18

18

நடராஜருக்கும், வள்ளுவருக்கும் சிலை வைத்துவிட்டு மக்களை பட்டினி போடும் யாழ்ப்பாணத்து தலைமைகள் !

தற்போதைய நிலையில் யாழ். மாவட்டத்தில் போதிய உணவு இல்லாதிருப்போர் பட்டியலில் 6500 இற்கு உட்பட்ட குடும்பங்கள் உள்ளன.

குறித்த குடும்பங்கள் மாத்திரமே உணவு பஞ்ச நிலைமையை எதிர்நோக்கும் நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்டத்தில் உணவு அற்ற நிலைமை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்தக் குடும்பங்களுக்கு அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் விசேட வேலைத் திட்டத்தின் மூலம் அவர்களுக்குரிய உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இது ஒருபக்கமிருக்க நேற்றையதினம் 2000 வரையிலான கற்பிணி பெணகள் போசாக்கான உணவு இல்லாது அவதிப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்ததது. ஆனால் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய அரச அதிகாரிகள் சம்பள உயர்வு கோரி போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டிய அரசியல்தலைவர்களும் சமூக அமைப்புக்கள் பலவும் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பணத் பெற்றுகோயில் கட்டி – கௌரவிப்பு விழாக்களை நடாத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை தான் தமிழ் ஊடகங்களும் இனமீட்பர்கள் என கொண்டாடிக்கொண்டிருக்கின்றன.

…………………………………………………………………………………………………………………………………………………………………..

காவிகளின் கூடாரமாகும் தமிழர் பகுதி – உலகப் பொது மறை தந்த வள்ளுவருக்கு காவியடித்த யாழ்ப்பாண மாநகரசபை !

 

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு – வீட்டிற்கு தீ வைத்த கணவன் !

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் ஒன்று மொரட்டுவையில் பதிவாகியுள்ளது.

மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொடசிறி மாவத்தை கடலான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றபோது, ​​கணவன் வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானதுடன், பாடசாலை செல்லும் இருவரது புத்தகங்களும் தீயில் கருகின.

“பொதுமன்னிப்பு என்ற பெயரில் குற்றவாளியாக முத்திரை குத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை ஏற்க முடியாது.”- அருட்தந்தை மா.சக்திவேல்

பொதுமன்னிப்பு என்ற பெயரில் குற்றவாளியாக முத்திரை குத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை ஏற்க முடியாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பயங்கரவாத தடை சட்டத்தினால் 15 வருட வாழ்வை தொலைத்துவிட்ட அரசியல் கைதியான கிளிநொச்சியை சேர்ந்த விவேகானந்தனூர் சதீஷ்குமார் இன்று வெளியுலகையும் குடும்பத்தையும் காணும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

சிறையில் வாடும் ஏனைய அரசியல் கைதிகளும் துரிதமாக விடுதலை செய்யப்பட வேண்டும்; எந்த வடிவத்திலும் பயங்கரவாத தடைச்சட்டம் இனிமேலும் தொடர்வதற்கு தெற்கின் சமூகம் இடமளிக்கக்கூடாது; அதற்கான அழுத்தத்தை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தாருடைய தனிப்பட்ட மகிழ்வில் நாமும் பங்கு கொள்கின்றோம். ஆனால், பொது மன்னிப்பு என்ற பெயரில் குற்றவாளியாக முத்திரை குத்தப்பட்டு அரசியல் கைதிகளை ‘விடுதலை’ என வெளியில் அனுப்புவதை, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை.

அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு என்பது அரசு பயங்கரவாதத்தினை அங்கீகரிக்கும், அதற்கு எதிரான மக்களின் விடுதலை செயற்பாட்டினை தொடர்ந்து பயங்கரவாதமாக்குவதுமான செயலாகும். தற்போதைய ஜனாதிபதியின் அரசியல் கைதியான சதீஷ்குமாரின் விடயத்திலும் அதுவே மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள் என்போர் தேசத் துரோகிகள் அல்ல; பயங்கரவாதிகளும் அல்ல. அவர்களை குற்றவாளிகளாக அடையாளப்படுத்தி காலத்துக்கு காலம் ஜனாதிபதிகள் விடுதலை என வெளியில் அனுப்புவது என்பது தமிழ் மக்களையும், தமிழர்களின் அரசியல் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அவமதிக்கும் செயலாகும்.

தற்போதைய ஜனாதிபதி 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இன பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று பாராளுமன்றத்தில் கொக்கரித்தார்.

தமிழ் மக்கள் விரும்பாத 13ஆம் யாப்பு திருத்தத்தை அமுல்படுத்தப்போவதாக அரசியல் நாடகம் ஆடினார்.

அது பயங்கரவாதமாகும்; அரசியல் யாப்பில் உள்ள 13ஆம் யாப்பு திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என்று கூறி பெருமளவான இயக்கத்தினர் வீதி போராட்டத்தை நடத்தினர். பயங்கரவாத தடைச்சட்டம் இவர்களுக்கு எதிராக பாயவில்லை. இவர்களா தேசப் பற்றாளர்கள்?

விடுதலை செயற்பாட்டை பயங்கரவாதமாக்கி, அதற்கு துணையாக பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டுவந்து 44 ஆண்டு காலமாக பாதுகாப்பதும், 75வது சுதந்திர ஆண்டிலும் அதன் பாதுகாப்பிலே ஆட்சி செய்ய நினைப்பதும், அச்சட்டத்தினை புதுப் பெயரில் தொடர வழிசமைப்பதும் பயங்கரவாதமாகும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தொடர்ந்து சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளையும் அதே சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தூக்குத் தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் மூன்று அரசியல் கைதிகளையும் அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கை எடுப்பதே தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான ஆரம்ப செயற்பாடு என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

அன்று குட்டிமணி கூறியது போன்று தற்போது அரசு பயங்கரவாதம் வேறு வடிவத்தில் தெற்கு பக்கம் திரும்பியுள்ளது. இதற்கு எதிரான தெற்கின் சக்திகள் தமிழ் மக்களுடைய அரசியலை அங்கீகரித்து அதனை ஏற்றுக்கொள்வதன் மூலம் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான செயற்பாட்டை இன்னும் தீவிரப்படுத்த முடியும். இல்லையேல், நாடு தொடர்ந்து பிளவுபட்டே இருக்கும் என்பதையும் தெற்கின் சக்திகள் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

“ஐனநாயக வழியில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.”- அமைச்சர் டக்ளஸ்

ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என தொடங்கி தற்போது ஐனநாயக வழியில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும்  இவ்வாறான நிலையில் யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் முடிவுகட்டப்பட வேண்டும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

புடினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்  உத்தரவு – ஜோபைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பு !

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷ்ய ஜனாதிபதி புடின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய புகார்கள் எழுந்தன.

இந்த புகார் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், போர்க் குற்றத்தைப் புரிந்ததாக கூறி ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

புடினின் கைது  உத்தரவுக்கு உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், புடினுக்கு எதிரான கைது பிடிவாரண்ட் நியாயமானது தான் என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பைடன் கூறுகையில், ” உக்ரேனிய குழந்தைகளை நாடு கடத்தியதற்காக போர்க்குற்றம் செய்ததாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது நியாயமானது. இந்த நடவடிக்கை மிகவும் வலுவான கருத்தை உருவாக்குகிறது” என்று குறிப்பிட்டார்.

அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் மாவட்டம் கிளிநொச்சி – மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்

இடம்பெயர்வுகள் மற்றும் மீள்குடியமர்வின் பின்னரும் அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் மாவட்டம் கிளிநொச்சி என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட உதவி நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் மக்களிடையே ஒரு பாரிய பிரச்சினையாகவும் மாறியுள்ளது என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு வேலை திட்டங்களின் ஊடாக மக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படுகின்ற போதிலும் பல பிரச்சினைகள் தீர்க்க முடியாத நிலையில் உள்ளதாகவு குறிப்பிட்டுள்ளார்.

காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவிற்கான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகிறது – ஒருவருக்கான கட்டணம் எவ்வளவு..?

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவிற்கான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளதாக இலங்கை கப்பற்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கப்பல் சேவையை ஐ.என்.டி.எஸ்.ஆர்.ஐ என்ற நிறுவனம் நடத்தவுள்ளது.

அதற்கமைய யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் பாண்டிச்சேரியிலுள்ள காரைக்கால் வரையான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கை கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காங்கேசன்துறையில் பயணிகளுக்கான சுங்க மற்றும் குடிவரவு – குடியகல்வு சாவடியை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கப்பல் சேவையை ஐ.என்.டி.எஸ்.ஆர்.ஐ என்ற நிறுவனம் நடத்தவுள்ளது.

முதலில் 120 பயணிகள் இந்தக் கப்பலில் பயணிப்பார்கள் எனவும் அவர்கள் 100 கிலோ பொருட்களை தம்முடன் எடுத்துச் செல்ல முடியும் என்பதோடு ஒருவருக்கு சுமார் 40 ஆயிரம் ரூபா வரை கட்டணமாக அறவிடப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

நாவற்குழி பௌத்த விகாரைக்கு சவேந்திர சில்வா வருகை – தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் கவனயீர்ப்பு போராட்டம் !

யாழ். நாவற்குழி பௌத்த விகாரைக்கு சவேந்திர சில்வா வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று மதியம் 2 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று விகாரைக்கு வருகை தரும் வீதியில்  முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது தமிழர் தேசத்தில் பௌத்த விகாரை எதற்கு!இனப்படுகொலையாளி சவேந்திர சில்வாவே  வெளியேறு! நிறுத்து நிறுத்து பௌத்த மயமாக்கலை நிறுத்து! வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு! நாவற்குழி  விகாரை சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பின் அடையாளம்! திட்டமிட்ட  பௌத்த மயமாக்கலை நிறுத்து! நாவற்குழி தமிழர் தேசம் !தமிழர் தேசத்தில் புத்த கோயில் எதற்கு! ஆகிய பதாகைகளை ஏந்திய  வண்ணம் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பொழுது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய  செல்வராசா கஜேந்திரன்,தமிழ் தேசிய உட்பட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழையும் வள்ளுவரையும் மானபங்கப்படுத்தும் யாழ் மாநகரசபை! மோடியின் கோமயம் எங்களுக்கு வேண்டாம்!!

திருவள்ளுவருக்கு பட்டையடித்து காவி போட்டு அவமானப்படுத்தும் உரிமையை யாழ் மாநகரசபைக்கு யார் கொடுத்தது? என்ற கேள்வி சுயசிந்தனையுடைய எவருக்கும் எழுவதைத் தவிர்க்க முடியாது. திருவள்ளுவர் என்றவுடன் இடதுகையில் ஓலைச்சுவடியும் வலதுகையில் எழுத்தானியுமாக முடிந்த சடையும் தாடியுடனும் வெள்ளைத்துணி போர்த்திய ஒரு மேலங்கியுடன் சப்பாணி கட்டி அமர்ந்திருக்கும் ஒரு நேரிய பார்வை கொண்ட தோற்றமே எம் கண்முன் வந்து நிற்கும். திருவள்ளுவர் என்று கூகுலில் தேடினாலும் அவ்வாறான ஒரு தோற்றத்தையே காண்பீர்கள்.

ஆனால் யாழ்ப்பாணத்தை அந்தப்புரமாக்கிக் கொண்டிருக்கும் ஹொட்டல் உரிமையாளர்களும் மோடியின் மோமயம் பருகி மயங்கிக் கிடப்பவர்களும் இணைந்து யாழ்ப்பாணத்தில் வள்ளுவர் சிலையைத் திறந்து வள்ளுவத்தையே சிதைத்துள்ளனர். ஆறுமுகநாவலருக்கும் வள்ளுவருக்கும் வித்தியாசம் புரியாமல் சிலையொன்றைத் திறந்து வள்ளுவனை கேவலப்படுத்தி உள்ளனர்.

உலகப் பொதுமறை என அழைக்கப்படக்கூடிய திருக்குறளை திருவள்ளுவர் எழுதியிருந்தார். திருக்குறள் தமிழ் மொழியின் மிக முக்கியமான ஒப்பற்ற பொக்கிஷம் ஆகும். அதில் இருக்கக்கூடிய தத்துவ கருத்துக்கள் மற்றும் மனித வாழ்க்கைக்கு தேவையான விடயங்கள் ஆகியவற்றினால் திருவள்ளுவர் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. திருக்குறள் ஒரு தமிழ் நூல் என்பதால் திருவள்ளுவர் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினதும் அடையாளமாக கருதப்படுகின்றார். “1330 பாடல்களைக் கொண்டுள்ள திருக்குறளில் எந்த ஒரு இடத்திலும் தனித்த ஒரு இனம் சார்ந்தோ – மதம் சார்ந்தோ –  ஒரு இனக் குழுமம் சார்ந்தோ –  சாதி சார்ந்தோ – எந்த குறிப்புகளும் இல்லை” என்பதே திருக்குறள் இன்று உலகப் பொதுமறை என கொண்டாடப்படுவதற்கான மிக முக்கியமான காரணமாகும்.

இப்படியாக சிறப்பு கொண்ட திருவள்ளுவரின் சிலை இன்று காவி அடிக்கப்பட்ட நிலையில்  யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூன்று பட்டையுடன் ஒரு விதமான காவி வர்ணத்துடனான ஆடையை அணிந்து கொண்டு  காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார் திருவள்ளுவர். இந்த நிலை இன்னும் தீவிரம் அடையப் போகின்றது என்பது ஆக கவலையான விடயம். இதே நிலை தொடரும் பட்சத்தில் இந்தியாவில் இந்துத்துவாவாதிகள் கோமியம் என மாட்டு மூத்திரத்தை குடிப்பது போல இலங்கை தமிழர்களும் தங்களை இந்துத்துவாவாதிகள் என – இந்துக்கள் என நிரூபிப்பதற்காக மாட்டு மூத்திரத்தை  குடிக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டாலும் ஏற்படலாம்.

இந்தியாவில் மிகத்தீவிரத்தன்மையை எட்டியுள்ள இந்துத்துவாவாதம் தமிழ்நாட்டில் மிக வேகமாகவும் – மிக ஆழமாகவும் ஊடுருவியுள்ள நிலையில் அதனுடைய தாக்கம் இன்று இலங்கையையும் குறிப்பாக இலங்கையின் தமிழர் பகுதியையும் பற்றி பிடிக்க ஆரம்பித்துள்ளது. முக்கியமாக இலங்கையில் இந்துத்துவா கருத்துக்களை காவிச் செல்வோரில்  பெரும்பாலானோர் தமிழ் தேசியவாதிகளாக காணப்படுவது மிகப்பெரிய அபத்தமாகியும் உள்ளது. அதாவது இலங்கையில் இந்துத்துவா செல்வாக்கை ஏற்படுத்துவதன் மூலம் இந்தியாவுக்கு சார்பான ஒரு நிலைப்பாட்டில் பயணித்து இலங்கை தமிழர்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கப் போகிறோம் என்பது போன்றதான பாணியிலும் – தமிழர் உரிமைகளை பாதுகாப்பதற்கு இந்து சமயம் ஒன்றை ஒரே தீர்வு எனவும் இந்த கண்மூடித்தனமான தேசியவாதிகளும் – இந்துத்துவாவாதிகள் பகற் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் அதீத எழுச்சி எவ்வாறு தமிழ்நாட்டை பாதித்து தமிழரின் வரலாற்றை காவி மயப்படுத்திக் கொண்டிருக்கின்றதோ அதே நிலை இலங்கையிலும் குறிப்பாக தமிழர் பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது. இதன்  நீட்சியாகவே அண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவரான அண்ணாமலை  அவர்களின் இலங்கை வருகையை குறிப்பிட முடியும். இன்று மட்டுமல்ல பிரித்தானியர் இலங்கையை விட்டு சென்ற காலம் தொடங்கி இன்று வரை இலங்கையை பகடை காயாக பயன்படுத்தி வரும் இந்தியாவின் அரசாங்கங்கள் தன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்காவும் – தென்னாசியாவில் இந்தியாவின் ஏகாதிபத்திய வாத வளர்ச்சிக்காகவும் பல செயல்பாடுகளை மேற்கொண்டு வந்திருக்கின்றன.  அதன் ஒரு கட்டமாகவே இலங்கை தமிழர்களை தன்னுடைய ஒரு துருப்புச் சீட்டாக இந்தியாவில் பதவியேற்ற அரசாங்கங்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றன. இது தெரிந்திருந்தும் கூட இலங்கையின் தமிழ் தேசியம் பேசிய தலைவர்கள் இந்தியா மட்டுமே இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் என்கின்ற நிலையில் மடிப்பிச்சை  கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு புதிய வடிவமே இலங்கையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்துத்துவாவாதமாகும்.

இந்த இந்துத்துவவாதிகள் இலங்கை தமிழர்களுக்கு இடையே மதரீதியான சாதிய ரீதியான முரண்பாடுகளைத் தூண்டிவிடுகின்றது. இலங்கையில் இதுவரை காலமும் காணப்பட்டு வரும் இனம் சார்ந்த முரண்பாட்டை மதம் சார்ந்து மாற்ற முற்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவான உண்மை. இந்தியாவில் எவ்வாறு இந்துத்துவா கட்சிகள் இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துக்களை விதைத்து தொடர்ச்சியாக மதக்கலவரங்களை மேற்கொண்டு அதனூடாக அரசியல் லாபமிட்டுக் கொண்டிருக்கின்றனரோ அதே வடிவம் இலங்கையின் தமிழர் பகுதிகளிலும் இன்று உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.  அண்மையில் திருக்கேதீஸ்வரம் பகுதியில் ஏற்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் இந்து சமயத்தவர்களுக்கும் இடையிலான முரண்பாடு கூட இதனுடைய ஒரு தொடர்ச்சியே.

இது மட்டுமல்ல இலங்கையில் தமிழர் வாழும் பல பகுதிகளிலும் இன்று இரவோடு இரவாக முளைத்து கொண்டிருக்கும் சிவலிங்கங்கள் கூட இந்த இந்துத்துவாவாதிகளினுடைய செயல்பாடுகளே. ஏற்கனவே 30 வருடங்கள் சிங்களவர்களுடனான இனப்போராக முடிவடைந்துள்ள நிலையில் இன்று தமிழர் என்கின்ற இனத்துக்குள்ளேயே மத போர் ஒன்றை இந்த இந்துத்துவாவாதிகள் உருவாக்க முற்படுகின்றனர்.

குறிப்பாக நேற்று வெளியிடப்பட்டிருந்த அறிக்கை ஒன்றில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 2000 வரையிலான கர்ப்பிணிப் பெண்கள் வறுமைக் கோட்டுக்குள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதுபோல் பிறந்த 50 நாட்களேயான ஒரு குழந்தை மந்த போசணை நிமித்தம் உயிரிழந்துள்ளது. அதுபோல அண்மைய காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாது தவிக்கின்ற பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாடசாலை கல்வியை கைவிடும் ஒரு துர்பாக்கிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவையும் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற – நாளாந்த செய்திகளில் நாம் காண்கின்ற மிக முக்கியமான அவல நிலையே. இவர்களுக்கு உதவி செய்யத்தான் இவர்கள் யாருக்கும் மனதில்லை. இதை விடுத்து கடவுள்களுக்கு சிலை வைத்து மனிதர்களை காபட்பாற்ற முயன்று கொண்டிருக்கிறார்கள் இந்த இந்துத்துவாவாதிகள்.

ஆணையிறவில் பல கோடிகள் செலவில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய நடராஜர் சிலை, சந்திக்கு சந்தி முளைத்துக் கொண்டிருக்கும் புதிய கோயில்கள், யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை இந்துத்துவாவாதிகள் இலங்கையில் தமிழ் தேசியத்தை நிலை நாட்டுகிறோம் எனக் கூறி இந்தியாவில் காணப்படும் மதவாத அரசியலை இலங்கையின் தமிழர் பகுதியில் புகுத்துவதற்கு மிக கடினமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களே ஆகப்பெரிய துணையாக இருக்கிறார்கள். இதன் உச்சகட்ட அநியாயம் இந்த இந்துத்துவாதிகளை நம்பி புலம்பெயர்  தேசங்களில் இருந்து கோயில்களை கட்டுவதற்காக கோடிக்கணக்கான பணம் கொட்டப்படுகின்றதாகும்.

யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கின்ற நிகழ்வில் உரையாற்றிய திரு. ஆறுதிருமுருகன் இதனை அவர் வாயினாலே ஒத்துக் கொண்டிருந்தார். அங்கு பேசிய அவர் கடவுளின் அருளால் புலம்பெயர் தேசங்களில் வாழக்கூடிய தமிழர்களின் இடத்தில் ஒரு சக்தி பிறந்திருக்கிறது. அந்த சக்தியின் ஊடாக இங்கு கோடானு கோடியை கொடுத்து பல கோயில்களை கட்டுகிறார்கள்,” என பெருமையாக கூறியிருந்தார்.

இந்த இந்துத்துவாவாதிகள் தொடர்பில் தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான தருணம் உருவாகியுள்ளது. இந்தியாவில் இந்துத்துவாவாதம் தமிழ் மொழியின் இருப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகி உள்ள நிலையில் இலங்கையிலும் இந்த நிலை நீடிப்பதற்கான வாய்ப்புகளே அதிகரித்துள்ளன. ஏற்கனவே பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து உரிமைகளை பாதுகாப்பதற்காக தமிழினம் ஏதோ ஒரு விதமாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த இந்துத்துவவாதிகளின் வருகை  வடக்கு – கிழக்கில்  இருக்கக்கூடிய தமிழர்களிடம் புதிய பிரிவினைகளை ஏற்படுத்தி அதன் ஊடாகவும் அரசியல் லாபமீட்ட முனையும் இந்தியாவிற்கு துணை போகுமே தவிர தமிழர் பகுதிகளில் எந்த ஒரு ஆரோக்கியமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதே உண்மை.

 

“என்னை சிறையில் அடைத்து கடுமையான மன உளைச்சலையும், உடலியல் துன்பங்களையும் ராஜபக்ஸ அரசு செய்ததது.”- றிசாத் பதியுதீன்

“என்மீது அபாண்டம் சுமத்தி என்னை சிறையில் அடைத்து கடுமையான மன உளைச்சலையும், உடலியல் துன்பங்களையும் ராஜபக்ஸ அரசினர் செய்தனர்.” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களையும், மக்களையும் சந்திக்கும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை வெள்ளிக்கிழமை (17) மாலை கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் சகிதம் மேற்கொண்டிருந்த அவர் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றும் அரசியலுக்கு இனியும் நாம் வாய்ப்பு கொடுக்கக் கூடாது. இந்த பிரதேசத்தில் வீதி பிரச்சினைகள், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டு பிரச்சினைகள், ஏழைகளின் தொழிவாய்ப்பு போன்ற பல பிரச்சினைகள் இருக்கிறது.

அவற்றை தீர்க்கும் எந்த பொறிமுறைகளும் இவ்வளவு காலமும் உள்ளுராட்சி சபைகளை ஆட்சி செய்தவர்களிடம் இல்லை. மக்கள் விழித்துக் கொள்ளாதவரை இவர்கள் தொடர்ந்தும் எம்மை ஏமாற்றுவார்கள். ஒரு தடவை அதிகாரத்தை எங்களிடம் தந்தால் நாங்கள் முன்மாதிரியான சபையாக இந்த சபைகளை மாற்றியமைப்போம்.

என்மீது அபாண்டம் சுமத்தி என்னை சிறையில் அடைத்து கடுமையான மன உளைச்சலையும், உடலியல் துன்பங்களையும் ராஜபக்ஸ அரசினர் செய்தனர். எனக்கு சிறையில் இடம்பெற்ற அநீதிகளை அப்போதைய நீதியமைச்சர் அலி சப்ரியையும் வைத்துக்கொண்டு அவர்களுக்கு விளக்கினேன்.

இவ்வாறான சித்திரவதைகளை செய்யாமல் எனது மார்க்க கடமைகளை சுதந்திரமாக செய்ய வாய்ப்புக்களை ஏற்படுத்தி தருமாறு கேட்டேன். அப்போது அவர்களின் திட்டம் எனக்கு விளங்கியது. ஆனாலும் இறைவனின் நாட்டத்தினால் அடுத்த வாரமே நீதிமன்றம் என்னை விடுதலை செய்தது. எனக்கு இவர்கள் செய்த அநீதிக்கு பயந்து நான் சமூகத்தை அடமானம் வைக்க ஒருபோதும் எண்ணவில்லை.

அதனால் இறைவன் என்னை இப்போது கௌரவப்படுத்தி உள்ளான். பொய்யாக சோடிக்கப்பட்ட அத்தனை இனவாத அஜந்தாக்களும் தோற்று விட்டது. நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் செயலணிக்கு இனவாத முத்திரை குத்தப்பட்ட ஞனசாரவை தலைவராகவும் நியமித்தார்கள். ஆனால் இறுதியில் வென்றது சாத்தியமே. மக்களை ஏமாற்றி யாரும் அதிகாரத்தில் நீடித்திருக்க முடியாது என்றார்.