23

23

காணாமலாக்கப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் – இலங்கை இராணுவத்துக்கு நீதிமன்றம் உத்தரவு !

ஆட்கொணர்வு மனு மீதான கட்டளை இலங்கை இராணுவத்தினருக்கு எதிரானதாகவுள்ளமை மிகப்பெரிய வெற்றி எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை முன்னிலைப்படுத்தவும் அல்லது காரணம் கூறவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ். இரட்ணவேல் தெரிவித்தார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் பொன்னம்பலம் கந்தசாமி (கந்தம்மான்), சின்னத்துரை சசிதரன் (எழிலன்), உருத்திரமூர்த்தி கிருஸ்ணகுமார் (கெலம்பஸ்) ஆகியோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஆட்கொணர்வு மனுக்கள் 3 மீதான தீர்ப்புகள் இன்று வழங்கப்பட்டன. போரின் இறுதியில் இராணுவத்திடம் சரணடைந்த குடும்பத்தினர் சார்பில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்ற நீதிவானால் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதன் பிரகாரம் காணாமல் ஆக்கப்பட்டவர் இராணுவத்திடம் சரணடைந்தமைக்கான சான்றுகள் இருப்பதில் மன்று திருப்தியடைந்து அவர் இராணுவத்தினரின் வசம் இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளார் என்ற தொனியில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் அல்லது அப்படி முடியாது போனால் அதற்கான காரணங்களை விளக்கவும் எதிர்வரும் மாதம் 22 ஆம் திகதி வழக்குகள் திகதியிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஆட்கொணர்வு மனு மீதான கட்டளை சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரானதாக ஆக்கப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

ஏனெனில் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் தங்களுடைய உறவினர்களை தேடி வந்த பயணம் 2013 இல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 9 வருடங்களுக்க பின்னர் பூரணமாக நிறைவடைந்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தினர் இதற்கான காரணத்தினை சொல்லித்தான் ஆகவேண்டும். பொறுப்புக்கூறல் அவர்களை சார்ந்தது. இதுவரை காலமும் ஏதோ காரணத்தினை சொல்லிக்கொண்டிருந்தவர்களிடம் அதற்கான பொறுப்பை இந்த நீதிமன்றம் கேட்கின்றது. அதை சொல்லித்தான் ஆகவேண்டும்.

நீதிமன்றத்தின் மூலம் எமக்கு கிடைத்த ஒரு வெற்றி மற்றும் நிவாரணமாகவே இதனைக் கருதவேண்டியுள்ளது

அத்துடன் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

எனவே இனிமேலாவது காணால் ஆக்கப்பட்டோர் தொடர்பாக மட்டுமல்ல, மேலும் பல விடயங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” – என்றார்.

“எனக்கு தெரியும் உங்களுக்கு பெரிய மூளை உள்ளது.” – நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் சாணக்கியன்!

உள்ளூராட்சி தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) ஜனாதிபதியிடமான கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “எனக்கு தெரியும் உங்களுக்கு பெரிய மூளை உள்ளது என்று.

ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை IMF இனது உதவியுடன் கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காக சாக்கு போக்கு சொல்லப்பட்டு பிற்போடப்படும் உள்ளூராட்சி தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா?

ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுமா? இதற்கான கால அவகாசம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு அதானி குழுமத்திற்கு அனுமதி !

மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் 442 மில்லியன் டொலர் முதலீட்டில் 350 மெகாவோல்ட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு இலங்கை முதலீட்டு சபையினால் இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக இந்த அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 1500 – 2000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் 11ஆம் திகதி கையெழுத்திடப்பட்டது. இந்நிலையிலேயே அதனைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான அனுமதி அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்தை நிறைவடைச் செய்ய எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டு இதனை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய மன்னாரில் அமைக்கப்படவுள்ள மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக 250 மெகாவோட் மின்அலகும் , பூநகரியில் அமைக்கப்படவுள்ள மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக 100 மெகாவோட் மின்அலகும் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

“தேர்தல் இறந்துவிட்டது. அதற்கு இறப்புச் சான்றிதழை எழுதுவதே இப்போது எஞ்சியிருக்கிறது.” – மகிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இறந்துவிட்டதாகவும், அதன் இறப்புச் சான்றிதழை எழுதுவதே இப்போது எஞ்சியிருப்பதாகவும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் இதற்கு யார் பொறுப்பு என்று தற்போது கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

7 வயது மகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் – சிறுமியின் தாயும் அவருடைய கள்ளக்காதலனுடன் கைது !

ஏழு வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் சேட்டைகள் செய்த ஒருவரும் சிறுமியின் தாயும் செவ்வாய்க்கிழமை (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸ் பிரதேசத்தில் நடந்த இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

மேற்படி சம்பவத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட பெண்ணின் கணவன் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் மரணமடைந்த நிலையில் அப் பெண் பேஸ்புக் மூலம் பல ஆண்களுடன் தொடர்புகளைப் பேணியுள்ளார்.

அதில் ஒருவருடன் மிக நெருக்கமாகப் பழகி அவரை தனது கள்ளக் காதலாகவும் ஆக்கிக் கொண்டுள்ளார்.

அந்நபர் அடிக்கடி மேற்படி பெண்ணின் வீட்டுக்கு சென்று வந்ததுடன் தொடர்புகளை பேணியும் வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ தினம் அப் பெண்ணின் 7 வயது மகளிடம் தாயின் கள்ளக் காதலன் பாலியல் சேஷ்டைகள் பல புரிந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிறுமியின் தாய் துணையாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுமி, நடந்த சம்பவம் பற்றி தனது மாமி முறையான ஒருவரிடம் தெரிவித்துள்ளார். அப் பெண் சிறுமியின் பாட்டியிடம் விடயத்தை கூறி அதன் பிறகு கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவில் மறைப்பாடு ஒன்றுசெய்யப்பட்டுள்ளது.

அவர்கள் செய்த  முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாணைகளின் படி தாயும். கள்ளக் காதலனும் கைது செய்யப்பட்டு கண்டி நீதவான் முன் ஆஜர் செய்யப்பட்டனர். முறைப்பாட்டை விசாரித்த நீதவான் தாயையும், கள்ளக் காதலனையும் தடுத்து வைக்கும் படி உத்தரவிட்டார்.

 

சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்பும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை – நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் போதை பொருள் களஞ்சியத்தில், 3 ஆயிரம் கிலோகிராம் எடையுடைய போதை பொருட்கள் உள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்பும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

மேலும், அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் காணப்படுகின்ற போதை பொருளை எரித்து அழிப்பதற்கு சட்ட ரீதியாக புதிய முறையொன்று உருவாக்கப்படும் என குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக ஆசிய வங்கி வழங்கிய நிதியில் 1300 மில்லியன் ரூபா நிதியை திருடிய அரசாங்க அதிகாரிகள்!

பெரும்போக நெற்செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட நிதியை, வங்கியில் வைப்பிலிட போலி கணக்கு இலக்கங்களை சமர்ப்பித்த 11 அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விவசாய ஆராய்ச்சி, உற்பத்திக்கான பிரதி அதிகாரிகளும் தொழில்நுட்ப அதிகாரிகளும் அவர்களில் அடங்குவதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு குறித்த அதிகாரிகள் தவறான விவசாய கணக்கு இலக்கங்களை வழங்கியதன் காரணமாக 1300 மில்லியன் ரூபா நிதி கணக்கில் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்குவதற்காக 8000 மில்லியன் ரூபா நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது.

01 ஹெக்டேருக்கு 10,000 ரூபா, 02 ஹெக்டேருக்கு 20, 000 ரூபா வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதனூடாக 12 இலட்சம் விவசாயிகள் பயனடையவுள்ளனர்.

T20 பந்துவீச்சாளர் தரவரிசையில் வனிந்து ஹசரங்க முதலிடம் !

ஐசிசி ரி 20 பந்து வீச்சாளர் தரவரிசையில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அவர் 695 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

மேலும், டி20 சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் வனிந்து ஹசரங்க நான்காவது இடத்தில் நீடிக்கிறார்.

வனிந்து 175 புள்ளிகளுடன் அந்த நிலையில் நீடிக்கிறார்.

இதேவேளை, வனிந்து ஹசரங்க ஒருநாள் சகலதுறை ஆட்டக்காரர்கள் தரவரிசையில் 240 புள்ளிகளுடன் 7வது இடத்தில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

காங்கேசன்துறையில் இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் குடியேற மக்கள் தயக்கம் !

இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

கடந்த சில வாரங்களுக்கு முதல் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறையில் இராணுவத்தினிடமிருந்தும் கடற்படையினரிடமிருந்தும் 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.

படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகள் நீண்ட காலமாக இடம்பெற்றாலும் சிறிது சிறிதாக காணிகள் விடுவிக்கப்படுகின்ற போதிலும் ஒரு இடர்பாடு காணப்படுகின்றது.

முகாம்களில் இருக்கின்றவர்களை நாங்கள் விடுவிக்கப்பட்ட இடங்களில் குடியேற்றக்கூடியவாறு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்.

விடுவிக்கப்பட்ட இடங்களில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் தங்களுடைய காணிகளை முழுமையாக கையேற்று அதனை உரிய பாவனைக்கு உட்படுத்தினால் மாத்திரமே தொடர்ச்சியாக காணிகளை விடுவிப்பதற்கு உதவியாக இருக்கும்.

விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்தினர் இருந்து வெளியேறியுள்ளனர். எனவே காணி உரிமையாளர்கள் தமது காணிகளை கையேற்கத் தவறுவதால் அந்த கட்டிடடப் பொருட்களை சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்கின்ற நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது.

எனவே விடுவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் தங்களுடைய சொந்த காணிகளை கையேற்பதன் மூலமே நாங்கள் மேலதிகமாக படையினரிடம் உள்ள காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

விடுவிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் தமது காணிகளை பொறுப்பேற்பதற்கு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தமிழர்களை தன்னுடைய அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தி வரும் இந்தியா தான் தமிழரின் எதிரி – தேசம் திரை YouTube !

இந்திய அரசை நம்பியதினால் தமிழர்களுக்கு முதலில் ஏற்பட்டது அழிவு இரண்டாவது ஏற்பட்டது பேரழிவு இனி ஏற்பட இருப்பது மீள முடியாத பேரழிவு. இலங்கையில் தமிழ் – சிங்கள மக்களிடையே இருந்த முரண்பாட்டை தீர்த்து வைக்கத் திறமையற்ற, படித்த ஆனால் மூன்றாம் தர சிங்கள, தமிழ் அரசியல் தலைமைகள், தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்ப போட்டி போட்டு, இனவாதத் தீயை வளர்த்தன. இவர்கள் இலங்கையை அந்நிய சக்திகளிடம் கையளித்து, கடந்த 75 ஆண்டுகளாக நாட்டைச் சீரழித்து வருகின்றனர். அதன் உச்சமாக தற்போது இலங்கையின் இயற்கைத்துறைமுகமான திருகோணமலை எதிர்கால யுத்தத்தின் மையப்புள்ளியாக மாற்றப்பட்டு வருகின்றது. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 30 பேர்வரை இரு இரு விசேட விமானங்களில் பெப்ரவரி 14 அன்று இலங்கை வந்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர்.

இன்று பெப்ரவரி 18இல் தமிழகத்தின் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வவுனியா ஆலயத்தில் மதக் கலகத்தை தூண்டிவிடும் வகையில் உரையாற்றினார். இது “சிவ பூமி, ராமஜன்ம பூமி, ஆரியச் சக்கரவர்த்தி பிறந்த பூமி” என்றெல்லாம் புகழாரம் சூட்டி ராமாயண யாத்திரை இலங்கையில் இருந்து ஆரம்பிக்கும் என்றும் இந்தியாவில் இருந்தும் யாத்திரை வரும் அதற்காகவே தமிழகத்தில் இருந்து பலாலிக்கு விமானப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. மன்னார் – ராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்றெல்லாம் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெயரை உச்சரிக்காது அர்ஜூன் சம்பத் வெளிநாட்டவர்கள் இங்கு வந்து மதமாற்றம் செய்வதாகவும் ஈஸ்டர் குண்டுவெடிப்பு மதவாதத்தை தூண்டும் செயல் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஊடகவியலாளராக ஒளிப்பதிவாளராகக் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் “இந்தியாவின் தமிழகத்தின் சாத்தான்கள் வந்து எங்களுக்கு வேதம் கற்றுக் கொடுக்கிறார்கள்” என்று சினந்து கொண்டார். இந்த சாத்தான்கள் ராமர் யாத்திரையை இங்கும் நடத்தி மசூதிகளையும் தேவாலயங்களையும் நொருக்குவதற்கு இப்பவே திட்டமிட்டுவிட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். அந்த ஆலயத்தின் அடியவர் தேசம்நெற் வட்ஸ்அப்க்கு அனுப்பி வைத்த குறிப்பில் இவ்வாறான மதத்தை அரசியலோடு கலக்கின்ற பிரச்சாரங்களுக்கு ஆலயங்கள் இடமளிப்பதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்த மயூரன், சண்முகரத்தினம் போன்றவர்கள் இவ்வாறான மதஅடிப்படைவாதிகளை ஆலயங்களுக்கு அழைத்து எமது ஆலயங்களை மத அடிப்படைவாதிகளின் கூடாரங்கள் ஆக்குவதை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தேசம்நெற் க்கு கிடைக்கும் செய்திகளின்படி திருகோணாமலையில் உள்ள 90 எண்ணைக் குதங்களில் 80 வரையான குதங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகின்றது. அமெரிக்க ராஜதந்திரிகளின் வருகை திருமலை விவகாரம் பற்றியது அல்ல என அமைச்சர் பண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் ஒவ்வொரு எண்ணைக் குதமுமே நூறு பெற்றோல் நிலையங்களுக்கான பெற்றோலியத்தை சேகரித்து வைக்கும் கொள்ளளவைக் கொண்டன எனத் தெரிவித்தார். இவ்எண்ணெய்க் குதங்கள் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் யுத்த தளபாடங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பிரித்தானியாவால் உருவாக்கப்பட்டவை. இன்றைய உக்ரைன் நிலைமையொன்று அதாவது அமெரிக்க சக இந்தியா எதிர் சீனா உருவாகுமானால் அதன் முதல் பொறி திருகோணமலையிலேயே தெறிக்கும் என்பது உறுதியாகி வருகின்றது.

இந்தியா காலம் காலமாக தன்னுடைய நலனை மட்டும் கருத்தில் கொண்டே இலங்கைத் தமிழர்களைப் பகடைக்காய்களாக பாவித்து வருகின்றது. தமிழர்களும் தமிழ் தலைவர்களும் குனியக் குனிய இந்தியா மேலும் மேலும் தமிழர்களைக் குட்டிக்கொண்டே இருக்கின்றது. இந்தியாவின் இந்திய நலன்சார்ந்த அரசியலால் இதுவரை தமிழர்கள் இழப்பைத் தவிர எதனையும் சந்தித்தில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைக் கூட இந்தியா முழுமையாக அமுல்படுத்த முயற்சிக்கவில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 36 ஆண்டுகள் ஆகியும் அது இன்னமும் தமிழ் மக்களுக்கு எட்டாத கனியாகவே உள்ளது. 36 ஆண்டுகளாக நாய்க்கு எலும்புத்துண்டு போடுவது போல் இந்திய அரசு 13ஆவது திருத்தச் சட்டத்தைக் காட்டிக் காட்டி தமிழ் மக்களை அவர்களின் தன்மானத்தை நொறுக்கி வருகின்றது.

இலங்கையில் உள்ள இன முரண்பாட்டுக்கு உயிரூட்டி அதற்கு வன்முறை வடிவம் கொடுத்து. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உசுப்பி விட்ட இளைஞர்களை இந்திய உளவுப்படை கோழிக்குஞ்சுகளை பிடிப்பது போல் துப்பாக்கிகள் தாறோம், குண்டுகள் தாறோம், பயிற்சியும் தாறோம் என்று வளைத்துப் போட்டனர்.

சிங்கள கிராமங்களுக்குள் சென்று சிங்களவர்களைக் கொல்லுங்கள் நிறைய துப்பாக்கிகளும், குண்டுகளும், பயிற்சிகளும் தருவோம் என்றதும், நான் முந்தி நீ முந்தி என்று தமிழீழ விடுதலைப் புலிகள் முந்திக் கொண்டனர். கொக்கிளாய், நாயாறு, அனுராதபுரம் படுகொலைகள் நடந்தேறியது.