26

26

1,000 போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது !

18 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனைக்கோட்டை, ஆறுகால்மடம் மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த 24, 25 வயதுடைய இருவரே இன்று கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

தென்கொரிய பகுதிகளுக்குள் ஊடுருவும் வட கொரியாவின் ஆளில்லா விமானங்கள்!

தமது வான்பரப்பிற்குள் பல ஆளில்லா விமானங்களை வடகொரியா பறக்கவிட்டதாக தென் கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜியோங்கி மாகாணத்தைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் தென் கொரிய வான்வெளியை ஆளில்லா விமானங்கள் ஊடுருவியதாக தெரிவித்தனர்.

ஐந்தாண்டுகளில் முதல் முறையாக வான்வெளிக்குள் ஊடுருவிய ஆளில்லா விமானங்கள் மீது எதிர்த்தாக்குதல் நடத்தியதாகவும் தென் கொரியா அறிவித்துள்ளது.

இந்த ஆளில்லா விமானங்கள் தென்கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் அவை உளவு பார்க்கவும் தாக்குதல் நடத்தவும் பயன்படுத்தப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தென் கொரிய போர் விமானங்களில் ஒன்றான கே.ஏ.-1 இலகுரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தென்கொரிய இராணுவம் கூறியுள்ளது.

இறுதியாக வட கொரியாவின் ஆளில்லா விமானம் ஜூன் 2017 இல் எல்லையைத் தாண்டியபோது இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் – நீதிச்சேவை ஆணைக்குழு

ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலை புனர்வாழ்வுக்கு அனுப்ப வேண்டாம் என அனைத்து நீதிவான்களுக்கும் நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்தகைய போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை முடிந்தவரை சிறைச்சாலை புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்குப் பதிலாக, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பணியகம், அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு மையங்கள் அல்லது சமூக திருத்த நிலையங்களுக்கு அனுப்புமாறு நீதிச் சேவை ஆணைக்குழு நீதிவான்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதேவேளை, போதைக்கு அடிமையானவர்கள் சிறைச்சாலைகளுக்கு அதிகளவில் அனுப்பப்படுவதனால் சிறைச்சாலைகளின் உள்ளகக் கட்டுப்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலைகளில் ஒழுக்கத்தை பேணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நீதி அமைச்சுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

குடும்ப உறுப்பினர்களுடன் நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது உறவினர்கள் கட்டுநாயக்காவில் இருந்து டுபாய் நோக்கி சென்ற அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“வெளிநாட்டில் இருந்து கடன்களை பெற்று அதன் மூலம் உண்பதற்கு இலங்கையர்கள் வெட்கப்பட வேண்டும்.” – கர்தினால் மெல்கம் ரஞ்சித்

“வெளிநாட்டில் இருந்து கடன்களை பெற்று அதன் மூலம் உண்பதற்கு இலங்கையர்கள் வெட்கப்பட வேண்டும்.” என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை பொறுப்பேற்கும் தலைவர்களும் அவ்வாறே செயற்படுகின்றனர் என குற்றம் சாட்டிய அவர், இது எமது நாட்டில் பரவியுள்ள ஒருவகை நோய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இன்றைய சூழலில் பொய்களுக்குப் பின்னால் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற ஆராதனைல் உரையாற்றும் போதே பேராயர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்று, அதன் மூலம் உணவு உண்பதற்கு நாம் பழகியுள்ளமை வெட்கப்பட வேண்டிய முன்னுதாரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் சொத்துக்களுக்கும் அதிகாரத்துக்கும் அடிமையாகாமல் அவற்றிலிருந்து மீள வேண்டும் என்பதையே அனைத்து மதங்களும் போதிப்பதாகவும் பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அமெரிக்காவிற்கு எதிராக முரண்பட முடியாது.” – அமைச்சர் அலி சப்ரி

இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ள நிலையில் அமெரிக்காவிற்கு எதிராக முரண்பட முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு மே மாதம் ஊடகவியலாளர் கீத் நொயார் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தில் மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மேஜர் பிரபாத் புலத்வத்தவிற்கு எதிராக தடைகளை அறிவித்துள்ளது.

மேலும், உலகெங்கிலும் உள்ள ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் வகையில் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அதிகாரிகள் கடந்த வாரம் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து கரிசனை வெளியிட்ட போதும் தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக எதனையும் தெரிவிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

” இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தை இலங்கைக்குள்ளேயே நடைபெறவேண்டும்.” – எரிக் சொல்ஹெய்ம்

இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என ஜனாதிபதியின் சர்தேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு நோர்வே மாத்திரமல்லாமல் வேறு எந்தவொரு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தமும் தற்போது தேவை இல்லை என எரிக் ஹொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு உள்ளக ரீதியில் தீர்வு காண்பதற்கான சூழ்நிலைகள் தற்போது உருவாகியுள்ளதாகவும் அதன்படி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பல்லின அடையாளங்களை கொண்ட நாடு என்பதால் அனைத்து இனங்களின் அபிலாஷைகளும் பூர்த்தி செய்யப்படும் வகையில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் வரி தொடர்ந்தும் குறைவாகவே உள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர்

இலங்கையின் வரி முறைமை கடந்த வாரத்தில் அதிகரிக்கப்பட்ட போதிலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் வரி தொடர்ந்தும் குறைவாகவே உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

அமைச்சில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார். லாவோஸ், மியன்மார் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் பொருளாதார பின்னடைவை கொண்டுள்ள போதிலும் குறித்த நாடுகளில் வரி விகிதாசாரம் இலங்கையை விட அதிகமாகவே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கை பொருளாதார பின்னடைவைக் கொண்டுள்ள 34 இலட்சம் குடும்பங்களை பராமரிக்கும் நிலையில் அரசாங்கம் உள்ளது. இதுதவிர, பல்கலைகழகம் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இலவச கல்வி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக கணிசமான நிதியை வருடாந்தம் ஒதுக்கிட்டுள்ளது.

இந்த நிலையில் எமது நாட்டில் வரி தொடர்ந்தும் குறைவாகவே உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய குறிப்பிட்டுள்ளார்.

வளர்ப்பு நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஜனாதியின் முன்னாள் ஆலோசகர் – விசாரணை செய்ய கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு !

ஜனாதிபதியின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான முன்னாள் ஆலோசகர், பேராசிரியர் ஆஷு மாரசிங்க விலங்கொன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் காணொளி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் முன்னேற்றத்தை அறியத்தருமாறு கோரி பீப்பள்ஸ் டுமோரோ அமைப்பு நேற்று(25) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்தது.

பீப்பள்ஸ் டுமோரோ அமைப்பின் தலைவர், சட்டத்தரணி அமில எகொடமஹவத்த, சமூக செயற்பாட்டாளர் லெசில் டி சில்வா உள்ளிட்டவர்களும் பொலிஸ் தலைமையத்திற்கு சென்றிருந்தனர்.

ஆஷு மாரசிங்கவினுடையது என கூறப்படுகின்ற காணொளியின் உள்ளடக்கத்திற்கு அமைய அவர் பாரிய குற்றம் இழைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பீப்பள்ஸ் டுமோரோ அமைப்பு தமது கடித்தில் சில விடயங்களை பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளது.

யாரின் வழிகாட்டுதலுக்கு அமைய குற்றவாளிக்கு எதிராக இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? பேராசிரியர் ஆஷு மாரசிங்க தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள உடனடி நடவடிக்கைகள் என்ன? எதிர்காலத்தில் இத்தகைய துன்புறுத்தல்கள் இடம்பெறாதிருப்பதற்கு எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு இலங்கை மிருக நல மற்றும் மிருக உரிமைகள் செயற்பாட்டாளர்களின் ஒன்றியம் பொலிஸ் மா அதிபரிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மிருக நல மற்றும் மிருக உரிமைகள் செயற்பாட்டாளர்களின் ஒன்றியம் இலங்கையின் விலங்குகள் நலனுக்காக செயற்படுகின்ற முக்கிய அமைப்பாகும்.

விசாரணைகளை துரிதப்படுத்தி நீதியை பெற்றுக் கொடுக்குமாறு அந்த அமைப்பு கோரியுள்ளது.

விசாரணைகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதை தடுக்குமாறும் குறித்த காணொளி உண்மையானது என்றால் ஆஷு மாரசிங்கவை கைது செய்து தண்டனை வழங்குமாறும் இலங்கை மிருக நல மற்றும் மிருக உரிமைகள் செயற்பாட்டாளர்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இந்த செயற்பாடு சட்டத்தை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் குறித்த நபர் மூலம் சிறுவர்கள், விலங்குகள் மற்றும் சமூகத்திற்கு அச்சுறுத்தல் எனவும் அந்த அமைப்பு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரனை மிரட்டிய யாழ் பல்கலை சிற்றின்பப் பேராசிரியர் எஸ் சந்திரசேகரத்தின் ரவுடித்தனம் ஓடியோவில் பதிவு!

டிசம்பர் 24 நத்தார் தினத்துக்கு முதல்நாள் பேராசிரியர் செல்வரத்தினம் சந்திரசேகரம் காலைக்கதிர் ஆசிரியரை மிகக் கீழ்த்தரமான முறையில் பேசிய ஒளிப்பதிவு தேசம்நெற் இணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தன்னைப் பற்றிய செய்தி வெளிவந்துள்ளதாக காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரனை வினவிய பேராசிரியர் சந்திரசேகரனைக் குறுக்கிட்ட வித்தியாதரன் உங்கள் பெயர் அச்செய்தியில் குறிப்பிடப்படவில்லையே என விளக்கி இருந்தார். மேலும் உங்களுக்கு அச்செய்தியில் தவறு இருப்பதாகத் தெரிந்தால் மின் அஞ்சல் மூலமாக அதனைத் தெரியப்படுத்துங்கள் அதற்கு பதிலளிக்கப்படும் என பல தடவை கேட்டுக்கொண்டார். ஆரம்பத்தில் நிதானமாக உரையாடிய பேராசிரியர் எஸ் சந்திரசேகரன் சிறிது நேரத்திற்குள் ஒரு தெருப்பொறுக்கியின் நிலைக்கு கீழிறங்கி தகாத முறையில் சண்டையிடவும் மிரட்டவும் ஆரம்பித்தார்.

அவ்வளவு சூடான நிலையிலும் வித்தியாதரன் நிதானமாக வார்த்தைகளை விடாமல் ஒரு ஆசிரியராக பண்பாக நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்ட போதும் பேராசிரியர் எஸ் சந்திரசேகரம் அதட்டியும் மிரட்டியும் மிருகத்தனமாக நடந்துகொண்டதாக வித்தியாதரனினதும் சந்திரசேகரத்தினதும் நண்பர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். பேராசிரியர் சந்திரசேகரம் பொருளியல்துறையின் தலைவரும் கூட. இவர்களே இவ்வாறு நடந்துகொண்டால் இவர்கள் வழிகாட்டும் மாணவர்களின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பிய அந்நண்பர் இவர்களிடம் கற்று வடக்கு கிழக்கிலும் அதற்கு அப்பாலும் பணியாற்றுபவர்கள் மக்களுடன் எவ்வாறு நடந்துகொள்வார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதுபற்றி தேசம்நெற்க்கு தெரியவருவதாவது, டிசம்பர் 24 காலைக்கதிர் பத்திரிகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரை சீனாவுக்கு கற்கை நெறிகளுக்கு அனுப்புவது பற்றிய செய்தி வெளிவந்திருந்தது. இந்த ஏற்பாட்டை சினாவில் கற்ற பொருளியல் பேராசிரியர் பீடாதிபதி மேற்கொண்டதாக அச்செய்தி குறிப்பிட்டு இருந்தது. அச்செய்தித் தகவல் பேராசிரியர் சந்திரசேகரம் பற்றியதாக இருந்தாலும் அச்செய்தியில் வித்தியாதரனின் அரசியல் குதர்க்கம் இருந்தது. சந்திரசேகரத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதில் சிற்றின்பப் பேராசிரியர் தனது மாணவிகளை மிரட்டி தன் இச்சைக்கு பணிய வைக்கும் பாணியில் ஒரு ஊடக ஆசிரியரை மிரட்டி இருக்கின்றார். தனது நிலையை உணரும் அளவுக்கு நிதானம் இல்லாமல் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டிருக்கிறார்.

காலைக்கதிர் மட்டுமல்ல யாழ் பத்திரிகைகள் அனைத்துமே இந்திய முகவர்களாக செயற்படுபவை. இந்திய நலன்கள் மீறப்படுமானால் இப்பத்திரிகை ஆசிரியர்கள் அதற்கேற்றாற் போல் செய்தியை தாலித்து வதக்கி காரம் மசாலா போட்டு இந்தியாவிடம் நல்ல பெயர் வாங்கும் வகையில் வெளியிடுவார்கள். இந்த அடிப்படை கூடத் தெரியாமல் பொருளியல்துறைக்கு பீடாதிபதியாக எப்படி பேரசிரியர் எஸ் சந்திரசேகரம் நியமிக்கப்பட்டார். தன் புலன்களை ஆங்காங்கு சிதறவிடாமல் கொஞ்சம் அரசியல் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தினால் அவருக்கு நல்லது என்கிறார் அவரிடம் கற்ற முன்னாள் மாணவி.

யாழ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தின் துறைத்தலைவர் பேராசிரியர் எஸ் சந்திரசேகரத்தின் பெயர் ஊடகங்களில் அடிபடுவது இது முதற்தடவையல்ல. சில மாதங்களுக்கு முன் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய விதவையான ஒரு முன்னாள் போராளியின் மனைவியுடன் தகாதமுறையில் நடந்துகொண்டமை பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து இவர் சிற்றின்பப் பேராசிரியரானார். மேலும் இவரது பொருளியல் பீடத்தில் விரிவுரையாளராக பணியாற்றும் இளம்குமரன் தன்னுடைய காமுகத்தனத்திற்காக கரும்புடையன் என்ற பட்டம் பெற்றவர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தை அந்தப்புரமாக்கி வரும் விரிவுரையாளர்கள் பேராசிரியர்களின் தொல்லை யாழ் சமூகத்தின் விழுமியங்களுக்கு பெரும் தொல்லையாகி வருகின்றது. இவர்களது காமக்குத்துக்கள் தற்போது மேலும் அதிகரித்து வருவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தேசம்நெற்றைத் தொடர்புகொண்டுள்ளனர். தமிழ் சமூகத்தினை பாதுகாக்க வேண்டிய அதன் அறிவியல் கட்டமைப்புகளில் உள்ளவர்கள், அச்சமூகத்தின் சிந்தனைத் திறனைத் தாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையுமே சீரழிக்கின்ற ‘Tamillain Barre’ Syndrome’ (‘Guillain-Barre’ Syndrome’) பற்றிய வேலியே பயிரை மேய்கின்ற துரதிஸ்ட்டம் பற்றி த ஜெயபாலன் “தமிழ் கல்விச் சமூகம் ஒரு பார்வை” என்ற நூலை 2010இல் வெளியிட்டு இருந்தார். இந்நூலில் யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பேராசிரியர்கள் விரிவுரையாளர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நூல் வெளிவந்ததால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக முன்னாள் பேராசிரியர் சண்முகலிங்கன் ஒரு பதவிக்காலத்துடனேயே பதவி இறக்கப்பட்டு பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அது போல் கலைத்துறைக்கு பீடாதிபதியாக பெண் பேராசிரியரை நியமிப்பதே கலைத்துறைசார்ந்த மாணவிகளுக்கு ஓரளவு பாதுகாப்பை ஏற்படுத்தும்.

காமுகர்களாக மாறியுள்ள பேராசிரியர்கள் ஒரு பலம் மிக்க அனுபவம்மிக்க ஊடக ஆசிரியரோடு இவ்வளவு மோசமாக நடந்துகொண்டால் இவர்கள் பற்றி முறையிடும் இருபதுக்களின் தொடக்கத்தில் உள்ள மாணவிகளின் நிலை என்ன? மேலும் இம்மாணவிகள் தங்கள் பட்டத்தைப் பெற்று வெளியேற இந்தக் காமுகர்கள் அனுமதி வேண்டும். இதனைப் பயன்படுத்தி இந்த இளம் பெண்களை வேட்டையாட இந்த கல்வியையும் தேசியத்தையும் போர்த்துக்கொண்டு இந்த ஓ(ஆண்)நாய்கள் அலைகின்றன.