சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும்வகையில் இலங்கையின் அதிகாரத்துவ அமைப்பு எளிமையானதாகவும் எளிதானதாகவும் இருக்கவேண்டும் என சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் துரிதமாக முதலீட்டாளர்களை கவரவிரும்பினால் அதிகாரத்துவம் என்பது எளிமையானதாகவும் இலகுவானதாகவும் காணப்படவேண்டும் என தெரிவித்துள்ள அவர் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளிநாட்டு நாணயங்களிலேயே மேற்கொள்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை இலங்கை நோக்கி திருப்புவது என்றால் இரண்டு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம் முதலாவது அதிகாரத்துவ முறைமை இதனை இலகுவானதாகவும் எளிமையானதாகவும் மாற்றவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு முதலீடு செய்வதற்காக முதலீட்டாளர்கள் வரும்போது அவர்கள் 15 அமைச்சுகளிற்கு செல்லவேண்டிய நிலை ஏற்படக்கூடாது அவர்கள் ஒரு இடத்திலேயே முதலீடு தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் பூர்த்தி செய்யும் நிலைமை காணப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்தியா சீனாவுடன் நெருக்கமாக இணைந்து செயற்படவேண்டும்,உலகின் 80 வீதமான சோலர் பனல்கள் மின்சார பற்றறிகள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன உலகின் 74 வீதமான மின்சார கார்கள் சீனாவிலேயே தயாரிக்கப்படுகி;ன்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வரவேண்டும் என தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்;ம் அதானி நிறுவனம் மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தை ஆரம்பிக்கும் யோசனையை முன்வைத்துள்ளது,மேலும்; திருகோணமலையில் சூரிய மின்சக்தி திட்டம் ஒன்றிற்கான யோசனையும் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இதனை பயன்படுத்தி இந்தியா சீனாவின்முதலீடுகளை பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின்கடன்மறுசீரமைப்பிற்கான உறுதிமொழி போன்றவை காரணமாக இலங்கை எதிர்காலம் குறித்து சிந்திக்கலாம் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உரியகொள்கைகளை உருவாக்காவிட்டால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்காக வேறு நாடுகளிற்கு செல்வார்கள் என தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம் சர்வதேச நிறுவனங்களால் பல நாடுகளில் முதலீடு செய்ய முடியும் இலங்கை அதிகளவு அதிகாரத்தன்மை கொண்டதாக காணப்பட்டால் அவர்கள் வேறு நாடுகளிற்கு செல்வார்கள் எனவும்தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க பசுமை பொருளாதாரம் குறித்தும் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் அதிக அர்ப்பணிப்புடன் உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.