13

13

ஓமானில் பாலியல் தொழிலாளர்களாக ஏலம் விடப்பட்ட இலங்கை பெண்கள் – விசாரணைகளை ஆரம்பித்தது ஆரம்பித்தது ஐ.நா !

ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் குறித்து ஐநா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள் தொடர்பிலான ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் பெப்ரவரி ஏழாம் திகதி அவர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் 60 நாட்களிற்குள் பதிலளிக்கவேண்டும் என்ற போதிலும் இதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை.

ஜனாதிபதிக்கான குறிப்பிட்ட கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ள இரண்டு விசேட அறிக்கையாளர்களும் ஓமானிற்கு பாலியல் நோக்கத்திற்காக அல்லது தொழில்ரீதியான துஸ்பிரயோகத்திற்காக கொண்டு செல்லப்பட்ட பெண்கள் எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுற்றுலா விசாவில் ஓமானிற்கு சென்ற 90 பெண்கள்  இலங்கை அரசாங்கத்தின் புகலிட இல்லம் உட்பட புகலிட இல்லங்களில் சிக்குண்டனர் என தமக்கு கிடைத்துள்ளதாக  அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

பல பெண்கள் ஓமானிற்கு பாலியல் நோக்கத்திற்காக அல்லது தொழில்ரீதியான துஸ்பிரயோகத்திற்காக கடத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் கிடைக்கின்றன  ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழில்வாய்ப்பு என்ற போர்வையிலேயே இவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனவும் ஐநாவின் அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில பெண்கள் ஏலத்தில் விடப்பட்டனர் தனியார் வீடுகளில் வைக்கப்பட்டு துஸ்பிரயோகங்களிற்கு உட்படுத்தப்பட்டனர் போதுமான உணவோ அல்லது உறங்குவதற்கான வசதிகளோ இருக்கவில்லை எனவும் ஐநாவின் அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் நடைபெற்ற சீக்கியப் படுகொலைகளை இனப்படுகொலை என குறிப்பிட்டு கலிபோர்னியா மாகாண சட்டசபையில் தீர்மானம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு ஒக்டோபர் 31-ந் திகதி அவரது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. இதில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் சீக்கியர்களுக்கு எதிரான இந்த வன்முறையை இனப்படுகொலை என்று முறைப்படி அங்கீகரித்து இந்தியாவை கண்டிக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்றத்தை கலிபோர்னியா மாகாண சட்டசபை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த மாகாண சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சீக்கியரான ஜஸ்மீத் கவுர் பெயின்ஸ் என்ற பெண் உறுப்பினர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். அதை தொடர்ந்து இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு – பாடசாலை சிறுவர்கள் உட்பட 133 பேரை படுகொலை செய்த இராணுவம் !

மியன்மாரில் பெண்கள் மற்றும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடசாலை சிறுவர்கள் உட்பட 133 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மத்திய சகைன் பிராந்தியத்தில் உள்ள சமூகக் கூடம் ஒன்றின் மீது வான் தாக்குதல் நடத்தியதை மியன்மார் இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.

பா சி கியி கிராமத்தில் உள்ள இராணுவ ஆட்சியை எதிர்க்கும் ஆயுதக் குழு ஒன்றின் அலுவலகம் திறக்கப்படும் விழா மீது பாதுகாப்புப் படை கடந்த செவ்வாய்க்கிழமை (11) தாக்குதல் நடத்தியதாக இராணுவ பேச்சாளர் சோ மின் டுன் குறிப்பிட்டுள்ளார்.

இதில் கொல்லப்பட்ட சிலர் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான போராளிகள் என்றும் சிவில் உடை அணிந்த சிலரும் பலியாகி இருப்பதாகவும் அவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

சமூகக் கூடத்தின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை காலை போர் விமானங்கள் குண்டுகளை வீசியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவீச்சுக்குப் பின்னர் உயிர் தப்பியவர்கள் மீது ஹெலியில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்திருக்கும் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், “இதனைச் செய்தவர்கள் பொறுப்புக் கூற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

இதனை ஒரு பயங்கரச் சம்பவம் என்று வர்ணித்திருக்கும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டுர்க், சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.

மியன்மாரில் 2021 பெப்ரவரியில் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம் அதன் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வான் தாக்குதல்களை பயன்படுத்துவதை அதிகரித்துள்ளது.

இராணுவ சதிப்புரட்சிக்கு சகைன் பிராந்தியத்தில் எதிர்ப்பு வலுத்ததோடு அந்த சமூகத்தினர் சொந்த ஆயுதக் குழுவை உருவாக்கி செயற்படுவதோடு சொந்தமாக பாடசாலை மற்றும் மருத்துவ நிலையங்களையும் நடத்தி வருகின்றனர்.

மன்னாரில் 16 மில்லியன் ரூபா பெறுமதியான போதைமாத்திரைகள் மீட்பு.!

மன்னார் – இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவினருடன் இணைந்து மன்னார் சிலாவத்துறை பகுதியில் இன்று (13) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 1 லட்சத்து 11 ஆயிரம் போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 16 மில்லியன் ரூபா என தெரிய வந்துள்ளது.

சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வந்து குறித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கடத்தல் பொருட்கள் யாவும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பிரதேச ஊழல் ஒழிப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கடத்தல் பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டதுடன் இந்த நடவடிக்கையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஒலிம்பிக் போட்டியிலும் , ஆசிய கிண்ண போட்டியிலும் விளையாட இலங்கை அணிக்குத் தடை !

இலங்கையின் ஆடவர் கால்பந்தாட்ட அணி, முக்கியமான இரு போட்டிகளின் தகுதிகாண் சுற்றுகளில் பங்கேற்பதற்கான தகுதியை இழந்துள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்துக்கு, சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (FIFA) அறிவித்துள்ளது.

இலங்கையின் ஆடவர் கால்பந்தாட்ட அணி, 2024 பாரிஸ் ஒலிம்பிக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான ஆசிய தகுதிகாண் போட்டி மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 23 வயதுக்குட்பட கத்தார் ஆசியக் கிண்ணத் தகுதிகாண் போட்டி ஆகியவற்றில் பங்கேற்க தகுதி இழந்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை, கடந்த ஜனவரி 21 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளது. அதன்படி, அந்தத் தடை நீங்கும் வரை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் எந்தொரு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சரால் நடத்தப்பட்ட தேர்தலில் மூன்றாம் தரப்பின் தலையீட்டை இடம்பெற்றதாக, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் மே 25 ஆம் திகதி குறித்த போட்டிகளுக்கான அட்டவணை தயாரிக்கப்படவுள்ளதாகவும் அதில் இலங்கை ஆடவர் கால்பந்தாட்ட அணி இடம்பெறாது எனவும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளது.

தனது மகளின் தலையில் அசிட் ஊற்றிய தந்தை !

தனது மகளின் தலையில் அசிட் ஊற்றிய தந்தைக்கும் பட்டதால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவரது  மகளும்வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் அதிக மது அருந்தி காணப்பட்டமையும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த நபர் அதிக மதுபோதையில் வீட்டுக்குச் சென்று தனது  மகள் மற்றும் குடும்பத்தினரை துன்புறுத்துவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர் 25 வயதுடைய பெண்  என்பதுடன் சந்தேகநபர் 52 வயதுடையவராவார்.

சந்தேக நபர் புலத்சிங்கல பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றுபவர் என்பதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் அதிகரிக்கும் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை!

இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகள் ஒரு இலட்சத்து முப்பத்தாறாயிரத்து இருநூற்று அறுபத்தைந்து பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது.
குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் தரவு அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள், இந்த சதவீதம் 15.5 சதவீதமாக உள்ளது. (15.5%)

ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவாகியுள்ளதுடன், இருநூற்றி இருபத்தி இரண்டு குழந்தைகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாநகர சபைக்குள் மட்டும் இந்த வயதுக்குட்பட்ட எடைக்குறைந்த குழந்தைகள் ஆயிரத்து நானூற்று அறுபது பேர் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

வயது தொடர்பான எடை இழப்பு குறைந்த எடை என்றும், குட்டை மற்றும் மெலிந்த குழந்தைகள் எடை குறைவான குழந்தைகள் என்றும் அடையாளம் காணப்படுகிறார்கள்.

குடும்ப சுகாதார சேவைகள் அலுவலகத்தின் தரவு அறிக்கைகளின்படி, நகர்ப்புறம், கிராமம் மற்றும் தோட்டங்கள் என அனைத்துத் துறைகளிலிருந்தும் எடை குறைந்த குழந்தைகளின் அறிக்கை அதிகரித்து வருகிறது.

உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஆபத்துக் குழுக்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கிடையில் ஊட்டச் சத்துக் குறைபாடுகள் உருவாகி வருவதால் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

9,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது !

9,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.

பொலன்னறுவை அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்கு இந்த இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பொலன்னறுவை பகுதியில் உள்ள முறைப்பாட்டாளரின் வீட்டில் மின்னேரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ளனர்.

சந்தேகநபர்கள் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் ஆராய விசேட குழு !

இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவது தொடர்பான ஆய்வுக்காக 4 அமைச்சுக்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் வனவிலங்கு, நீதி, பெருந்தோட்டங்கள் மற்றும் விவசாய அமைச்சுக்களின் அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் உள்ள குரங்குகளை சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இது சமூகங்களில் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயன்முறை எப்படி மேற்கொள்ளப்படும் என்பது குறித்து இதுவரை சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

இதன்படி, இலங்கையின் குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.