15

15

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலய வழிபாடுகள் உறுதிப்படுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் தொடர்ச்சியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வது உறுதிப்படுத்தப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

குறித்த பகுதியில் உள்ள தொல்லியல் சின்னங்கள் மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் வகையில் இன்று(15.02.2023) கண்காணிப்பு பயணம் ஒன்றினை மேற்கொண்ட போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பாரம்பரியமாக இந்துக்களினால் வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பூஜை வழிபாடுகளை தொடர்வதற்கு, அரசாங்க திணைக்களங்கள் சிலவற்றின் கடமைசார் செயற்பாடுகள் இடையூறாக அமைந்துள்ளதாக கடந்தகாலங்களில் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக பிரதேச மக்களின் கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் கேட்டறிந்த அமைச்சர், மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்க திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையுமாயின், அவைதொடர்பாக கரிசனை செலுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதுடன், துறைசார் அமைச்சர்களுடனும் பிரஸ்தாபித்து சுமூகமான தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே வெடுக்குநாறி விவகாரம் தொடர்பாக, தமிழ் மக்களின் பிச்சினைகள் மற்றும் அபிலாசைகளை தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டது.

அதன்போது, சம்மந்தப்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்று நிலமைகளை ஆராய்வதுடன், சம்மந்தப்பட்ட துறைசார் அமைச்சர்களுடன் இணைந்து சுமூகமான தீர்வை காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்ததாக கூறியிருந்தார்.

 

 

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த வைத்தியர் கைது !

பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியரிடமிருந்து 145 மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக அவற்றை வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காரில் பயணித்தபோது, பதுளை முதியங்கனை விகாரைக்கு முன்பாக உள்ள வீதியில் வைத்து, ஒருவர் வழங்கிய தகவலின் பிரகாரம் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மயிலகஸ்தென்ன பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான மருத்துவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பதுளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரணதண்டனை !

பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நான்கு உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை விதித்து ஹம்பாந்தோட்டை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு ஜூன் 28 சூதாட்ட நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவே இணைத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வவிசாரணை இன்று ஹம்பாந்தோட்டை உயர் நீதிமன்றத்திற்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

“பிரபாகரன் உயிரோடு இருந்தால் முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்பேன்.” மௌலவி அப்துல் மஜீத் !

“ஒழிந்து தான் பிரபாகரன் வாழ்ந்திருந்தால், அது  அவருக்கு தான் அவமானம்.” என ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தமிழக மூத்த அரசியல் தலைவர் பழ நெடுமாறன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்தியாவில் உள்ள தமிழக தலைவர்கள் சிலர் கூறுவதை மறுப்பதற்கில்லை. அவர் உயிருடன் இருந்தால் நல்லது தான். அதாவது இதுவரை காலமும் நன்றாக அனுபவங்களை அனுபவித்திருப்பார்.

போராட்டம் என்பது தற்போது சாத்தியப்படாது என ஒழிந்து இருந்திருப்பார். இப்படி ஒழிந்து தான் பிரபாகரன் வாழ்ந்திருந்தால், அது  அவருக்கு தான் அவமானம். அவர் அவ்வாறு திரும்பி வந்தால் ஜனநாயகத்திற்கு வந்து தேர்தல்கேட்டு நாடாளுமன்றத்திற்கு வாருங்கள் என கேட்பேன்.

அவ்வாறு நாடாளுமன்றம் அவர் வருகின்ற சந்தரப்பத்தில் அநீதி இழைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான நீதியை முஸ்லிம் கட்சிகள் உட்பட நானும் அவரிடம் கேட்பேன். பிரபாகரனோ அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்போ முஸ்லிம்களுக்கு எந்தவொரு தீர்வினையும் இனியும் பெற்று தரமாட்டார்கள் என்பதும் எமக்கு தெரியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட இதர கட்சிகள் நாடாளுமன்றத்தில் இருந்தும் கூட முஸ்லிம் மக்களுக்கான தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை. பிரபாகரன் இனி வந்து என்ன தர போகின்றார். அவராலும் அது முடியாது.

நேதாஜி, அஸ்ரப் போன்றோர் இறந்த போதிலும் இவ்வாறு அவர்கள் உயிருடன் திரும்பி வருவார்கள் என மக்கள் மத்தியில் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.

அது போன்று தான் பிரபாகரனின் விடயமும் கதையாக வெளிவந்துள்ளது. ஆனால் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்றால் அவர் ஒழித்து கொண்டிருக்கின்றார் என்பதில் எனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை என குறிப்பிட விரும்புகின்றேன்”  எனவும் தெரிவித்துள்ளார்.