26

26

நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்படாவிட்டால் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவில்லை – ஹர்ஷ டி சில்வா

சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்படாவிட்டால், ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் கடன் குறைப்பு நடவடிக்கைக்கு சென்றால், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தை தமது கட்சி ஆதரிக்காது என்றும் வைப்பாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை ஜூன் 28-ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பித்து, ஜூன் 29-ஆம் திகதி பொது நிதிக் குழுவுக்குப் பரிந்துரைத்து, சனிக்கிழமையன்று பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கான திட்டங்களை எதிர்க்கட்சிகள் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் 29 கோடி ரூபா செப்பு கம்பிகளை காணவில்லையாம் !

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் 29 கோடி ரூபா பெறுமதியான செப்பு கம்பிகள் திருடர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொள்ளையடிப்பதால் நெடுஞ்சாலைகளுக்கு கடும் சிக்கலாக மாறியுள்ளது எந குறிப்பிட்டுள்ள அந்த அதிகாரி திருடர்கள் செப்பு கம்பிகள், மற்றும் மின்சார கேபிள்களை நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றுகிறார்கள். மற்றைய நெடுஞ்சாலைகள் மற்றும் புதிய களனி பாலம் போன்றவற்றிலும் இதே நிலையே காணப்படுகிறது என்றும் இங்கு ஆணிகள் வெட்டப்படுதல் மற்றும் செப்பு கம்பிகளை வெட்டுதல் பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது நடக்காத காரியம் – ஜஸ்மின் சூக்கா

இலங்கை அரசாங்கம் கோட்டாபய ராஜபக்சவை பொறுப்பு கூறச்செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் என சர்வதேச உண்மை நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்ற பாரதூரமான மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது, ஜே.வி.பி காலத்திலிருந்து கோட்டாபய ராஜபக்ச மாத்தளைக்கு பொறுப்பாக காணப்பட்ட காலம் வரை நீள்கின்றது என்பதை மனிதப் புதைக்குழிகள் குறித்த புதிய அறிக்கை வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அன்று தொடக்கம் இன்று வரை ஜே.வி.பி காலத்தில் போர் குற்றத்தில் ஈடுபட்டவர்களோ – அல்லது யுத்தத்தில் இறுதியில் போர் குற்றத்தில் ஈடுபட்டவர்களோ பொறுப்பு கூறலிற்கு உட்படுத்தப்படவில்லை எனவும் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இடம் பெற்ற சம்பவங்களிற்காகவோ அல்லது யுத்தம் முடிவில் இடம்பெற்ற சம்பவங்களிற்காகவோ இந்த அரசாங்கம் கோட்டாபய ராஜபக்சவை பொறுப்பு கூறச் செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அதன் இருப்பிற்காகவும் ஆதரவிற்காகவும் கோட்டாபய ராஜபக்சவிற்கு கடமைப்பட்டிருப்பது இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏழ்மை ஒழிப்புக்கான ‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட ஏழ்மை குடும்பங்கள் போராட்டத்தில் !

அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தில் தகுதியானவர்கள் உள்வாங்கப்படவில்லை என தெரிவித்து நுவரெலியாவில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நுவரெலியா பிரதேச செயலகம் மற்றும் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்த எதிர்ப்பு பேரணி நுவரெலியா எலிசபெத் மகாராணி வீதி, லோசன் வீதி, வழியாக நுவரெலியா பிரதான தபாலகம் முன் நின்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியத்திய நிலையில் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

இதே நிலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஏற்பட்டுள்ளது அவதானிக்க முடிகிறது. தேவை உள்ள குடும்பங்கள் பல நிராகரிக்கப்பட்டு வசதி வாய்ப்புள்ள குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி  கொடுப்பவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கும் – தெரிந்தவர்களுக்கும் இந்த அஸ்வெசும நலன்புரி உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் வடக்கின் பல பகுதிகளில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து உள்ளவர்களின் குடும்பங்களுக்கு இந்த உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளை  வீட்டுப் பணிகளுக்காக மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தொழில் தேடி சென்ற வறுமை கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்கள் பல இந்த உதவி திட்டத்திற்குள் உள்வாங்கப்படவில்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில் இது தொடர்பில் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் தலைவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இதேவேளை பொதுஜன பெரமுனவின்நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார் சுமித்ராராச்சி அவர்கள் இது தொடர்பில் குறிப்பிட்ட போது” அஸ்வெசும நிவாரண செயற் திட்டம் சமூக கட்டடைப்பில் பாரிய முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் . ஏழ்மையில் நிலையில் உள்ளவர்கள் இந்த செயற்திட்டத்தில் உள்வாங்கப்ப டவில்லை . ஆகவே முறையான மதிப்பீட்டை மேற்கொள்ளும் வரை அஸ்வெசும செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதை இடைநிறுத்த வேண்டும். சமூக கட்டமைப்பில் தீவிரம டைந்துள்ள ஏழ்மை நிலையை இல்லாதொழிக்க அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அஸ்வெசும செயற்திட்டம் சமூகக் கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகளை தோற்றுவிக் கும் வகையில் உள்ளது . தகுதியானவர்களுக்கு மாத்திரம் நிவாரண தொகை வழங்கப்பட வேண் டும் என குறிப்பிடப்பட்டது . அஸ்வெசும நிவாரண செயற்திட்டத்தில் நிவாரணம் பெறுவதற்குத் தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டுள் ளார்கள் . தகுதியற்ற செல்வந்தர்கள் நிவார ணத் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட் டுள்ளார்கள் . ஆகவே இந்தத் திட்டத்தில் உண்மையான தரப்பினர் அடை யாளப்படுத்தப்படவில்லை.” என பாராளுமன்றத்தில் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை குறித்த நலன் குறித்த திட்டம் தேவையுடைய ஏழ்மையான குடும்பப் பின்னணி உள்ளவர்களுக்கு மட்டுமே சென்றடையும் எனவும் ஏழ்மை நிலையிலிருந்து குறித்த திட்டத்திற்குள் உள்வாங்கப்படாத குடும்பத்தினர்கள் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி வரை தங்களுடைய பிரதேச செயலகங்களுக்கு சென்று மேல்முறையீடு செய்து குறித்த நான் குறித்த திட்டத்தில் தங்களை  இணைத்துக் கொள்ள முடியும் என அரசுன தரப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை – பின்னணியில் ரணில் விக்கிரமசிங்கவின் சூழ்ச்சி..?

வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை வழங்கும் செயற்பாட்டின் பின்னணியில், அரசாங்கம் ஏதோ ஒரு விடயத்தை மூடிமறைக்க முற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“வங்கிகளை அரசாங்கம் 5 நாட்களுக்கு மூடுவதன் நோக்கம், ஏதோ ஒரு விடயத்தை மறைப்பதற்காகத் தான்.

நான் மக்களால் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட, கொழும்பு மாவட்டத்திலேயே அதிக படியான வாக்குகளைப் பெற்ற இரண்டாவது உறுப்பினராக உள்ளேன்.

கோப் குழுவின் உறுப்பினராகவும் உள்ளேன்.ஆனால், வங்கிகளின் விடுமுறை தொடர்பாக எனக்கு தெரியாது. நாடாளுமன்றுக்கும் இது தொடர்பாக அறிவிக்கப்படவில்லை.

நாடாளுமன்ற நிதிக்குழுத் தலைவரிடமும் நான் இதுதொடர்பாக கேட்டிருந்தேன். அவருக்கும் தெரியாது.

ஜனாதிபதி இவ்வாறான விடயங்களை செய்வதில் கைத் தேர்ந்தவர். ஏதோ ஒரு விடயத்தை மூடி மறைக்கவே அவர் இவ்வாறு செயற்படுகிறார். நாம் இந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுபவர்கள்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லவதற்கு ஜே.வி.பியினர் எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.

ஆனால், நாம் அதற்கு எதிரானவர்கள் அல்ல. நாம் தான் முதலில் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வோம் என்று அறிவிறுத்தியிருந்தோம். அரசாங்கம் அங்கு சென்ற விதம் பிழையானது என்பதால்தான் அந்த செய்றபாட்டிலிருந்து நாம் ஒதுங்கினோம்.

ஐ.எம்.எப். இற்கு செல்ல அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முடியுமா? உலக வங்கிக்கு செல்ல டில்வின் சில்வாவுக்கு முடியுமா?

அல்லது, லால் காந்தவுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு செல்லதான் முடியுமா? இல்லை.

அங்கு எல்லாம் செல்லக்கூடிய நபர்கள் எமது அணியில்தான் உள்ளார்கள்.ஜே.வி.பியை பொறுத்தவரை ஐ.எம்.எப்., உலக வங்கியிடம் செல்வதெல்லாம் தவறான காரியங்களாகும்.

தனியார் பல்கலைக்கழகங்கள் நாட்டுக்குள் வரவும் அவர்கள் எதிர்ப்பினைத் தான் வெளியிடுகிறார்கள்.

 

முதலீட்டாளர்கள் இங்கு வரவும் அவர்கள் எதிரானவர்கள். இங்கு முதலீடு செய்தவர்களையும் கப்பம் கோரி விரட்டியடித்தால், எவ்வாறு இந்த நாட்டை முன்னேற்றுவது?” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.