08

08

அதிகார பகிர்வுக்கு தயார் – ராஜபக்ஷக்கள் அறிவிப்பு!

அதிகாரப்பகிர்வை வழங்குவது குறித்து பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்படி ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வது என்பது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் அவ்வளவாக முரண்படவில்லை என, அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொள்கை பிரகடன உரையாற்றிய போது, ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக கூறினார்.

இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் மஹிந்தவிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஓடிக்கொண்டிருக்கும் போதே பேருந்தில் இருந்து தனியே கழன்று சென்ற சில்லு – பயணிகளை கொலை செய்ய இ.போ.ச புதிய முயற்சி!

நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்தின் பின்பக்கச் சில்லு பேருந்து ஓடிக் கொண்டிருக்கும்போதே கழன்று ஓடியது. எனினும் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பிற்பகல் நுவரெலியா – பதுளை வீதியில் அமைந்துள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு அச்சில் இருந்து திடீரென விலகிய சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குறிய பல பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதும் – பேருந்தின் சாரதிகள் மது அருந்தி வாகனம் ஓட்டுவதும் – தொலைபேசி பேசிக்கொண்டு வாகனங்களை செலுத்துவதும் – பாதையில் சரியான திசைகள் செய்பவர்களை இடித்து விபத்துக்கு உள்ளாக்குவதும் என்று எந்தளவு தூரத்துக்கு முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு பொதுமக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி இலங்கை போக்குவரத்து சபை இயங்கிக் கொண்டிருக்கின்றது.

பயணத்தின் போது  இரண்டு சில்லுகள் தனியே கழன்று செல்லும் அளவிற்கு பயணிகள் தொடர்பில் கிஞ்சித்தும் அக்கறை காட்டாது சாரதிகள் செயற்படுவதும் – இதனை கண்டிக்காது இ.போ.ச உயர்அதிகாரிகள் இருப்பதும் உண்மையிலேயே வெட்கக்கேடானது. தனியார் பேருந்துகளில் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேருந்துகளை மக்கள் அதிகம் நாடுகின்ற நிலையில் இலங்கை போக்குவரத்து சபை கூறிய பேருந்துகளில் சாரதிகளின் அசமந்த போக்கு பயணிகளின் உயிர் தொடர்பான நிலையை ஆபத்துக்குள்ளானதாக மாற்றி விடுகின்றது.

பேருந்தில் பயணச்சீட்டை ஒழுங்காக எடுத்து விட்டோமா என அடிக்கடி பேருந்தில் ஏறி சோதனை செய்து அதன் மூலமாகவும் மக்களிடமிருந்து மீதியாக உள்ள பணத்தையும் எடுத்துக் கொள்ளும் இ.போ.ச அதிகாரிகளே தயவு செய்து பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

கொழும்பில் 13ஆவது திருத்தத்தை தீ வைத்து எரித்த பௌத்த பிக்குகள் – யாழில் 13ஐ காட்டிலும் சிறந்த தீர்வை கொடுக்க வலியுறுத்தும் பௌத்த பிக்குகள் !

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் தீர்மானத்திற்கு எதிராக பிக்குகளினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பௌத்த பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தீவிர தேசியவாத பௌத்த மதகுருமார்களின் குழுவினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பெளத்த தேரர்களின் பங்கேற்போடு இடம்பெற்ற இந்த பேரணியானது நாடாளுமன்ற வீதியை செல்லும்போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதையை பொலிஸார் மறித்ததையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த போராட்டத்தின் போது 13வது அரசியலமைப்பு திருத்த பிரதியை பிக்குக்கள் தீ வைத்து எரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்தப்பிக்குகள் கூட்டாக அறிவித்தனர்.

தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பிலேயே பௌத்தப்பிக்குகள் உட்பட சர்வமத தலைவர்கள், பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என அறிவித்தனர்.

இலங்கையின் எதிர்காலத்துக்காக இரட்டை குடியுரிமையை திறக்க தயார் – பசில் ராஜபக்ஷ

இரட்டைக் குடியுரிமை தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்குமானால், அதனை கைவிட தயார் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை மட்டுமல்ல, மக்களுக்காகப் பணியாற்றுவதற்கு வேறு தடைகள் இருந்தாலும் அதனை கடந்துவர தயார் என்றும் கூறியுள்ளார்.

போராட்டத்தினால் பலர் தமது சொத்துக்களை இழந்துள்ள நிலையில் தனக்கு பெரும் பொறுப்பு இருப்பதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேநேரம் தற்போது எரிவாயு, எரிபொருள் பிரச்சினை மற்றும் 10 மணிநேர மின்வெட்டு போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு ரணில் விக்கிரமசிங்கவால் தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

“பொய்களால் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியாது.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாட்டை மீளக் கட்டியெழுப்ப மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றுகையில், அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நேரடி வரிகளை அதிகரிப்பதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த வரிச்சுமையையும் குறைக்க முடியும்.

நான் பிரபலமாக இருக்க விரும்பவில்லை. இந்த நாடு விழுந்துள்ள நெருக்கடியிலிருந்து மீண்டும் கட்டியெழுப்ப விரும்புகிறேன்.

நாட்டின் நலனுக்காக மக்கள் விரும்பத்தகாத முடிவுகள் எடுக்கப்படுகின்றன. எனினும், இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அந்த முடிவுகளின் முக்கியத்துவம் பலருக்கும் புரியும்.

வரி விதிக்கக்கூடிய வருமான வரம்பை ரூ.1 இலட்சத்தில் இருந்து ரூ.2 இலட்சமாக உயர்த்த வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

PAYE வரி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வரிகள் தானாக முன்வந்து விதிக்கப்படவில்லை.

ஆனால் நாம் விரும்பியதைச் செய்வதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நீங்கள் விரும்பாவிட்டாலும், சரியானதைச் செய்யுங்கள்.

PAYE வரி ஒழிக்கப்பட்டால் நாட்டுக்கு 100 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும். வரி வரம்பை இரண்டு இலட்சமாக உயர்த்தினால், நாட்டுக்கு 63 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும். இழப்படும் மொத்தத் தொகை 163 ரூபாவாகும். இந்த பணத்தை இழக்கும் இடத்தில் நாங்கள் இல்லை. சமூகத்தின் அனைத்து மக்களுக்கு வாழ்வது மிகக் கடினம். ஆனால் இந்த கஷ்டத்தை இன்னும் 5 முதல் 6 மாதங்கள் பொறுத்துக்கொண்டால் ஒரு தீர்வை எட்டலாம். இப்படியே தொடர்ந்தால், 3, 4 ஆம் காலாண்டில் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கொடுப்பனவு வழங்கலாம்.

தனியாருக்குச் சலுகை அளிக்கலாம். முழு நாட்டு மக்களின் கைகளையும் இன்றையும் விட வளப்படுத்த முடியும்.

வேலைவாய்ப்பினால் வருமானம் பெருகும். வங்கி வட்டியை குறைக்கலாம். அடுத்த மூன்று ஆண்டுகளில், நாட்டு மக்கள் இன்று பெறுவதை விட 75% கூடுதல் வருமானத்தைப் பெற முடியும். உண்மையான வறிய சமூகத்தை அடையாளம் காண்பது. மானியத்துடன் கூடிய வங்கிக் கணக்கு மூலம் நேரடியாக பணமாக உதவி வழங்கும் திட்டத்தைத் தயாரித்து வருகின்றனர்.

ஆனால் சில குழுக்கள் இந்த பாதையை உடைக்க முயற்சிக்கின்றன. நான் ஒருபோதும் சாத்தியமற்றது என்று சொல்லவில்லை. அதிகாரத்திற்காக பொய் சொல்லாதீர்கள். பாதீட்டு உரையிலும், பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்ப நிகழ்விலும் கூறப்பட்ட அனைத்தையும் செயல்படுத்த உள்ளேன். இப்போது அதன் மூலம் பொருளாதாரத்தில் ஓரளவு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளது. பொய்களால் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதை பலர் இப்போது புரிந்துகொள்கிறார்கள்.

நாம் இப்போது எதிர்மறைப் பொருளாதாரத்திலிருந்து நேர்மறைப் பொருளாதாரத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறோம். 2023ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த தருணத்தில் தாய்நாட்டிற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குகிறார்கள்.

2022 இறுதிக்குள், அவர்கள் எங்களுக்கு 4 பில்லியன் டொலர் அன்னியச் செலாவணியைக் கொடுத்தனர். பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களை வெவ்வேறு வழிகளில் செல்வாக்கு செலுத்துவதன் பின்னணியில் நமது தொழில்முனைவோர் மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் இந்த உறுதிமொழியை வழங்கினர்.

ஆனால் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதும் இலங்கைக்கு பணம் அனுப்புவதும் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு அல்ல நாட்டிற்கு என்று நிரூபித்தார்கள். அவர்கள் அனைவரும் நமது மரியாதைக்கு உரியவர்கள் எனவும் தெரிவித்தார்.

பேஸ்புக்கில் என்றோ ஜனாதிபதியாகிவிட்டார் அனுரகுமார – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

அநுரகுமார ஏற்கனவே ஜனாதிபதி ஆடையை அணிந்து முகநூலில் ஜனாதிபதியாகி விட்டார் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

“அவர் ஜனாதிபதியாக கனவு கண்டாலும் மக்களின் இதயங்களில் ஒரு போதும் ஜனாதிபதியாக முடியாது. அதனால் தான் அந்த கனவை தொடருமாறு அனுரகுமாரவிடம் கூறுகின்றோம். நாம் களப்பணியாற்றி இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட பொதுஜன பெரமுனவின் வழிநடத்தல் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.” – யாழில் பௌத்த பிக்குகள் அறிவிப்பு !

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்தப்பிக்குகள் கூட்டாக அறிவித்தனர்.

தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பிலேயே பௌத்தப்பிக்குகள் உட்பட சர்வமத தலைவர்கள், பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என அறிவித்தனர்.

13ஆம் திருத்தத்திற்கு மேலான அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் என பௌத்தப்பிக்குகள் தெரிவித்துள்ளதாக யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

 

கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே
பௌத்தப்பிக்குகள் உட்பட சர்வமத தலைவர்கள், பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என அறிவித்தனர்.

பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என ஜனாதிபதிக்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பௌத்தப் பிக்குகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

துருக்கி நிலநடுக்கம் – “பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும்” என்கிறது உலக சுகாதார அமைப்பு!

துருக்கியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

சிரிய எல்லையை அண்மித்துள்ள தெற்கு துருக்கியின் காஸியான்டெப் நகருக்கு அருகில் நேற்று (06) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கருத்தில் கொண்டு, துருக்கியின் தென்கிழக்கு பிராந்தியத்தில் இன்று முதல் மூன்று மாதங்களுக்கு அவசரகால நிலையை அந்நாட்டு அதிபர் பிரகடனம் செய்தார்.

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என கணிக்கும் உலக சுகாதார நிறுவனம், இரு நாடுகளிலும் 23 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.

இதில், துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள 6,000 கட்டடங்கள் அழிந்து விட்டதாகவும், எல்லையில் உள்ள சில நகரங்கள் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்துள்ளதாகவும் இரு நாடுகளின் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.