09

09

கொரியாவில் 6500 வேலைவாய்ப்புகள் – தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன !

கொரிய வேலைவாய்ப்பிற்கான மொழித் தேர்விற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதற்கமைய, எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க முடியும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

சுமார் 6,500 தொழில் வாய்ப்புகளுக்காக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதும் எதிர்வரும் மார்ச் மாதமளவில் கொரிய மொழி பரீட்சை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

கொரியாவில் உற்பத்தி மற்றும் கடற்றொழில் துறையில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த போட்டிப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk ஊடாக கொரிய மொழி பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியுமென அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

உயர் கல்வியை தொடர பணமில்லை – விபச்சாரத்தில் ஈடுபட்ட 18 பெண்கள் கைது !

உயர்கல்வியை தொடர்வதற்குப் பணம் சம்பாதிப்பதற்காக விபசாரத்தில் ஈடுபட்ட 18 யுவதிகள் தலங்கமவில் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் உதயகுமாரவுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்க தெரிவித்துள்ளார்.

4 இடங்களில் சோதனை செய்து கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணைகளில், தற்போதுள்ள பொருளாதார நிலைமைகள் காரணமாக உயர்கல்வி கற்க முடியாததால் பணம் சம்பாதிப்பதற்கு இந்த வேலையைத் தேர்ந்தெடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட யுவதிகளாவர்.

ஒற்றையாட்சிக்குள் தீர்வு வேண்டாம் – எம்.ஏ.சுமந்திரன்

ஒற்றையாட்சி அரச முறைமைக்குள் தீர்வு என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அர்த்தமுள்ள அதிகார பகிர்வையே எதிர்பார்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு, அதனை விடுத்து செயற்பட்டால் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறினார் என கருதப்படும் எனவும் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதியுச்ச அதியுச்ச அதிகார பகிர்வு என குறிப்பிட்டுக் கொண்டு ஒற்றையாட்சி முறைமைக்குள் அர்த்தமுள்ள அதிகார பகிர்வு சாத்தியமற்றது எனவும்; அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் ஆரம்பமான நிலையில், இந்த விடயம் குறித்த ஜனாதிபதியின் மகஜரை சபாநாயகர் சமர்பித்தார்.

குறித்த மகஜரில் 40வது அதிகாரசபையின் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பொது ஒழுங்கைப் பேண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொது ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.