறை  சார்ந்தவர்களும் இதனை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் விழிப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் அச்சுவேலியில் சிறுவர் சீர்திருத்தப் பாடசாலை உள்ளது. அதற்கருகாமையிலும் காணிகளும் காணப்படுகின்றது. அங்கு மறுவாழ்வு நிலையம் ஒன்றினை அமைத்து இதில் பாதிக்கப்பட்டவர்களை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

தென்பகுதிக்கு பாதிக்கப்பட்டவர்களை கொண்டு செல்வதை தவிர்த்து அந்தந்த மாவட்டங்களிலேயே மறுவாழ்வு இல்லங்கள் அமைத்து அதற்கான சிகிச்சை முறைகளை பின்பற்றுவதே சிறந்த தீர்வாகும். அவர்கள் தென்பகுதிக்கு கொண்டு சென்றால் அவர்கள்  மேலும் அதில் விற்பனையளர்களாக வரக்குடிய நிலைதான் ஏற்படக்கூடியதாக இருக்கும்.

போதை பொருள் பயன்பாட்டை தடுத்து நிறுத்த துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசாங்கமும்  நீதித்துறை கூடிய கவனம் எடுத்து இதை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை  துரிதபடுதவேண்டும் என்றார்.

சீனாவில் மீண்டும் ஒரு நாடு, ஒரு தலைவர் முறை !

சீனாவில் ஆட்சியில் உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. இதில், ஒரு நாடு, ஒரு தலைவர் என்ற பழைய முறைக்கு மீண்டும் மாறும் முறை அமலாக உள்ளது.

நம் அண்டை நாடான சீனாவின் அதிபராக, 2012ல் பதவியேற்றார் ஷீ ஜிங்பிங். சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறையே உள்ளது. அதாவது சீன கம்யூனிஸ்ட் கட்சியே ஆட்சி புரிந்து வருகிறது. அதிபர் பதவியில் இருப்பவர், இரண்டு முறை ஐந்தாண்டுகள் பதவியைத் தொடர முடியும் என்ற நடைமுறை உள்ளது. அதாவது, 10 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். இதன்படி, ஜிங்பிங் சீன அதிபர் பதவியில், 10 ஆண்டுகளை விரைவில் நிறைவு செய்ய உள்ளார்.

இந்நிலையில், அவர் அதிபர் பதவியை ஏற்றதும், கட்சியின் தலைவர், ராணுவத்தின் தலைமைப் பொறுப்பு ஆகியவற்றையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார். சீனாவில் அசைக்க முடியாத தலைவராக ஜிங்பிங் மாறியுள்ளார். தன் வாழ்நாள் முழுதும் அதிபர் பதவியில் இருக்கும் வகையில், கட்சியில் சட்டம் திருத்தம் செய்வதற்கான முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மா சேதுங் தான், 1976ல் அவர் இறக்கும் வரை அதிபராகவும், கட்சித் தலைவராகவும் மிக நீண்ட காலம் இருந்தார். அதன் பிறகு அதிபராக பொறுப்பேற்ற டெங்க் ஜியோபிங் ஆட்சியின்போது தான், 10 ஆண்டுகள் மட்டுமே பதவி என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. தற்போது மீண்டும் மா சேதுங் காலத்துக்கு சீனா செல்ல உள்ளது. கட்சியின் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மாநாடு, வரும், 16ம் திகதி நடக்க உள்ளது.

இதில் கட்சியின் நிர்வாகிகள் சேர்த்து, வாழ்நாள் முழுதும் ஜிங்பிங் அதிபராக தொடரும் முடிவை எடுக்க உள்ளனர். இதற்கேற்ப, கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், தன் ஆதரவாளர்களை மட்டுமே ஜிங்பிங் நிறுத்தினார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட, 2,296 பேர் இணைந்து, ஜிங்பிங் அதிபராக தொடரும் தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளனர்.

பாகிஸ்தானில் ஒவ்வொருநாளும் 12 பெண்கள் பலாத்காரம் – நான்கு ஆண்டுகளில் 21,900 பெண்கள் பாலியல் பலாத்காரம் !

பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துளள்து. கௌவுரவக் கொலைகள் அதிக அளவில் நடைபெறும் பாகிஸ்தானில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமைகளை சர்வே எடுத்துக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

சாமா தொலைக்காட்சியின் புலனாய்வு பிரிவு நடத்திய கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்திடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்தாலும், தண்டனை விகிதம் 0.2 சதவிகிதம் என மோசமாகவே உள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நாட்டில் 21,900 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, புதிதாக சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, நாடு முழுவதும் தினமும் சுமார் 12 பெண்கள் அல்லது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுள்ளதை இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது.

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கவுரவ கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தின. பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த 4 ஆண்டுகளில் 1,957 கௌரவக் கொலைகள் பதிவாகியிருப்பதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தாமரை கோபுரத்திற்கான கட்டுமான செலவு எவ்வளவு – RTI கோரிக்கையால் வெளிவந்த தகவல் !

கொழும்பு தாமரை கோபுரத்திற்காக 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி
இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) தெரிவித்துள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) பகிர்ந்து கொண்ட தகவலைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய திட்டத்தின் செலவு விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை (RTI ) கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இந்த தகவலை அளித்துள்ளது.

TRCSL வெளியிட்டுள்ள தகவலின்படி, தாமரை கோபுரத்தின் மொத்த செலவு 2021 டிசம்பர் 31 வரையிலான காலத்தை உள்ளடக்கியது.

இதன்மூலம், 113,600,000 அமெரிக்க டொலர்கள் கட்டுமான செலவுகளுக்காக செலவிடப்பட்டுள்ளது,
அதில் ஆலோசனைக் கட்டணமாக 337,485,020 அமெரிக்க டொலர்கள் மற்றும் 222,369,357 அமெரிக்க டொலர்கள் கடன் உறுதி மற்றும் நிர்வாகக் கட்டணமாக கணக்கிடப்பட்டுள்ளது.

மேலதிக செலவுகளுக்காக மொத்தம் ரூ. 344,215,750 செலவிடப்பட்டுள்ளது, இதில் நீர் மற்றும் மின்சாரம் வழங்குவதற்கான செலவுகள் அடங்குகின்றன.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) நிலத்திற்கான கட்டணமாக ரூபா 2,250,000,000 மற்றும் காப்பீட்டுக் கட்டணமாக 8,665,612 அமெரிக்க டொலர்களும் செலுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 31, 2021 இன் படி கொழும்பு தாமரை கோபுரத்தின் மொத்த செலவின விவரங்கள் அடங்கிய TRCSL ஆவணம் https://www.rtiwatch.lk/requests/?drawer1=TRCSL*LOTUSTOWER என வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின்அனைத்து பல்கலைகழகங்களிலும் மனித உரிமை மையங்கள் !

பகிடிவதை மற்றும் பிற வன்முறைகள் தொடர்பான சம்பவங்களைக் கையாள்வதற்காக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மனித உரிமை மையங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதை மற்றும் பிற வன்முறைகள் தொடர்பாக எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து அதன் உறுப்பினர்களிடம் ஆலோசனை பெறுவதற்காக அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்திருந்தார்.

பல்கலைக்கழகங்களில் உள்ள இந்த மனித உரிமை நிலையங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘தற்போதுள்ள சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதே மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரை. ஆனால் நடந்தது என்னவென்றால், பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பாக புதியவர்கள் தாங்கள் துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைக்க பயப்படுகிறார்கள். புகார் அளித்த பின்னர் அவர்கள் மீண்டும் வளாகத்திற்கு வர பயப்படுகிறார்கள். அத்தகைய மாண்வர்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், தங்கள் புகார்களை தெரிவிக்க முன்வருமாறும் கேட்டுக்கொள்கிறோம். இலங்கையில் உள்ள வேறொரு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு அல்லது அரசாங்க புலமைப்பரிசில்கள் மூலம் கல்வியைத் தொடர வெளிநாடுகளுக்கு அனுப்பும் வாய்ப்பை வழங்குவதன் மூலம் அந்த மாணவர்களுக்கு எந்தவிதமான சலசலப்புமின்றி கல்வியைத் தொடர உதவுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம், ”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரகலயவில் ஈடுபட்டவர்களை இலக்குவைத்து உருவாக்கப்படவில்லை – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச

“புனர்வாழ்வு பணியக சட்டமூலம் தொடர்பில் கரிசனை உள்ள எவரும்  இது குறித்து கலந்துரையாட முன்வரலாம்.” என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

இந்த சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரகலயவில் ஈடுபட்டவர்களை இலக்குவைத்து அவர்களை தண்டிப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது என சிலர் கருத்துவெளியிட்டுள்ளனர். எனினும் அவ்வாறான நோக்கம் எதுவுமில்லை. புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை அரகலயவில் ஈடுபட்டவர்களை இலக்குவைத்து உருவாக்கவில்லை.

யுத்தத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் நபர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துவதற்கான  கட்டமைப்பு எதுவும் இருக்கவில்லை. இதன் காரணமாக நபர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயல்கின்றது.

புனர்வாழ்வு செயற்பாடுகள் நடைமுறையில் உள்ளன பல புனர்வாழ்வு நிலையங்கள் உள்ளன. முக்கியமான புனர்வாழ்வு பணியகம் கந்தக்காட்டில் உள்ளது.

நீதிமன்றம் தனது கருத்தினை வழங்கியதும் அது சபாநாயகரிடம் கையளிக்கப்படும். அதனை நாடாளுமன்றத்திற்கு தெரிவிப்பார், குறிப்பிட்ட சட்டமூலம் குறித்து அச்சம் உள்ளதால் பலர் அது குறித்த தங்கள் கரிசனைகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த சட்டமூலம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு முன்னர் கலந்தாலோசனைகளை மேற்கொள்ள நான் திட்டமிட்டுள்ளேன். நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம் கரிசனை உள்ள எவரும்  இது குறித்து கலந்துரையாட முன்வரலாம் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்

வெடுக்குநாறி மலை தொடர்பான வழக்கு – ஆலயம் நிர்வாகம் விடுதலை!

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து ஆலயத்தின் நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை ஆயர்படுத்துமாறு வவுனியா நீதவான் பொலிஸார் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும்,நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்ததுடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் வவுனியா நீதிமன்றில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) குறித்த வழக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆலயத்தின் பூசகர் தம்பிராசா மதிமுகராசா,
மற்றும் நிர்வாகத்தினர்களான தமிழ்செல்வன், சசி ஆகியோர் வழக்கிலிருந்து தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை ஆதராங்களுடன் கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த வழக்கு தொடர்பாகநெடுங்கேணி பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு ஆலயத்தின் நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதவானால் உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

ஆபாச காணொளிகளை காண்பித்து 7வயது மகளை வன்புணர்வு செய்த தந்தை – யாழ்ப்பாணத்தில் கொடூரம் !

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான தந்தை பொலிஸாரால் இன்று (13) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மதுபோதைக்கு அடிமையானவர் என்று தெரிவிக்கப்படுகின்றது

5 நாள்களுக்கு முன்னர் அவர் தனது 7 வயது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளாரென பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைவாக பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் 30 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆபாச காணொளிகளை வற்புறுத்தி காண்பித்தே அவர் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரை நாளை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜராக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.