23

23

FIFA 2022 – நான்கு முறை சாம்பியனான ஜேர்மனிக்கு அதிர்ச்சி வைத்தியமளித்த ஜப்பான் !

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் E பிரிவில் உள்ள ஜெர்மனி, ஜப்பான் அணிகள் விளையாடின.

நான்கு முறை உலகக் கோப்பையை கைப்பற்றி வலுவான அணியாக வலம் வரும் ஜெர்மனி அணி, இன்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது. 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இந்த கோலை இல்கே குண்டோகன் பதிவு செய்தார்.

 

முதல் பாதி ஆட்டத்தில் பெரும்பாலான நேரத்தில் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜெர்மனி வீரர்கள், இரண்டாவது பாதியிலும் ஜப்பானை முன்னேற விடாமல் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டம் ஜெர்மனிக்கே சாதகமாக இருந்தது. ஆனால் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது போட்டி ஜப்பானுக்கு சாதகமாக திரும்பியது. 75வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ரிட்சு டோன் கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். அதன்பின் 83வது நிமிடத்தில் டகுமா அசோனோ கோல் அடிக்க ஜப்பான் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி ஆனது. எனினும், சமன் செய்யும் முயற்சியில் ஜெர்மனி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினர். கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் ஜப்பான் அணி 2-1 என வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

https://www.maalaimalar.com/football/japan-stun-4-time-champions-germany-2-1-in-group-e-540427

வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய இலங்கையர்களுக்கு இரண்டு நிபந்தனைகள் !

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி. அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த அனுமதியைப் பெறுவதற்கு இரண்டு தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவை இல்லாவிடின் திருமணத்துக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருமணத்துக்கு விண்ணப்பிக்கும் நபர், எந்தவொரு சட்ட அதிகாரியிடமிருந்தும் பிடியாணை பிறப்பிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றும் தொற்று நோயால் பாதிக்கப்படாதவராக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 மாதங்களில் 1,703 இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்தின் சம்மதத்துடன் வெளிநாட்டவர்களை திருமணம் செய்துள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளை திருமணம் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையில் கைகலப்பு – நான்கு மாணவர்களுக்கு தடை !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் மாணவர்களிடையே இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் நான்கு மாணவர்களுக்கு பல்கலைகழகத்திற்குள் நுழைய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கிழக்கு, கலாசாலை வீதியில் கடந்த திங்கட்கிழமை மாலை யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட சிரேஷ்ட மாணவர்களுக்கும், புது முக மாணவர்களுக்கும் இடையில் கைகலப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

சம்பவத்தின் போது சிரேஷ்ட மாணவர்களால் புதுமுக மாணவர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பல்கலைக்கழக நடைமுறைகளுக்கு அமைவாக விசாரணை இடம்பெற்றது.

விசாரணையின் படி சம்பந்தப்பட்ட மூன்று சிரேஷ்ட மாணவர்களுக்கும், ஒரு புது முக மாணவனுக்கும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அடையாளம் காணப்பட்ட நான்கு மாணவர்களையும் மறுஅறிவித்தல் வரை பல்கலைக்கழகத்தின் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் முறைகேடாக நடந்துகொண்ட சமிக கருணாரட்ன – ஓராண்டு விளையாட தடை !

சமிக கருணாரத்னவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஓராண்டு போட்டித் தடையொன்றை விதித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது போட்டி ஒப்பந்த விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான குற்றத்தை சாமிக்க கருணாரத்ன ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, போட்டித் தடைக்கு மேலதிகமாக, சாமிக்க கருணாரத்னவுக்கு 5,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, சாமிக்க கருணாரத்னவின் பெயர் இலங்கை கிரிக்கெட் குழாமில் இடம்பெறாமை குறித்து கிரிக்கெட் தேர்வுக் குழு அதிகாரிகளிடம் அறிக்கை ஒன்றை கோருமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

முன்னதாக இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் சமூகவலைத்தளங்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள் என பலரும் இலங்கை கிரிக்கெட் சபை மீது விமர்சனங்களை முன்வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

“அரசாங்கத்தை மாற்ற முனைந்தால் இராணுவத்தை பயன்படுத்த வேண்டி வரும்.” – ஜனாதிபதி ரணில் எச்சரிக்கை!

தொடரும் பொருளாதார நெருக்கடி – இந்தியாவை நோக்கி அகதிகளாக செல்லும் இலங்கை தமிழர்கள்!

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று (23) காலை தனுஷ்கோடி அடுத்த முகுந்தராயர் சத்திரம் பகுதியை சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதனால் கடந்த மார்ச் முதல் இலங்கையில் இருந்து 198 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றடைந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை வவுனியா மாவட்டம் கணேசபுரத்தை சேர்ந்த உதயசூரியன் அவரது மனைவி பரிமளம் மற்றும் அவரது நான்கு குழந்தைகள் மற்றும் வவுனியா மாவட்டம் புவரசம் குளம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் இலங்கை மன்னாரில் இருந்து நேற்று (22) இரவு படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரம் பகுதியில் இன்று (23) காலை சென்றடைந்தனர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளை வைத்துக் கொண்டு இலங்கையில் வாழ வழி இல்லாததால் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து சென்ற அகதிகள் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு – அனைத்து கட்சிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு !

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பாக வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு பின்னர் கலந்துரையாட வருமாறு, பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று ஆரம்பமான 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது சபையில் உரையாற்றிய ஜனாதிபதி, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஒன்றிணைந்து செயற்பட விரும்புகிறீர்களா என பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், வரவு செலவுத் திட்ட அமர்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் கூட்டத்தை கூட்டுமாறு பதிலளித்துள்ளார்.

இதற்கு அமைய, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கு பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்று கூடுமாறு ஜனாதிபதி ரணில் அழைப்பு விடுத்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 8 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறும்.

“ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறவினராலோ அல்லது காதலனாலோ கொல்லப்படுகின்றனர்.” – ஐக்கிய நாடுகள் சபை

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் 25 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

“ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறவினராலோ அல்லது தனது காதலனாலோ கொல்லப்படுகின்றனர்.” என ஐ.நா தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆற்றிய உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை என்பது உலகளவில் மிகவும் பரவலாக நிகழும் மனித உரிமை மீறலாகும். ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறவினராலோ அல்லது தனது காதலனாலோ கொல்லப்படுகின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து பொருளாதாரக் கொந்தளிப்பு வரை தவிர்க்க முடியாமல் இன்னும் அதிகமான உடலாலும் மற்றும் மனதாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். உலக நாடுகளின் அரசுகள், பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க தேசிய அளவில் செயல் திட்டத்தை வகுத்து, நடைமுறைப் படுத்த வேண்டும். பெண்களின் உரிமைகளுக்கு ஆதரவாக நின்று குரல் எழுப்புங்கள் என தெரிவித்தார்.

FIFA 2022 – அர்ஜென்டினாவை வீழ்த்தியதற்காக சவுதி அரேபியாவில் ஒருநாள் விடுமுறை !

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தி அசத்தியது.

முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் சவுதி அரேபியா வீரர்களின் அசத்தலான ஆட்டத்தால் அந்த அணி 2-1 என வெற்றி பெற்றது. சவுதி அரேபிய அணியின் வெற்றியை ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும் கொண்டாடி வருகின்றன.

 

இந்நிலையில், சவுதி அரேபியா வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

” நாம் ரணில் விக்கிரமசிங்கவை முன்பு நம்பினோம். இப்போது சந்தேகப்படுகிறோம்.” எம்.ஏ.சுமந்திரன்

நீண்ட காலமாக நாட்டில் நிலவும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதெரிவித்துள்ளமையை சந்தேக கண்ணோட்டத்திலேயே  பார்ப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூடியது. இதன்போது வரவு செலவுத் திட்டம் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொண்டோம். பல்வேறு குறைபாடுகளை கண்டறிந்தோம். நாட்டின் நலனுக்கு முரணான விடயங்களை கண்டுள்ளோம். பாதுகாப்பு துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகையான அடிப்படை சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வருடங்களில் பாதுகாப்புக்கான நிதி 12 வீதத்தால் அதிகரித்துள்ளன. இது அவசியமான விடயம் அல்ல.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை விடுவிக்கும் சாதகமான விடயங்களை மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் நாங்கள் வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கின்றோம்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் அண்மைக் காலமாக தொடர்ச்சியாக ஒரு விடயத்தை குறிப்பிடுகின்றார். நீண்ட காலமாக நாட்டில் நிலவும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்துள்ளார். அதனை நாங்கள் சந்தேக கண்ணோடே பார்க்கின்றோம். அவரை ஒருகட்டத்தில் நம்பினோம். இந்த பிரச்சினையில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டாலும் அதனை செய்யவில்லை என்றார்.