10

10

“கிழக்கில் சஹ்ரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள்.” – இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

“இன்னும் சில தினங்களில் சஹ்ரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறுவார்கள்.” என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இன்று (பெப் 10) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த ஏப்ரல் 21 சஹரான் தலைமையிலான ஈஸ்டர் குண்டு தாக்குதலில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட பல தேவாலயங்கள் மீது மிலேச்சத்தனமான குண்டு தாக்குதல் நடத்தப்பட்டு பலர் உயிரிழந்தனர்.

சஹ்ரான் கைவசம் இருந்த பள்ளிவாசலை பாதுகாப்பு தரப்பினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். ஆனால் அந்தப் பள்ளிவாசலை மீளவும் மக்களிடம் ஒப்படைக்க கோரி காத்தான்குடியில் ஒரு சில சிவில் சமூக அமைப்பும், அரசியல் தலைவர்கள் சேர்ந்து கடை அடைப்புடன் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது காத்தான்குடியில் உள்ள சிவில் அமைப்புகள், சில அரசியல் தலைவர்கள் கூறினார்கள் சஹ்ரான் அவமான சின்னமான பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்று, தாக்குதல் நடந்து இன்று மூன்று வருடம்கூட ஆகவில்லை தற்போது பள்ளிவாசலை விடுவிக்க கோரி போராட்டம் நடத்துகின்றனர்.

இவ்வாறு செயல்படுபவர்கள் இன்னும் சில தினங்களில் சஹ்ரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள் இதுதான் யதார்த்த உண்மை.

ஓட்டமாவடியிலே வடக்கு, கிழக்கு இணையக்கூடாது ஒரு சிங்கள அரசாங்க அதிபரை நியமிக்க வேண்டும் என்று ஒரு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இனவாதத்தை கக்கிக் கொண்டு வருகின்றார்.

இன்று பல பகுதிகளில் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டிருக்கின்றது. பல ஆலயங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

13வது திருத்தச் சட்டம் எரிக்கப்பட்டது. ஒரு மோசமான செயற்பாடு இந்த ஆட்சியாளர்கள் ஒரு இனவாத போக்கு உடனே நடந்து கொண்டிருக்கின்றார்கள் .

ஏதாவது திருத்த சட்ட நகல் சட்டம் நிறைவேற்றப்படும் போது நாடகமாடும் நிலையே காணப்படுகின்றது. கடந்த கால வரலாறுகளை எடுத்துக் கொண்டால் மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் சந்திரிக்கா அம்மையார் தொடக்கம் இன்று உள்ள ரணில் விக்ரமசிங்க வரைக்கும் தமிழர்களுடைய தீர்வு விடயத்தில் ஏமாற்றிக் கொண்டே வருகின்றார்கள்.

இவர்களது கபட நாடகங்கள் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் இரண்டு தரப்பிலும் எதிர்ப்பு இருக்கின்றது. சிங்கள பேரினவாத அரசியல்வாதிகளும், இனவாத பிக்குகள் மற்றும் முஸ்லிம் மதவாத தரப்பினரும் இந்த வடகிழக்கு இணைப்பினை எதிர்க்கின்றார்கள்.

 

 

 

“தமிழ் மக்களின் காணிகளை  உடனடியாக விடுவிக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.” – அனுரகுமார

“தமிழ் மக்களின் காணிகளை  உடனடியாக விடுவிக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

9ஆவது நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கை விளக்க உரையுடன் ஆரம்பித்து வைத்ததையடுத்து இன்று இரண்டாவது நாளாக இடம்பெறும் விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“வடக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு எந்த விவாதங்களும் அவசியமில்லை. அத்துடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி அரசாங்கத்தை கூட்டுகின்றார்.

எதற்கு சர்வகட்சி அரசாங்கத்தை கூட்ட வேண்டும், அதில் எந்த பயனும் இல்லை என்பதாலேயே அதில் நாம் கலந்து கொள்ளவில்லை.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகிந்தவும் இணைந்து தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு ஆவணத்தை தயார் செய்யுங்கள் அதன் பின்னர் அதனை விவாதத்திற்கு உட்படுத்துங்கள், அப்போது ஒரு தீர்க்கமான முடிவினை எட்டமுடியும். மாறாக சர்வகட்சி அரசாங்கத்தை கூட்டி கலந்துரையாடுவதால் எந்த பயனும் இல்லை.

தமிழ் மக்களின் காணிகளை அரச நிறுவனங்களோ அல்லது இராணுவத்தினரோ கையகப்படுத்தியிருந்த அதனை உடனடியாக விடுவிக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் இதனை எதற்காக விவாத பொருளாக மாற்றி ரணில் விக்கிரமசிங்க அதனை தனது கொள்கை பிரகடன உரையில் குறிப்பிடுகின்றார்.

சபாநாயகர் ஆசனத்தில் இருந்து ரணில் ஒரு விடயத்தை தெரிவிக்கின்றார் ஆனால் பிரதமர் வேறு ஒன்றை சொல்லி மக்களை குழப்புகின்றனர்” எனவும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

“தேரவாத பௌத்தத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்க வேண்டும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

தேரவாத பௌத்தத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கவும் அதனை சர்வதேச மட்டத்தில் வியாபிக்கவும் அவசியமான அனைத்து அரச அனுசரணையையும் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

“சிங்கள தம்மசதகனீப்பகரண” நூல் வெளியீட்டு விழா நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புத்தசாசன அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ள திரிபீடகச் சுருக்கத் தொகுப்புப் பேரவையின் 28ஆவது நூலாக ‘சிங்கள தம்மசதகனீப்பகரண’ வெளியிடப்பட்டுள்ளது.

07 நூல்களைக் கொண்ட “அபிதர்ம பிடகத்தின்” முதல் நூல் இதுவாகும்.

இதன் முதற் பிரதியை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஜனாதிபதியிடம் கையளித்தார்.

அத்துடன், ஏற்கனவே வெளியிடப்பட்ட மஜ்ஜிம நிகாய 3, சன்யுக்த நிகாய 1, அங்குத்தர நிகாய 3, குத்தக நிகாய 1, ஜாதக பாலி 1 ஆகிய ஐந்து நூல்களும் இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.

சிங்கள மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட மேற்படி நூல்களை ஆங்கிலம், ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்வதன் முக்கியத்துவத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறு செய்யப்படும் மொழிபெயர்ப்புகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதன் மூலம் அதன் பயன்பாட்டை அதிகரிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

திரிபீடகச் சுருக்கத் தொகுப்புப் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ராஜகீய பண்டித வண. திருகோணமலை ஆனந்த தேரர், வண. மெதஉயங்கொட விஜயகித்தி தேரர், கலாநிதி வண. பலாங்கொட சோபித தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் மற்றும் புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக அரச சொத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன – பஃவ்ரல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 60 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பஃவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இது குறித்து மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி நிறுவனங்களின் வளங்களை துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் பல உள்ளன.

சட்டவிரோத பிரசாரத்தில் ஈடுபடும் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுப்பது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

இலங்கையயில் நிலநடுக்கம் – புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

விண்ணப்ப படிவங்களை கூட முறையாக பூர்த்தி செய்ய தெரியாத இலங்கை அரச ஊழியர்கள் – 36000+ தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இவ்வருடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பெறப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் 36 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பூர்த்தி செய்வதில் குறைபாடுகள் இருப்பதால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 676,873 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதில் குருணாகல் மாவட்டத்தில் அதிகளவாக (75,579) வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மேலும், அனுராதபுரம் மாவட்டத்தில் 55,750 பேரும், கண்டி மாவட்டத்தில் 54,012 பேரும் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறைந்தளவான தபால்மூல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 3187 எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 47,430 ஆகும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

யாழ்.பண்ணைக் கடலில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு !

யாழ்ப்பாணம் மாநகருக்கு அண்மையாகவுள்ள பண்ணைக் கடலில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் இந்தச் சடலம் மீட்கப்பட்டது. சடலத்துக்கு உரியவர் இனங்காணப்படவில்லை.

மேலதிக விசாரணை களை யாழ்.பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

“சிங்கள – பௌத்தரை பகைத்துக்கொண்டு 13ஆவது திருத்தத்தை வழங்க வேண்டாம்.” – நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன !

நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். சிங்கள மக்களையும், பௌத்த பிக்குகளையும் பகைத்துக் கொண்டு 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாது.” என முன்னாள் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதற்கான வாய்ப்பு இல்லை. நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலை அடைந்துள்ள போது 13 ஆவது திருத்தம் என்ற இருப்பக்கமும் பற்றி எரியும் பந்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் கையில் எடுத்துள்ளார். என்பதை அறியவில்லை.

13 ஆவது திருத்தத்திற்கு சிங்களவர்கள் இடமளிக்க மாட்டார்கள் என்பதால் 1987 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் எவரும் 13 ஆவது திருத்தத்திற்கு கைவைக்கவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்ற யோசனையை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முதலில் முன்வைத்தது.

சகல அரசியல் கட்சிகளை ஒன்றிணைந்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் முயற்சியை ஆளும் தரப்பினரே பலவீனப்படுத்தினார்கள், அதனை அனைவரும் நன்கு அறிவார்கள். சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்தால் அதற்கு முழுமையாக ஆதரவு வழங்குவோம் என்பதை மீண்டும் குறிப்பிடுகிறோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை உரையில் குறிப்பிட்டார். 13 ஆவது திருத்தம் தற்போதைய பிரதான பேசுபொருளாக உள்ளது. 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்தம், அரசியலமப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவை ஒன்றுடன் ஒன்றுத் தொடர்புப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழும் வடக்கு மக்களுக்கு அரசியல் ரீதியில் பாரிய அநீதி இழைக்கப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவ சிதம்பரம் 1987 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கைக்கு எதிரான பாரதூரமான விடயங்களை இந்தியாவிடம் குறிப்பிட்டார்.

அதிகார பகிர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு அவர் இந்தியாவிடம் வலியுறுத்தினார்.
சிவ சிதம்பரத்தின் யோசனைகளை செயற்படுத்தியிருந்தால் 1987 ஆம் ஆண்டுக்கு முன்னரே இலங்கையில் யுத்தம் தோற்றம் பெற்றிருக்கும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரம் தொடர்பில் இந்தியா மேற்கொண்ட தொடர் பேச்சுவார்த்தையின் காரணமாக 1987 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன முழு நாட்டிற்கும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டார்.

இக்காலப்பகுதியில் விடுதலை புலிகள் தாக்கம் தீவிரமடையும் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் கலவரம் தோற்றம் பெறும் என புலனாய்வு தகவல் கிடைக்கப் பெற்றும் ஜே.ஆர் ஜயவர்தன கடும் அழுத்தத்திற்கு மத்தியில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இக்காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அமர்தலிங்கம் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் மக்களுக்கு வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

இலங்கை இவ்வாறான பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டது. இதன் விளைவாகவே பிற்பட்ட காலப்பகுதியில் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெற்றன.

சமஷ்டி ஆட்சி முறையில் அதிகார பகிர்வு அவசியம் என வடக்கு தலைமைகள் குறிப்பிடுகிறார்கள். சமஷ்டிக்கு சிங்கள மக்களும், பௌத்த பிக்குகளும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். சமஷ்டி என்றால் வெறுப்புக்கள் தோற்றம் பெறும். 13 பிளஸ் என மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசத்திற்கு குறிப்பிட்ட காரணத்தினால் தற்போது சிக்கல் நிலை தோற்றம் பெற்றுள்ளது.

மாகாண சபை தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட போது உயர்நீதிமன்றம் ஒருசில திருத்தங்களை முன்வைத்தது.13 ஆவது திருத்தத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட்டால் நாடு பிளவுப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவ்வாறன பின்னணில் எவ்வாறு 13 ஆவது திருத்தத்ததை முழுமையாக அமுல்படுத்துவது.

1987 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும், அரச தலைவர்களும் 13 ஆவது திருத்தம் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை.

மாகாண சபை நிர்வாக கட்டமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும். இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் ஜே.ஆர் ஜயவர்தன மாவட்ட அபிவிருத்தி சபை என்ற யோசனையை கொண்டு வந்தார். தேர்தலும் இடம்பெற்றது, பின்னர் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை இரத்து செய்யப்பட்டது.

நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் தீர்வு காண வேண்டும். நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் காணப்படும் போது இருபுறமும் பற்றி எரியும் விளக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் கையில் எடுத்துள்ளார் என்பதை அறியவில்லை.

ஜே.ஆர்.ஜயவர்தன 13 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து ஜனாதிபதிகளாக பதவி வகித்த எவரும் 13 ஆவது திருத்தத்தில் கை வைக்க செல்லவில்லை.

மாகாண சபை நிர்வாக கட்டமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும். இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் ஜே.ஆர் ஜயவர்தன மாவட்ட அபிவிருத்தி சபை என்ற யோசனையை கொண்டு வந்தார். தேர்தலும் இடம்பெற்றது, பின்னர் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை இரத்து செய்யப்பட்டது.

நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் தீர்வு காண வேண்டும். நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் காணப்படும் போது இருபுறமும் பற்றி எரியும் விளக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் கையில் எடுத்துள்ளார் என்பதை அறியவில்லை.

ஜே.ஆர்.ஜயவர்தன 13 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து ஜனாதிபதிகளாக பதவி வகித்த எவரும் 13 ஆவது திருத்தத்தில் கை வைக்க செல்லவில்லை.

எனது ஆட்சி காலத்தில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.

சிங்கள பௌத்த மக்களை பகைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியாது, ஆகவே நாட்டின் இன அடிப்படையில் பிளவுப்படாமல் அனைவரும் வாழ வேண்டும். நாட்டின் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்ற போது 13 ஆவது திருத்தம் ஊடாக பிறிதொரு பிரச்சினை தோற்றம் பெற இடமளிக்க முடியாது.

மாவட்ட அபிவிருத்தி சபை ஸ்தாகிப்பப்பட வேண்டும். உலக நாடுகளில் சமஸ்டி ஆட்சி உள்ள போது இலங்கையில் ஏன் சமஸ்டி ஆட்சி முறைமையை அமுல்படுத்த முடியாது என தமிழ் அரசியல் தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள். பிற நாடுகளை போல் சமஷ்டி ஆட்சியை அமுல்படுத்தும் தன்மை இலங்கையில் தற்போது இல்லை என்றார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வேண்டும் – தேர்தல் காலத்து போலி வாக்குறுதிகள் ஆரம்பம்!

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்யும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான பரிந்துரையை முன்வைக்கும்படி, சம்பள நிர்ணய சபைக்கு பணிப்புரை விடுக்குமாறு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம், கோரிக்கை விடுப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச்சுமை அதிகரிப்புக்கமைய சம்பள உயர்வு வழங்குமாறு கோரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் உட்பட இதர விடயங்களை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் தற்போது அமுலில் இல்லை. அதனை புதுப்பிப்பதற்கு தொழிற்சங்கங்கள் முற்பட்டாலும், பெருந்தோட்டக் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.

இதனால், சம்பள நிர்ணய சபையின் தலையீட்டுடனேயே தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. எனவே, தற்போதைய வாழ்க்கை சுமை அதிகரிப்புக்கமைய, சம்பள உயர்வுக்கான பரிந்துரையை முன்வைக்கும் அதிகாரம் சம்பள நிர்ணய சபைக்கு உள்ளது. என குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராஜபக்சக்கள் தரப்புடன் கூட்டணி அமைத்த போதும் இ.தொ.க குறிப்பாக ஜீவன் தொண்டமான் 1000 ரூபாய் சம்பளம் அதிகரிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டு மக்களின் வாக்குகளை பெற்ற போதும் மூன்று வருடங்களாகியும் அதனை நிறைவேற்ற முடியாத இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி மீண்டும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தினத்தில் ஒரு கழிவறைக்காக மட்டுமே 1கோடியே 67 லட்சம் ரூபாவை செலவு செய்த ரணில் அரசு !

சுதந்திர கொண்டாட்டத்தின் இரண்டு மணிநேரம் கழிவறைக்கு மட்டும் ஒரு கோடியே அறுபத்தேழு இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கஹடகஸ்திகிலிய – மஹாவெவ பிரிவு அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணில் – ராஜபக்சவின் கடைசி சுதந்திரக் கொண்டாட்டம் இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘நாட்டில் பணம் இல்லை என சொன்ன ரணில் தேசிய சுதந்திர தின நிகழ்விற்காக செலவு செய்தார்.

ரணிலின் மனசாட்சி நன்கு தெரியும், தான் சொல்வது தவறு என்று.“ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.