28

28

அமெரிக்காவில் வேகமெடுக்கும் பறவை காய்ச்சல் – ஒன்பது மாதத்துக்குள் 5 கோடியே 5 லட்சத்து 40 பறவைகள் பலி !

அமெரிக்காவின் வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நடப்பு ஆண்டில் அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் பறவை காய்ச்சலுக்கு, முதன்முறையாக 5 கோடியே 5 லட்சத்து 40 பறவைகள் உயிரிழந்து உள்ளன. அவற்றில் பண்ணை மற்றும் பண்ணை அல்லாத பறவைகளும் அடங்கும்.

கோழிகள், வான்கோழிகள் மற்றும் பிற பறவைகளின் உயிரிழப்பு, இந்த நாள் வரையில் அமெரிக்காவில் மிக மோசம் வாய்ந்த விலங்கு சுகாதார பேரிடராக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு, 2015-ம் ஆண்டில் பறவை காய்ச்சலுக்கு 5 கோடியே 5 லட்சம் பறவைகள் உயிரிழந்து இருந்தது அதிக அளவாக இருந்தது. அதனை இந்த பாதிப்பு எண்ணிக்கை முறியடித்து உள்ளது.

இதன்படி, பறவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்ட பின்பு அவை உயிரிழக்கின்றன. முட்டையிடும் கோழி பண்ணைகளில் ஒரு கோழிக்கு பாதிப்பு உறுதியானால் அதில் உள்ள 10 லட்சம் கோழிகளும் அழிக்கப்படும். இதுபோன்ற அழிவுகளால், கோழி முட்டைகள் மற்றும் கோழிகளின் விலை அதிகரித்தது.அமெரிக்காவில் பறவை காய்ச்சல் கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. பின்னர் 46 மாகாணங்களில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது. வான்கோழி பண்ணைகள் 70 சதவீதத்திற்கும் கூடுதலான அளவுக்கு காய்ச்சல் பாதிப்புகளை எதிர்கொண்டன என அந்த அறிவிக்கை தெரிவிக்கின்றது.

டைம்ஸ் சஞ்சிகையின் 2022ஆம் ஆண்டின் சிறந்த 100 புகைப்படங்களுள் கோட்டாபாயவின் அலுவலகமும் உள்ளடக்கம் !

இவ்வருடம் ஜூலை 15ஆம் திகதி அத்துமீறி நுழைந்து  ஆர்ப்பாட்டக்காரர்களால்   சேதமாக்கப்பட்ட அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள அலுவலகத்தை 2022ஆம் ஆண்டின் சிறந்த 100 புகைப்படங்களில் ஒன்றாக டைம்ஸ் சஞ்சிகை  குறிப்பிட்டுள்ளதுடன்,  அதன் புகைப்படத்தையும்  வெளியிட்டுள்ளது.

100 புகைப்படங்களை டைம்ஸ் இதழின் 8 புகைப்பட ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த ஆண்டு பல்வேறு நிகழ்வுகள் நிறைந்த ஆண்டாக உள்ளதனைக்  காட்டவே இந்த 100 புகைப்படங்களை தேர்ந்தெடுத்ததன் நோக்கம் என டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வேகமாக வளரும் முகநூல் களியாட்டம் – போதைப்பொருளுடன் 08 சந்தேகநபர்கள் கைது !

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் களியாட்டம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு போதைப்பொருள்கள் மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த 08 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (27) அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்ட வெலிகம, ரணல, திஸ்ஸமஹாராமய, கனங்கே, தெலிஜ்ஜவில, வன்சாவல மற்றும் பெலியத்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி சந்தேகப்பட்டதால் தனது ஆணுறுப்பைக் கூரிய ஆயுதத்தால் அறுத்துக்கொண்ட கணவன் !

மனைவி தன்மீது வீண்பழி சுமத்தினார் என்பதற்காக அவரது கணவன் தனது ஆணுறுப்பைக் கூரிய ஆயுதத்தால் அறுத்துக்கொண்ட சம்பவம் ஒன்று பொல்பித்திகமவில் இடம்பெற்றுள்ளது.

பொல்பித்திகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குறித்த நபர், சனிக்கிழமை (நவ.26) மாலை வெளியே சென்று மீண்டும் வீட்டுக்குத் திரும்பியபோது அவரது மனைவி வழிதவறிய நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி கணவர் மீது குற்றம் சுமத்தியபோது அவர் வீண் பழி சுமத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.

பின்னர் அவர் தனது ஆணுறுப்பை வெட்டியுள்ளார். இந்தநிலையில், வெட்டுக்காயங்களுடன் பொல்பிதிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

“இலங்கைக்கு உதவியதால் பலர் எங்களிடம் உதவி கேட்கிறார்கள்.”- பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா

இலங்கைக்கு பங்களாதேஸ் உதவி வழங்கிய பின்னர் பல நாடுகள் தங்களிடம் உதவி கோரியுள்ளன என பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஸ் இலங்கையுடன் நாணயபரிவர்த்தனையில் ஈடுபட்ட பின்னர் பல நாடுகள் எங்களை தொடர்புகொண்டு அவ்வாறான உதவியை நாடின என அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வெளிநாட்டு கையிருப்பிலிருந்து நாங்கள் இலங்கைக்கு உதவினோம் அதன் பின்னர் பல நாடுகள் என்னை தொடர்புகொண்டன என அவர் தெரிவித்துள்ளார்.

பல அரசாங்கங்கள் என்னை தொடர்புகொண்டுள்ளன நான் யதார்த்தத்தை அவர்களிற்கு தெரியப்படுத்தியுள்ளேன் நாங்கள் வேறு உதவிகளை அடிப்படையாகவைத்தே வரவு செலவு திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இந்த தருணத்தில் நாங்கள் உதவி வழங்கும் நிலையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் பல நாடுகள் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொள்கின்றன நாங்கள் உடனடியாக சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

“தமது பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன.” – விமல் வீரவன்ச

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன என்று ‘உத்தர லங்கா சபாகயவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்று நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

“இலங்கை பொருளாதார ரீதியில் பலமிழந்துள்ளது. இதனை வைத்து பலம்பொருந்திய நாடுகள் இலங்கையின் கழுத்தை இறுக்கி பிடிக்க முற்படுகின்றன. தமது உபாயத்துக்குள் இலங்கையை கொண்டுவருவதற்கு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருகின்றன. தமது நாட்டு ரூபாவை இலங்கையில் செயற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது. அவ்வாறு நடந்தால் இலங்கை இந்தியாவின் மாநிலமாக மாறக்கூடிய சூழ்நிலைமை தானாகவே உருவாகிவிடும்.

மறுபுறத்தில் நாட்டில் போராட்டங்களை தூண்டிவிட்டு, அராஜக நிலைமையொன்றை உருவாக்குவதற்கு மேற்குலக நாடுகள் திட்டம் தீட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகம் ஆர்வம் !

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் எரிசக்தி துறையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீடுகளுக்கு அபரிமிதமான சாத்தியங்கள் இருப்பதாக,ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் காலித் நாசர் அல்அமெரி தெரிவித்துள்ளார்.

இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தனவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் தொழில் துறைகள் போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இப்போது வாய்ப்புகள் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்காகவும், தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து விரைவாக மீள உதவுவதற்காகவும் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் உதவிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர் தெரிவித்தார்.

கடலட்டை பண்ணைகளை அமைத்து எமது வாழ்வாதாரத்தை அழிக்கிறார்கள் – அராலி மீனவர்கள்

அராலி பகுதி கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு அங்கிருக்கும் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் கடற்றொழிலினையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கையை நடாத்தி வருகின்றோம். பொருளாதார நெருக்கடியால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்,

எமது கடலில் அட்டைப் பண்ணை அமைப்பது என்பது “பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதிப்பது” போலாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கே வருகை தந்த சிலர் எமது கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள். மேலும் இவ்வாறு அட்டைப் பண்ணை அமைக்கும் முயற்சியினை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு இவ்வாறான செயற்பாட்டிற்கு இடமளிக்கவும் மாட்டோம்.

இதேவேளை எரிபொருள் பிரச்சினை எமக்கு பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான அட்டைப் பண்ணைகள் எமக்கு புதிய ஒரு தலையிடியாக மாறியுள்ளது.

எனவே மீனவர்களது நிலையை கருத்தில் கொண்டு மிக விரைவில் இதற்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என்றும்  மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக வங்கியின் உணவுப்பணவீக்க சுட்டி – மோசமான நிலையில் இலங்கை !

உலக வங்கியின் மிக சமீபத்திய அறிக்கையின்படி, உணவு விலை பணவீக்கத்தில் இலங்கை இப்போது உலகில் ஆறாவது இடத்தில் உள்ளது. உலக வங்கியின் ஆய்வின்படி, இலங்கையின் உணவுப் பணவீக்கம் 86% ஆக உள்ளது.

அதேசமயம் ஜிம்பாப்வே உலகின் மிகப்பெரிய உணவுப் பணவீக்கத்தைக் கொண்டுள்ளது. அங்கு உணவுப் பணவீக்கம் 321%.

லெபனான், வெனிசுலா, துருக்கி மற்றும் ஆர்ஜென்டினா ஆகியவை முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.
இந்த கருத்துக் கணிப்பின்படி, ஈரான், ருவாண்டா போன்ற நாடுகளிலும் உணவுப் பொருட்களின் விலை இலங்கையை விட குறைவாகவே உள்ளது.

மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்க வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன – மனநோய் சிறப்பு மருத்துவர் டொக்டர் ரூமி ரூபன்

ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டினால் மனநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக மனநோய் சிறப்பு மருத்துவர் டொக்டர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களையும் இளைஞர் சமூகத்தையும் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையாக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே மனநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ரூமி ரூபன் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இன்றைய சமூகத்தில் மனநோய்க்கும் ஐஸ் என்ற போதைபொருள் தெளிவான தொடர்பு இருக்கிறது. கேட்டால் ஐஸ் எடுத்தவர் என்கிறார்கள். இறுதியில் இவர்களுக்கு ஐஸ் போதைபொருளுளால் பல்வேறு மனநோய்களுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. பாடசாலை மாணவர்களை குறிப்பாக இளம் தலைமுறையினரை இந்த ஐஸ் போதைபொருள் அழிக்கும் வகையில் காணப்படுகின்றது. இது இன்று இலங்கையில் இது ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்´´ என்று கூறினார்.

பாடசாலை மாணவர்கள் மீது பெற்றோரின் கவனக்குறைவு சிறுவர்களை போதைப்பொருள் பாவனைக்கு தூண்டுவதற்கு உதவியுள்ளதாக மனநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ரூமி ரூபன் மேலும் தெரிவித்துள்ளார்.