19

19

ரஷ்ய வைரங்களை தடை செய்ததது இங்கிலாந்து !

உக்ரைன், ரஷ்ய போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்ய வைரங்களை இங்கிலாந்து தடை செய்துள்ளது. ரஷ்யாவிலிருந்து தாமிரம், அலுமினியம், நிக்கல் உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் ரஷ்ய வைரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். அனைத்து வகையான பொருளாதார தடைகளையும் சமாளிக்க பிரிட்டன் ஜி 7 உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து தொடர்ந்து பணியாற்றி வருவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

ஜி7 நாடுகள் உக்ரைனுடன் துணை நிற்பதை ரஷ்யாவிற்கு காட்ட விரும்புவதாக இந்திய வம்சாவளி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எப்போதும் அமைதி மற்றும் உலக பொருளாதார பாதுகாப்பை ஊக்குவிப்பதில் தான் ஜி7 கவனம் செலுத்துவதாகவும் ஜி7 நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக நின்று இந்தோ- பசுபிக் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதை புட்டனுக்கு காட்ட வேண்டும் எனவும் ரிஷி சுனக் தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ மாகாண ஆளுநர்களை மக்கள் தெரிவு செய்யும் முறை உருவாக்கப்பட வேண்டும்.” – அருட்தந்தை மா.சத்திவேல்

ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாக வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெள்ளிக்கிழமை (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு ,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு ஜனாதிபதியால் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  வடக்கிற்கும், கிழக்கிற்கும் இரண்டு தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு ஊவாமாகணத்தின் முன்னாள் அமைச்சர் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தமிழர்கள் நியமிக்கப்பட்டனர் என பெருமை கொள்வோரும் உண்டு. இதில் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆளுநர்கள் ஜனாதிபதியின் தேவையை நிறைவேற்றுவர்களை தவிர மக்கள் கோரிக்கைகளை செவிமடுப்பவர்களாகவே இருப்பார்கள். செந்தில் தொண்டமான் ஊவாமாகண சபையின் அனுபவம் உள்ளவர். அவரை ஊவா மாகாணத்திற்கு ஆளுநராக நியமிக்காதது ஏன்? வேறொரு தமிழரை கிழக்கு மாகாணத்திற்கு நியமிக்காததன் நோக்கம் என்ன? அதுவே ஜனாதிபதியின் நரி தந்திரம்.

தமிழர்கள் அதிகமாக வாழும் மத்திய மற்றும் ஊவாமாகாணங்களுக்கு இது நாள் வரை தமிழர்களை எவரும் ஆளுநர்களாகவோ முதலமைச்சர்களாகவோ நியமிக்கப்படவில்லை. அந்த அளவு துணிவு கட்சிகளுக்கும் கிடையாது. மலையக மக்களின் வாக்குகள் வேண்டும். ஆனால் தமிழர்களை அதிகாரத்தில் வைத்து விடக்கூடாது. இவ்வாறு நியமித்தால் மலையக பிரதேசத்தை மலையக தமிழர்களின் தேசியத்தின் அடையாளமாக அடையாளப்படுத்தி விடுவார்கள் என்று பயம். இது சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் கூறலாம்.

ஏற்கனவே அமைச்சர் பதவி ஒன்று இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு தொண்டமான் குடும்பத்தவருக்கு கொடுக்கப்பட்ட நிலையில் அதே கட்சியை சேர்ந்த அதே தொண்டமான் குடும்பத்தைச் சார்ந்த இன்னொருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார். தற்போது அவர்களின் கட்சி முழுமையாக ஜனாதிபதியினதும் ஐக்கிய தேசிய கட்சியினதும் கைக்குள் சென்று விட்டது என்று கூறலாம். இதுவரை காலமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷரின் அரவணைப்பிற்குள் வளர்ந்தவர்கள் தற்போது ரணிலின் அரவணைப்புக்குள் சென்று விட்டனர். இது அடுத்த தேர்தலை இலக்கு வைத்து மலையகத்தை தமதாக்கும் செயற்பாடாகும்.

செந்தில் தொண்டமானின் நியமனத்தின் மூலம் தற்போது ஜனாதிபதி இந்தியாவையும் சமாளித்து விட்டார். புதிய ஆளுநராக பதவி ஏற்றுள்ள செந்தில் இந்தியா விரும்பும், இந்துத்துவா சிந்தனையாளர்கள் விரும்பும், தமிழகத்தோடு நெருங்கிய ஒருவரும் ஆவார். இனிமேல் இந்திய துணை தூதரகம் கிழக்கில் அமைந்தது போன்றது தான்.

வடகிழக்கினை சிங்கள பௌத்த தொல்லியல் திணைக்களம் வேகமாக ஆக்கிரமிக்கும் காலமிது. புதிய ஆளுநர்கள் அதற்கு என்ன செய்ய போகின்றார்கள். ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாக வேண்டும்.

வடக்கு மாகாண ஆளுநர் வாசஸ்தலத்தில் மாந்திரீக பொருட்கள் – முன்னாள் ஆளுநர் வழங்கிய பதில் !

வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி. எஸ். எம். சாள்ஸ் எதிர்வரும் வாரம் பதவியேற்க உள்ள நிலையில், வாசஸ்தலத்தினை தூய்மையாக்கும் பணி செயலக ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் உள்ள அறைகளில் போத்தல்களில் அடைக்கப்பட்ட மந்திரிக்கப்பட்ட பொருட்கள் காணப்பட்டதை அவதானித்த ஊழியர்கள் குறித்த விடயம் தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அதிகாரிகள் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரை குறித்த விடயம் தொடர்பில் வினவிய போது, அவை மந்திரிக்கப்பட்ட பொருட்கள் எனவும் அவற்றினை நிலத்தில் கிடங்குவெட்டி தாக்குமாறும் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு இந்து மத குரு ஒருவர் வரவழைக்கப்பட்டு மந்தரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் உரிய முறையில் அகற்றப்பட்டு நிலத்தில் கிடங்கு வெட்டி தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.

தங்கச்சங்கிலியை கொள்ளையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் – மடக்கிப்பிடித்த மக்கள்!

பெண் ஒருவரிடம் தங்கச்சங்கிலியை கொள்ளையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொது மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று மஹவஸ்கடுவ பகுதியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுரலிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு வழிபறியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்க பொது மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை ஒருபோதும் தாமதப்படுத்த வேண்டாம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்குள் சமர்பிக்குமாறு துறைசார் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு 08, எல்விட்டிகல மாவத்தையில் நிறுவப்பட்டுள்ள டராஸ் தலைமையகத்தை திறத்து வைக்கும் நிகழ்வில் வியாழக்கிழமை (18) உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி சேகரிப்பு பணிகளுக்காக நிறுவப்பட்டுள்ள வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் கட்டமைப்பான ரெமிஸ் (RAMIS) தொடர்பில் 1993 ஆம் ஆண்டில் தாம் பிரதமராக பதவி வகித்தபோது ஆராயப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

 

ஆனால் 2023 இலும் அதனை பற்றி பேசிக்கொண்டிருப்பது கவலைக்குரியதெனவும் நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை ஒருபோதும் தாமதப்படுத்தக்கூடாது என்பதோடு, அதனை துரிதப்படுத்துவதற்கு நிகரான பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இதன்போது டிஜிட்டல் பெயர் பலகைக்கு ஒளியூட்டி, டராஸ் தலைமையகத்தை உத்தியோகபூர்வமாக திறத்துவைத்த ஜனாதிபதி, கட்டிடத்தொகுதியை பார்வையிட்டதன் பின்னர் அதன் பணிப்பாளர்கள் குழுவுடனும் கலந்துரையாடினார்.

 

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்தும் வகையில் “ஈ – வணிகம்” யுகத்தின் ஆரம்பமாக டராஸ் நிறுவனத்தை இலங்கையில் நிறுவியமைக்காக அலிபாபா நிறுவனத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

‘’இலங்கைக்குள் டராஸ் நிறுவனம் நிறுப்பட்டுள்ளமை இணைய வணிகச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு காணப்படும் வழிமுறைகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

 

நாம் இப்போது “ஈ – வணிகம்” யுகத்திலேயே வாழ்கிறோம். இருப்பினும் எமது நாட்டிற்குள் ஈ – வணிகச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தாமதமாகிவிட்டது. டிஜிட்டல் மயமாக்கலை எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து அமைச்சர், செயலாளர், அதிகாரிகளுடன் நான் கலந்தாலோசித்தபோது அது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்கு பெற்றுத்தருமாறு அவர்களுக்கு பணிப்புரை விடுத்தேன்.

 

நாட்டிற்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அனைத்துவித முயற்சிகளையும் நாம் முன்னெடுப்போம். இந்த செயற்பாட்டை புதிதாக அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.தென் இந்தியாவின் தமிழ் நாட்டில் இந்த திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான இணையத்தள முறைமைகள் காணப்படுகின்றன. அது தொடர்பில் நான் இந்தியாவுடன் பேச்சுக்களை முன்னெடுக்கத் தயாராக இருக்கின்றேன். தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற இலங்கையில் பயன்பாட்டில் உள்ள மொழிகளே அங்கும் காணப்படுவதால் மேற்படி பணிகள் மேலும் எளிதாகும்.

 

வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் கட்டமைப்பான ரெமிஸ் (RAMIS) தொடர்பில் 1993 ஆம் ஆண்டில் தாம் பிரதமராக பதவி வகித்த போதே கூறியிருந்த போதிலும் 2023 இலும் அதனை பற்றி பேசிக்கொண்டிருப்பது கவலைக்குரியது.அதனால் இந்த பணிக்கு நாம் எந்த அளவு  காலத்தை செலவிட்டுள்ளோம் எனத் தெரிந்துகொள்ள முடியும். அதனால் ரெமிஸ் (RAMIS)  போன்ற திட்டங்கள் மூலம் நாட்டை டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை  இவ்வருடத்திற்குள்  செய்து முடிக்க வேண்டும் என்பதே பாராளுமன்றத்தினதும் எனதும் நோக்கமாகும்.   துரிதப்படுத்தும் அளவிற்கு அந்த பயணம் பயன் தருவதாக அமையும்.

 

டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரம் ஆகியவற்றை ஒன்றாக மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். பசுமை பொருளாதாரம் இன்று ஆசியாவின்  வியாபாரச் செயற்பாடாக மாறியுள்ளது. அந்த பொருளாதாரத்தின் பெறுமதி 5 ட்ரில்லியன் ஆகும். அதனை ஆரம்பிப்பதற்கு நமக்கு 5 ட்ரில்லியன்கள்  அவசியமில்லை. சில பில்லியன்கள் போதுமானது. அதனால் இந்த வேலைத்திட்டங்களோடு டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கவேண்டியது அவசியமாகும்.அதற்காக நாம் ஒருபோதும் பின்வாங்கக் கூடாது.

 

இது ஆரம்பம் மாத்திரமே. டராஸ் நிறுவனத்தில் பணியாற்றுகின்ற அனைவரும் டிஜிட்டல் மயமாக்கலை பலப்படுத்துவதற்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன். அது தொடர்பிலான உங்களது யோசனைகளை இராஜாங்க அமைச்சருக்கு  தெரியப்படுத்துங்கள்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,தொழில்நுட்ப  இராஜாங்க அமைச்சர்  கனக ஹேரத்,  டராஸ் நிறுவனத்தின்  இலங்கை  முகாமையாளர்  ரபீல் பெர்னாண்டோ, சர்வதேச விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் பணிப்பாளர் தினுக் கொலம்பகே உள்ளிட்டவர்களும்  டராஸ் நிறுவனத்தின் பணிக்குழாம் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

கார் ஏற்றுமதியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளியது சீனா !

ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளராக மாறியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் சீனா 1.07 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது 2022 முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது 58 சதவீதம் அதிகமாகும் என பிபிசி தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஜப்பானின் வாகன ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 6 சதவீதம் அதிகரித்து 954,185 ஆக உள்ளது.

மின்சார கார்களுக்கான தேவை மற்றும் ரஷ்யாவிற்கு விற்பனை செய்வதால் சீனாவின் ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன.

சீனாவின் சுங்க பொது நிர்வாகத்தின்படி, ஜேர்மனியின் 2.6 மில்லியன் வாகன ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டில் சீனா 3.2 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

ஈழத்தமிழர்களுக்காக வாதிடுவதை கனடா ஒரு போதும் நிறுத்தாது என கூறிய கனடா பிரதமர் – அதிருப்தியில் அமைச்சர் அலி சப்ரி!

யுத்த வெற்றியின் 14ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீண்டும் கனடாவுடனான இராஜதந்திரப் போரில் இறங்கியுள்ளது.

நேற்றைய தினம் கனடா பிரதமர் 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தமிழர் இனப்படுகொலை நினைவு தினம் மற்றும் யுத்தம் நிறைவடைந்த தினத்தை நினைவுகூரும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து, உள்நாட்டில் நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு உதவாது எனக் கருதும் கனடா பிரதமரின் அறிக்கையை இலங்கை கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் தனது அறிக்கையில்,

இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயரமான உயிர் இழப்புகளை இன்று நாம் நினைவுகூருகிறோம்.

முள்ளிவாய்க்கால் உயிரிழப்புகள் உட்பட, மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். காயமடைந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள், இந்த அர்த்தமற்ற வன்முறையால் ஏற்படும் வலியுடன் தொடர்ந்து வாழ்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

மோதலில் பாதிக்கப்பட்ட தமிழ்-கனேடியர்களின் கதைகள் – நான் பல ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள சமூகங்களில் சந்தித்த பலர் உட்பட – மனித உரிமைகள், அமைதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை ஒரு நிலையான நினைவூட்டல். மோதலில் பாதிக்கப்பட்ட தமிழ்-கனேடியர்களின் கதைகள் உட்பட, கடந்த பல ஆண்டுகளாக நான் நாடு முழுவதும் உள்ள சமூகங்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கவனத்தில் எடுத்துக் கொண்டேன்.

இதன்காரணமாகவே, கடந்த ஆண்டு மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்கும் பிரேரணையை பாராளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது. மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் உரிமைகளுக்காகவும், அத்துடன் இலங்கையில் தொடர்ந்து இன்னல்களை எதிர்நோக்கும் அனைவருக்காகவும் கனடா வாதிடுவதை நிறுத்தாது என்று குறிப்பிட்டிருந்தார்.

விவசாய பயிர்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கி அனுமதிப் பத்திரத்தை வழங்க தீர்மானம் !

விவசாயத்தின்போது விவசாய பயிர்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கி அனுமதிப் பத்திரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பயிர்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை பாவிப்பது தொடர்பில் முன்னர் காணப்பட்ட சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்காக கொண்டிருக்கவேண்டிய பயிர்ச்செய்கை நிலப்பரப்பின் அளவை 5 ஏக்கர் வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

ஒரு வருடத்துக்குள் வன விலங்குகளால் பாரியளவில் பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக காலத்துக்கு ஏற்றதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், நாட்டின் உணவுப் பாதுகாப்புக்காக எடுக்கப்படும் முற்போக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் நுகர்வுக்குத் தேவையான பொருட்களை நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கும், நாட்டின் விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்கும் விவசாயிகளுக்கு பலமான கரங்களை வழங்குவதற்கான பின்னணியை உருவாக்குவதற்கும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு துப்பாக்கிப் பாவனை தொடர்பிலான மேலதிக விபரங்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக்கும் ஊடகங்கள். !

பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக்கும் ஊடகங்களின் போக்குத்தொடர்பில் பெண்கள் சந்திப்பு இணைய வழி கலந்துரையாடலில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணங்களாலும் அவதூறுகளாலும் மறைக்கப்படும் பெண்கள் மீதான சுரண்டல்கள் – உரத்துப் பேசுவோம் எனும் தலைப்பில் கடந்த 13.05.2023 சனிக்கிழமை இணைய வழிக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அண்மையில் வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ. சுகிர்தனால் ஏமாற்றப்பட்டு அவரின் வீட்டின் முன்பாக தீயில் எரிந்து உயிரிழந்த விஜிதா என்ற பெண்ணின் இறப்பு மற்றும் தேசம் இணையத்தளம் வெளிக்கொணர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பிரதம இணைப்பாளரான குடுமி ஜெயா என அறியப்பட்ட வெற்றிவேலு ஜெயந்திரனின் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்கள் ஆகிய இரு விடயங்கள் இந்த உரையாடலின் பிரதான பேசுபொருளாக இருந்தன.

இது தொடர்பில் தேசம் திரையின் முழுமையான காணொளியை காண கீழேயுள்ள Link ஐ Click செய்யுங்கள்.