27

27

இலங்கையின் மருந்து தட்டுப்பாடு நெருக்கடியான நிலையில் – மருத்துவ அமைப்புக்கள் முறைப்பாடு!

நாட்டில் மருந்துதட்டுப்பாடு நெருக்கடியான நிலையை எட்டியுள்ளது என தெரிவித்துள்ள இலங்கையின் மருத்துவ அமைப்புகள் அரசாங்கம் இந்த விடயத்தை அலட்சியம் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளன.

அரசாங்கவைத்தியசாலைகளில் சில மருந்துகளிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது என இலங்கை மருத்துவசங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரட்ண தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மருத்துவநிலையங்களில் மருத்துவர்கள் நோயாளிகளை வெளியில் மருந்துகளை கொள்வனவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் மேலும் மருந்துகளின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ளதால் நோயாளர்கள் சிலர் மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுபெரும் பிரச்சினை இதற்கு தீர்வை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்தஒன்றரை வருடங்களாக இந்த நிலை காணப்படுகின்றதுஆனால் அரசாங்கம் இந்த விடயத்தின் பாரதூரதன்மையை கருத்தில் கொள்ளவில்லை என வின்யா ஆரியரட்ண தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு உதவிவழங்கும் சமூகத்தினர் மருந்துகளை வழங்கும் நடவடிக்கையும் பல காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வலிநிவாரணிகள் நீரிழிவிற்கான மருந்துகள் புற்றுநோயாளிகளிற்கான மருந்துகள் உட்பட 120 மருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அரசதனியார் மருத்துவமனைகளில் இந்த நிலை காணப்படுகின்றது, மேலும் சத்திரசிகிச்சை ஆய்வுகூடசாதனங்களிற்கும் தட்டுப்பாடு காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியரை மனநோயாளி என கூறி காப்பாற்ற முயற்சிக்கிறதா..? யாழ்.மகாஜனா பாடசாலை நிர்வாகம்..?

யாழ் வலிகாம வலையத்திற்கு உட்பட்ட மகாஜனா பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் அதே பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பை தெரிய வருவது குறித்த ஆசிரியர் மூன்று மாணவர்களை அழைத்து அவர்களின் தலை முடி தொடர்பில் வினாவிய பின் அவர்களை கையால் தாறுமாறாக தாக்கியுள்ளார்.

ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான ஒரு மாணவனின் மூக்கால் இரத்தம் வடிந்த நிலையிலும் மற்றைய மாணவன் வீட்டில் மயக்கமுற்ற நிலையிலும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அது மட்டுமல்ல அதுவே குறித்த ஆசிரியர் மன நோயால் பாதிக்கப்பட்டவர் என பாடசாலை தரப்பினரால் கூறப்பட்டு வருவதாக பிரச்சினைகளுடன் தொடர்புடைய மாணவன் ஒருவனின்  தந்தை ஊடாக அறிய முடிகிறது. அதே நேரம் குறித்த ஆசிரியரை பாதுகாக்கவே பாடசாலை சமூகம் குறித்த கபட நாடகத்தை ஆடுவதாக குறித்த  பாடசாலையின் முன்னாள் மாணவர் ஒருவர்  தேசம் நெட் இடம் தெரிவித்திருந்தார்.

மனநோய் உள்ள ஆசிரியர் ஒருவரை பாடசாலையில் வைத்திருப்பது தொடர்பில் உரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒருவர் பாடசாலையில் கற்பிப்பதை எப்படி அதிபர் ஆமோதித்தார் ..? என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதேவேளை குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் ஆசிரியர் தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அறியப்படுகிறது.

பிரித்தானியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா தொடர்பில் இறுக்கமான நடைமுறைகள் – வெளியாகியுள்ள அறிவிப்பு!

பிரித்தானியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா தொடர்பில் இறுக்கமான பல கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் அதிகரிக்கும் குடியேற்றத்தைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்டு வருகின்ற கடுமையான திட்டங்களின் ஒரு பகுதியாகவே மாணவர் விசா மீதும் கடும் போக்கைக் கடைப்பிடிக்க பிரதமர் ரிஷி சுனக்கின் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் மாணவர் விசா தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை (23) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்பத்தவர்களை அழைத்து அவர்களோடு இணைந்து கொள்வதை (family reunification for foreign students) பெருமளவில் கட்டுப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது கல்வியை நிறைவு செய்வதற்கு முன்பாகவே மாணவர் விசாவைத் (student visa) தொழில் விசாவாக (work visa) மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் வெகு விரைவில் நிறுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிகளை அனுப்பிவைப்பதற்கான ஒரு பயண வழியாக மாணவர் விசாவைப் பயன்படுத்துகின்ற சர்வதேச முகவர்களை இது கட்டுப்படுத்தும் என பிரித்தானிய குடிவரவு குடியகல்வுத் துறை கருதுகிறது.

மேலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது கல்வியை நிறைவு செய்வதற்கு முன்பாகவே மாணவர் விசாவைத் (student visa) தொழில் விசாவாக (work visa) மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் வெகு விரைவில் நிறுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிகளை அனுப்பிவைப்பதற்கான ஒரு பயண வழியாக மாணவர் விசாவைப் பயன்படுத்துகின்ற சர்வதேச முகவர்களை இது கட்டுப்படுத்தும் என பிரித்தானிய குடிவரவு குடியகல்வுத் துறை கருதுகிறது.

மாணவர் விசாவின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைகின்ற வாய்ப்பைக் குறைப்பதன் மூலம் பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கின்ற குடியேறிகளின் நிகர எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க புதிய விதிகள் உதவும் என பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வரவுள்ள இந்தக் கட்டுப்பாடு பட்டப்படிப்புக்குப் பிந்திய ஆராய்ச்சிகளில்(postgraduate researchers) ஈடுபட்டிருக்கின்ற வெளிநாட்டு மாணவர்களுக்குப் பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் இணைந்து கல்வி கற்பதற்காக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மாணவர் விசா வசதிகளைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்கின்றனர்.

இதில் பிரித்தானியாவில் குடியேற விரும்புபவர்களும் மாணவர் விசா வசதியைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்கத் தொடங்கியுள்ளனர்.

அதன்படி கடந்த ஆண்டு வெளிநாட்டு மாணவர் நிலையில் உள்ள ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு விசா வழங்கப்பட்டிருப்பது பிரித்தானியாவின் குடிவரவு – குடியகல்வுப் பிரிவின் பதிவுகளில் தெரியவந்துள்ளது.

2019 இல் இந்த எண்ணிக்கை வெறும் 19 ஆயிரமாகவே இருந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியாவில் கிராம சேவகர் அலுவலகத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட பாவனைக்குதவாத அரிசி !

வவுனியா கூமாங்குளம் கிராம அலுவலகத்தில் மக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி பாவனைக்கு ஒவ்வாத நிலையில் காணப்படுவதாக தெரிவித்து குறித்த அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த கட்டிடம் சுகாதார பிரிவினரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு 10கிலோ அரிசிபை விகிதம் வழங்குவதற்காக கூமாங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்கு ஓப்பந்தகாரரான வவுனியாவிலுள்ள குருமன்காட்டில் உள்ள அரிசி ஆலையினால் நேற்று காலை 4860 கிலோ அரிசி இறக்கப்பட்டது.

குறித்த அரிசி பைகள் மக்களுக்கு நேற்றையதினமே பகிர்ந்தளிப்பட்டப்பட்டதுடன், அவை பழுதடைந்த நிலையில் காணப்பட்டத்தினையடுத்து பொதுமக்கள் சுகாதார பிரிவினருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

கூமாங்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு வருகை மேற்கொண்ட சுகாதார பிரிவினர் குறித்த அரிசியினை பரிசோதனைக்குட்படுத்தியதுடன் அவை பாவனைக்கு ஓவ்வாத நிலையில் காணப்படுவதினை உறுதிப்படுத்தியதுடன் அலுவலகத்தின் களஞ்சியசாலையினை சீல் வைத்தனர்.

26.05.2023 அன்று மாலை 5.59மணிக்கு 260 மூடை (10கிலோ) அரிசியுடன் குறித்த மண்டபம் சமுர்த்தி உத்தியோகத்தர் ம.விக்கினேஸ்வரன் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் முன்னினையில் பொது சுகாதார பரிசோதகர் கே.சிவரஞ்சனினால் சீல் வைக்கப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் குறித்த கிராம சேவையாளரிடம் வினாவிய போது, மக்களுக்கு அரிசி வழங்குவதற்க்காக குறித்த அரிசி மூடைகள் அரசாங்கத்தினால் ஒப்பந்தம் வழங்கப்பட்ட தனியார் அரிசி ஆலையினால் காலையே எமக்கு கிடைப்பெற்றது.

அரிசி கிடைக்கப்பெற்று சில மணித்தியாலயங்களிலேயே மக்களுக்கு அரிசியினை பகிர்ந்தளித்திருந்தோம். ஆனால் அவை பாவனைக்கு ஒவ்வாத நிலையில் காணப்படுவதாக மக்கள் சுகாதர பிரிவினருக்கு தகவல் வழங்கியிருந்தமையுடன் சுகாதார பிரிவினர் களஞ்சிய சாலையினை சீல் வைத்திருந்தனர்.

மேலும் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த அரிசியினை மீளப்பெறும் நடவடிக்கையினை கிராம அபிவிருத்தி சங்கத்தினர் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக கல்விக்கு வட்டியில்லாக் கடனுதவி – தொகை எவ்வளவு..?

தனியார் பல்கலைக்கழக கல்விக்கு வட்டியில்லாக் கடனுதவி வழங்குவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான தகவலை ருவன்வெல்லவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த போதிலும் அரச பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் வாய்ப்பை பெறத் தவறிய ஐயாயிரம் மாணவர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படவுள்ள வட்டியில்லாக் கடனுதவி தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

இந்தக் கடன் திட்டத்தின் கீழ் படிப்பதற்கு 900,000 ரூபா வட்டியில்லா கடன் கிடைக்கும்.

நாளாந்த செலவுக்காக 300,000 ரூபாவும் கிடைக்கும். குறித்த கல்வி நடவடிக்கை முடிந்ததும், இந்தக் கடனை வட்டி இல்லாமல் திருப்பிச் செலுத்த இன்னும் இரண்டு ஆண்டுகள் வழங்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நெடுங்கேணியில் 6 வயது பாடசாலை மாணவியை காட்டுக்குள் இழுத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இராணுவ கோப்ரல் !

வவுனியாவில் ஆறு வயது பாடசாலை மாணவி மதிய நேரம் பாடசாலை விட்டு வந்த போது அவரை காட்டுக்குள் கடத்தி சென்று பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய நெடுங்கேணி இராணுவ முகாமின் இராணுவக் கோப்ரலுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு நேற்றுமுன் தினம் (25) வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஆறு வயது பாடசாலை மாணவி மதிய நேரம் பாடசாலை விட்டு வந்த போது அவரை காட்டுக்குள் கடத்தி சென்று பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய நெடுங்கேணி இராணுவ முகாமின் இராணுவக் கோப்ரலுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (25) வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14.05.2013 அன்று பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய சிறுமியை ஆட்கடத்தல் புரிந்த குற்றச்சாட்டும், சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய இரண்டாவது குற்றச்சாட்டு என சட்டமா அதிபரினால் இரு குற்றச்சாட்டுகள் நிரம்பிய குற்றப் பத்திரிகை வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

மாணவி வெள்ளை சீருடையில் இரத்தம் படிந்த நிலையில் காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்டமை, விசேட சிஐடி காவல்துறை அணி இராணுவ சிப்பாயை கைது செய்தமை, கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயை அடையாள அணி வகுப்பில் அடையாளம் காட்டியமை, நெடுங்கேணி விஜயபாகு இராணுவ முகாம் கட்டளை அதிகாரி நீதிமன்றிற்கு சாட்சியமளித்தமை, காட்டுக்குள் இருந்து சிறுமியின் சப்பாத்துக்கள் மீட்கப்பட்டமை, இறுதியாக சட்ட வைத்திய அதிகாரியின் சட்ட வைத்திய அறிக்கை என்பவற்றை வைத்து கைது செய்யப்பட்ட நெடுங்கேணி விஜயபாகு இராணுவ முகாமின் இராணுவக் கோப்ரலை குற்றவாளி என நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன் அவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 5 இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்கவும், அதனை கட்டத்தவறின் இரண்டு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படவும் மற்றும் தண்டப்பணம் பத்தாயிரம் ரூபா கட்டத்தவறின் இரு மாதம் கடூழிய சிறைத்தண்டனை எனவும் இன்று வவுனியா மேல் நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை குற்ற புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரியான பிரதிப் காவல்துறைமா அதிபர் பிரசாத் ரணசிங்க தலைமையிலான குழுவினர் கொழும்பிலிருந்து வவுனியா சென்று குற்றவாளியான இராணுவ கோப்ரல் அதிகாரியை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.