08

08

குருந்தூர் மலை தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை – சரத் வீரசேகர

குருந்தூர் மலையில் இடம்பெறும் தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதி அரசியலமைப்பின் 9 ஆவது அத்தியாயத்தை முழுமையாக மீறியுள்ளார் என்றும் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய நல்லிணக்கத்துக்கும்,தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளதாகவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் – கருணா அம்மன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கஜேந்திரகுமார் வலியுறுத்தல் !

மனிதப் புதைகுழிகள் தோண்டப்படும் போது வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர்,

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயிலிருந்து பல மனித எச்சங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில் அதில் தமது உறவுகளும் இருக்கலாமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச விதிமுறைகளை கடைபிடித்து வெளிநாட்டு நிபுணர்கள், தடயவியலாளர்கள் ஆகியோரின் உதவிகளையும் பெற வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயத்தில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த பொலிஸார் தயக்கம் காட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் மனித புதைகுழி தொடர்பில் விடுதலை புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால், அதற்காக கருணா அம்மன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலக செயற்பாட்டை எதிர்த்து மக்கள் போராட்டம் !

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் அழைக்கப்பட்டவர்களிற்கான பதிவுகள் இன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர் ஜோகராஜா, கிளிநொச்சி பிராந்திய இணைப்பாளர் நிசாந்தன் ஜீட் பீரிஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும் போராடுவதற்கான உரிமை இருந்தாலும் பதிவுக்காக வருகை தருபவர்களிற்கு இடையூறு இல்லாமல் செயற்படுமாறும் ஆணையாளர் தெரிவித்தார்.

“இந்த உலகத்தை மனிதர்களை விட சிறப்பாக வழிநடத்த எங்களால்  முடியும்.” – ஜெனீவாவில் ஏ.ஐ ரோபோக்கள் !

இந்த உலகத்தை மனிதர்களை விட சிறப்பாக வழிநடத்த எங்களால்  முடியும் என ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோக்கள் உறுதியளித்துள்ளன.

அத்துடன் தங்களைப் போன்ற ஏ.ஐ ரோபோக்களை உருவாக்கும்போது மனிதர்கள் இந்த தொழிநுட்ப வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளை அறிந்து கவனமாக கையாள வேண்டும் எனவும் அவை எச்சரித்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு ரோபோக்களால் பேராபத்து!?” - AanthaiReporter.Com | Tamil  Multimedia News Web

மேலும் அவை, மனிதர்களின் உணர்வுகள் குறித்து இன்னும் பிடிமானம் ஏற்படவில்லை எனவும், நாங்கள் மனிதர்களின் வேலைவாய்ப்புக்களை திருட மாட்டோம் எனவும், மனிதர்களுக்கு எதிராக போராட மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளன.

ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடந்த ‘சர்வதேச நலனுக்கான செயற்கை நுண்ணறிவு’ என்ற உச்சி மாநாட்டில் மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஹியூமனாய்ட் ரோபோக்கள் இடம் பெற்றிருந்தன.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிபுணத்துவம் பெற்ற 3,000 பேர் இதில் கலந்து கொண்டனர்.

உலகமே உற்று நோக்கிய இவ்வுச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவின் சக்தியை கடிவாளமிட்டு அதனை காலநிலை மாற்றம், பசி, சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதகுரு ஒருவரும் பெண்கள் இருவரும் தாக்கப்பட்ட சம்பவம் – இதுவரை 8 பேர் கைது !

பௌத்த மதகுரு ஒருவரும் பெண்கள் இருவரும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும் இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைதுசெய்யுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலெஸ் பொலிஸாருக்கு உத்தரவிட்டதற்கமையவே இந்த சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.

இரு பெண்களுடன் தகாத உறவில் இருந்த பிக்கு - காவல்துறையின் அதிரடி நடவடிக்கை -  ஐபிசி தமிழ்

குறித்த மதகுரு, உறவினர் ஒருவர் மற்றும் அவரது மகளுடனும் வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குழுவொன்று அவரையும் ஏனைய இருவரையும் தாக்கி வீட்டிலிருந்த தளபாடங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேரர்  ஒருவரும், இரண்டு பெண்களும் குழுவொன்றினால் நிர்வாணப்படுத்தப்பட்டு பொல்லால் தாக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தேரர் ஒருவர் மற்றும் இரண்டு பெண்களின் ஆடைகளை கலைத்து, அவர்களை நிர்வாணப்படுத்தி தாக்குதல் மேற்கொண்டவர்கள் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும். குறித்த மூவரையும் நிர்வாணப்படுத்தி, அவர்களை கடுமையாக தாக்கியமை பாரிய குற்றமாகும். எவருக்கும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.

உடனடியாக குறித்த குழுவினர் கைது செய்யப்பட வேண்டும். மேலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் நவகமுவ பொலிஸ் தலைமையகத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பௌத்தகுருமார்களின் குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்கள் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை..? – இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்

பௌத்தகுருமார்களின் குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்கள் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை..? என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் ட்டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

கடந்தகாலங்களில் பௌத்தமதகுருமார்கள் பொதுமக்களிற்கு எதிராக அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக  ஏன் பொலிஸாருக்கு  வன்முறைகளில் ஈடுபட்ட சம்பவங்கள் வீடியோக்களில் பதிவாகியுள்ளன. அவர்களிற்கு எதிராக பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளும் வெளியாகியுள்ளன.

ஆனால் இது குறித்து சிறிதளவு சீற்றமும் வெளியாகவில்லை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இது பௌத்தகுருமாருக்கு ஒரு விடுபாட்டுரிமை குறித்த நம்பிக்கையை வழங்கியுள்ளது.

வீடியோக்களில் காணப்படும் நடவடிக்கைகள் சிறுவர்களிற்கு எதிரானவையாக காணப்பட்டால்  விருப்பத்துடன் இடம்பெறாவிட்டால் அவை சட்டவிரோதமானவை. அப்படியில்லாவிட்டால் – அது மதவழக்காறுகள் மரபுகளிற்கு முரணாணது- ஆனால் குற்றமில்லை.

இந்த சம்பவங்களை பொதுமக்கள் கையாளும் விதம் நாங்கள் விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட சமூகமாக செயற்படவில்லை  வன்முறைகளே எங்கள் முதல் வெளிப்பாடுகள் என்பதை வெளிப்படுத்தியுள்ளன. இது சில நபர்களுக்கு எதிரான சில வகையான வன்முறைகள் நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள சமூகம்.

தாங்கள் போதிப்பதற்கு எதிரான விதத்தில் மதகுருமார்கள் நடந்துகொள்ளும்பாசாங்குத்தனம் வேறு விடயம். மதம் அல்லது மததலைவர்களை தனியாக வைத்திருக்கவேண்டும், அவர்கள் அரசாங்கத்தின் கொள்கை அல்லது செயற்பாடுகள் மீது தாக்கம் செலுத்த அனுமதிக்ககூடாது.” எனவும் குறித்த ட்விட்ர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மருத்துவசாலைகளில் தரமற்ற மருந்துகள் – 3 மாதங்களில் 9 பேர் உயிரிழப்பு !

நாடு சுகாதார துறையில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளது. மேலும் மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து பாவனை மற்றும் அதிகளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை உள்ளிட்ட காரணங்களால் நோயாளர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தரமற்ற மருந்து பாவனை காரணமாக கடந்த 3 மாதங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார துறையை தனியார் மயப்படுத்தவேண்டாம். நோயாளர்களின் உயிர்களை பாதுகாக்குமாறு சுகாதார துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்தஆரச்சி கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 3 மாதங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தரமற்ற மருந்து பாவனைகளால் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார ஊழியர்களான எமக்கும், மக்களுக்கும் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் முறையற்ற சில செயற்பாடுகள் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்படும் மருந்துகள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

தரமற்ற மருந்துகள் காரணமாக கடந்த 3 மாதங்களில் 9 மரணங்கள் சம்பவித்துள்ளன. எனவே சுகாதார துறையை தனியார் மயப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடம் கோருகின்றோம். அத்துடன் நோயாளர்களின் உயிர்களை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

மேலும், தரமற்ற மருந்து பாவனை தொடர்பில் அரச மருந்தாளர்கள்  சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ கூறுகையில், உண்மையில் இதுபோன்ற தொடர் மரணங்கள் சம்பவிக்கும் போது ஒளடதங்கள் காரணமாகவே இவ்வாறான சம்பவங்கள் பதிவாகுவதாக சுகாதார மைச்சர் தெரிவிக்கின்றார்.

ஐரோப்பிய ஒன்றியங்கள் போன்ற இடங்களிலும் இவ்வாறு மரணங்கள் இடம்பெறுகிறது. இவ்வாறு அரசியல் செய்யும் வர்களால் தேவையான இடங்களில், பதிவு செய்யப்படாத இடங்களில் ஒளடதங்களை கொள்வனவு செய்து அவற்றை இங்கு கொண்டு வந்து ஜரோப்பிய ஒன்றியங்களில் ஏற்படும் மரணங்களுடன் இங்கு இடம்பெறும் மரணங்களை ஒப்பிட முடியாது என்றார்.

சுகாதார தொழிற்சங்களின் நிபுணர் குழுவின் தலைவர் ரவி குமுதேஷ் கருத்து தெரிவிக்கையில், பேராதனை போதனா வைத்தியசாலையில் இருவர் உயிரிழந்த போது அந்த மருந்தினை தடை செய்ய முடிந்தது. தடைசெய்யப்பட்டமையால் அதற்கு அடுத்த மரணங்கள்  பதிவாகாமல் தடுக்க முடிந்தது.

எனினும் பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் தடை செய்த மருந்தினை பயன்படுத்தியமை காரணமாக மரணங்கள் சம்பவத்துள்ளது. இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை நிராகரித்தமை காரணமாகவே மரணங்கள் ம்பவித்துள்ளன என்றார்.

பௌத்த பிக்கு மற்றும் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி தாக்கியவர்களை கைது செய்ய உத்தரவு !

நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும், இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தேரர்  ஒருவரும், இரண்டு பெண்களும் குழுவொன்றினால் நிர்வாணப்படுத்தப்பட்டு பொல்லால் தாக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

May be an image of 2 people and text

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தேரர்  ஒருவர் மற்றும் இரண்டு பெண்களின்  ஆடைகளை கலைத்து, அவர்களை நிர்வாணப்படுத்தி தாக்குதல் மேற்கொண்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். குறித்த மூவரையும் நிர்வாணப்படுத்தி, அவர்களை

கடுமையாக தாக்கியமை பாரிய குற்றமாகும். எவருக்கும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.

உடனடியாக குறித்த குழுவினர் கைது செய்யப்பட வேண்டும். மேலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் நவகமுவ பொலிஸ் தலைமையகத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.