14

14

இலங்கை இன்னும் 25 வருடங்களில் அபிவிருத்தி அடைந்த நாடாகும் – ஜனாதிபதி ரணில்

இலங்கை சுதந்திரமடைந்து 100 வருடங்களை பூர்த்தி செய்யும் போது அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே இலக்கு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி.

“2023ஆம் ஆண்டு இந்த வரவு செலவுத் திட்டத்துடன் போட்டி நிறைந்த நவீன பொருளாதாரத்திற்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளோம். இந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் 2048ஆம் ஆண்டு சுதந்திரத்தின் 100வது ஆண்டாக இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கான பின்னணியை தயார் செய்வோம்.”

காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்த வேலைத்திட்டம் !

பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலங்கைக்குமிடையேயுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்ட, இலங்கையில் உள்ள துறைமுகங்களில் மிக முக்கியமான துறைமுகமான காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இடையே. இந்த திட்டம் EXIM வங்கியின் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது, மேலும் இந்த திட்டேத்தினை செயல்படுத்தும் முகவர் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகும்.

இதற்காக இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் திறைசேரிக்கும் இடையில் கடனுதவி ஒப்பந்தம் 2018 ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டதுடன் டொலர் கடன் வரி ஒப்பந்தம் 2018 ஜனவரி 10 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இந்தியாவிலிருந்து நேரடியாக பொருட்கள் போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்துவது இதன் மற்றுமொரு நோக்கமாகும், மேலும் இது உள்நாட்டு துறைமுகங்களுக்கிடையில் போருட்கள் போக்குவரத்து நடவடிக்கைகளை திறம்பட செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள திட்ட முகாமைத்துவ ஆலோசனை ஒப்பந்தத்தின் படி, இத்திட்டத்திற்கான மொத்த திட்ட காலம் 39 மாதங்கள் ஆகும். அவற்றில், திட்டமிடல் காலம் ஒன்பது மாதங்கள், கட்டுமான காலம் 18 மாதங்கள், மற்றும் குறைபாடு உத்தரவாத காலம் 12 மாதங்கள். ஆகும்.

தற்போதுள்ள பிரேக்வாட்டரின் மறுசீரமைப்பு (1,400 மீ), தற்போதுள்ள பியர் எண். 1 (அளவு 96 மீ x 24 மீ) மறுசீரமைப்பு, பியர் எண். 2 (தற்போதுள்ள கம்பம் எண். 1 நீட்டிப்பு, அளவு 85 மீ x 24 மீ); மேலும் கடைசியாக, இந்த துறைமுகத்தின் முக்கிய அபிவிருத்திப் பணியானது பிரேக்வாட்டரில் கான்கிரீட் சாலை போன்ற உள்கட்டமைப்பை நிறைவு செய்தல் போன்ற 5 முக்கிய நடவடிக்கைளை ஆகும்.

மேலும், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அணமித்த 50 ஏக்கர் காணியை சுவீகரிக்க இலங்கை துறைமுக அதிகார சபைக்கு (SLPA) முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்காக 15 ஏக்கர் பொது காணி மற்றும் 35 ஏக்கர் தனியார் காணயை சுவீகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தனியாருக்குச் சொந்தமான நிலம், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட இழப்பீடு செலுத்தி கையகப்படுத்தப்படும் என்பதையும் குறிப்பிடத்தக்கது.

“தனியார் துறை ஊழியர்களுக்கு காப்புறுதித் திட்டம்.” – வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

தனியார் துறை ஊழியர்களுக்கு காப்புறுதித் திட்டத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே இந்த யோசனையை முன்வைத்தார்.

தனியார் துறையில் பணிபுரியும் போது பல்வேறு காரணங்களால் வேலையிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் இது மிகவும் சிக்கலான சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அங்கு, ஒரு காப்புறுதிக் கொள்கையை வழங்குவதற்கும், வேலை இழக்கும் வரையிலான காலத்துக்கு காப்புறுதி நிதியை நிறுவுவதற்கும் முன்மொழியப்பட்டதுடன் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்கு வரையறுக்கப்பட்ட மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படலாம்.

மேலும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அக்ரஹார மருத்துவக் காப்புறுதித் திட்டத்தின் மூலம் ஏராளமானோர் நிவாரணம் பெறுவார்கள் என்றும், தனியார் துறை ஊழியர்களுக்கும் இதுபோன்ற மருத்துவக் காப்புறுதி வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, உத்தேச சுகாதார மற்றும் காப்புறுதித் திட்டங்களுக்காக ஊழியர் நம்பிக்கை நிதியத்திலிருந்து சில தொகைகளை ஒதுக்குவது பொருத்தமானது எனத் தெரிவித்தார்.

இதன்படி, ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் கீழ் இந்த இரண்டு புதிய முறைகளையும் உள்ளடக்கும் வகையில் ஊழியர் நம்பிக்கை நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் 40கிலோ கஞ்சா மீட்பு !

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்றைய தினம் 40 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து படகு ஒன்றில் குருநகர் கடற்கரை பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்பட்ட நிலையில், கடற்படையினரின் சோதனை நடவடிக்கையின் மூலம் கஞ்சா மீட்கப்பட்டது.

கஞ்சாவை கடத்தி வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனையும், மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

தனுஷ்க குணதிலக்க தொடர்பான வழக்குக்கு செலவழிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் நிதி ஒதுக்கீடு இல்லையா..?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தொடர்பான வழக்குக்கு செலவழிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் நிதி ஒதுக்கீடு இல்லை என அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதிச் செயலாளர் கிருஷாந்த கபுவத்த தெரிவித்துள்ளார்.

தனுஷ்க குணதிலக்கவை காப்பாற்ற முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதற்கான தீர்வுகளை அவரிடமிருந்து பின்னர் செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“வெறுப்பை வளர்க்காதீர்கள். முன்மாதிரியாக நடந்து கொள்ளுங்கள்.” – அக்தார், சமி ஆகிஆயாருக்கு அப்ரிடி அறிவுரை !

பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்தர் வெளியிட்ட டுவீட்டை சமி கிண்டல் செய்து இருந்தார். கராச்சி, மெல்போர்ன் மைதானத்தில் நேற்று உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து 137 ஓட்டங்களே அடித்தது. பின்னர், 138 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் தோல்வியடைந்ததும், அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இதயம் உடைந்தது போன்ற எமோஜி படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அதற்கு ரி-டுவீட் செய்திருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ”மன்னிக்கவும் சகோதரரே, இது தான் கர்மா” எனப் பதில் அளித்திருந்தார்.

Read all Latest Updates on and about முகமது சமி

அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்த இருந்த அக்தர், பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும் தகுதி இந்தியாவுக்கு இல்லை என்று கூறி இருந்தார். பாகிஸ்தான் இறுதி போட்டியில் வீழ்ந்ததால் அதனை கிண்டல் செய்யும் வகையில் முகமது ஷமி ஒரே வார்த்தையால் நீங்கள் செய்தது உங்களுக்கே வந்துவிட்டது என்ற பொருள்படும் வகையில் கூறி உள்ளார்.

இந்த நிலையில் சமியின் இந்த பதில் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி,

இந்நாள் மட்டும் முன்னாள் வீரர்கள் இதுபோன்ற கருத்துக்களால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை வளர்க்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ” நாம் கிரிக்கெட் வீரர்கள். இந்த விளையாட்டின் முன்மாதிரிகளாகவும், தூதர்களாகவும் இருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அனைத்து வெறுப்பையும் முடிவுக்குக் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும். மாறாக வெறுப்பை வளர்க்கும் செயல்களை நாம் செய்யக்கூடாது. இதுபோன்ற செயல்களை நாமே செய்ய ஆரம்பித்தால், சாமானிய மக்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும். விளையாட்டின் மூலம் தான் இந்தியா- பாகிஸ்தான் உறவுகள் மேம்படும். பாகிஸ்தான் அணி அவர்களுடன் விளையாடுவதை காண விரும்புகிறோம். அதே போல் இந்திய அணியும் பாகிஸ்தானில் விளையாடுவதைப் பார்க்க வேண்டும்” என்றார்.

“ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தை தமிழ்க் கட்சிகள் தவறவிடக்கூடாது.” – மஹிந்த ராஜபக்ஷ அறிவுரை !

தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறவிடக்கூடாது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதோடு, வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் உரையாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அன்றும் சரி, இன்றும் சரி தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தாம் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார கட்டணம் செலுத்தாத அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமை அலுவலகம் !

நீண்ட காலம் மின் கட்டணம் செலுத்தப்படாமையால் யாழ். ஸ்ரீதர் திரையரங்கில் இயங்கி வரும் ஈ.பி.டிபி கட்சியின் தலைமை அலுவலகம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது.

இது தொடர்பில் தகவல் வெளியிட்ட பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவர் குறித்த கட்டிடத்துக்கு பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டண நிலுவை நீண்டகாலமாக செலுத்தப்படாமையால் தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஒரு வருடத்திற்குள் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 1,800 முறைப்பாடுகள் !

இந்த வருடத்தில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 1,800 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த வருடம் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு 1,861 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், 620 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இதற்கு மேலதிகமாக சொத்துக்கள் தொடர்பான ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் 64 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்த ஆணைக்குழு, கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் சுமார் 50 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் நிறுவன மட்டத்தில் 72 அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதுடன் மேலும் 328 முறைப்பாடுகள் மேலதிக விசாரணைகளுக்காக ஏனைய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் இருந்து இலஞ்ச சட்டத்துடன் தொடர்பில்லாத 719 முறைப்பாடுகளின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கழுத்தை நசுக்கி பிடித்து தள்ளிய பொலிஸ் உயர் அதிகாரி!