08

08

திருகோணமலையில் சிறுவன் தற்கொலை !

திருகோணமலை உப்புவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு (07) இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் 17 வயதான வசந்தராஜா நிலுஜன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளதாக  உப்புவெளி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை உப்புவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு (07) இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் 17 வயதான வசந்தராஜா நிலுஜன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளதாக  உப்புவெளி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பாலஸ்தீன பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய இஸ்ரேல் – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் !

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள பாலஸ்தீன பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய இஸ்ரேலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெத்தலகேமில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அந்த பள்ளி கட்டிடமானது ஸதா விரோதமாக கட்டப்பட்டதாகவும் அங்கு படிக்கும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறி அப்பள்ளியை இடிக்க இஸ்ரேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பேரில் இஸ்ரேல் அதிகாரிகள் அப்பள்ளியை இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் அங்கு கல்வி பயின்று வந்த குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது. இது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என  தெரிவித்துள்ளது. பள்ளி இருந்ததற்கான தடையாமே இல்லாமல் இடித்து அளிக்கப்பட்ட சம்பவத்தால் பாலஸ்தீனியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 பேருக்கு தூக்கு தண்டனை !

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்று மனித உரிமைகள் குழு ஒன்று கூறியுள்ளது. ஈரான் நாட்டில் கடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தூக்கிலிடப்படுகின்றனர். அதனால் ஈரான் அரசு நிர்வாகத்தை மனித உரிமை அமைப்புகள் கண்டித்து வருகின்றன. இந்நிலையில் அந்நாட்டில் செயல்படும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரான் அரசு இந்தாண்டில் மட்டும் இதுவரை 194 பேரை தூக்கிலிட்டு கொன்றுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர். இவர்களில் பாதி பேர் ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தூக்கிலிடப்பட்ட 42 கைதிகளில் பெரும்பாலானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றவர்கள் ஆவர். கடந்த 10 நாட்களில் மட்டும் சராசரியாக ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ளது. முன்னதாக ஈரானின் முன்னாள் துணை பாதுகாப்பு அமைச்சர் அலிரெசா அக்பரி, இங்கிலாந்து நாட்டிற்கு ஈரானின் அணுசக்தி ரகசியங்களை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் ஜனவரி மாதம் தூக்கிலிடப்பட்டார். கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 582 கைதிகளை தூக்கிலிட்டதாக ஐ.எச்.ஆர் கூறுகிறது. அதே 2021ம் ஆண்டில், 333 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் போதை மற்றும் சமூகசீர்கேட்டிலிருந்து இளைஞர் யுவதிகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம் !

யாழ்ப்பாணம் வலி.வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் போதை மற்றும் சமூகசீர்கேட்டிலிருந்து இளைஞர் யுவதிகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

போதை மற்றும் சமூகசீர்கேட்டிலிருந்து இளைஞர் யுவதிகளை பாதுகாக்க வேலைத்திட்டம்!!

பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன், சர்வோதயம் அமைப்பின் அனுசரணையுடன் பிரதேச செயலகத்துடன் இணைத்து குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

உதவி பிரதேச செயலாளர் சங்கீதா கோகுலதர்சன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியத்தின் தலைவரும், லண்டன் வோள்தம்ஸ்ரோம் கற்பகவினாயகர் ஆலய அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, போதை மற்றும் சமூக சீர்கேட்டிலிருந்து இளைஞர் யுவதிகளை பாதுகாக்க பிரதேச மட்ட குழு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை – யாழில் 85 கிலோகிராம் கஞ்சா மீட்பு !

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் இன்று காலை பெருந்தொகையான போதைப் பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 85 கிலோகிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்றையதினம் மன்னாரில் 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் – மதவாச்சி (ஏ – 14)  பிரதான வீதியில் வைத்து குறித்த  ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் பயன்படுத்திய கார் ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

சித்திரைவதைக்குள்ளாகி இலங்கை தூதரகத்தில் தஞ்சடைந்துள்ள 74 பணிப்பெண்களை் தொடர்பில் உருக்கமாக கோரிக்கை !

ஓமான் நாட்டுக்கு பணிப் பெண்களாக வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு சித்திரைவதைக்குள்ளாகி இலங்கை தூதரகத்தில் தஞ்சடைந்து 9 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 74 பணிப்பெண்கள் தங்களை நாட்டிற்கு அனுப்புமாறு  உருக்கமாக கோரிக்கை விடுத்து காணொளி வெளியிட்டுள்ளனர்.

நாட்டிலுள்ள முகவர்கள் ஊடாக ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்களாக சென்ற பணிப் பெண்கள் வீட்டின் உரிமையாளர்களால் அடித்தும், நெருப்பால் சூடு வைத்தும் மற்றும் சம்பளம் வழங்காமை போன்ற பல்வேறு சித்திரவதை காரணமாக அங்கிருந்து வெளியேறி இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவ்வாறு  தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன்,  தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு உறவினர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியாதளவிற்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு திருமணம் கடந்த உறவின் மூலம் கருவுற்றவர்களை உடனடியாக நாட்டுக்கு அனுப்புகின்றனர். ஆனால் ஆரோக்கியமாக உள்ளவர்கள்  எவரையும் நாட்டுக்கு அனுப்பாது 9 மாதம் வரை தடுத்து வைத்துள்ளதுடன் பலர் பல நோய்களினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதுடன் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் போல எங்களை நடாத்துகின்றனர்.

இங்கு நடக்கும் அட்டூழியங்கள் எதுவும் வெளியே தெரிவிக்க முடியாத நிலையிலுள்ளதுடன் இங்கிருந்து நாட்டுக்கு செல்லுகின்ற பெண் ஒருவரின் கையடக்க தொலைபேசியில் நாங்கள் உரையாடி அவரிடம் இதனை வெளியிடுமாறு தெரிவித்து கதைத்து அனுப்பியுள்ளோம். எனவே எங்களை இங்கிருந்து காப்பாற்றுங்கள் கைகூப்பி கேட்கின்றோம் என கோரிக்கை விடுத்துள்னர்.

ராஜபக்சக்களுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு!

முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்க்ஷ, பசில் ராஜபக்க்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி   எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு திங்கட்கிழமை (08) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இரட்டிப்பாக அதிகரித்துள்ள இலங்கையின் வறுமை வீதம் !

இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் ஈராண்டுகளுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம் 2021ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வறுமை வீதம் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றது.

நாட்டின் வறுமை நிலை 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 13.1 வீதத்திலிருந்து 25 வீதம் வரை அதிகரித்துள்ளது.

2022ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சனத்தொகையில் மேலும் 2.5 மில்லியன் பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 7.4 வீதமாக பதிவானதுடன், அந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 9.4 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பங்கள், பொருளாதார நெருக்கடியுடன் ஏற்பட்ட உணவு பாதுகாப்பின்மை பிரச்சினையினால் சுகாதாரம் மற்றும் கல்விக்காக செலவிடும் செலவுகளை குறைத்துக்கொண்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குடும்பங்களின் வாழ்வாதார வழிமுறைகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் சில வருடங்களுக்குள் வறுமை நிலை 25 வீதத்தையும் கடந்துசெல்லும் என உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது.

2023 – 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதார மறுசீரமைப்பின் ஊடாக நாட்டின் வறுமை நிலை மேலும் அதிகரித்துச் செல்லுமெனவும் உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது.

மன்னாரில் சிறுவர்களை இலக்கு வைத்து சுற்றித்திரியும் வாகனங்கள் – மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் எச்சரிக்கை !

மன்னாரில் அண்மை காலங்களாக சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றி திரிவதாகவும் சிறுவர்களை இலக்கு வைத்து அவர்களை கடத்தும் நோக்கில் சிலர் மன்னார் மாவட்டத்திற்குள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் (8) துரித விசாரணை முன்னெடுக்கப்பட்டதோடு காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவரை வாகனம் ஒன்றில் வந்தவர்கள் இனிப்பு பண்டங்களை வழங்கி பலவந்தமாக ஏற்றிச் செல்ல முயற்சி செய்யப்பட்டதாக குறித்த மாணவர் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த மாணவன் கல்வி கற்கும் பாடசாலைக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் இன்றைய தினம் (8) காலை குறித்த பாடசாலைக்குச் சென்று மாணவனிடம் விசாரணைகளை மேற்கொண்டேன்.

இதன் போது மேலும் ஒரு மாணவனை இன்று திங்கட்கிழமை(8) காலை பாடசாலைக்குச் செல்லும் போது இனிப்பு பண்டங்களை வழங்கி வாகனத்தில் ஏற்ற முற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடையம் குறித்து மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதோடு,பாடசாலை பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

மாணவர்கள் கவனம் தொடர்பாக பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் குறித்து மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் என்னுடன் தொடர்பை ஏற்படுத்தி துரித நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள்.” என தெரிவித்தார்.

இதேவேளை, கல்முனை – உடையார் வீதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் ஒருவரும் நேற்றையதினம் காணாமல்போயுள்ள நிலையில், தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.