10

10

பிரிட்டனில் தரைமட்டமான கட்டிடம் – ஒருவர் பலி – பத்துப்பேர் மாயம் !

பிரிட்டனின் ஜெர்சி தீவின் தலைநகரான செயின்ட் ஹீலியரில் இன்று மூன்று தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென குண்டுவெடித்தது போன்று பலத்த சத்தம் எழுந்தது. சத்தம் வந்த சில வினாடிகளில் கட்டிடம் இடிந்து விழுந்தது.

இதில் கட்டிடம் முழுமையாக சிதைந்து தரைமட்டமானது. அதில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொணடனர். அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடமும் சேதமடைந்தது. விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டன.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவாக்ளுக்கு ஜெர்சி முதல்வர் கிறிஸ்டினா மூர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் குண்டுவெடிப்பால் இடம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.

சிறுவன் மீது முத்தமிட்டு பாலியல் பலாத்காரம் – ஆசிரியைக்கு 10 இலட்சம் ரூபா சரீர பிணை !

15 வயதான மாணவனை முத்தமிட்டு பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு ஹொரணை நீதிமன்ற நீதவான் சந்தன கலன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சாட்சிகளுக்கு அழுத்தம் வழங்கக் கூடாது என்றும் நீதவான் உத்தரவிட்டார். ஹொரணை கல்வி வலய அலுவலகத்துடன் இணைந்த பாடசாலை ஒன்றில் 10ம் தர ஆசிரியையான 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

LGBTQ சமூகத்தினர் பொலிசாரை கையாள்வதிலுள்ள சவால்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

LGBTQ சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

பொலிஸாரைக் கையாள்வதில் சமூகம் எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்ப்பது தொடர்பிலேயே இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

அங்கு திருநங்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்திய இலங்கை பொலிஸார் அதனை ஒருங்கிணைத்து கையாள்வதற்காக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரை நியமித்துள்ளனர்.

மாண்டஸ் புயலை அடுத்து வங்க கடலில் உருவாக உள்ள புயல் ‘மொக்கா’ !

வங்கக் கடலில் தற்போது உருவாகி  தாக்கத்தை ஏற்படுத்தி வரும் புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தின் பரிந்துரைப்படி இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாண்டஸ் புயலை அடுத்து வங்க கடலிலோ, அரபிக் கடலிலோ உருவாக உள்ள புயலுக்கு ‘மொக்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏமன் நாட்டின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமான மொக்கவை குறிக்கும் விதத்தில் அடுத்து உருவாகும் புயலுக்கு இந்த பெயர் சூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் புயல் உருவாகும் நிலையில் இவ்வாறு உருவாகும் புயல்களுக்கு இந்த பகுதியில் அமைந்துள்ள இந்தியா, பாகிஸ்தான் கத்தார், இலங்கை, ஏமன், தாய்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட 13 நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் இருந்து முடிவு செய்யப்படும் ஒரு பெயர் வைக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த ‘மாண்டஸ்’ என்ற பெயர், வங்கக் கடலில் உருவாகி தற்போது மாமல்ல புரத்துக்கு அருகே கரையை கடந்து கொண்டிருக்கும் புயலுக்கு வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக நாட்டு மொழியில மாண்டஸ் என்பதற்கு ‘புதையல் பெட்டி’ என்று அர்த்தம் கூறப்படுகின்றது. மாண்டாஸ் புயலின் தாக்கம் குறைந்த பிறகு ,வங்கக் கடலிலோ, அரபிக் கடலிலோ உருவாகும் புயலுக்கு ‘மொக்கா’ என்று பெயரிடப்பட உள்ளது.

குறித்த பெயர் ஏமன் நாட்டில் பெயர் பெற்ற” துறைமுகமான மொக்காவை குறிக்கும் வகையில் இந்த பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்து, அதனை மற்ற நாடுகள் ஏற்று கொண்டுள்ளதை அடுத்து, மாண்டஸை அடுத்து உருவாக உள்ள புயலுக்கு இந்த பெயர் சூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமானமற்ற வகையில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதற்காக இலங்கை இராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா தடை !

இலங்கையை சேர்ந்த இராணுவ அதிகாரிக்கு எதிராக தடைகளை விதித்துள்ளதாக  அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரசாந் புலவத்தை என்ற இராணுவ அதிகாரிக்கு எதிராக தடைகளை விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

திரிபோலி பிளாட்டுன் என்ற இலங்கை இராணுவத்தின் இரகசிய  படைப்பிரிவின் தளபதிக்கு எதிராகவே அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

2008 மே மாதம் பத்திரிகையாளர் கீத் நொயர் சித்திரவதை செய்யப்பட்ட மனிதாபிமான முறையில் நடத்தப்பட்ட கௌரவக்குறைவான முறையில் நடத்தப்பட்ட தண்டிக்கப்பட்ட மனித உரிமை மீறலிற்காக இவருக்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்றும் ஊழலுக்கு எதிரான தினத்தன்றும் சர்வதேச அளவில் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறுவதை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நிதிதடைகள் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்றும் ஊழலுக்கு எதிரான தினத்தன்றும் சர்வதேச அளவில் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறுவதை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நிதிதடைகள் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரே வருடத்தில் இலங்கையை விட்டு வெளியேறியுள்ள 3 லட்சம் மக்கள் !

நாளாந்தம் சுமார் 850 பேர் தமது பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் இரண்டு இலட்சத்து தொண்ணூறாயிரத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக அதன் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்புப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

இலங்கையின் முக்கியமான நகரங்களில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு!

இன்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய வளியின் தரக் குறியீட்டின்படி, நேற்றை விட சில பகுதிகளில் மாசு அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 191
பதுளை 169
கேகாலை 155
களுத்துறை 146
கண்டி 126
இரத்தினபுரி 114
குருநாகல் 106
காலி 97

என பதிவாகியுள்ளது.

இதே நேரம் காற்றுடன் கூடிய காலநிலையுடன் இந்தியாவிலிருந்து வெளியேறும் தூசி துகள்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு ஆஜராகுமாறு மகிந்தவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் !

மே மாதம் 9 ஆம் திகதி காலி முக்திடலில் ‘கோட்டா கோகம’ போராட்டத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 9) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக கூறி 5 ஆர்வலர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்கு நீதிமன்றம் திகதி நிர்ணயித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்டோரை எதிர்வரும் ஜூன் மாதம் 22ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.